Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா நாடுகடத்திய ஈழத் தமிழன் கொழும்பு 4ம் மாடியில் கடும் சித்திரவதை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா நாடுகடத்திய ஈழத் தமிழன் கொழும்பு 4ம் மாடியில் கடும் சித்திரவதை..!

சிறீலங்கா | ADMIN | OCTOBER 10, 2012 AT 09:38

சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் அரச படைகளும் விசேட பொலிசும் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் கொழும்பு 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி கடும் துன்பம் அனுபவிக்கிறார். இந்த மனிதாபிமான மற்ற செயலுக்கு கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும். இலங்கைக்கு நாடு கடத்தப் படுவோர் மீது பாலியல் வன்முறை உட்பட எல்லாவகைச் சித்திரவதைகளும் செய்யப்படுவது வழமை.

இதைக் கனடா அரசு நன்கு அறிந்தும் மேற்கூறிய அகதியை அவருடைய விருப்பத்திற்கு மாறாக வலோற்காரமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மனித உரிமை மீறலாகும். ஜனநாயக நாடென்று தன்னைக் கூறிக்கொள்ளும் கனடாவுக்கு இது பொருத்தமானதல்ல.

ஐநா நிறைவேற்றிய அகதிகள் பாதுகாப்புச் சட்டம் எந்த நாட்டை விட்டுத் தப்பியோடி ஒருவர் அகதி அந்தஸ்துக் கோருகிறாரோ அவரை அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பக் கூடாது என்று சொல்கிறது. இந்த விதியைக் கனடா மீறியுள்ளது.

அமெரிக்காவில் தலைமைச் செயலகத்தைக் கொண்டுள்ள ஹியூமன் றைட்ஸ் காப்பகம் (Human rights watch) நாடுகடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இயல்பு நிலை திரும்பாத இலங்கைக்கு ஈழத் தமிழர்களை நாடு கடத்தக் கூடாது என்பதில் அது உறுதியாக இருக்கிறது. www.hrw.org/category/topic /refugees.

அதே நிலைப்பாட்டை அனைத்துலக மன்னிப்புச்சபை (Amnesty International) எடுத்துள்ளது. www.amnesty.org/en/50. 2012 மார்ச்சு 13ம் நாள் இந்த மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்

“நூற்றுக் கணக்கானோர் விசாராணையின்றிச் சட்டத்திற்குப் புறம்பாக வெளித் தொடர்பின்றி இலங்கையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் நீண்ட போர் முடிவுக்கு வந்தாலும் சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தடுத்து வைத்தல்கள், காணாமற் போதல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் விசாரணையின்றித் தண்டிக்கப்படாமல் நீடிக்கின்றன.” என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையின் தலைப்பு சிறை வைக்கப்பட்டவர்கள். இலங்கையின் பாதுகாப்புத் துறையால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் (Locked away. Sri Lanka’s security detainees)

சீனா, ஹொங் தீவில் இயங்கும் ஆசிய மனித உரிமை ஆணையம் (Asian Human Rights Commission சுவிற்சர்லாந்து, மனித உரிமைகளுக்கான ஆணைய அலுவலகத்தில் இயங்கும் சித்திரவதைக்கு எதிரான குழுவுக்கு (Office of the High Commissioner for Human Rights, Secretary, Committee Against Torture, Switzerland)

2011 யூலை 08ம் நாள் எழுதிய கடிதத்தில் “இலங்கையில் நாளாந்திரம் சித்திரவதைகள் நடப்பதாகத்” தெரிவிக்கப்பட்டுள்ளது. (Torture is practiced in Sri Lanka on a daily basis)

கனடா அரசு இனியாவது தவறை உணர்ந்து நாடுகடத்தப்பட்டு 4ம் மாடியில் சித்திரவதை அனுபவிக்கும் ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்குரிய நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம்.

http://thaaitamil.com/?p=34846

என்ன காரணத்துக்காக இவர் நாடு கடத்தப்பட்டார் என்று தெரியாவிட்டாலும் - வலுவான காரணம் இல்லாவிட்டால் - இதை வைத்து உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கலாம்!

அது இவர் போன்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.