Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவிற்கான மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இரத்தானது ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியா !!

Featured Replies

ஐ.நாவிற்கான மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இரத்தானது ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியா !!

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தக் கூட்டத்தில் பங்கெடுத்து உரையாற்றவிருந்த சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக, நியூ யோர்கில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு முன்னால், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அமெரிக்க மற்றும் கனேடியத் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றிற்கு தயாராகி வரும் நிலையில், மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இரத்தாகியுள்ள செய்தி வெளிவந்துள்ளது.

இதேவேளை, பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழக்காடும், மகிந்த இராஜபக்விற்கு அமெரிக்க அரசினால் வழங்கப்படும் இராஜதந்திர விலக்கிற்கு எதிரான வழக்கினை, அமெரிக்க மாவட்ட நீதிமன்றமொன்று தள்ளுபடி செய்துள்ள போதும், இவ்வழக்கினை மேன்முறையிட்டு நீதிமன்றுக்கு கொண்டு; கொண்டு செல்லப்படவுள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவின் அமெரிக்கப் பயணம் இரத்தாகியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து சிறிலங்கா அரச வட்டாரங்கள் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.

சிறிலங்கா அரசுத் தலைவரது லணடன் பயணங்கள் அவருக்கு கசப்பான அனுபவங்களை ஏற்கனவே கொடுத்துள்ள நிலையில், மேற்குலக நாடுகளுக்கான மகிந்தவின் பயணங்கள் பெரும் சவால்மிகுந்ததாகவே உள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முனைப்பில் மகிந்த இராஜபக்சவிற்கு எதிரான வழக்கு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் ஆகியனற்றின் ஊடாக, மீண்டும் ஒரு தடவை சர்வதேச அரங்கொன்றில் அசிங்கப்பட்டு நாடுதிரும்புவதை சிறிலங்கா அரசுத் தலைவர் விரும்பாமை காரணமாகவே இப்பயணம் இரத்தாகியிருப்பின், அது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதலாமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மகிந்த இராஜபக்சவினது அமெரிக்கப்பயணம் இரத்தாகியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ள நிலையில் மகிந்தவிற்கு எதிரான 'பொங்குதமிழ்' கவனயீர்ப்பு எழுர்ச்சி நிகழ்வு இறுதிநேரம் வரை தயார் நிலையிலேயே இருக்குமென நாடுகடந்த தமிழீழ அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

என்னது நாட்கடத்தும் அரசங்கத்துக்கு எதிராக நம்பிக்கயில்லபிரேரனையா?

[size=5]நம்ப நட நம்பி நடவாதே ![/size]

இப்படி சாக்கு போக்கு சொல்லி தமிழர் ஓய்வு நிலைக்கு போக விசேட விமானத்தில் வந்து இறங்குவான் பாவி.இந்தியாவில் இவ்வளவு எதிர்பு இருக்கு என்று தெரிந்தும் விருதுக்கு வேட்டையாடுகிறான் மகிந்தா! ஆகவே யாரும் ஓய வேண்டாம்.மகிந்தா வரா விட்டாலும் படப்பிடிப்புகுழு வரும்.சென்றமுறை என்னுடன் வாய் தர்க்கத்தில் ஈடு பட்டவர்கள் இம் முறையும் வருவார்கள்.எனக்கு சிறி அண்ணா! இம்முறை வருவதனால் பக்க பலம் அதிகம்

[size=1]

[size=4]ஆம், வந்தாலும் இல்லை வராவிட்டாலும், விழிப்புணர்வு போராட்டம் நடக்கவேண்டும். [/size][/size][size=1]

[size=4]தாயக மக்கள் இன்றும் சகல உரிமைகளையும் இழந்து மகிந்த ஆட்சியின் கீழ் உள்ளார்கள் என்பதை உலகிற்கு கூறவேண்டியது எமது கடமை. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாடுகடந்த அரசின் பங்கு எவ்வளவு என்று தெரியாது

ஆனால் அவர்களின் பங்கும் இருந்தது என்பது உண்மை.

அதற்காக அவர்களால்தான் மகிந்த வரவில்லை என்பது....................??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.