Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் மீது பல்கலைக்கழக மாணவர் ஒருவரால் தாக்குதல் – யாழில் சம்பவம்

Featured Replies

யாழ்.ஊடகவியலாளர் ஒருவர் மீது யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடகவளங்கள் பயிற்சி மைய மாணவர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மேற்படி ஊடகவியலாளர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.காவல்துறையினருக்கு முறைப்பாடு ஒன்றினையும் அவர் கடமையாற்றும் பத்திரிகை நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் திட்டமிட்ட வைகயில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள யாழ்.ஊடக சமூகம் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஊடகவளங்கள் பயிற்சி மையம் வெளிநொட்டு நிதிகளை மோசடி செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. குறித்த செய்தி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளரினால் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற நோக்கத்திலேயே மேற்படித் தாக்குதல் நடத்தப்பட்டுள்து.

இதற்கு முன்னரும் மேற்படி ஊடகவளங்கள் பயிற்சி மையத்தின் முறைகேடு தொடர்பில் இணையத்தளங்களில் வெளியான பரபரப்புச் செய்தி தொடர்பிலும் மேற்படி ஊடகவியலாளர் சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர் ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் கல்வி பயிலும் சக மாணவர்களை சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் பெயர்களைக் கூறி அச்சுறுத்தியுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் யாழ்ப்பாணத்தில் வெளிவரும் முன்னணி தேசிய நாளிதல் ஒன்றில் செய்தியாளராகக் கடமையாற்றி வருகின்றார். அண்மைக்காலத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ஊளல் மோசடி தொடர்பில் முதல் முதல் தனது பத்திரிகை வாயிலாக வெளிக் கொண்டுவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாவிட்டால் யாழ்.ஊடக சமூகம் போராட்டத்தில் குதிப்பதற்கும் தயாராக உள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=31681

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.