Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு.வைக்கோ பின்னால் அணைத்து தமிழர் அமைப்புகளும் ஒன்று திரள வேண்டும்..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

திரு.வைக்கோ பின்னால் அணைத்து தமிழர் அமைப்புகளும் ஒன்று திரள வேண்டும்..! ஈழதேசம் செய்தி..!

ரத்தக்கறை படிந்த ராஜபக்சே பாழ்க் கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது புத்தருக்கே அவமானம் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர். மேலும் கூறும்பொழுது, அடிக்கல் நாட்டு விழாவில் ராஜபக்சே பேசிய பேச்சுக்கள் வேதாளம் வேதம் ஓதுவது போன்று அமைந்துள்ளன. தம் சொந்த நாட்டின் மக்கள் மீதே வஞ்சம் நிறைந்த நெஞ்சும், விரோத மனபாவமும், மதங்கள் மீதான வெறுப்பும் கொண்டு தன் ராணுவத்தை வைத்தே தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு பெரும் அழிவை ஏற்படுத்தி நம்..? தமிழ் சமூதாயத்தை கருவறுத்த இலங்கை அதிபர் ராஜாபக்சே கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு சகிப்புத் தன்மை முக்கியமானது என்று பேசி உள்ளார் என்று கூறியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள். உலக நாடுகளால் போர் குற்றவாளியாக கருதப்படும் ராஜபக்சே, இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டு, 20 - 20 கிரிக்கெட் போன்ற அலங்கார விழாவுக்காக மட்டும் அழைக்கும் அசிங்கத்தை, இனிவரும் காலத்தில் எக்காரணம் கொண்டும் அரங்கேற்றக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வேறு செப்பியுள்ளார் பொன்னார் அவர்கள்.

இலங்கைப் போரில் நடந்தவைகள் எல்லாம் இவர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. எதனால் இப்பொழுது கூறுகிறார்கள்..? தமிழர் அமைப்புகள் தொடர்ந்து போராடியதின் விளைவே, திரு.வைக்கோ, செந்தமிழன் சீமான் மற்றும் பெரியார் திராவிட கழகம் ஏனைய பல தமிழ் அமைப்புகள் தொடர்ந்து போராடியதின் விளைவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை இவ்வாறு சொல்ல வைத்திருக்கிறது.

முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆலோசகர் வி.பொன்ராஜ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். தனித் தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மத்திய பிரதேச சாஞ்சி புத்த கோவில் விரிவாக்க அடிக்கல் நாட்டுவதற்கு வந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 90 மணி நேரம் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய வைக்கோவின் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று கூறியுள்ளார். வி.பொன்ராஜ் மேலும் கூறுகையில், அடுத்த நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்குள் இந்த இலங்கை போராட்டத்தை முன்னெடுக்கும் அல்லது புரிந்து கொள்ளும் தலைவர்களை உருவாக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் தவறான ஆலோசனையின் படியே அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே, உயர் அதிகாரிகளின் தவறான வெளிநாட்டு கொள்கையினை மாற்றி அமைத்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு பாதகமான நாடாக இலங்கை மாறிவிட்டது என்கிறார்கள். தனி ஈழம் அமைந்தால் அது இந்திய நாட்டிற்கு வேண்டப்பட்ட நாடாக இருக்கும் என்கிறார்கள். இதைத்தானே விடுதலைப் புலிகளின் தலைவர் இறுதி யுத்தத்தில் கூட கூறியிருந்தார். இவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும் இலங்கையில் எவ்வாறு எல்லாம் தமிழ் மக்கள் படுகொலை அல்ல இன அழிப்பு செய்யப்பட்டார்கள் என்று. இவர் ஏன் இவ்வாறு இப்பொழுது கூறுகிறார்..? இவை ஏன் என்று பிறகு காண்போம்.

தமிழர்களின் அடிப்படையான பிரச்சனைகளான வாழ்வாதாரமான காவிரி,முல்லைப் பெரியாறு, பாலாறு, கூடங்குளம், மணல் கனிமங்கள் சூறையாடப்படுதல் மற்றும் இலங்கைத் தமிழர்கள் என்று கிட்டத்தட்ட தமிழர் அமைப்புகள் கொண்டிருக்கும் அதே உறுதிப்பாட்டை கொண்டிருக்கிறார் திரு வைக்கோ அவர்கள். எனவே, பிரிந்து பிரிந்து தமிழ் அமைப்புகள் போராடிய காரணத்தினால் தான் இரண்டு பெரிய திராவிட கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. மற்றும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகள், இதர தேசியக் கட்சிகள் அனைத்தும் தமிழனை இளிச்சவாயனாக மாற்றியதோடு மட்டுமின்ற சிறந்த அடிமையாய் வேறு வைத்திருக்கிறார்கள்.

திரு.வைக்கோ அவர்கள் தற்பொழுது காங் - ஐ, பா.ஜ.க.இரண்டுமே தமிழருக்கு விரோதமானவை என்று முடிவு எடுத்து விட்டார். சிதறி கிடக்கும் அணைத்து தமிழர் அமைப்புகளும் வைக்கோ அவர்கள் பின்னால் நிற்பதின் வாயிலாக மூன்றாவது அணி உருவாக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும், இதன் மூலம் தேர்தலில் இரண்டு பெரிய மோசடிக்கட்சியான திராவிடக் கட்சிக்கும் மாற்றாக வைக்கோ உயர முடியும், தமிழர்களின் நலன்கள் காக்கப்பட, இனம் காக்கப்பட இவை மிக முக்கியமானவை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஏன் வைக்கோ பின்னால் அணி சேரக்கூடாது.. தமிழர் அமைப்புகள்..?

மாயாண்டிக்கருப்பு

என்னது எங்களுக்கு பைத்தியம் புடிச்சு போச்சுன்னு முடிவு கட்டிவிட்டாயா மாயாண்டி கருப்பு ???

ஒரு ஊழல் இல்லை,

ஒரு மிரட்டி வாங்கிய நன்கொடை இல்லை,

எந்த பெரிய கொள்ளையிலும் தொடர்பு இல்லை,

சீட்டுக்காக அந்தர் பல்டி அடிக்கும் திறமையில்லை,

காசுக்காக தமிழரை உபயோகம் செய்யும் சாதுர்யம் இல்லை,

குத்தாட்டம் பார்க்க ஒரு தொலைகாட்சி நடத்தவில்லை,

பல கோடிகள் புரளும் எந்த ஒரு தொழிலும் இல்லை,

தொழில் அதிபர்களுக்கு மட்டும் சீட்டு கொடுக்கும் சமூக நீதி இல்லை,

ஜாதிகளுக்கு இடையே மோத விட்டு அந்த ரத்தத்தில் ஒட்டு பொறுக்கும் சாணக்கியம் இல்லை,

மந்திரி பதவிக்காக ஊரே அலையும் போது இவர்கள் வந்த போது கூட வேண்டாம் என்கிறார்கள்,

அப்பப்ப அஜால் குஜால் செய்தி எதுவுமே இல்லை,

நானும் இப்ப மாறுவாங்க அப்புறம் மாறுவாங்கன்னு பார்த்துக்கிட்டே இருக்கிறேன், இந்த ஆளும் அவரோட சேர்ந்த ஆளுகளும் இருபது வருடத்திற்கும் மேலாக கொள்கை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இன மானம், லொட்டு லொசுக்குன்னு கை காச காலி பண்ணிக்கிட்டு அலையும் இவர்களுக்கு ஒட்டு போட நாங்க என்ன லூசா?? அல்லது பைத்தியமா ???

எதோ நமக்கு ஏத்தாப்புல நடிச்சமா நாலு காசு பாத்தமான்னு இல்லாம தமிழ் இனமாம் மானமாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.