Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்ஸ் நோயை ஒத்த புதிய சுவாசநோய்

Featured Replies

[size=4] [/size]

[size=4]சார்ஸ் 'SARS' (Severe acute respiratory syndrome) என்றறியப்படும் ஒரு வகை நுரையீரல் அழற்சி நோயானது கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2003 ஜூலை வரையான காலப்பகுதியில் உலகளவில் சுமார் 8000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படவும் 916 பேர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தது.[/size]

[size=4] [/size]

[size=4]இந் நோய் ஏற்பட்டு சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இது பரவியதால் அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பினை இது ஏற்படுத்தியிருந்தது.[/size]

[size=4] [/size]

[size=4]ஹொங்கொங்கிலேயே இந் நோய் பரவ ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன் சீனாவில் இந்நோய்த் தாக்கமானது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.[/size]

[size=4] [/size]

[size=4]சீனாவில் இந் நோய் வேகமாகப் பரவி வந்தபோது அந்நாடு இது குறித்த தகவல்களை வெளியுலகுக்கு மறைத்ததாலேயே மிக விரைவாக சார்ஸ் நோய் உலகெங்கும் பரவியதாக மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டின.[/size]

[size=4] [/size]

[size=4]img-3ss.jpg[/size]

[size=4] [/size]

[size=4] [/size]

[size=4]சார்ஸ் தொற்றும் அதனாலான பொருளாதாரப் பாதிப்பும் சீனாவில் பாரிய அரசியல் நெருக்கடியை அக்காலப்பகுதியில் ஏற்படுத்தியது. அதனை மூடிமறைத்தும், தடுப்பு நடவடிக்கைகளை முன்னரே எடுக்காமல் விட்ட சீன அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறிவிட்டதால் அந்நாட்டு அரசாங்கம் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.[/size]

[size=4] [/size]

[size=4]சார்ஸ் சீனாவின் பொருளாதாரத்தினை ஆட்டம் காணவைத்தது என்றால் அது மிகையல்ல. ஆசியாவின் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் பொருட்டு அக்காலப்பகுதியில் கடுமையாகப் போராடி வந்த சீனாவுக்கு சார்ஸ் ஒரு சாபக்கேடாக அமைந்தது. [/size]

[size=4] [/size]

[size=4]காலங்கள் உருண்டோடின . இந்நோய் முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உலக சுகாதரா ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. 2003க்குப் பிறகு எந்த மனிதருக்கும் இந்நோய் ஏற்படவில்லையெனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4] [/size]

[size=4]ஆனால் தற்போது சார்ஸ் நோயை ஒத்த புதிய சுவாசநோய் ஒன்றை பிரித்தானியாவில் சிகிச்சைபெற்றுவரும் நபரொருவரிடம் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.[/size]

[size=4] [/size]

[size=4]'சார்ஸ் கொரோனாவைரஸ்' எனப்படும் வைரஸ் காரணமாகவே இந்நோய் ஏற்படுகின்றது.[/size]

[size=4] [/size]

[size=4]கட்டாரிலிருந்து லண்டனில் உள்ள மருத்துவமனையொன்றுக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட நபரொருவரிடமே இந் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டாரைச் சேர்ந்த 49 வயதான அந்நபர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4] [/size]

[size=4]இதேபோன்ற வைரஸானது சவூதியைச் சேர்ந்த நோயாளி ஒருவரிடமும் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் பின்னர் அவர் உயிரிழந்து விட்டார். அங்கு உயிரிழந்த அந்ந நபர் 60 வயதானவர் எனவும் அவரிடமும் இதே நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.[/size]

[size=4] [/size]

[size=4]இந்நிலையில் தற்போது இன்னொருவரிடமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[/size]

[size=4] [/size]

[size=4]இவ் வைரஸ் எத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.[/size]

[size=4] [/size]

[size=4]எனினும் இது தொடர்பாக தற்போது தீவிர ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.[/size]

[size=4] [/size]

[size=4]இதுவரை உலகில் இருவரிடம் மட்டுமே இவ்வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் சுவாசநோய்கள் தொடர்பான பிரிவுக்குத் தலைவராக உள்ள பேராசிரியர் ஜோன் வொட்சன் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4] [/size]

[size=4]இந்நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகின்றமை இதுவரை நிரூபிக்கப்படவில்லையெனவும் ஜோன் வொட்சன் மேலும் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4] [/size]

[size=4]தற்போதைக்கு இப் புதிய வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகக் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருப்பது நல்லது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.[/size]

[size=4] [/size]

[size=4]எனினும் இதனைக் கருத்தில் கொண்டு மத்தியகிழக்கு நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாட்டுகள் எதனையும் உலக சுகாதார ஸ்தாபனம் விதிக்கவில்லை.[/size]

[size=4]sars%20(1).jpg[/size]

[size=4] [/size]

[size=4]உலகில் வேறு எந்த நாடுகளிலிருந்தும் இவ் வைரஸ் தொடர்பான தகவல்கள் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4] [/size]

[size=4]சுவாசத்தொகுதியைத் தாக்குகின்ற மற்ற வைரஸ்களைப் போலவே சார்ஸ் தொற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் தும்மல் மற்றும் இருமலில் இருந்து வெளியாகும் திரவங்கள் மூலமே மற்றவர்களுக்குத் தொற்றுகின்றது.[/size]

[size=4] [/size]

[size=4]ஆனால் சவூதி அரேபிய அதிகாரிகள் இது தொடர்பில் அதிக அக்கறையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அடுத்தமாதமளவில் இலட்சக் கணக்கான ஹஜ் யாத்திரீகர்கள் சவூதிக்குப் பயணிக்கவுள்ளனர். இதனால் இவ் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4] [/size]

[size=4]இதனால் அங்கு பயணிக்கும் யாத்திரீகர்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் முகத்தை மறைக்கும் வகையில் எதனையாவது அணிந்துகொள்ளும்படியும் சவூதி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.[/size]

[size=4] [/size]

[size=4]இதன்மூலம் வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமென அவர்கள் தெரிவிக்கின்றனர்.[/size]

[size=4]http://www.virakesari.lk/article/technology.php?vid=51[/size]

  • தொடங்கியவர்

[size=5]Ontario has found a case of an infection with a new swine flu virus, in a man who had close contact with pigs.[/size]

[size=5]The infection was caused by an H1N1-variant virus, which is not the swine flu virus that has been jumping from pigs to people in the United States this summer.[/size]

[size=5]That virus, an H3N2-variant, has caused 305 infections this year in the U.S. but has not been spotted in Canada to date. Most infections with the H3N2-variant flu have been in people who visited pig barns at state and county fairs.[/size]

http://www.theglobeandmail.com/news/national/new-type-of-swine-flu-detected-in-ontario-not-related-to-us-outbreaks/article4566149/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.