Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தும் ஒன்றுகூடல்!

Featured Replies

பிரித்தானியாவில் தமிழர் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தும் ஒன்றுகூடல்!

இடம்: ரவல்கார் சதுக்கம்

Trafalgar Square

London WC2

(Charing Cross Tupe Station)

தேதி: 21/05/06 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: பிற்பலல் 2 மணி முதல் 6 மணி வரை

இன்று தாயகத்தில் சிங்கள இனவெறி அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைக்கலாச்சாரத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தவும், யுத்தநிறுத்த ஒப்பந்த சரத்துக்கள் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள அரசினால் அமுல்படுத்தப்படாமைக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழர் தாயகக் கோட்பாட்டை சர்வதேசத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் இவ் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பற்பல நாடுகளின் விடுதலைப் பிரட்சனைகளில் ஈடுபட்ட சர்வதேச நிபுணர்கள் உரையாற்றவுள்ளனர்.

ஒன்றாக குரல் கொடுப்போம் அலையென திரண்டு வாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக பிரித்தானியா வாழ் ஈழத்தவர் இணைந்து கொள்ளுங்கள். இப்படியான நேரங்களில் தான் எம் மக்கள் மீதான அடக்குமுறைகளை தகர்க்க முடியும்.

நிச்சயமாக பிரித்தானியா வாழ் ஈழத்தவர் இணைந்து கொள்ளுங்கள். இப்படியான நேரங்களில் தான் எம் மக்கள் மீதான அடக்குமுறைகளை தகர்க்க முடியும்.

நீங்களும் தப்பித்து போகாமல் வந்து சேருங்கள்...! :wink:

  • தொடங்கியவர்

இவ் ஒன்றுகூடல், பிரித்தானிய பொலிஸாரின் முழு அனுமதியுடன் நடைபெற இருக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு:

07956 100646

0870 4867305

எமக்கு தெரிந்த நண்பர்கள், உற்றார், உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி இந்நிகழ்வில் பங்கு பற்றி எம்மக்களின் அவலங்களை உலகறியச் செய்வோம்.

கொட்டும் மழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்செயல்களையும் இனவொழிப்பு நடவடிக்கைகளையும் கண்டித்து லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் (Trafalgar square) நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்று கூடலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர்.

பிற்பகல் 2.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்த கூட்டத்துக்கு திரு. அன்ரனி ஜெரோம் தலமைவகித்தார். ஆரம்பவுரையை இவ் ஒன்றுகூடலை ஒழுங்கு செய்த உண்மைக்கும் நீதிக்குமான இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி செல்லத்தம்பி சிறிகந்தராசா தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்த்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சட்டத்தரணிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் என பலரும் உரையாற்றினார்கள். அவர்களது உரைகளில் சிறிலங்கா அரசால் தமிழ் மக்கள் மீது நடாத்தபடும் பயங்கரவாதச் செயல்களை கண்டித்ததுடன் அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தால் விடுதலைப்புலிகள் தொடர்பாக கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானங்களையிட்டு கவலை தெரிவித்தனர்.

லண்டனில் காலையிலிருந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கில் சிறுவர்கள், இளைஞர்கள், வயோதிபர் என வயது வேறுபாடின்றி உணர்வுடன் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

படங்கள் http://www.yarl.com/vimpagam/displayimage....rch&cat=0&pos=0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரம்பமுதல் இறுதிவரை அடைமழை அடிக்கடி வந்த பொழிந்தபோதிலும் எவருமே நின்ற இடத்தைவிட்டு அகலவேயில்லை. ஈழத்தமிழ் மண்ணிலே தமிழ் மக்களுக்கெதிராக நடக்கின்ற அராஜகங்களை அம்பலப்படுத்தவும், கண்டிக்கவும் உணர்வுபுூர்வமாக நடந்த இக்கூட்டமானது பேரிலே வெற்றிவாகை சுூடிய வீரன் நெல்சன் அவர்களுடைய சிலையின் அடிவராமும், விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவின் தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் அலுவலக முன்றலுமான ரவல்கா சதுக்கம் (Trafalgar Square) என்ற இடத்திலேதான் நடைபெற்றது. இன்று எமக்கு எதிரிகள் இன்னல்கள் கொடுத்தாலும், இறுதியில் வெற்றி காணப்போவது ஈழத்தமிழினமே என்ற குரல் அங்கே ஓங்கி ஒலித்ததுபோல் இருந்தது. அது விரைவில் வரவேண்டும் என்பதே எமது ஆசையுமாக இருந்தது.

அங்கு வீழ்ந்த ஒவ்வொரு மழைத்துளிகளும் ஈழத்தமிழர் விடும் கண்ணீர்தான் என்று சட்டத்தரணி திரு நடராஜா கிருஷ்ணராஜா தனது உணர்ச்சி புூர்வமான உரையிலே அங்கு குறிப்பிட்டிருந்தமையையும் நான் இங்கே குறிப்பிட வேண்டும்.

உடல்கள் நனைந்தபோதும், கண்கள் கலங்கியபோதும், இதயங்கள் சோகங்களினால் கனத்தபோதும் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததைப் பார்த்தபோது எமது விடிவு வெகு து}ரத்திலில்லை என்றே என் மனம் எண்ணியது. இதுவரை பல ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் ஒன்றுகூடல்கள், கண்டனக்கூட்டங்கள் என பலவற்றில் கலந்துகொண்டபோதிலும் இன்றைய கூட்டத்தின் முடிவில் இதயத்தில் ஒருவித சுகரேகை படர்ந்ததையும் உணரக்கூடியதாக இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

அடியேன் இந்த ஒன்றுகூடலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அதிகாலை முதல் லண்டனில் கனமழை, எங்கே எம்மவர்கள் வரப்போகிறார்கள் என்ற நினைப்பில் நான் சென்ற எனக்கு, ஏமாற்றம்! கைக்குழந்தைகளுடன் பெற்றார்கள், தள்ளாத வயதில் வயோதிபர்கள், இளையர்கள் என்று "தலைவா உனக்கு களத்தில் மட்டுமல்ல புலத்திலும் தோள் கொடுப்போம்" என்றவாறு உறுதியாக கொட்டும் மழையிலும் எம்மவர்களின் சன சமுத்திரம்!!

தலைவா!! எத்தடை, எங்கு, எப்படி வந்தாலும்! எங்கள் மண்ணோடு சேர்ந்த உணர்வுகளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்!! யாருக்கும் அடிபணிய மாட்டோம்!! யாரும் எம்மையும், தாயகத்தையும் பிரிக்க இடமளியோமென உறுதியாக தெரிவிக்கிறோம் என்ற கோசங்கள் விண்ணைப் பிளந்தது!!!

எத்தடை வரினும், எம் தாயகம் விடுதலை பெறுமட்டும், எம் குரல்களும் புலத்தில் ஓயாது! ஓயவும் வைக்க முடியாது!!!

http://www.nitharsanam.com/?art=17500

அரோகரா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.