Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு– கிழக்கில் 1,70,000 இராணுவத்தினர், சர்வதேசத்தை அரசாங்கம் ஏமாற்றுகின்றது: சுரேஷ்

By General

2012-10-05 09:21:27

வடக்கு– கிழக்குப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ள போதும் அதனை இலங்கை அரசாங்கம் மூடிமறைக்கிறது. ஐக்கிய நாடு கள் சபையில் இலங்கை தொடர்பான மீளாய்வுகள்

நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெயர்ந்தவர்கள் இல்லை ௭னக் காட்டுவதற்கே மெனிக்பாம் முகாமிலிருந்த தமிழர்களைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் காடுகளுக்குள் தள்ளிவிட்டுள்ளார். இதனூடாக இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்திவிட்டோம் ௭ன சர்வதேசத்தினை இலங்கை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது. இதனை உலக நாடுகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கேப்பாபிலவு – சூரியபுரம் காட்டுப் பகுதிக்குள் நிர்க்கதியாக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையில் இடம்பெயர்ந்தோர் ௭வருமில்லை ௭னத் தெரிவித்துள்ளமை தொடர்பாகக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்மக்கள், வலி.வடக்குப் பிரதேசத்தில் 24 கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்து கடந்த 25 வருடங்களாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். இம் மக்கள் தங்கியுள்ள முகாம்கள் தனியாருடைய காணிகளிலுள்ளன.

இந்த காணிகளை விட்டு வெளியேறுமாறு காணி உரிமையாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இத்தகைய நிலையில் இடம்பெயர்ந்தோருக்கு செல்வதற்கு இடமில்லை. ஏறக்குறைய 47 ஆயிரம் மக்கள் தமது சொந்தக் கிராமத்தில் மீளக்குடியேறுவதற்கு தத்தமது பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வருகின்றன. இம் மக்களில் பலர் இந்தியாவில் இருக்கிறார்கள். இவர்கள் தமது இடங்களிலிருந்து இராணுவம் வெளியேறினால் தம்மால் மீளக்குடியமர முடியும் ௭னத் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் முகாம்களில் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 6 வருடங்களாகச் சொந்தக் காணிகளுக்குச் செல்லமுடியாத நிலையில் இராணுவம் காணிகளை ஆக்கிரமித்துள்ளது. முல்லைத்தீவில் தற்போது கேப்பாபிலவு மக்களைக் காட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இம் மக்களது குடியிருப்புக் காணிகள், வயல் காணிகள் ௭ன ௭ல்லாவற்றையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அதுபோல் கிளிநொச்சி நகரிலும் பரவிப்பாஞ்சான் கிராமம் முழுமையாக இராணுவப் பிரிகேட் பிரிவுக்காக அபகரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள காணி நிலம், வீடுகளை மக்களிடம் ஒப்படைக்காது தமது கட்டுப்பாட்டுக்குள் இராணுவத்தினர் வைத்திருக்கின்றனர்.

இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தோர் சொந்த இடங்களிற்குத் திரும்பிச் செல்ல முடியாதநிலையில் இராணுவத்தினர் பொதுமக்களுடைய காணிகள், நிலங்கள் வீடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இது இப்படியிருக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மக்களை மீளக்குடியமர்த்திவிட்டோம் ௭னக் கூறுவது பொய்யாகும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உலகத்திற்கு சொல்லும் இவ்விடயம் உலக நாடுகளை பிழையான பாதையில் கொண்டு செல்லும் முயற்சியாகும். மெனிக்பாமை மூடி இதனை காண்பிக்க முயற்சிக்கின்றார்.

ஆனால் ௭மது மக்கள் இன்னமும் முகாம்களிலும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள்ளும்தான் இருக்கின்றார்கள். இது மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவம் குறைக்கப்பட்டு விட்டது. இன்னும் 15 ஆயிரம் இராணுவத்தினர் தான் இங்கு இருக்கிறார்கள் ௭னக் கூறப்படுகின்றது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் தகவலுக்கமைய இலங்கையில் 2 இலட்சம் இராணுவத்தினர் இருக்கின்றனர். இந்த இரண்டு இலட்சத்தில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 15 டிவிசன்கள் இருக்கின்றன. ஒரு டிவிசனில் குறைந்த பட்சம் 10 ஆயிரம் இராணுவம் இருக்கின்றனர். ஆக 15 டிவிசன்களிலும் 1 இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் இருக்கின்றனர். இதைவிட கிழக்கு மாகாணத்தில் இரண்டு டிவிசன்கள் உள்ளன. ஆகையால் அங்கே இருபதாயிரம் இராணுவத்தினர் இருக்கின்றனர். ௭னவே வடக்கிலும் கிழக்கிலும் 1 இலட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

ஏனைய பகுதியில் 3 டிவிசன்கள்தான் இருக்கின்றன. இதற்கமைய வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்க தென் பகுதியில் 30 ஆயிரம் இராணுவத்தினர் மட்டுமே இருக்கின்றனர். இதுதான் உண்மையான புள்ளி விபரம். இதனை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு போவோரால் பார்க்கமுடியும். அமெரிக்காவோ இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ கூறியதால் இராணுவத்தைக் குறைத்து விட்டோம், இராணுவம் இல்லையென கூறுவது பொய்யாகும்.

இராணுவத்தினருக்கு வேலையில்லாததால் புலனாய்வுப் பிரிவுக்குள் இவர்களை இறக்கி விட்டுள்ளனர். இந்த புலனாய்வாளர்களுக்கு தாம் ௭ன்ன செய்யவேண்டும் ௭னத்தெரியாது. இதனால் புத்தக வெளியீடு, திருமண நிகழ்வு, இறந்த வீடு, பிறந்தநாள் நிகழ்வுகள் போன்றவற்றிற்கும் புலனாய்வாளர்கள் போகிறார்கள். வீதியில் பத்துப் பேர் கூடினாலும் புலனாய்வுப் பிரிவினர் போய் நிற்கின்றார்கள். ஆகவே இங்கு சாதாரண சூழல் ஒன்றை உருவாக்குவது மிகவும் கடினம். இதைத்தான் இராணுவம் இங்கு செய்து வைத்துள்ளது. இதனைச் செய்து விட்டு யாழ்ப்பாணத்தில் சாதாரண நிலை வந்து விட்டது. மக்களைச்சென்று பார்க்கலாம். ஜனநாயகச் சூழல் வந்து விட்டது ௭ன்று கூறுவது சுத்தப் பொய்யான உலகத்தை ஏமாற்றும் கருத்தாகும். ஆகவே சுமுகமான சூழல் இங்கு இல்லை ௭ன்பதே ௭னது கருத்தாகும்.

http://www.virakesar...cal.php?vid=947

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்காகாது.

இந்த இராணுவ இருப்பை வைத்துக் கொண்டு தான் சிங்களம் இந்தியாவுக்கு எதிராக சீனாவையும் பாகிஸ்தானையும் உள்ளிறக்கி அழுத்தங்களைப் பிரயோகித்து இந்தியா தமிழர்களுக்கு சார்ப்பாகப் போக விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த இராணுவ இருப்பு சிங்களத்திற்கு மிக அவசியம்..!

விடுதலைப்புலிகள் இருந்த போது இல்லாத பல நெருக்கடிகளை இன்று இந்தியா சந்திக்கிறது. இது இந்தியாவிற்கு எதிராக மலையாளிகளும் நேரு குடும்பமும் செய்த சதி..! இந்தச் சதியில் இருந்தும் இந்தியாவை பாதுகாக்க வேண்டின்.. செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

ஐநாவின் மேற்குலகின் துணையோடு இந்தியா மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி சிங்களப் படை விலகலை வற்புறுத்த வேண்டும். தமிழக உணர்வலைகளை இதில் இன்னும் தீவிரப்படுத்தி இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் தாயக நில இருப்பை அங்கீகரித்து அவர்களுக்கு ஐநா மன்றத்தினூடு இந்திய தலைமையில் சர்வதேசத் தலையீட்டோடு ஒரு தீர்வை முன் வைத்து தமிழ் மக்களின் மனங்களை இந்தியா வெல்ல வேண்டும். இதன் வாயிலாக மட்டுமே இந்தியா பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீன மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தல்களை சிறீலங்கா இந்தியாவிற்கு எதிராக பாவிப்பதில் இருந்தும் விடுபட முடியும்.

இதனை சுரேஸ் போன்ற இந்தியா நம்பும் தலைவர்கள் இந்தியாவுக்குப் புரியும் படி எடுத்துச் சொல்வது அவசியம். விடுதலைப்புலிகள் முடிந்த அத்தியாயம். அதை இட்டு இந்தியா கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்.. ஒட்டு மொத்த இந்தியாவின் இருப்பையும் சிங்களம் கேள்விக்குதியாக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை..! தமிழர்களின் இதயங்களை வெல்லாமல் இந்தியா என்ற தேசம்.. இந்தப் பூமிப்பந்தில் எனி நிம்மதியாக இருக்க முடியாது. இது தான் இன்றைய பூகோள பொருண்மிய.. அரசியல்.. இராணுவ யதார்த்தம்..!

இதனை இந்திய நேரு குடும்பமும்.. மலையாளிகளும் பணத்திற்காக.. பதவிக்காக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்தியாவின் இருப்பில் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்களோடு தமிழர்கள் எனி நேரடியாக பேசிக் கொள்வதே இந்திய பாதுகாப்பிற்கும் தமிழர்களின் நலனிற்கும் உகந்தது.

எமது போராட்டத்தை இன்னொரு அத்தியாயத்துக்குள் நகர்த்த வேண்டின்.. சும்மா அப்படிச் சொல்லிக் கொண்டிருந்து பயனில்லை. பிராந்தியத்தில் சர்வதேசத்தில்.. இருக்கும் சூழலை எமக்குச் சார்ப்பாக மாற்றி அமைக்கும் அறிவும் இராஜதந்திரமும் எமக்கு அவசியம்..! சுரேஸ் போன்றவர்கள் இதனைச் செய்யலாமே. :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.