Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கு வீட்டுத்திட்டமும் அவர்கள் படும் துயரமும்

Featured Replies

யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக்குடியேற்றப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு பகுதி பகுதியாக அரச சார்பற்ற நிறுவனங்களால் வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதிலும் ஈ.பி.டி.பி யின் செல்வாக்கிற்கு உட்பட்ட செம்பியன்பற்று பிரதேசத்திற்கு முதலில் வீடுகள் வீடுகள் வழங்கப்பட்டது. இப்பிரதேச உதவி அரசாங்க அதிபர் மற்றும் ஈ.பி.டி.பி யின் முக்கியஸ்த்தர் ரங்கன் என்பவரும் செம்பியன்பற்றினை சேர்ந்தவர்களாவர். அதனால் அக்கிராமத்திற்கு வீடுகள் முன்னுரிமையாக் வழங்கப்பட்டதுடன் பெறுமதியான வீடுகளும் வழங்கப்பட்டது.

தற்போது உடுத்துறை மற்றும் அழியவளை வெற்றிலைக்கேணி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இவர்களுக்கு வழங்கப்படும் வீடுகள் பெறுமதி குறைந்ததாகவே காணப்படுகின்றது. அத்துடன் இக்கிராமங்களில் வழங்கப்படும் வீடுகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களால் நிதி வழங்கப்படவில்லை. மக்களை முதலில் 100000/= பெறுமதிக்கு வீட்டு வேலைகளை செய்யும் படியும் அந்த வேலைகள் முடிந்த பின்னரே பணம் வழங்கப்பட்டும் எனவும் குறிப்பிட்ட நிறுவனங்கள் மக்களுக்கு பணிப்பதாகவும் இதன் காரணமாக வருமையின் கோரப்பிடியில் வாழும் மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுவதாக இப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனை விட இப்பிரதேசங்களில் வீடு கட்டுவதற்கு தேவையான மணல் காணப்படுகின்றது.இதனை மக்களுக்கு இலவசமாக வழங்கமுடியும் ஆனால் சொந்த ஊரில் மணல் ஏற்றுவதற்கு ஒவ்வொரு குடும்பமும் ஒரு உளவு இயந்திரம் மணல் ஏற்ற 25௦௦/= ரூபா செலுத்திவருகின்றனர். அதில் ஒரு பகுதியினை பிரதேச சபையினரும் அரச சார்பு கட்சியினரும் பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இப்பிரதேசங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் மக்களிடம் இறுக்கமாக நடந்து கொள்ளுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நிறுவனங்களின் இத்தகைய செயற்பாடுகளால் விதவைக்குடும்பங்களும், ஊனமுற்ரோர்களும்,வயது முதிர்ந்த குடும்பங்களும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு அடிப்படிக்காரணம் இப்பிரதேசங்களில் சர்வதிகார ஆட்சி மேற்கொண்டுவரும் ஈ,பி டி பி யினரும், அவர்களுக்கு சார்பாக செயர்ற்படும் உதவி அரசாங்க அதிபருமே ஆகும் என்று இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பிரதேசங்களில் கடைசியாக இடம் பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் படுதோல்வி கண்டமைக்கு பழிவாங்கும் முகமாக ஈ.பி.டீ பி யினர் இதனை செய்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மக்கள் மேல் இடத்து அதிகாரிகளுக்கு தெரியப்படித்தியும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழீழத்தில் இருந்து குமரன்

http://thaaitamil.com/?p=31801

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.