Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அரசியல் தலையீடு - திறைமையுள்ள பட்டதாரிகள் நியாயமற்ற முறையில் புறக்கணிக்கப்படுகின்றனர்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gratuation-150news.jpg

[size=4]யாழ்ப்பாணமாவட்டத்தில் பட்டதாரிப்பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் மத்தியில் விரக்தியும் மன உழைச்சலும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆரசியல் தலையீடுகள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்குகளே இதற்கு காரணமாவதாகப் பட்டதாரிகள் பலரின் குற்றச்சாடடாகும்.[/size]

[size=4]பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அமைச்சுகளின் கீழ் நியமனம் வழங்கும் விடயத்தில் பல்வேறு குழறுபடிகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. நியமன விடயத்தில் அரசியல் செல்வாக்குகள் பிரயோகிக்கப்பட்டு வருவதன் காரணமாகத் திறைமையுள்ள பட்டதாரிகள் நியாயமற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக விசனமும் விரக்தியும் தெரிவிக்கப்படுகிறது.[/size]

[size=4]பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட நியமனத்தில் அரசியல் தலையீடு அதிகரித்திருந்தது. அமைச்சர் டக்ளஸ்தேவாநந்தாவின் யாழ் நகரிலுள்ள அலுவலகத்தில் இதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை அனைத்துப்பட்டதாரிகளும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளும் அறிவார்கள்.[/size]

[size=4]பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் தற்போது நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகளில் சுமார் 40இற்கும் மேற்பட்டவர்கள் அமைச்சரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டதன் பின்னரே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு எந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்பட்டுள்ளது என யாழ்.அரச அதிபரால் கூறமுடியுமா என பட்டதாரிகள் கேட்கின்றனர். ஆரசியல் தலையீடு இடம்பெற்று வருவதனை அறிந்தும் அரச உயர்அதிகாரிகள் மௌனமாக இருப்பது ஏன் என பட்டதாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.[/size]

[size=4]பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தனக்கு வேண்டிய வெற்றிடங்களை நிரப்புவதுக்காக நேர்முகப் பரீட்சையின்போது பட்டதாரிகளின் பட்டங்களை கவனிக்கும்படி அறிவுறுத்தியிருந்தது. இதில் சமூகவியல் என்ற சிறப்புக்கலைப் பாட்டதாரிகளையும் நியமனத்தில் உள்வாங்கும் படி அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் அவ்வாறு மேலும் 4 சிறப்பு பட்டங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.[/size]

[size=4]இடம்பெற்ற நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் பிரதேச செயலகங்களின் அறிவித்தல் பலகைகளில் ஒட்டப்பட்டிருந்தது. யாழ்மாவட்டத்தில் 500இற்கும் மேற்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். எனினும் சில மணிநேரத்தில் பிரதேச செயலகங்களிலிருந்த பெயர் பட்டியல் பிரதேசசெயலர்களால் அகற்றப்பட்ருந்தது. அதனை அறிந்த பட்டதாரிகள் அதிர்சியடைந்தனர்.[/size]

[size=4]ஆதன் பின்னர் சில தினங்களில் புதிய பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டது. புட்டதாரிகளின் முகவரிகளுக்கு அவை அரச அதிபரால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. ஆவ்வாறு அனுப்பப்பட்ட பெயர் விபரங்களுக்கும் ஏற்கனவே பிரதேச செயலகத்தில் ஒட்டப்பட்டீருந்த பெயர் விபரங்களுக்கு இடையே அதிகவேறுபாடுகள் உள்ளதாகப் பட்டதாரிகள் கூறுகின்றனர்.[/size]

[size=4]ஆதில் சமூகவியல் சிறப்புக்கலைப்பட்டதாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்ருந்தன. பொதுப்பட்டம் பெற்றவர்கள் வெளிவாரிப் பட்டதாரிகளின் பெயர்கள் புதிதாக உள்வாங்கப்பட்டிருந்தன. பொரு.அமைச்சின் அறிவுறுத்தலுக்கு முற்றிலும் மாறாக இந்தத் தெரிவுஇடம்பெற்றுள்ளதாகப் பட்டதாரிகன் அதிக விசனத் தெரிவிக்கின்றனர். அவ்வாறே ஒரேமதிரியான பட்டம்பெற்றவர்களில் சிலருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளநிலையில் அதே பட்டம்பெற்றவர்கள் நியமனமின்றி உள்ளனர்.[/size]

[size=4]இன்னமும் 5 வேறுபட்ட அமைச்சுகளின் கீழ்ழுள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். ஆந்த நியமனத்தின்போதும் அரசியல் தலையீடகள் இடம்பெறலாம் என பட்டதாரிகள் அஞ்சுகின்றனர். புhரபட்சமின்றி ஓழுங்கான நியமனம் கிடைக்க வழிசெய்யப்பட வேண்டும் என்பதே பட்டதாரிகளின் வேண்டுகோளாகும்.[/size]

[size=4]-பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்-[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.