Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறைகளில் வாடும் உறவுகளின் விடுதலைக்காக பிரார்த்தனையில் எல்லோரும் பங்களியுங்கள்; உருக்கமாக அழைக்கிறார் நிமலரூபனின் தாயார்

Featured Replies

[size=2]

[size=4]இலங்கையின் பல்வேறு சிறைக் கூடங்களிலும் விசாரணை எதுவுமின்றி அடைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வேண்டி நாளை 12 ஆம் திகதி வவுனியா குருமண்காடு காளிகோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு அண்மையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் தாயாராகிய க.இராஜேஸ்வரி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size][/size]

[size=2]

[size=4]எனது அன்பிற்கினிய தமிழ் உறவுகளே! உங்களோடு சில வார்த்தைகள்... தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே இலங்கை அரசு எம்மீது பலவிதத்திலும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. எமது இளைஞர்கள் பலர் என்ன குற்றம் செய்தோம் என்பது கூடத் தெரியாமல் குற்றவாளிகளா சுற்றவாளிகளா என்று நிரூபிக்கப்படாத நிலையில், பல்வேறு சிறைக்கூடங்களில் வாடுகின்றனர். [/size][/size]

[size=2]

[size=4]எனது மகன் நிமலரூபனும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த நிலையில் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.[/size][/size]

[size=2]

[size=4]எனது அன்பிற்கினியவர்களே! எனக்கு நேர்ந்த அந்தத் துயரம் வேறு எவருக்கும் நேரக்கூடாது என்று நான் தினமும் இறைவனை வேண்டுகின்றேன். இராமாயணத்தில் வனவாசம் அனுபவிப்பதற்குத் தனது மகனை அனுப்ப வேண்டுமே என்று எண்ணியபோதே தசரதனின் உயிர் பிரிந்தது.[/size][/size]

[size=2]

[size=4] அந்த அளவுக்குப் புத்திரசோகம் கொடுமையானது. நான் அதனைத் தினமும் அனுபவித்து வருகின்றேன். சிறையில்தானே இருக்கின்றான், பத்திரமாகத் திரும்பி வருவான், என்றெண்ணி நாள்களைக் கடத்திக்கொண்டிருந்த என்னை எனது மகனின் மரணச் செய்தி இடிபோல் தாக்கியது.[/size][/size]

[size=2]

[size=4] நெஞ்சில் யாரோ ஈட்டியால் குத்துவதுபோல் இருந்தது. நான் தட்டாத கதவுகள் இல்லை. ஏறாத படிகள் இல்லை, வணங்காத தெய்வங்கள் இல்லை. இருந்தும் அவை அனைத்தும் எனது மகனைக் காப்பாற்றவில்லை. பலரும் பலவிதங்களில் முயற்சித்தும் எனது மகனைக் காப்பாற்ற முடியவில்லை.[/size][/size]

[size=2]

[size=4]எனது தலைவிதி அவ்வளவுதான் என்று என்னைத் தேற்றிக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை, எனது மகனின் திருமணக்கோலத்தைக் காண ஆசைப்பட்ட எனக்கு அவனின் இறுதிச் சடங்கை நடத்தும் வாய்ப்பை இறைவன் அளித்தார். அதனைக்கூடப் பல்வேறு தடைகளின் மத்தியிலேயே செய்ய நேர்ந்ததையும் நீங்கள் அறிவீர்கள்.[/size][/size]

[size=2]

[size=4]திரைப்படங்களில் கூட சோக முடிவுகளைத் தாங்கிக் கொள்ள முடியாத எமக்கு நிஜவாழ்க்கையில்தான் எத்தனை சோதனைகள், எத்தனை தடைகள், எத்தனைவிதமான ஆபத்துக்கள்! அவைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது.[/size][/size]

[size=2]

[size=4]ஆகவே என் அன்பு உள்ளங்களே! நாளை12 ஆம் திகதி புதன்கிழமையன்று எமது பிள்ளைகளின் விடுதலையை வேண்டியும், காணாமற் போகடிக்கப்பட்டோரைப் பத்திரமாக மீட்டுத்தருமாறும் தமிழ் மக்களின் மீது அக்கறைகொண்டுள்ள அன்பு நெஞ்சங்கள் ஒரு சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். [/size][/size]

[size=2]

[size=4]கூட்டுப்பிரார்த்தனைக்குச் சிறப்புப் பலனுண்டு என்பதை நாம் நன்கறிவோம். எனவே இந்த நிகழ்வில் பிள்ளைகளைப் பிரிந்து தவிக்கும் தாய்மார்களும், கணவனின் அன்புக்காக ஏங்கும் மனைவியரும், மனைவியையும் சகோதர சகோதரிகளையும் பிரிந்து தவிப்போரும், அன்பிற்கினியவர்களின் பிரிவால் வாடுவோரும் என அனைவரும் எமக்காக நிகழ்த்தப்படும் இச்சிறப்புப் பிரார்த்தனையில் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு ஒரு வேள்வியாக இதை நடத்தித் தரவேண்டும் என்று அன்புடன் வேண்டுகின்றேன். என்றுள்ளது.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=472701414211658541[/size]

  • தொடங்கியவர்

[size=4]c1(569).jpg[/size]

[size=4]சர்வதேச கைதிகள் தினமான இன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் காணாமல் போனவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தர வேண்டியும் வவுனியா, குருமன்காட்டிலுள்ள காளி கோவிலில் 1008 தேங்காய் உடைத்து சிறப்புப் பிரார்த்தனைநடத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சிறப்புப் பிரார்த்தனையில் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் காணாமல் போனோரின் உறவினர்களும் கண்ணீருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். படங்கள்:- நவரத்தினம்,ரொமேஷ் மதுசங்க[/size]

[size=4]a1(1718).jpg

a2(1389).jpg

c2(410).jpg

c3(222).jpg

c4(108).jpg

a3(751).jpg

c5(73).jpg

c6(44).jpg

c7(17).jpg

a4(417).jpg

a5(244).jpg[/size]

http://www.tamilmirror.lk/--main/48476-2012-09-12-07-22-35.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.