Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா?

கருத்து கணிப்பு : கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா? 20 members have voted

  1. 1. கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா?

    • ஆம், இது ஒருகாலத்தில் தமிழினத்தின் ஒரு பகுதியை முழுமையாக அழித்துவிடும்
    • இல்லை, இதன் பாதுகாப்பிலும் இந்திய மாநில மத்திய அரசிலும் நம்பிக்கை உண்டு
      0
    • கருத்து கூற முடியாதுள்ளது

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

[size=6]மத்திய அரசு பாராமுகம்: முதல்வர் ஜெ., குற்றச்சாட்டு[/size]

[size=4]டில்லியில் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் ஜெயலலிதா,காவிரிநதிநீர் ஆணைய கூட்டம் 9 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முயற்சி மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக நடைபெறுகிறது.காவிரி நதியில் உள்ள அணைகள் நிரம்பும்வரை அது தனக்கு சொந்தம் என கர்நாடகா நினைக்கிறது. ஆனால் தமிழகம் தண்ணீர் கிடைக்காமல் பிரச்னையில் உள்ளது. [/size]

[size=4]இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக உள்ளது. பல மாநிலங்களில் பாயும் தண்ணீரை தடுப்பது சுப்ரீம்கோர்ட் உத்தரவை மீறும் செயல்.15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் காவிரி நதிநீரை நம்பியுள்ளது.மேட்டூர் அணையும் காவிரி நதிநீரை நம்பியுள்ளது. தமிழகத்தின் நிலையை மத்திய அரசு நன்கு அறியும்.தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட பிரதமர் உத்தரவிடுவார் என நம்பிக்கை உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து பிரதமரிடம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழகம் எதிர்பார்க்கிறது.[/size]

[size=4]தினமும் 2 டி.எம்.சி.,அளவுக்கு அடுத்த 24 நாட்களுக்கு 48 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தமிழகத்தின் உணவுப்பிரச்னையை சமாளிக்க முடியும் என கூறினார்.[/size]

[size=4]http://tamil.yahoo.com/ம-்-ய-அரச-ப-143300676.html[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<p>

நடப்பது என்னவோ உள்நாட்டு போர் தான். அமைதிவழி நிராயுதபாணிகளுக்கும், அரச ஆயுததாரிகளுக்கும் இடையே நடக்கும் போரில் வழக்கம் போல் தமிழர்கள் கொல்லப்படுவார்கள், அகதியாக்கப்படுவார்கள் கடைசியில் அழிக்கப்படுவார்கள். இது வெறும் ஆரம்பம்தான், அணு உலையால் அழியப்போகும் ஒரு இனத்தின் ஆரம்பம் தான் இது.

**கூடங்குளம் இனி கொலைகூடமாகும். தமிழ்நாடு ஒரு நாள் சுடுகாடாகும்.*

post-7165-0-61469700-1348499343_thumb.jp

  • தொடங்கியவர்

[size=4]நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரியிடம் சி.ஐ.டி யாக பணிபுரியும் என்னுடைய பெரியப்பா மகனிடம், அதாவது என் அண்ணனிடம், ஏண்டா கூடங்குளத்தில் அவ்வளவு பெரிய வன்முறையை அரங்கேற்றினீர்கள் என்று இரு தினங்களுக்கு முன்பு கேட்டேன். காவல்துறையில் லஞ்சம் வாங்காமல் பணியாற்றும் நல்ல மனிதன் அவர் ; [/size]

[size=4]தலையை குனிந்து கொண்டார்.[/size]

[size=5]- திருமுருகன் காந்தி [/size]

255511_285506498219936_1704639673_n.jpg

ஆட்சியில் இருந்தவன் அடிக்க சொன்னான். கடமையில் இருந்தவன் அடிச்சான். இதில் அண்ணன் என்னடா? தம்பி என்னடா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?

[size=3]

ரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் குழந்தையைத் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் லவீனாவின் உடலைத் தீண்டி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஓட முடியாத லவீனா அதிர்ந்துபோய், 'நான் குழந்தையைத் தேடித்தான் வந்தேன். என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்ச, அதற்கு அந்தக் காவலர் கேட்ட குரூரத்தின் உச்சம், ''உதயகுமார் கூப்பிட்டாத்தான் போவியா? நாங்க கூப்பிட்டா வர மாட்டியா?''[/size]

இன்று வரை லவீனாவால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பெண்கள் முன்னணி யில் நிற்கும் இடிந்தகரைப் போராட்டத்தில், அவர்களைப் பின்வாங்கச் செய்ய, காவல் துறை எதேச்சதிகாரத்தின் அனைத்து உத்திகளையும் கையாள்கிறது. ஆனால், அதையும் தாண்டி போராட்டத்தில் தன்னார்வத்துடன் பங்கெடுக் கிறார்கள் பெண்கள். தடியடி நடந்த அன்று கைதுசெய்யப்பட்ட 65 பேரில் 7 பேர் பெண்கள். அவர்கள் யாரும்

p13.jpg

எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படாமலேயே, 36 மணி நேரச் சட்ட விரோதக் காவலுக்குப் பிறகு, ரிமாண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 36 மணி நேரத்தில் அவர்களை இயற்கை உபாதையைக் கழிக்கக்கூட அனுமதிக்கவில்லை காவலர்கள். அந்தப் பெண்களிடமும் லவீனாவிடம் கேட்டது போலவே உதயகுமாருடன் தொடர்பு படுத்திப் பேசி வசைச் சொற்களால் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

[size=3]

''கைதான ஏழு பெண்களின் உடைகளை முழுக்கக் களைந்து சோதனை என்ற பெயரில் திருச்சி சிறையில் அப்பட்டமான மனித உரிமை மீறலில் இறங்கியிருக்கிறது காவல் துறை!'' என்றார் போராட்டக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முகிலன்.[/size]

[size=3]

நியாயத்தை மட்டுமே துணையாகக்கொண்டு அற வழியில் போராடுபவர்களை எப்படி எல்லாம் ஒடுக்க முடியுமோ, அப்படி எல்லாம் ஒடுக்க முயல்கிறது காவல் துறை.[/size]

[size=3]

பெண்களின் நிலையைக் காட்டிலும் மிகவும் பரிதாபமாக இருக்கிறது அங்கே இருக்கும் குழந்தைகளின் நிலைமை. மனரீதியாகக் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தைகள் இரவுகளில் திடீர் திடீரெனத் தூக்கம் தொலைத்து எழுந்துவிடுவதாகவும், 'போலீஸ் வருமா’ என்று அச்சத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார் இடிந்தகரை வெண்ணிலா. இங்கு உள்ள குழந்தைகளுக்கு முறையான, முழுமையான கவுன்சிலிங் உடனடித் தேவை.[/size]

[size=3]

தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் பாளையங்கோட்டை சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று பெயிலில் வெளியே வந்திருக்கும் கிஷனிடம் பேசினேன். மிரண்ட குரலில் மருண்ட கண்களுடன் பேசத் தொடங்கினான். ''நான் வீட்டுக்குள் இருந்தப்போ போலீஸ் வந்துச்சு. பயந்துபோய் இன்னொரு வீட்ல ஒளிஞ்சுக்கிட்டேன். அங்கேயும் வந்து என்னைப் பிடிச்சுட்டுப் போனாங்க. வழியில வண்டியிலவெச்சு அடிச்சாங்க. கூடங் குளம் போலீஸ் ஸ்டேஷன்லயும் அடிச்சாங்க'' என்றவனிடம் ''தேசத் துரோகம் என்றால், என்னவென்று தெரியுமா?'' என்று கேட்டேன். ''அப்படின்னா..?'' என்று உதட்டைப் பிதுக்கினான். கிஷனைப் போல 16 வயதுகூட நிரம்பாத நான்கு சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பி இருக்கிறார்கள். காசா காலனி என்று அழைக்கப்படும் சுனாமி குடியிருப்பில், வீடுகளுக்குள் புகுந்து காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களுக்குச் சாட்சியாக ஜன்னல்கள், டி.வி, ஃபிரிஜ், பாத்திரங்கள்... எல்லாம் உடைந்து கிடந்தன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. பந்தலில் இருந்த மூன்று ஜெனரேட்டர்களில் இரண்டைக் 'கொள்ளை’ அடித்துச் சென்ற போலீஸ், மூன்றாவதை உடைத்து மணலை அள்ளிக் கொட்டிவிட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் வைத்துவிட்டுச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள் மக்கள்.[/size]

[size=3]

சுனாமி நகரில் நடந்தவற்றைப் பற்றி கண்ணீருடன் விவரித்தார் அனிதா.[/size][size=3]

''சுனாமி நகர்ல போலீஸ்காரங்க செஞ்ச அட்டூழியங்களை நேருக்கு நேர் பார்த்தேன். எப்ப போலீஸ் வந்து அடிச்சு விரட்டிருமோங்கிற பயத்துல வீட்ல தங்காம மாதா கோயிலுக்கு வந்தோம். இங்கே நாங்க அசந்த சமயத்துல உள்ள புகுந்த போலீஸ் மாதா சிலையை உடைச்சு, சிலைக்குக் கட்டியிருந்த சேலையைக் கழட்டிப்போட்டு, பீடத்து மேல அசிங்கம் பண்ணிவெச்சுட்டுப் போயிருக்காங்க. எங்க கோயில் அவங்களுக்கு கக்கூஸா என்ன? மாதாவை நாங்க நம்புறோம்னு மாதாவை அவமானப்படுத்தினாங்க. உதயகுமார் சாரை நம்புறோம்னுதான் நடக்க முடியாத பொண்ணுகிட்டகூட, அவரை வெச்சு தப்புத் தப்பா பேசுறாங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். கடற்கரைக்கார மனுஷங்களைப் பத்தி இன்னும் அவங்களுக்குத் தெரியலை. உதயகுமார் சார் சொன்ன வார்த்தைக் குக் கட்டுப்பட்டுத்தான் நாங்க அமைதியா இருக்கோம். இல்லேன்னா, நடக்குறதே வேற'' என்று ஆவேசமும் அழுகையுமாக முடித்தார்.[/size][size=3]

இடிந்தகரையில் மக்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்திய நாளன்று, விமானம் தாழப் பறந்ததால் அந்த அதிர்ச்சியிலேயே உயிர் இழந்த சகாயத்துக்கு மூன்று பெண்கள் உட்பட நான்கு குழந்தைகள். மனைவி சபீனா இன்னும் கணவனை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மீனவர் அந்தோணியின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழக அரசு, சகாயத்தின் மரணத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுவரை சகாயம் மரணம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகூட பதியப்படவில்லை.[/size]

[size=3]

பொதுச் சமையல் செய்து உண்டு ஆண்களும் பெண்களும் பேதமற்று வாழும் கொம்யூன் வாழ்க்கை போன்றே இடிந்தகரை மக்களின் வாழ்க்கை முறை மாறி இருக்கிறது. வீடுகளில் சமைப்பது இல்லை. லூர்து மாதா ஆலய வளாகத்தில்தான் சாப்பாடு தயாராகிறது. அதைத்தான் சாப்பிடுகிறார்கள். பால், தண்ணீர் விநியோகம் இல்லை. இடிந்தகரையில் இருந்து வெளியே சென்று தண்ணீர் லாரி ஒன்றில் மக்கள் தண்ணீர் சுமந்து வருகிறார்கள். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய். பகல் முழுக்க மின் தடை. இரவில் மட்டுமே மின்சாரம். மருந்துப் பொருட்கள் இல்லை. பேருந்து வசதியை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டது அரசு.[/size]

[size=3]

மளிகைப் பொருட்கள், காய்கறி என்று எதுவும் ஊருக்குள் வருவது இல்லை. கடல் வழியாகப் படகுகளில் வரும் உணவுப் பொருட் களை வைத்தே பொதுச் சமையல் நடக்கிறது. நாட்டில் இருந்து துண்டிக்கப்பட்ட போர்ப் பிரதேசம்போல இருக்கிறது இடிந்தகரை. பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணைப் பத்திரிகை யாளர்கள் வந்த வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்று பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.[/size]

[size=3]

யாரிடம் பேசினாலும் ஒரு கட்டத்துக்குப் பின் அழுகிறார்கள். அந்தக் கண்ணீர் கழிவிரக் கத்திலோ, சுய பச்சாதாபத்திலோ வந்த கண்ணீர் அல்ல. ஒருங்கிணைந்த போராட்டம் என்றால் என்ன என்று உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் ஒரு போராட்டத்தில் விளைந்த நெகிழ்ச்சி, ஆவேசம் எல்லாம் கலந்த உணர்ச்சிப் பிரவாகம். அந்தக் கண்ணீர் வரலாற்றில் இடம்பெறும்![/size][size=3]

''தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காது!''[/size][size=3]

p13a.jpg[/size]

பொது மக்களின் பல அடுக்குப் பாதுகாப்பைத் தாண்டிச் சென்று சுப.உதயகுமாரனையும் போராட்டக் குழுவினரையும் சந்தித்தேன். தன்னை இடிந்தகரை பெண்களுடன் இணைத்துப் பேசும் காவல் துறையினரின் போக்கைக் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கும் உதயகுமார், ''கைதுசெய்யப்பட்ட பெண்களிடம் ராதாபுரம் காவல் நிலையத்தில் மிகவும் தரக்குறைவான முறையில் நடந்திருக்கிறார் ஓர் அதிகாரி. மற்றோர் அதிகாரி, 'உதயகுமார், லூர்து மாதா கோயிலின் உள்ளே பெண்களுடன் நேரம் செலவழிக்கிறார்’ என்று முன்னரே கொச்சையாகப் பேசி இருக்கிறார். மக்களின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல், மிகத் தரக் குறைவாக நடந்துகொள்கிறது காவல் துறை'' என்கிறார்.

[size=3]

''லூர்து மாதாவுக்கு அடுத்து உதயகுமாரன்தான் எங்கள் தெய்வம் என்கிறார்களே இடிந்தகரை மக்கள்?''[/size][size=3]

''அவர்களுடைய அன்புக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால், போராட்டக் குழுவினர் வழிகாட்டும் வழியில்தான் நான் செயல்படுகிறேன். தனிநபர் வழிபாடு எனக்குப் பிடிக்காத ஒன்று. போராடும் மக்களிடையே இப்படியான உணர்வு இருப்பதை மாற்றுவோம். இது ஒரு கூட்டுப் போராட்டம். என்னை மட்டும் இதில் முன்னிறுத்து வதை நான் விரும்பவில்லை. இந்த எண்ணத்தை யும் நாளடைவில் சரிசெய்வோம்!'' என்கிறார் தீர்க்கமாக.[/size]

கூடங்குளம் சென்று வந்த பெண்கள் குழு விடுத்துள்ள பத்திரிகை செய்தி

by Kavin Malar கவின் மலர் on Saturday, September 29, 2012 at 7:34pm ·

வழக்கறிஞர் ரஜினி, டாக்டர் சங்கீதா, பத்திரிகையாளர் கவின் மலர், பெண்கள் அமைப்பைச் சேர்ந்த மேரி, செண்பகவல்லி, துளசி, பாண்டிதேவி ஆகியோர் அடங்கிய பெண்கள் குழு செப்டம்பர் 22ம் தேதி இடிந்தகரைக்குச் சென்று அங்குள்ள மக்களின் நிலைமையைக் கண்டறிந்து வந்துள்ளோம்.

400 நாட்களுக்கும் மேலாக இடிந்தகரையையும், சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்ந்த மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடி வருகின்றனர். யுரேனியம் நிரப்பப்படும் என்று அரசு அறிவித்ததை அடுத்து, செப்டம்பர் 9 அன்று மக்கள் கூடங்குளம் அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்தவித வன்முறையிலும் ஈடுபடாமல் அறவழியில் வெற்றிகரமாக தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் வன்முறை மூலம் இந்தப் போராட்டத்தை ஒடுக்க நினைத்து, அதன் உச்சகட்டமாக செப்டம்பர் 10 அன்று மக்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர்புகைக் குண்டு வீசியும் போராட்டத்தை திசைத்திருப்பி, வன்முறைப் போராட்டமாக சித்தரிக்க முயல்கின்றன. இந்தப் பதட்டமான சூழலில், அன்றும் அதற்குப் பின்னும் அங்கு நடந்தது என்ன எனபதைக் கண்டறிந்து வெளிவராத உண்மைகளை வெளிக்கொணரவும், அவர்களுடைய போராட்டம் இன்று எந்தளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்காகவும் நாங்கள் இடிந்தகரைக்குச் சென்றோம்.

  • செப்டம்பர் 10 அன்று, காலை எட்டு மணியளவில் பூசைக்குச் சென்ற மக்கள் திரும்பிவந்தபின், ஒருமுறை அவர்கள் மீது தடியடி நடந்திருக்கிறது. அதன்பின் குழந்தைகளை பெண்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப முனைந்தனர்.
  • இரண்டாவது முறை பத்து மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் மக்களிடையே பேசுகையில் ‘பத்து நிமிடத்துக்குள் கலைந்துச் செல்லுமாறு பேசிக்கொண்டிருக்கும்போதே, அவகாசமே அளிக்காமல், பின்னாலிருந்து தடியடி நடத்தத் துவங்கியது காவல்துறை.
  • கண்ணீர்ப் புகைக் குண்டு வீசுவதையே அனுமதிக்க முடியாத நிலையில், காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டை வீசியதால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வாய், மூக்கு, காது, கை என்று உடலில் பல பாகங்களும் தீய்ந்து கருகி இருக்கின்றன.
  • எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், தங்கள் எதிர்ப்பைக் காட்ட அமைதியாய் அமர்ந்திருந்த மக்கள் மீது காவல்துறை தேவையே இன்றி தடியடியைத் தொடங்கியது. கண்ணீர்ப் புகைகுண்டோ, தடியடியோ நடத்துவதற்கு முன், கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை காவல்துறை திட்டமிட்டு மீறியுள்ளது.
  • அன்றைய சம்பவத்தின்போது 7 பெண்கள் உட்பட 65 பேரை காவல்துறை பிடித்துச் சென்று பலவிதமான பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்கிற தகவலையும் பல நாட்கள் காவல்துறை அவர்களுடைய வீடுகளுக்குத் தரவில்லை. முதல்நாள் 11 மணிக்குக் கைதான ஏழு பெண்களையும் 30 மணிநேரம் சட்டவிரோதக் காவலில் வைத்துவிட்டு, இடிந்தகரை பெண்கள் போராட்டம் செய்தபிறகே ரிமாண்ட் செய்துள்ளனர்.
  • குழந்தைகளையும் விட்டுவைக்காமல், 14 - 16 வயதுள்ள 4 சிறுவர்களையும் விரட்டிப் பிடித்து, தேசத்துரோக வழக்கில் கைதுசெய்து பத்து நாட்கள் வைத்திருந்தது காவல்துறை. தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு, செப்டம்பர் 21 இரவு பெயிலில் வந்துள்ள கிஷனிடம் பேசியபோது தன் மேல் என்ன வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை. காவல்துறை அவனைப் விரட்டிப் பிடித்தபின் வாகனத்தில் வைத்து அடித்திருக்கிறார்கள். கூடங்குளம் காவல்நிலையத்தில் வைத்தும் அடித்திருக்கிறார்கள் என்று அவனிடம் பேசியதில் தெரியவந்தது. இன்னமும் பயம் விலகாத முகத்துடன் இருக்கும் கிஷனைப் போலவே இன்னும் மூன்று பேரையும் பத்து நாட்களாக சிறுவர் சீர்திருத்தச் சிறையில் வைத்திருந்தது காவல்துறை. அவர்கள் இப்போது பெயிலில் வெளியே வந்திருக்கிறார்கள்.
  • தடியடி நடக்கும்போது மக்களெல்லாம் கலைந்துச் சென்றபின், இடிந்தகரையைச் சேர்ந்த இரு கால்களும் ஊனமுற்று ஊன்றுகோல்களின் உதவியில் நடக்கும் ஒரு பெண் தன் குழந்தையைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தபோது, கடலோரக் காவல்படையைச் சேர்ந்த ஒருவர் ஓடமுடியாத அந்தப் பெணணின் மார்பகங்களில் தொட்டு பாலியல் வன்புணர்ச்சிக்கு முயன்றபோது, அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே ’உதயகுமாரிடம் மட்டும்தான் படுப்பியா? எங்களிடம் படுக்க மாட்டியா?’ என்று குழந்தையைத் தேடிக்கொண்டிருந்த தாயிடம் கேட்டு மனிதத்தன்மையற்ற முறையில் வக்கிரமாக நடந்துகொண்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண்கள் முன்னணியில் நிற்கும் இந்தப் போராட்டத்தை ஒடுக்க பெண்களிடம் அவதூறான மொழியில் பேசுவதையும், பாலியல் ரீதியாக ஒடுக்க நினைப்பதையும் கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனாலும் இவற்றை எல்லாம் மீறி பெண்கள் போராட்டக்களத்தில் தொடர்ந்து நிற்கின்றனர்.
  • குழந்தைகளுக்குத் தேவையான பால், அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருட்கள், சமையலுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்களின் வரவை அரசு தடைசெய்துள்ளது. மின்சாரம் பகல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. கேபிள் டிவி ஒயர்களை துண்டித்து அவர்களுக்கு பிற பகுதிகளில் ந்டக்கும் செய்திகள் எதுவுமே தெரியாமல் வைத்துக்கொண்டிருக்கிறது அரசு. தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. போர்ச்சூழலில் சிக்கிய ஒரு பகுதியைப் போல அந்தப் பகுதி தென்படுகிறது. ஆனால், மதுரை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் சரியான முறையில் நடைபெறுவதாகவும், நிலைமை சீராக இருப்பதாகவும் போலியான சத்திய பிரமாண வாக்குமூலத்தை (affidavit) அரசு அளித்துள்ளது. இது மிகுந்த கண்டனத்துக்குரியது.
  • சமையல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த உணவுகளிலும், மிச்சமிருந்த அரிசி மூட்டைகளிலும் மண்ணையள்ளிப் போட்டு இருக்கிறது காவல்துறை. ஊர்மக்கள் பயன்படுத்திவந்த 3 ஜெனரேட்டர்களில் இரண்டைத் திருடிச் சென்றுவிட்ட காவல்துறை, ஒரு ஜெனரேட்டரை அடித்து நொறுக்கி அதை இனி பயன்படுத்தமுடியாதபடி அதிலும் மண்ணை அள்ளி உள்ளே கொட்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கையில் மீண்டும் ஒரு வாச்சாத்தியை இடிந்தகரையில் நிறைவேற்றியிருக்கிறது அரசு என்று சொல்லலாம்.
  • குழந்தைகளின் கல்வி மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். காவல்துறையினரின் தடியடிச் சம்பவத்திற்குப் பின் அவர்கள் உளவியல்ரீதியில் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இரவுகளில் தூங்க இயலாமல் அவர்கள் அவதிப்படுவதையும், தூக்கத்தில் பயத்தில் அச்சப்பட்டு உளறுவதையும் பெண்கள் கண்ணீருடன் முறையிட்டார்கள். பால்யப் பருவத்திற்கான இனிமையான நினைவுகள் ஏதுமற்று, அவர்களின் விளையாட்டுப் பொழுதுகள் பறிபோய் இருப்பதையும் கண்கூடாகக் காணமுடிகிறது.
  • இடிந்தகரைப் பகுதி மக்களில் யாருக்கேனும் உடல்நலம் சரியில்லாமல் போனாலும் கூட அவர்களை மருத்துவனைக்குக் கொண்டுச் செல்ல முடியாத நிலை இருக்கிறது. போக்குவரத்துக்கான பேருந்துகள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டது அரசு. மருந்துப் பொருட்களும் ஊருக்குள் வர இயலாத நிலையில், பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணை அங்கு வந்த ஊடக நண்பர்களின் உதவியுடன், அவர்களுடைய வாகனத்தில் ஏற்றிச் சென்று பிரசவம் பார்த்த சமபவமும் நடந்திருக்கிறது. மனிதாபிமான முறையில் செயல்பட்டு இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ஊடக நண்பர்களை நாங்கள் பாராட்டுகிறோம்.
  • சுனாமிக் குடியிருப்பில் உள்ள வீடுகளைச் சூறையாடி இருக்கிறது காவல்துறை. வீடுகளில் நுழைந்து அங்கிருந்த பிரிட்ஜ், டிவி ஆகியப் பொருட்களை அடித்து நொறுக்கியிருக்கிறது. அங்கே நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதால் செயல்படாத நிலையில் இருந்த அந்த வாகனங்களையும் நாங்கள் கண்டோம். தினசரி வன்முறை நடப்பதால், அச்சத்தில் இருக்கும் மக்கள் சுனாமி நகரில் உள்ள தங்கள் வீடுகளில் தங்காமல், இடிந்தகரையில் உள்ள மாதா கோயிலுக்குச் சென்றுத் தங்கியுள்ளனர். வெளியில் இருந்து எங்களைப் போன்றவர்கள் அங்கே சென்றால் இருக்கும் சுதந்திரம் கூட சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டவர்களாக அவதியுறும் கடற்கரை கிராம மக்களுக்கு இல்லைக் கண்டறிந்தோம்.
  • ஓராண்டு காலமாக போராட்டக்களமாக விளங்கிய இடிந்தகரை லூர்துமாதாகோயிலையும் காவல்துறை விட்டுவைக்கவில்லை. ’மாதா காப்பாற்றுவார் என்றுதானே நீங்கள் போராடுகிறீர்கள்? அந்த மாதாவை நான் என்ன செய்கிறேன் பார்?” என்று சொல்லி உள்ளே புகுந்து மாதா சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஆடையை கழற்றி எறிந்து, சிலையை உடைத்து, பீடத்தின்மேல் சிறுநீர் கழித்துவிட்டுச் சிறுபான்மையினரின் உணர்வுகளைப் புண்படுத்தி கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக்கிறது காவல்துறை.
  • மணப்பாட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான அந்தோணி, வான்படைத் தாக்குதலில் பலியான சகாயம் ஆகிய இருவரின் உயிர்கள் இதுவரை அநியாயமாக பலியாகி இருக்கின்றன. இந்தப் போராட்டத்துக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாமல், வழிப்போக்கராக வந்த அந்தோணி தனது வாகனத்தை எடுக்க வந்த சமயத்தில் காவல்துறை அவரைச் சுட்டுக் கொன்றிருக்கிறது. யார் எவர் என்று எந்த விசாரணையும் இல்லாமல் ஒருவரின் உயிரை எடுத்திருக்கிறது காவல்துறை. தற்காப்புக்காகச் சுட்டோம் என்றுதான் காவல்துறை சொல்கிறது. ஆனால் அவர் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர் இல்லை. அப்படியே தற்காப்புச் சுட்டாலும், முழங்காலுக்குக் கீழேதான் சுடவேண்டும் என்கிற விதிமுறையை மீறி அவருடைய வயிற்றுப் பகுதியில் சுட்டுக் கொன்றிருக்கிறது காவல்துறை.
  • விமானத்தை மிகத்தாழ்வாக பறக்கவிட்டு இடிந்தகரையைச் சேர்ந்த சகாயத்தைக் கொன்றிருக்கிறது அரசு. விமானத்தை ஓட்டி வந்த விமானி அணிந்திருந்த சட்டையின் வண்ணத்தைக்கூட இடிந்தகரை மக்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். மேலே பறந்து கொண்டிருந்த விமானம், திடீரென்று தன் தலைக்கு மேலே மிகத் தாழ்வாகப் பறந்ததால்தான் சகாயம் அதிர்ச்சியுற்று மயங்கி விழுந்து இறந்தார். ஆனால் இதற்காக முதல் தகவல் அறிக்கை கூட போட மறுக்கிறது காவல்துறை. அவருடைய குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையையும் அரசு இதுவரை வழங்கவில்லை. 4 குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியே தவிக்கும் சகாயத்தின் மனைவியின் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? அரசு இழப்பீடே கொடுத்தாலும் இழந்த உயிரை மீட்க முடியாது என்றாலும், இந்தக் குறைந்தபட்ச மனிதாபிமான நடவடிக்கையைக்கூட அரசு எடுக்கவில்லை.

பரிந்துரைகள்

  • இடிந்தகரையில் கொல்லப்பட்ட சகாயத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

  • விமானத்தை தாழப் பறக்கவிட்டு மகக்ளை பயமுறுத்தி சகாயத்தின் உயிரைப் பறித்த விமானி மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு, பணிநிக்கம் செய்யப்படவேண்டும்

  • கூடங்குளம், வைராவிக்கிணறு கிராமங்களில் உள்ள காவல்துறை வெளியேற்றப்பட வேண்டும்.

  • பாதிக்கப்பட்ட கிராமங்களில் சகஜ நிலை திரும்பும் வகையில் போக்குவரத்து, மருத்துவம், அத்தியாவசியப்பொருட்கள் போன்ற வசதிகள் செய்துத்தரப்படவேண்டும்.

  • பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு நீதிகிடைக்கும்வகையில் குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

  • போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்

  • அந்தோணியை துப்பாக்கிச்சூட்டில் கொன்ற காவல்துறை அதிகாரி மீது கொலைவழக்கு பதிவு செய்து பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.

  • போராடுவது என்பது அடிப்படை உரிமை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தேசத்துரோக வழக்கு போட்டு அவர்களை மிரட்டுவதை நிறுத்தவேண்டும்.

  • சிறுவர்கள், போராட்டக்குழு உட்பட மக்கள் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும்.

  • மத்தியப் பிரதேசத்தில் நீருக்குள் 15 நாட்கள் நின்று போராடி ஜல சத்தியாகிரகம் செய்த மகக்ளை அந்த மாநில முதல்வர் நேரில் வந்து சந்தித்தார். ஆனால் ‘நான் உங்களில் ஒருத்தி’ என்று தேர்தல் பிரசாரத்தின்போது அக்டோபர் 14, 2011 அன்று தூத்துக்குடியில் கூறிய முதல்வர் ஜெயலலிதா இதுவரை ஒருமுறை கூட பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் இருப்பது அநீதியானது. ஆகவே உடனே தமிழக முதல்வர் நேரில் வந்து போராடும் மக்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்தப் போராட்டம் சென்ற ஆண்டு துவங்கிய ஒரு மாதத்திலேயே, அரசு இதை வன்முறையைத் தூண்டும் வகையில் இடிந்தகரையைச் சேர்ந்த இரண்டு திருநங்கைகளையும், மூன்று மாற்றுத்திறனாளிகளையும் அடித்துத் தாக்கியது. ஆனாலும் பொறுமை காத்த மக்கள் தொடர்ந்து அறவழியிலேயே தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதனால் திட்டமிட்டு இப்போது மக்கள் மீது தாக்குதல் நடத்தியும், வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் அவதூறுகள் செய்தபின்னும் மக்களின் போராட்டத்தை முடக்க முடியவில்லை. ஜனநாயக நாட்டில் போராடுவது என்பது இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை. அதன்படி அணு உலைக்கு எதிராகப் போராட ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அப்படிப் போராடும் மகக்ளின் மீது தேசத்துரோகக் குற்றம்சாட்டு சுமத்தி அவர்களை அடக்க நினைப்பதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மன்மோகன்சிங் அரசு இந்த அணு உலையைக் கொண்டுவருவதில் உறுதியாய் இருப்பதையும், தமிழக அரசின் துணைகொண்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதையும் பார்க்கும்போது, இந்த விஷயத்தில் Coal -gate போல Nuclear gate ஏதாவது இருக்குமோ என்கிற சந்தேகம் எழும்புகிறது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=4]உங்களுக்குத்தெரியுமா? [/size]

[size=4]கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளிட்ட வன்னி பெருநிலப்பரப்பு விடுதலைப்புலிகளின் பாதுகாப்பில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் அங்கு “மின்சாரம்“ என்பதே இருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அப்பகுதி இருந்தது என்பதற்காகவே அப்பகுதிக்கான மின்சாரத்தை சிறீலங்கா அரசு நிறுத்தி வைத்திருந்தது. அப்படி இருந்தும் எல்லாம் சிறப்பாகத்தான் நடைபெற்றது. மாணவா்கள் புலமைப்பரிசில் தோ்வில் பெருவாரியாகத் வெற்றி பெற்றாா்கள். அமைப்புகள், நிறுவனங்கள், வணிகங்கள் சிறப்பாய் செயற்பட்டன. மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தனா். எந்த வகையிலும் அம்மக்கள் குறைந்துவிடவில்லை. ஆக, தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் மின்சாரம் இல்லாததால், எல்லாம் இழந்ததுபோல் குறைபட்டுக்கொள்ளும் மக்கள் இதுகுறித்து சிந்தியுங்கள். மின்சாரம் இல்லையென்றதும், எல்லாம் இழந்துவிட்டீா்கள் என்று பொருளல்ல. [/size]

[size=4]மின்சாரம் இன்றிய உங்கள் வாழ்வே நல்வாழ்வு, இயற்கையான வாழ்வு என்பதை உணருங்கள். இடிந்தகரை மக்களது போராட்டத்துக்கு வலுச்சேருங்கள். அவா்களது வெற்றியிலே உங்கள் வாழ்வும் வளமும் தங்கியுள்ளது. நினைவிற் கொள்ளுங்கள்... அவா்கள் போராடுவது எம் எல்லோருக்குமாகவும்தான். மின்சாரம் என்ற போதைக்கு அடிமையாகி மனிதத்தைக் கொல்லாதீா்! எம் இனத்தை அழிக்காதீா்..![/size]

[size=6]முகநூல் [/size]

  • 5 months later...
  • தொடங்கியவர்

530226_452952571449504_1166382626_n.jpg



முள்ளிவாய்க்கால் நிலைமையில் "இடிந்தகரை"

 

 

வீட்டின் மீது விமானம் மோதுவது போன்று மிகுந்த அபாயகரமான விண்ணை பிளக்கும் சத்தத்துடன் ஏதோ விழுவது போன்று தெரிந்தது குழந்தைகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் விசாரித்த போது அணு உலையில் இருந்து என்று தெரிந்தது 15 நிமிட இடைவெளியில் விட்டு விட்டு அணுஉலையில் இருந்து வரும் அதிபயங்கர சத்தத்தால் குழந்தைகள் பயந்து வீட்டுக்குள் முடக்கம் !

அமெரிக்காவில் handford அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு எந்த நிமிடத்திலும் வெடிக்கலாம் ,
அமெரிக்க அணுசக்தி பாதுகாப்புதுறை எச்சரிக்கை!!


# அணுவுலையால் ஜப்பான் அடிவாங்கியதை பார்த்தோம்.... ரஷ்யா அடிவாங்கியதையும் பார்த்தோம்.... அமெரிக்கா ஆபத்தில் இருப்பதையும் பார்த்துகொண்டிருக்கிறோம்.... அப்படியிருக்க மிகவும் பாதுகாப்பாக கட்டப்பட்ட அணுவுலை என்று எங்கள் ஊருக்கு நடுவே திறக்க தயாராகிறீர்களே...

தெரியாமதான் கேட்கிறேன்.... நீங்க ஊழல் செய்யாத ஒரு துறைய காட்டுங்கடா பார்ப்போம்.... சவப்பெட்டியில் ஆரம்பிச்சு ராணுவ ஆயுதம் வாங்கியது, ராணுவ வீரர்களுக்கு குண்டுதுளைக்காத உடை, காமன்வெல்த் போட்டி, 2ஜி , வெளிநாட்டிலிருந்து ஹெலிகப்டர் வாங்கியது முதல் கிராமங்களில் மலசலகூடம் கட்டியவரை ஊழல்.... எதை வைத்து உங்களை நம்ப சொல்கிறீர்கள்....

அவ்வளவு பாதுகாப்பனதுன்னா பாராளுமன்றம் பக்கத்துலயே வச்சிக்கவேண்டியதுதானே....

இது தமிழர்களுக்கு நல்லதாம்..... இலங்கையில் எம் மக்களை கொன்றுகுவித்துவிட்டு எனக்கு இப்போ நல்லதுசெய்கிறேன் என்று பூசுத்தாதே....

இந்த அணுவுலை மின் உற்பத்திக்கு என்பது பொய்... மீதமிருக்கும் தமிழர்களை வேரறுக்க தயாரிக்கப்பட்ட அணுகுண்டு இது..... தமிழா நம்புவது நம்பாதது உன் விருப்பாம்....

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.