Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1983 யூலை - மே 2009 : 'நிகழ்வு, கட்டமைப்பு, வரலாறு'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Dr.%20Pradeep%20Jeganathan.jpg

[size=4]யூலை 1983ஐ விட மே 2009ல் என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆழமாகப் பார்க்கவேண்டும். அதாவது இவ்வாறானதொரு இனப்படுகொலை இடம்பெறவேயில்லை என சிலர் பரப்புரை மேற்கொள்கின்றனர். அத்துடன் இதில் எவரும் கொல்லப்படவில்லை எனவும் உறுதியாகக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது முற்றிலும் பொய்யானதாகும்.

இவ்வாறு COLOMBO TELEGRAPH என்னும் ஊடகத்தில் Dr. Pradeep Jeganathan எழுதியுள்ள தனது பத்தியில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

1983 யூலையில் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறிலங்கா இராணுவப் படைகளால் மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை ஆகிய இரு மிகப் பெரிய நிகழ்வுகளால் சிறிலங்காவின் நவீன வரலாறானது சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் இன்னமும் முற்றுமுழுதாக புரிந்துகொள்ளவில்லை.

ஏப்ரல் 1971 அல்லது டிசம்பர் 2004ல் இடம்பெற்ற நிகழ்வுகள் இவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. இவ்வாறான நிகழ்வுகள் சிறிலங்காவின் வரலாற்றில் தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் 1983 யூலை மற்றும் மே 2009 போன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. இந்நிலையில் நான் இவற்றை 'நிகழ்வு, கட்டமைப்பு, வரலாறு' எனப் பிரித்து நோக்குகிறேன்.

இவ்வாறான நிகழ்வுகள் சிறிலங்காவின் நவீன வரலாற்றில் தாக்கத்தைச் செலுத்தியது மட்டுமல்லாது, இதன் மிகக் கொடிய, மிதவாத, பயங்கரமான நடவடிக்கைகளை மேலும் தெளிவாகக் காண்பிக்கின்றது. யூலை 1983 கலவரத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. இக்கலவரத்துக்கு நிகரான 'பயங்கரமான' நிகழ்வுகள் இன்னமும் இடம்பெறவில்லை. சிறிலங்கர்களின் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் இக்கலவரத்தை அடியோடு வெறுத்தனர். வேறு பலர் இதனை ஆதரித்தனர். 1983 யூலைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் அப்போது உயிருடனிருந்தவர்கள் தற்போது நினைவுபடுத்திக் கொள்ள முடியும். இன்றுங்கூட, சிங்கள, தமிழ் அல்லது முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த வயது போனவர்களிடம் 1983 யூலைக் கலவரத்தில் என்ன நடந்தது என வினவினால் அது தொடர்பாக அவர்கள் நினைவுபடுத்திக் கொள்வார்கள்.

இவ்வாறான நிகழ்வுகளை நேரில் கண்டவர்களின் அனுபவம் என்பது சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் ஒரு நிகழ்வின் வரலாறு போன்றவற்றில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகின்றது. இக்கலவரத்தில் அகப்பட்டுக் கொண்ட பலர் இறந்துவிட்டனர். பலர் எரிக்கப்பட்டனர். இவ்வாறான நிகழ்வுகளை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். இக்கலவரத்தை அடுத்து சிறிலங்கர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்தனர். புலம்பெயர்ந்து வாழும் நாட்டுப்பற்றாளர்கள் என்பது புதிதல்ல. அதாவது இஸ்ரேலியர்கள் பல நாடுகளில் சிதறி வாழ்ந்தனர். இருந்தும் அவர்கள் தமது நாடு மீது கொண்ட பற்றுறுதியை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு தமக்கான இஸ்ரேல் நாட்டை உருவாக்கிக் கொண்டனர். இதேபோன்று பொஸ்ரனின் ஐரிஸ் என்கின்ற புதிய சிறிய தேசம் இவ்வாறே உருவாகியது. பல நாடுகளில் இவர்கள் பரந்து வாழ்ந்த போது, காணொலிப் பதிவுகளை தமக்கிடையே பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஐரிஸ் தேசத்தவர்கள் சந்தித்துக் கொண்ட மிகப் பெரிய சவால்களின் மத்தியில் ஐரிஸ் தேசம் அங்கீகரிக்கப்பட்டது.

யூலை 1983ஐ விட மே 2009ல் என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆழமாகப் பார்க்கவேண்டும். அதாவது இவ்வாறானதொரு இனப்படுகொலை இடம்பெறவேயில்லை என சிலர் பரப்புரை மேற்கொள்கின்றனர். அத்துடன் இதில் எவரும் கொல்லப்படவில்லை எனவும் உறுதியாகக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இது முற்றிலும் பொய்யானதாகும். இவ்வாறான பொய்யான பரப்புரைகளில் குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே ஈடுபடுவதாக கருதுகிறேன். சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் நீதியுடன் பார்க்கும் மக்கள் உள்ளனர். அதாவது இந்த யுத்த மீறல் தொடர்பாகவும் ஏன் இவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பாகவும் ஜெனீவாவில உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை வினவியிருந்தது. கூடாத முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் மூலம் இணைந்த கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படுகின்ற தனிப்பட்ட சண்டை நீண்ட காலம் நீடிக்காது. ஏனெனில் இவர்கள் தமது பிள்ளைகளின் நலனுக்காகவும் தமது வீடு மற்றும் தோட்டம் போன்ற உடைமைகளுக்காகவும் தமக்கிடையே நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோன்றே சிறிலங்காவில் தொடரப்பட்ட மீறல்கள் தொடர்பிலும் அனைத்துலக அபிப்பிராயத்தைக் கொண்ட நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும். வரைபடம் இல்லாது புதிய வீதிகள் வழியே நாம் பயணித்திருப்பதைப் போலவே, எமக்கான தேசத்தை உருவாக்குவதிலும் நீண்ட தூரத்திலுள்ளோம்.

மே 2009 என்பது மிகச் சிக்கலான ஒன்றாகும். இது 1983 கலவரத்தைப் போன்றதல்ல. உலகத்தில் இடம்பெற்ற மிகக் கொடிய யுத்தங்களில் ஒன்றை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்காகக் கொண்டதே மே 2009 சம்பவமாகும். இதனைப் புரிந்து கொள்வதென்பது மிகக் கடினமானதாகும். இது தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும். இதனை நாம் எமக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் இன்னமும் அதனை முயற்சிக்கவில்லை. இதில் நாம் தோல்வியடைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். எமது பிள்ளைகள், எமது தேசம், எமது நாடு என எல்லாவற்றையும் அடைய நாம் தவறிவிட்டோம்.

மே 2009 சம்பவத்தை நினைவுபடுத்திக் கொள்வதற்காக நாம் எதனைச் செய்துள்ளோம்? சிலர் அதனைச் செய்துள்ளனர். அவர்கள் இதனை நினைவுபடுத்திக் கொள்ளத் தேவையில்லாத போதும், அவர்கள் மே 2009ல் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக காணொலிகளை வெளியிட்டுள்ளனர். 1983 கலவரத்தை முதன்மைப்படுத்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் மே 2009 தொடர்பாக 30 நிமிடம் வரையான ஆவணம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே இவை இரண்டுக்கும் இடையிலான மிகப் பெரிய வேறுபாடாகும். ஆகவே மே 2009 தொடர்பாக நாம் எமக்கிடையே தகவல்களை பகிர்ந்து அனைத்துலகத்தில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் நாம் ஈடுபடவேண்டும்.

இந்நிலையில் நாம் சிதறுண்டு வாழ்வதாலும் எமக்கிடையே ஒருமித்த கருத்துருவாக்கம் ஏற்படுத்தாவிட்டால், என்றோ ஒரு நாள் 'நான் நாட்டுப்பற்றாளன், நீ பயங்கரவாதி' என்ற பழிச்சொற்களும், எதிர் விவாதங்களும், போட்டிகளும், முரண்பாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது ஏற்றுக் கொள்ளமுடியாத துன்பமாகும். நாம் சந்தித்த வேதனைகள் தொடர்பாக நாம் பேசாவிட்டால் நாம் செய்யும் பெரும் தவறாக அது காணப்படும்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120914106980[/size]

1983 யூலை யை மட்டும் நினைக்காமல் 2009 மே ஐ நினைத்து ஆக்க பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.