Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக தமிழ் இளையோரை ஒன்றிணைத்து நடாத்திய ஆடுகளம் 2012

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Adukalam2012-youths-131012-150.jpg

உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் 'ஆடுகளம் 2012 ' மாபெரும் உலகளாவிய நடனப்போட்டி நிகழ்வானது இம்முறை லண்டன் மாநகரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. ஆடுகளம் 2012 மிகவும் எதிர்பார்ப்புடன் இலண்டன் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள லோகன் மண்டபத்தில் பல இளையோரும் மக்களும் கலந்துகொள்ள 06.10.2012 சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் ஆரம்பமாகியது.

முதலாவது முறையாக கடந்த வருடம் யேர்மனி நாட்டில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முறை உலகம் முழுவதும் பரந்து வாழும் எம் இளையோர் ஆறு அணிகளாக கலந்து கொண்டு போட்டியிட்டனர். குறிப்பாக கனடா, டென்மார்க், யேர்மனி, மலேசியா, சுவிட்சர்லாந்து, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து நடனக்குழுக்கள் வருகை தந்து போட்டியிட்டன.

குறிப்பாக கனடா அணியினை 'கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம்' ஒழுங்கமைத்து ஆடுகளத்தில் கலந்து கொள்ள ஒழுங்கு செய்திருந்தது. கனடாவில் இருந்து பங்கு பற்றியோர் விபரம்: தர்மியா, ஜெசிந்தன், திவாகர், கிருத்திகா, சரண்யா, சிறீரங்கா

'ஆடுகளம்' நடனப்போட்டியானது உலக அரங்கில் எம் தமிழ் இளையோருடைய நடனக் கலைத்திறமைகளை வெளிக்காட்டுவதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், அத்துடன் அர்த்தமுள்ள கருத்துக்களை இளையோரிடையே பகிர்ந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. இசையுடன் கூடி அழகாய் வடிவமைக்கப்பட்ட நடனத்திற்கு ஆழமான செய்திகளை விவரிக்கும் ஓர் அரிய பண்புள்ளது. பல்வேறு நாடுகளில் வாழும் எம்மிளையோர் பல்வேறுபட்ட நடனக் கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தாலும், இவர்களது தமிழ் அடையாளங்களும் தாய் மண் மீது கொண்ட பற்றும் ஒருமித்த கருத்துக்களை கொண்டுவருவனவாக அமைந்தன.

"எமது இளையோர் பல நாடுகளில் இருந்து இங்கு வந்து ஒரு போட்டியை நடத்துவதை காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என் பார்வையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

போட்டியின் வெற்றியாளர்கள் விபரம்:

முதலாமிடம்: பிரித்தானியா

இரண்டாமிடம்: கனடா

சிறந்த காணொளி விருது: டென்மார்க்

சிறந்த நடன அமைப்பு: பிரித்தானியா

சிறந்த போட்டி நேர்மைப் பண்பு: மலேசியா

சிறந்த ஆடை வடிவமைப்பு: கனடா

சிறந்த கருப்பொருள் வெளிப்பாடு: சுவிட்சர்லாந்து

சிறந்த தமிழ் மரபு வெளிப்பாடு: மலேசியா

சிறந்த தமிழீழ விடுதலை வெளிப்பாடு: சுவிட்சர்லாந்து

ஆடுகளம் நடனப்போட்டியில் பங்கு பற்றிய அனைத்து இளையோருக்கும் உலகளாவிய தமிழ் இளையோர் அவை தனது அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.

Adukalam2012-youths-131012-001.jpg

Adukalam2012-youths-131012-002.jpg

Adukalam2012-youths-131012-004.jpg

Adukalam2012-youths-131012-005.jpg

Adukalam2012-youths-131012-008.jpg

Adukalam2012-youths-131012-006.jpg

Adukalam2012-youths-131012-007.jpg

Adukalam2012-youths-131012-825-003.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=68334&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.