Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் இன்னமும் தமிழரை சிறுபான்மை இனம் என அடிமைப்படுத்திக் கொள்ளவே எத்தனிக்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கம் இன்னமும் தமிழரை சிறுபான்மை இனம் என்று அடிமைப்படுத்திக் கொள்ளவே எத்தனிக்கின்றது. அரசியல் தீர்வு ஒன்றை கோரியே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் மூலகாரணமானது யுத்தம் முடிவடைந்த பின்னரும் வழங்கப்படவில்லை.

தமிழர்களின் அரசியல் தீர்விற்காக ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முடிவடைந்தும் இதுவரைக்கும் இலங்கை அரசாங்கத்தினால் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. இன்னும் சிறுபான்மை இன்மை இனம் அடக்குமுறைக்குள்ளேயே உள்ளது என்று யாழ்.ஆயர் அதிவண.தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை ஜ.நா மனித உரிமைகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்.வருகை தந்த ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தொழில் நுட்ப அதிகாரிகள் யாழ்.ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை அரசாங்கம் இன்னமும் தமிழரை சிறுபான்மை இனம் என்று அடிமைப்படுத்திக் கொள்ளவே எத்தனிக்கின்றது. யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமான அரசியல் தீர்வு யுத்தம் முடிவடைந்த பின்னரும் வழங்கப்படவில்லை. வடக்கில் இராணுவக் குறைப்பு என்பது வெளிநாடுகளுக்கு கண்துடைப்பிற்காக இலங்கை அரசாங்கத்தினால் செல்லப்படும் பெய்ப்பிரச்சாரம் மட்டுமே. வடக்கினைப் பொறுத்தவரையில் இராணுவக் குறைப்பிற்குப் பதிலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலையங்கள் பலப்படுத்தப்படுகின்றது. மேலும் மக்களுடைய பகுதிகளைக் கையகப்படுத்தி நிரந்தரமான புதிய படைமுகாங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய மாகாணங்களில் நடைபெற்றது போல வடமாகாணத்தின் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இத்தேர்தல் மூலம் தமிழர்கள் தமக்காக தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறக்கும்.

மற்றும் மக்கள் முழுமையான மீPள்குடியேற்றம் செய்யப்படுவது என்பது வெறும் பேச்சில் மட்டுமே உள்ளது. அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுமட்டுமல்லாமல் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் குடியேறுவதற்கன குடிநீர், வீடு, மலசலகூடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் மக்கள் அங்கு மீள்குடியேறாமல் இன்னமும் முகாங்களில் இருக்கின்றனர்.

மேலும் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த உறவினர்களுக்கான சமயச்சடங்கினைக்கூட நடத்த இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான விசாரணைகள் இதுவரைக்கும் இடம்பெறவில்லை. காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அல்லது இல்லையா? என்பது கூட தெரியாத நிலையில் அவர்களுடைய உறவினர்கள் இன்னும் கண்ணீருடன் தேடி அலைகின்றார்கள். இலங்கை அரசாங்கம் தம்மிடம் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/83074/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.