Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீதான இந்தியத் தமிழரின் சீற்றம் நியாயமானதுதானா? - ரொய்ற்றர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sl-tourists.jpg

[size=4][size=5]யு[/size]த்தத்தின் பின்னான கோட்பாடுகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவாலும், அரசியல் மற்றும் இராணுவத் துறைகளில் முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜபக்சவின் சகோதரர்களாலும் வகுக்கப்படுவதால், இவற்றுள் பெரும்பான்மை மக்களின் நலன்களே அதிகம் முதன்மைப்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு Reuters செய்தி நிறுவனத்திற்கு அதன் சிறப்புச் செய்தியாளர் Nita Bhalla எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் 25 ஆண்டு காலம் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் பின்னர் உயிர்தப்பி வாழும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் யுத்தம் முடிவுற்று நான்கு ஆண்டுகள் ஆகின்ற போதிலும் மந்த கதியில் இடம்பெறுவதானது, சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்களை மட்டுமல்ல, அதன் அயல் தேசமான இந்தியாவில் வாழும் மக்களையும் கவலையுறச் செய்துள்ளது.

தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ்நாடானது சிறிலங்காவில் வாழும் தனது சகோதர தமிழ்ச் சமூகமானது தொடர்ந்தும் சிங்கள ஆளும் அரசாங்கத்தால் ஓரங்கட்டுப்படுவதை எண்ணி மிகக் கவலையடைந்துள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆயுதப் படைகளை எதிர்த்த தமிழ்ப் புலிகள் மேற்கொண்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்ததுடன், பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்த்தப்பட்டனர்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, யுத்தமானது மே 2009ல் நிறைவை எட்டியபோதிலும் கூட, யுத்தத்திலிருந்து உயிர் தப்பிய தமிழ் மக்களுக்கு போதியளவு புனர்வாழ்வுத் திட்டங்கள் சென்றடையாமையானது தமிழ்நாட்டு வாழ் மக்கள் மத்தியில் பெரும் உணர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்விளைவாக, தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்காவைச் சேர்ந்த 180 பாதயாத்திரிகள் சீற்றங்கொண்ட இந்தியத் தமிழர்களால் கடந்த திங்களன்று தாக்கப்பட்டனர். இப்பாதயாத்திரிகளை தமிழ்நாட்டு காவற்துறையினர் மீட்டெடுக்கும் வரை அவர்கள் தேவாலயம் ஒன்றின் பின்னால் ஒளிந்திருந்தனர்.

சிறிலங்காவிலிருந்து தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்கிய குழுவினர் சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு சிறிலங்கர்களும் தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்ததையடுத்து உடனடியாக நாடு திரும்பினர்.

இப்பாத யாத்திரிகள் சிறிலங்கா செல்வதற்காக சிறப்பு பேரூந்துகளில் விமான நிலையத்தை அடைந்த போது, அங்கு குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிலங்கர்கள் மீது கற்களை வீசி தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியிருந்தனர். சிறிலங்காவில் வாழும் தமது தமிழ் சகோதரர்கள் யுத்தத்தின் பின்னரும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஓரங்கட்டப்படுவதை எதிர்த்தே இவ்வாறான கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது வீதிகள், தொடரூந்துப் பாதைகள், துறைமுகங்கள் போன்றன யுத்தப் பாதிப்பு இடம்பெற்ற பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறை மேலும் அபிவிருத்தி செய்யப்படுகிறது. வர்த்தகச் செயற்பாடுகளும் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் யுத்தத்தின் பின்னர் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பிய தமிழ் மக்களுக்கு 'குறிப்பிடத்தக்க' சில தேவைகள் இன்னமும் பூர்த்தியாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

"சிறிலங்காவின் வடக்கில் வாழும் சமூகங்கள் மத்தியில் மேலும் பூர்த்தியாக்கப்பட வேண்டிய மனிதாபிமானத் தேவைகள் உள்ளன. நீரைத் தூய்மைப்படுத்தல், உறைவிடம், உணவுப்பாதுகாப்பு, வாழ்வாதாரம், அனைத்துலகத் தரங்களுக்கு ஏற்ப இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான உரிமை போன்றன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்" என ஐ.நா மனிதாபிமானத் தேவைகளுக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினே நண்டி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளே தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள் மற்றும் இந்தியத் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுடன் நட்பு சார் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதை நோக்காகக் கொண்டு சிறிலங்காவிலிருந்து தமிழநாட்டுக்குச் சென்ற உதைபந்தாட்டக் குழுவை முதலமைச்சர் ஜெயலிலதா உடனடியாக அங்கிருந்து வெளியேற்றியமை மற்றும் சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியா இராணுவப் பயிற்சி வழங்கியதை முதலமைச்சர் கண்டித்தமை போன்றன தற்போது எதிரொலிக்கின்ற விடயங்களாகக் காணப்படுகின்றன.

சிறிலங்கர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலம் ஜெயலிலதா மற்றும் புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் என்பன சிறிலங்காவில் வாழும் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட காயத்தை ஆற்றுவதற்கு உதவி செய்யாததுடன், சிறிலங்கா மற்றும் இந்தியா மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதை நோக்காகக் கொண்டு பொறுப்பற்ற விதத்தில் நடப்பதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறான தாக்குதல்கள் சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் இராஜீக ரீதியான முரண்பாட்டைத் தோற்றுவிக்கவில்லை எனவும், இந்தியாவில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற வலயங்களுக்கு வருகை தந்து, போரில் உயிர் மீண்டவர்களுக்கு எவ்வாறான புனர்வாழ்வுத் திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன என்பதை நேரில் பார்க்க வேண்டும் என சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"சிறிலங்காவுக்கு சென்று நிலைமைகளை நேரில் பார்க்கவும், அத்துடன் வடக்கு மாகாணம் எவ்வாறு அபிவிருத்தி அடைந்துள்ளதை என்பதையும் பார்க்கவும்" என புதுடில்லிக்கான சிறிலங்காத் தூதர் பிரசாத் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

"சிறிலங்காவின் வடமாகாணத்தின் இன்றைய வளர்ச்சியானது 22 சதவீதமாகும். யுத்தத்தில் இடம்பெயர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எம்மால் மீட்கப்பட்ட 300,000 மக்களில் ஆயிரம் வரையானவர்களைத் தவிர மீதி அனைவரும் தற்போது மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர்'" என பிரசாத் காரியவாசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலும் கூட இந்தியா மட்டுமல்லாது, மேற்குலக நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்றன கூட சிறிலங்காவில் யுத்தத்தின் பின்னரான சூழல் தொடர்பாக தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

யுத்தத்தின் பின்னான கோட்பாடுகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவாலும், அரசியல் மற்றும் இராணுவத் துறைகளில் முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜபக்சவின் சகோதரர்களாலும் வகுக்கப்படுவதால், இவற்றுள் பெரும்பான்மை மக்களின் நலன்களே அதிகம் முதன்மைப்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்காவில் தற்போதும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையிலுள்ளதாகவும், அதிகாரிகள் தொடர்ச்சியாக ஊடகங்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும் தேர்தல்களில் அதிகம் தலையீகளை மேற்கொள்வதாகவும் கடந்த ஆண்டில் அனைத்துலக நெருக்கடிக்கான குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நிறைவேற்று அதிபராக ஒருவர் எத்தனை தடவைகளேனும் பதவி வகிக்கமுடியும் என சிறிலங்கா அரசியல் யாப்பில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான நிறைவேற்று அதிபரின் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன" எனவும் அனைத்துலக நெருக்கடிக்கான குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"முன்னர் விடுதலைப் புலிகளால் ஆளப்பட்ட வடக்குப் பகுதியானது தற்போது சிறிலங்கா இராணுவத்தால் ஆளப்படுகிறது. இதனால் பொது நிர்வாகங்கள் மற்றும் மக்களின் நாளாந்த வாழ்க்கை என்பவற்றில் சிறிலங்கா இராணுவத்தின் தலையீடுகள் காணப்படுகின்றன" எனவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகள் மற்றும் அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படவில்லை என சிறிலங்கா அரசாங்கம் மீது பரந்தளவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக, கடந்த மார்ச்சில் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் ஆதரவுடன் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதில் சிறிலங்காவானது இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அனுமதி வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எதுவும் இடம்பெறவில்லை.

தமது அன்புக்குரியவர்களின் இழப்புக்கான நீதியை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதன் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் சிறிலங்காவானது தான் சந்தித்த குருதி உறைந்த கடந்த கால வரலாற்றிலிருந்து மீண்டு செல்ல முடியும் எனவும் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் கோபங் கொள்ளும் அரசியல்வாதிகளாயினும், ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் அமைதி பேணும் போதே உயிர் நீத்த மக்களுக்கு நீதி கிடைக்கும்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120911106964[/size]

நியாயமானதே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.