Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை மூதூர் கடற்கரைச்சேனை மைதானம் காவல்துறையினருக்கு தாரைவார்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை மூதூர் கடற்கரைச்சேனை மைதானம் காவல்துறையினருக்கு தாரைவார்ப்பு

சிறீலங்கா | ADMIN | OCTOBER 10, 2012 AT 09:33

இத்தேசத்தின் ஆட்சியாளர்கள் எமது மக்களது நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்வதன் ஊடாக எமது பொருண்மியத்தினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதும் எமது மக்களின் பெரும்பான்மையினை எமது பிரதேசத்திலேயே சிறுபான்மையாக்குவதும் என்ற மறைமுக நிகழ்ச்சி (Hidden agenda) நிரலின் அடிப்படையில் தூரநோக்குடன் திட்டமிட்ட வகையில் செயற்பட்டு வருகின்றார்கள்.

அன்று விவசாய நடவடிக்கைகளை மையப்படுத்தி கந்தளாய், அல்லை, கல்லோயா போன்ற குடியேற்றத் திட்டங்கள் நிறுவி அதன் மூல் ஓரளவு வெற்றியும் கண்டார்கள். இன்று கவர்ச்சிகரமான முறையில் ஆடைத்தொழிற்சாலைகள், உப்புத்தொழிற்சாலைகள், என்ற போர்வையில் கைத்தொழில் அபிவிருத்தி எனவும் உல்லாச பயணத்துறை விருத்தி எனவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது நிலங்களை கபளீகரம் செய்து எமது அடிப்படை பொருண்மிய மூலத்தினைச் சிதைத்து எமது இனத்தினை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதிலும் திருக்கோணமலை மாவட்டத்தில் ஆட்சியாளர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் துரிதகதியில் நடைபெறுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மேற்சொன்ன நடவடிக்கைகளை தவிர இம்மாவட்ட மக்களது பண்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பௌத்த கலாசாரத்தினை முன்னிறுத்தியும் தற்போது வித்தியாசமான செயற்றிட்டத்தினை மதத்தினூடன ஊடறுப்பினை காணக்கூடியதாகவுள்ளது. ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவிலுள்ள திருநீலியம்மன் ஆலயம் இருந்த இடத்தில் தற்போது பௌத்த விகாரை நிறுவப்பட்டுள்ளதோடு அதனைச் சூழவுள்ள பிரதேசம் அவ்விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பௌத்தர் கூட இல்லாத அவ்விடத்தில் பௌத்த விகாரைக்கான தேவை என்ன என்ற கேள்வி அப்பகுதியில் உள்ள மக்களிடையே மனதைக் கிளறிக்கொண்டிருக்கின்றது. அங்கிருந்த அம்மன் வீதி ஓரத்தில் ஓலையினால் வேயப்பட்ட ஒரு குடிசையில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறாக எமது பிரதேசம் மெது மெதுவாக கூடறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற வேளையில் முற்றிலும் சட்டத்திற்கு முரணான வகையில் கடற்கரைச்சேனை பொது விளையாட்டு மைதானம் காவல்துறையினருக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்ற வேதனையான செய்தி கிடைத்துள்ளது.

திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ளது கடற்கரைச்சேனைக் கிராமம். 2006 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் மூதூர் கிழக்குப் பிரதேசம் இருந்தது. கடற்கரைச்சேனையும் மூதூர் கிழக்கில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத்தினைச் சூழ சேனையூர், கட்டைப்பறிச்சான், சாலையூர், சந்தோசபுரம்,அம்மன்நகர், கணேசபுரம், சந்தனவெட்டை, சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, நவரெட்ணபுரம், இளக்கந்தை, வீரமாநகர், பாட்டாளிபுரம், நல்லூர், நீனாக்கேணி, இத்திக்குளம், சின்னக்குளம், ஸ்ரீநிவாசபுரம், பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

புவியியல் ரீதியாக மூதூர் கிழக்கிலுள்ள இக்கிராமங்களின் மத்தியில் உள்ளதே கடற்கரைச்சேனை நாவலடிச்சந்தி பொது விளையாட்டு மைதானமாகும்.

இவ்விளையாட்டு மைதானம் மூதூர் பிரதேசசபைக்குச் சொந்தமானதாகும். எனினும் மூதூர் பிரதேச செயலாளரினால் சம்பூர் காவல்த்துறையினருக்கு விளையாட்டு மைதானம் கையளிக்கப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்வியினை இப்பிரதேசத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மைதானத்தின் வரலாறு:

1948 – 1955 காலப்பகுதியில் கட்டைப்பறிச்சான் கிராம சபைத் தலைவராக இருந்த திரு.கணபதிப்பிள்ளை கதிர்காமத்தம்பி என்பவரது தலைமையில் இப்பிரதேச மக்களால் காடாய் இருந்த நான்கு ஏக்கர் நிலம் பொது மைதானத்திற்காக துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

1955 – 1965 காலப்பகுதியில் கட்டைப்பறிச்சான் கிராம சபைத் தலைவராக இருந்த திரு.சுப்பிரமணியம் குணநாயகம் என்பரது தலைமையில் இம்மைதானத்தில் மாலைநேரங்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காக கரப்பந்தாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டு கட்டைப்பறிச்சான் கிராம சபையின் காணிகள் கட்டடங்கள் பற்றிய பதிவேட்டில் பதியப்பட்டு தற்போது வரை பேணப்பட்டு வருகின்றது.

1965 – 1968 காலப்பகுதியில் கட்டைப்பறிச்சான் கிராம சபைத் தலைவராக இருந்த திரு.சின்னத்துரை என்றழைக்கப்படும் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை என்பவரது தலைமையில் மைதானத்தில் மேலும் ஒரு பகுதி துப்பரவு செய்யப்பட்டு உதைபந்தாட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

1968 – 1969 காலப்பகுதியில் கட்டைப்பறிச்சான் கிராம சபைத் தலைவராக இருந்த திரு. ஏரம்பு சிவபாக்கியம் என்பவரது தலைமையில் முதன்முதலாக மே தினம் இம்மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளது.

1969 – 1978 காலப்பகுதியில் கட்டைப்பறிச்சான் கிராம சபைத் தலைவராக இருந்த திரு. சின்னத்தம்பி சுந்தரமூர்த்தி என்பவரது தலைமையில் முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்தப்படும் வகையில் துப்பரவு செய்யப்பட்டு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு ஏக்கர் நிலம் சேரி ஒழிப்புத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு கிராம சபையினால் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கென இரண்டு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டு கிராமோதய சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் இம்மைதானத்தில் வருடா வருடம் விளையாட்டுப் போட்டிகள் கிராமோதய சபையினால் நடத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபை உருவானதன் பின்னர் மூதூர் பிரதேச சபையினால் இம்மைதானம் பொறுப்பேற்கப்பட்டு இரண்டு ஏக்கர் இரண்டு றூட் நிலம் பொது விளையாட்டு மைதானத்திற்காகவும் இரண்டு ஏக்கர் நிலம் சேரி ஒழிப்புத் திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டு பிரதேச சபை ஆவணங்களில் பதியப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு பெறுமதி மதிப்பீட்டின்படி ஆதனப்பதிவேடான பி.ச.46 (விதி 217) ஆவணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

09.சேரி ஒழிப்புத் திட்டம் 2 ஏக்கர் ரூபா.192000.00

10.விளையாட்டுக் காணி 2 ஏக்கர் 2 றூட் ரூபா.260000.00

2006 ஆம் ஆண்டு இப்பிரதேச மக்கள் அனைவரும் யுத்தம் காரணமாக மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்து மீண்டும் 2008 ஆம் ஆண்டு இறுதியில் மீளக்குடியேறினர். 2008 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கடற்கரைச்சேனை நாவலடிச் சந்தி விளையாட்டு மைதானத்தில் அரை ஏக்கர் நிலம் காவல்துறையினருக்கு மூதூர் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது.

2009 இல் இதனை அறிந்த அப்பகுதி கிராம மட்ட அமைப்புக்கள் ஒன்றுகூடி பிரதேச செயலாளருக்கு அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள். மேலிடத்து உத்தரவு என்பதனால் தன்னால் எதுவும்செய்ய முடியாது என பிரதேச செயலாளர் கைவிரித்தார்.

2008 இல் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு இவ்விளையாட்டு மைதானத்தினை கோரி நின்ற போது பிரதேச செலாளரினால் மறுப்புத்தெரிவிக்கப்ட்டது.

2009 இல் சேனையூர் மருத்துவமனையினை அமைப்பதற்கு அரை ஏக்கர் நிலம் கோரப்பட்ட போது பிரதேச செயலாளரினால் மறுப்புத்தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இக்காணி முழுமையாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு காவல்துறையினர் இம்மைதானத்தினைச் சுற்றி வேலியமைத்துக்கொண்டிருக்கின்றனர்.

எதிர்காலத்தில் இந்நிலத்தில் காவல்துறையினரின் குடும்பங்கள் தங்குவதற்கான விடுதிகள் அமைக்கப்படுவதோடு இப்பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேறுவதற்கான வாய்ப்புக்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூதூர் பிரதேச சபையில் முன்னாள் எதிர்க்கட்ச்சித் தலைவர் திரு.க.திருச்செல்வம் பிரதேச சபை அமர்வுகளில் பலதடவைகள் பிரதேசசபைக்கு உரித்தான இம்மைதானத்தின் உரிமை மாற்றம் சம்பந்தமாக பிரதேச செயலாளருக்கு கண்டனம் தெரிவித்திருந்ததோடு அதன்பிரகாரம் பிரதேசசபையினால் இம்மைதானத்தினை தமக்கு வழங்குமாறு கோரி பிரதேச செயலாளருக்கு கடிதமும் அனுப்பப்பட்டீருந்தது.

எனினும் அரச அதிபரதும் மற்றும் ஆட்சியாளர்களினதும் அழுத்தங்கள் காரணமாக பிரதேசசபைத் தலைவராலும் இம்மைதானம் தற்போது காவல்துறையினருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இம்மைதானம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதால் கொடிய யுத்தத்தின் கொடுமையை அனுபவித்தவர்கள் அப்பிரதேசத்தில் வசிப்பதனால் இதற்கு எதிராக இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொண்டால் தமக்கும் ஆபத்து நேருமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வாய் மூடி மௌனிகளாய் உள்ளனர்.

இது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூதூர் பிரதேசசபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமது கவனத்தினைச் செலுத்தி சட்டத்திற்கு முரணாண வகையில் இம்மைதானம் வழங்கப்பட்டதனை இரத்துச்செய்வதற்காகவும் மூதூர் கிழக்கின் மத்தியில் ஒரு மாபெரும் விளையாட்டு மைதானத்தினை உருவாக்குவதன் மூலமாக ஆட்சியாளர்களது திட்டமிட்ட ஆதிக்க நிலையினை இல்லாது செய்வதற்காகவும் மக்களை ஒன்றுதிரட்டிப்போராடி வெற்றி காணவேண்டும்.

இதுவே தற்போது தமிழ் மக்கள் தங்களது நிலங்களை தாம் வைத்திருப்பதற்கு இருக்கும் ஒரே வழியாகும்.

http://thaaitamil.com/?p=34842

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.