Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நலன் கருதி மு.கருணாநிதி அறிக்கை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் - ஜெ...! லாவணி அரசியலின் உச்சம்..! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

தமிழர் நலன் கருதி மு.கருணாநிதி அறிக்கை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் - ஜெ...! லாவணி அரசியலின் உச்சம்..! ஈழதேசம் செய்தி..!

எல்லாவற்றிலுமா துரோகம் - இரட்டை வேடம் - ஏடா கூடம்..? இவ்வாறு கூறி கருணாநிதியை ஒரு பிடி பிடித்துள்ளார். மாறாக கருணாநிதியோ, குறை சொல்வது நல்லதல்ல என்று மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து விட்ட அறிக்கையில்,மருத்துவர் ராமாதாஸ் அவர்கள் என்ன கூறினார் என்றால், கடந்த பத்து ஆண்டுகளில் திராவிட கட்சிகளால் நடந்த ஆட்சியில் மின் பற்றாக்குறையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியதற்கு தான் நம்ம தமிளு உலகத் தலைவர் மு.கருணாநிதி ஏகப்பட்ட புள்ளி விபரங்களைக் கூறி, கடைசியாக இவ்வாறு கூறுகிறார். ஆக, மொத்தம் 7798 மெகா வாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்கள் மூலமாக கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன தி.மு.க.ஆட்சியில் என்று கூறியதோடு,

எனவே டாக்டர் ராமதாஸ் அவர்கள் பொத்தாம் பொதுவாக திராவிட கட்சிகளால் தமிழகம் என்ன வளர்ச்சி கண்டது என்று தி.மு.கழகத்தையும் சேர்த்துக் குறை சொல்வது நல்லதல்ல. சட்டப்பேரவையில் அவருடைய கட்சியைச் சேர்ந்த நண்பர் ஜி.கே.மணி போன்றவர்கள் பேசிய பழைய பேச்சுக்களை எடுத்துப் பார்த்தாலே கழக ஆட்சியில் தமிழகம் என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் என்பதை நடுநிலையாளர்கள் கவனத்திற்கு அர்ப்பணிக்கிறேன் என்கிறார்.

அதாவது காது காது என்றால் லேது லேது என்று சொல்கிறார். போகட்டும் இவைகள் எல்லாம். ஜெ. அம்மையார் கூறியுள்ளார் இவ்வாறு. காவிரி நதி நீர்ப் பிரச்சனையைப் பொறுத்த வரையில் தமிழ் நாட்டின் உரிமையை தாரை வார்த்தவர் தி.மு.க.தலைவர் கருணாநிதி. ஹேமாவதி அனைக்கட்டுவதில் தமிழக அரசுக்கு எந்தவிதமான மறுப்பும் இல்லை என்று 06.03.1970. அன்று தமிழ்நாட்டு சட்டமன்றப் பேரவையில் பேசி இருக்கிறார். இது கருணாநிதியின் முதல் துரோகம்.

ஹேமாவதி அணையை கட்டியதின் மூலம், காவிரியின் உப நதிகளான கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்நாவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை அதாவது பல்வேறு குறுக்கு அணைகளை மத்திய அரசின் எந்த ஒப்புதலும் இல்லாமல் கட்டியது கர்நாடக அரசு. இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்தார் மு.கருன்னநிதி. இது இரண்டாவது துரோகம்.

காவிரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, 04.08.1971 அன்று உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை, தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, இரு அவைகளுக்கும் தெரிவிக்காமலேயே கமுக்கமாக 28.08.1972 அன்று திரும்ப பெற்றுக் கொண்டார், இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.

மின் பற்றாக்குறை,கூடங்குளம், டீசல் விலை உயர்வு, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு போன்ற எல்லா பிரச்சனைகளிலும் மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு, அங்கே ஆதரித்துவிட்டு,வெளியில் எதிர்ப்பதைப் போல இரட்டை வேடம் போடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஜெ..அம்மையார்.

ஆக, கூடங்குளத்தை எப்பாடுபட்டாவது திறந்து விடுவார்கள். டீசல் விலை உயர் உயர்வுதான். சில்லறை வணிகமாவது பெரிய வணிகமாவது அந்நிய முதலீடு வந்தே தீரும். சீனி விலையை இரு மடங்கு ஏற்றி விட்டது அன்னை சோனியாவும் தமிளு தலீவர் கருணாநிதியும் சேர்ந்து. மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விடும் உருண்டு விடும் என்று சொல்வதெல்லாம் சும்மா ஒரு தமாசுக்குத் தான். மத்தியில் மேலும் இரண்டு மூன்று அமைச்சர் பதவிகளை பெற்று விடுவார் கருணாநிதி அவர்கள். பதிலுக்கு கைம்மாறாக, டூ ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்படுவார்கள்.

யு.பி.ஏ.முதல் ஆட்சியில் மன்மோகன் சிங் பறந்து பறந்து போடப்பட்ட திட்டங்களை எல்லாம் இந்த ஆட்சியின் இறுதிக்குள் அமுலுக்கு கொண்டு வந்து விடுவார்கள். மக்களுக்கான திட்டங்கள் அல்ல, கார்ப்பரேட்கள் நலன் பெரும் திட்டங்கள் தான் இவையெல்லாம் என்று நாம் சொல்லத் தேவையில்லை.

ஜெ.அம்மையார் கடும் கோபம் கொண்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க.தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிடுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று. பதிலுக்கு இந்தப் பெரியவர் நாளை மற்றும் நாளை மறுநாள் என்று அறிக்கை மேல் அறிக்கை விடுவார். லாவணி அரசியலைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டுமெனில் தினசரி இவர்களின் அறிக்கைகளை படித்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

மாயாண்டிக்கருப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.