Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

லக்ஷ்மன் கதிர்காமர் மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமனம்?

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 ஏப்பிரல் 2004, 3:36 ஈழம் ஸ

மஹிந்த ராஐபக்ஷவின் அமைச்சில் இடம்பெறவுள்ள 35 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிப்பது தொடர்பாக, ஐனாதிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

கூட்டணிக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில், முக்கிய அமைச்சின் பதவிகளுக்கு யார் யாரை நியமிப்பது என்பது தொடர்பாக நீண்ட நேரம் ஆராயப்பட்டதாகத் தெரியவருகிறது.

லக்ஷ்மன் கதிர்காமரை மீண்டும் வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதற்கு முடிவெடுக்கப் பட்டுள்ளதாகவும், கதிர்காமர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட, அநுரா பண்டாரநாயக்க நிதியமைச்சராகவும், சுசில் பிரேம் ஐயந்த் கல்வியமைச்சராகவும், மங்கள சமரவீர ஊடகத்துறை அமைச்சராகவும் நியமிப்பதற்கு முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் ஐனாதிபதி செயலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி - புதினம்

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply

அப்ப திருப்பியும் சுவிசுக்குப் போய் உந்தப் பொங்குதமிழ் எல்லாம் புலுடா நானே ஒரு தமிழன் எனக்குத் தான் சிறிலங்காவிலை பிரதமர் பதவி தரலாம் எண்டவை பெரியமனுசனாட்டம் நான் தான் வேண்டாம் எண்டிட்டன் அங்கை ரமிலருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை

நுளம்புத் தொல்லைதான் கஷ்டம் ஐ,நா. சபை நுளம்புக்கு மருந்தடிக்கிர வேலையை மட்டும் கவனிச்சா போதும் எண்டு சொல்லுவாரோ

பக்கச் சார்பின்மை என்பது ஒரு முட்டாளின் அறிவீனம் அல்லது ஒரு கபடதாரியின் நயவஞ்சகத்தனம் என்ற ஒரு கூýற்றை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமானதாகும்.

நேர்மையாகச் செயற்படுமாறு கோருவதற்கும் பக்கச் சார்பின்றிச் செயற்படுமாறு கோருவதற்கும் இடையே பாரிய வித்தியாசம் இருக்கிறது. முன்னையதற்கு முயற்சிக்க முடிýயும். பின்னையது அறவே சாத்தியமற்றது.

B.B.C

உதைத்தான் தம்பி நான் வந்ததிலிருந்து சொல்லுறன் நீங்கள் கூட சில நேரம் பக்கச்சார்பில்லாமல் ரண்டு பக்கத்து செய்தியும் போடுறன் எண்டு சொல்லுறனியள்

எங்கை மனசைத் தொட்டுச் சொல்லுங்கோ உண்மையிலையே பக்கச்சார்பில்லையோ எண்டு

இஞ்சை நிறையப் பேர் உது விளங்காமல் ஆர் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பினமாம் நடுநிலையாம்

புலுடா விடினம்

எல்லாரும் வேலிக்குப் போட்ட கதியால் மாதிரி வேலி இழுக்கிற பக்கம் வளைஞ்சு குடுக்கிறவைதான்

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

தமிழ் கூýட்டமைப்பின் 20 எம்.பி.க்களும் ஏகமனதாக பாராளுமன்ற குழுத் தலைவராக சம்பந்தனை தெரிவு

பிரதேசவாதங்களுக்கு இடமில்லையென ஒருமித்த கருத்து

தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 20 பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் கூýடிý, பாராளுமன்றக் குழுவின் தலைவராக தமிழர் விடுதலைக் கூýட்டணியின் செயலாளர் நாயகம் இரா.சம்பந்தனையும், உபதலைவராக மாவை சேனாதிராஜாவையும் தெரிவு செய்துள்ளனர்.

வடக்கு, கிழக்கிலிருந்து இம்முறை தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் சார்பில் 20 பேர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த 20 பேரும் நேற்று இரவு 8 மணியளவில் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் கூýடிý தங்களின் எதிர்கால நடவடிýக்கைகள் குறித்து நீண்டநேரம் ஆராய்ந்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்த் தேசியத்தின் அடிýப்படையிலும், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற ரீதியிலும் எதுவித பிரதேச வேறுபாடுமின்றி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் ஒருமித்துச் செயற்படுவதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

பிரிவினைகளுக்கோ அல்லது பிரதேச வேறுபாடுகளுக்கோ தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பில் இடமில்லை என்பது இங்கு அனைவராலும் வலியுறுத்தப்பட்ட அதேவேளை, இதுவரை காலமும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக முன்னெடுத்துச் செல்லப்பட்ட போராட்டத்தை மேலும் முனைப்புடன் கொண்டு செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மிகவும் அமைதியாகவும், சுமுகமாகவும் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் தேசியப் பட்டிýயல் உறுப்பினர்கள் இருவரையும் இன்று அல்லது நாளை தாங்கள் தெரிவு செய்து விடுவோம் என்பதையும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

சபாநாயகர் பதவியை ஹெல உறுமய நிராகரிப்பு

13 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு விடுத்த கோரிக்கையை ஜாதிக ஹெல உறுமய நிராகரித்துள்ளது.

இந்தத் தேர்தலில் முதற் தடவையாக போட்டியிட்ட ஹெல உறுமய 9 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

தற்போது சிறுபான்மை அரசொன்றை அமைக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கையில், அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுக்கு சபாநாயகர் பதவியை வழங்க சுதந்திர முன்னணி முன்வந்தது.

எனினும், இதனை நிராகரித்துள்ள ஹெல உறுமய, தர்மராஜ்யத்தை உருவாக்குவதே தங்களின் குறிக்கோளெனத் தெரிவித்துள்ளது.

பதவிகளுக்காக தாங்கள் பாராளுமன்றம் செல்லவில்லை எனவும், சிலர் தங்களுக்குப் இந்தப் பதவிகளை வழங்க முன்வந்தாலும் அதனைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் இந்தக் கட்சியின் தலைவர் வண.எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

இதேநேரம் எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து சபாநாயகரொருவரைத் தெரிவு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவதா? அல்லது இல்லையா? என்பதை தகுந்த நேரம் வரும்போது முடிவு செய்வோமெனவும் தெரிவித்தார்.

கட்சியின் உயர் சபையைச் சேர்ந்த 6 உறுப்பினர்களும் பாராளுமன்றத்திற்குச் செல்வர். மிகுதி மூவர் யார்? என்பது பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

கதிர்காமருக்கு இது நல்ல படிப்பினை!

"இலங்கையின் தேசிய அரசியலில் தமிழர் ஒருவருக்குரிய இடம் என்னவென்பதை உணர்ந்திருந்த எவரும்இ கதிர்காமர் பிரதமர் பதவியை எதிர் பார்த்தால் அது வெறும் நப்பாசைதான் என்பதை அறியாமல் இருக்கவில்லை...."

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ பதவியேற்றிருக்கின்றார். அவருக்கும் லசஷ்மன் கதிர்காமருக்கும் இடையில் அப்பதவிக்கு நடந்த இழுபறியில் கடைசியில் வென்றார் ராஜபக்க்ஷ.

பிரதமர் பதவிக்கு ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் தேர்வு கதிர்காமர்தான். ஜனாதிபதியின் விருப்பப்படி அப்பதவிக்கு கதிர்காமர்தான் நியமிக்கப்படுவார் எனப் பலரும் நம்பினர்; எதிர்பார்த்தனர். இலங்கையின் முதல் தமிழ்ப் பிரதமர் என்ற பெரு மையை கதிர்காமர் பெறுகின்றார் என்று பரபரப்பாகச் செய்திகள் கூட வெளியாகின. ஆனால்இ கடைசி நேரத்தில் எல்லாம் அவுட் ஆனால்இ இலங்கையின் தேசிய அரசியலில் தமிழர் ஒருவருக்குரிய இடம் என்னவென்பதை உணர்ந்திருந்த எவரும்இ கதிர்காமர் பிரதமர் பதவியை எதிர் பார்த்தால் அது வெறும் நப்பாசைதான் என்பதை அறியாமல் இருக்கவில்லை.

தான் தமிழன் என்பதை மறந்துஇ தனது இனத்துக்குத் தான் ஆற்றவேண்டிய கடமையைத் துறந்துஇ சிங்களப் பேரினவாதத்துக்கு ஆலவட்டம் பிடித்துஇ தமிழரின் உரிமைப் போராட்டத்தைச் சர்வதேச ரீதியில் கொச்சைப்படுத்தும் பேரினவாதப் பணிக்குத் துணை போன கதிர்காமருக்குஇ இப்போதைய நிகழ்வுகள் நல்ல பாடமாக அமைந்திருக்கும் என நம்பலாம். பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு இலங்கைத் தரப்பால் நிறுத்தப்பட்டுஇ சர்வதேச ரீதியில் அவமானப்படுத்தப்படும் வகையில் - இழுக்குப் பெறும் விதத்தில் - அவர் தோற்கடிக்கப் பட்டபோது சிங்களத் தலைமையின் மத்தியில் தமது நிலை என்னவென்பதை அவர் உணர்ந்திருப்பார் என எதிர்பார்க் கப்பட்டது.

அது இப்போது அவருக்கு உறுதிப்படுத்தி உணர்த் தப்பட்டிருக்கும் என நம்பலாம். கதிர்காமர் பிரதமர் என்ற முடிவுஇ சகல நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியினால் - தமது கட்சியின் மீதும் அக்கட்சி சேர்ந்துள்ள கூட்ட மைப்பின் மீதும் அதிக செல்வாக்குக் கொண்ட தலை வியினால் - எடுக்கப்பட்டும் கூடஇ அது முறியடிக்கப் பட்டிருக்கின்றது. தமிழர் ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு சுலபமாகத் தட்டிப்பறிக்கப்பட்டிருக்கி

  • தொடங்கியவர்
புதிய பிரதமரும் அவரது மனைவியும் ஜனாதிபதியுடன்
  • தொடங்கியவர்

கிழக்கு தமிழ் உறுப்பினர்கள் மூவர் பாதுகாப்புடன் கொழும்பு வருகை

மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் பலத்த இராணுவப் பாதுகாப்புடன் நேற்று கொழும்பு பயணமாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட முதன்மை பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, கிங்ஸ்லி இராசநாயகம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் ஆகியோரேஇராணுவ கவசவாகனங்களின் பாதுகாப்புடன் கொழும்புக்கு பயணமாகியுள்ளனர். தாமரைக்கேணியிலுள்ள வீடொன்றில் மூவரும் கூடி அங்கிருந்து கொழும்பு பயணமாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி ஞாயிறன்று கொழும்பு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகரில் நடைபெறவிருக்கும் தமிழரசுக்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இவர்கள் கொழும்பு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

fronts.gif

மனசுல எதையும் வைச்சுக்காதீங்க என்று கதிர்காமரிடம் சொல்கிறார் புதிய பிரதமர் ராஜபக்ஷ,

நன்றி - டெய்லி மிரர்

  • தொடங்கியவர்

கிழக்குத் தமிழ் எம்.பிக்கள் எவருமே சு.கூட்டமைப்பை ஆதரிக்கமாட்டார்கள்

மட்டக்களப்பு, திகாமடுல்ல தேர் தல் மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் எவரும் ஜனாதி பதி சந்திரிகா குமாரதுங்கவின் ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் அரசில் அங்கம் வகிக்கமாட் டார்கள். அப்படி சந்திரிகாவின் அர சுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று வெளியான செய்திகள் தவறானவை. - இ;ப்படி தகவல் வெளியிட்டி ருக்கிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த அரசியல், இராணுவ விமர்சகரான சிவராம் (தராகி). இதுதொடர்பாக அவர் பி.பி.ஸி. தமிழோசைக்கு| தெரிவித்ததாவது:- மட்டக்களப்பில் நிலைவரங்களை அவதானித்து வருகிறேன். கருணா அணியில் இருக்கின்ற அரசியல் பொறுப்பாளர் விசுவுடன் நான் இதுபற்றிப் பேசியிருந்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கோட் பாட்டின் அடிப்படையில்தான் - இந் தப் பிரச்சினை ஏற்படும் வரை - தமது பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார்கள். அதற்கு முற்றும் முரணான கோட்பாடுகளைக் கொண்ட - ஜே.வி.பி. போன்ற கட்சிகளை உள்ளடக்கிய - சந்திரிகா அரசில் அங்கம் வகிப்ப தற்கு யாரும் அங்கு தயாராகவில்லை என்று அறியமுடிந்தது. அந்தவகையில், அரச ஊடகங் கள் கருணாவிற்கு ஆதரவான ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந் திரிகா அரசுக்கு ஆதரவு தெரிவிக் கப் போகிறார்கள் என்று கூறுவது தவறான தகவல் என்று உறுதியா கக் கூறலாம் - என்றார் சிவராம். இதற்கிடையில் - மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கருணா குழுவினர் நேற்றுமுன்தினம் அழைத்துப் பேசியுள்ளனர் என்று தெரி விக்கப்படுகிறது. ஐந்து எம்.பிக்களில் மட்டக்களப் பைச் சேர்ந்த ஜெயானந்தமூர்த்தி யைத்தவிர ஏனைய நால்வரும் இந் தச் சந்திப்பில் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஜெயானந்தமூர்த்தி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் கொழும்புக்கு வந்துவிட்டார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.

Thanx: Uthayan

  • தொடங்கியவர்

India to play more direct role in Sri Lanka peace process

Associated Press, Wed April 7, 2004 07:26 EDT . COLOMBO, April 7 (Kyodo) India will play a more direct role in the effort to end Sri Lanka - 's civil war, Asia's longest running conflict, new Foreign Minister Lakshman Kadirgamar said Wednesday. Sen admitted that India has so far not played a direct role in Sri Lanka - 's peace process, concentrating instead on strengthening the enabling framework within which negotiations took place. Kadirgamar served six years as President Chandrika Kumaratunga's foreign minister until December 2001 and served as her foreign affairs adviser thereafter.

He told reporters that Norway, which brokered a cease-fire arrangement that has held since February 2002, will ''certainly remain facilitator...not mediator, arbitrator or anything else.'' He also said the new government will continue talks on an India-Sri Lanka - Defense Cooperation Agreement initiated by the government of former Prime Minister Ranil Wickremesinghe. ''These discussions will continue,'' Sen endorsed. Sen said India had ''some ideas'' on how India could be more directly involved in Sri Lanka - 's peace process, without elaborating.

Kadirgamar also said that the Janatha Vimukthi Peramuna (JVP), the junior partner in the victorious United People's Freedom Alliance (UPFA), was keen on establishing close relations with India. The JVP won 40 of the UPFA's 105 seats in last week's general election and is widely considered the wind beneath the wings of that victory. A strident anti-Indian stance was a feature of two insurrections the JVP led in 1971 and 1988-89. Kadirgamar acknowledged the role that Wickremesinghe had made towards consolidating and strengthening relations between Sri Lanka - and India during his two year tenure.

''We are on the verge of a golden era in relations between India and Sri Lanka - ,'' he said. ''India has a natural, legitimate and historic interest in the destiny of Sri Lanka - .'' Sen left for consultations in New Delhi on Wednesday afternoon after his meeting with Kadirgamar and the new prime minister.Japan and western powers led by the United States, European Union and Norway have been the chief external players assisting Sri Lanka - 's drive to end its two-decade civil war that has killed around 65,000 people. But India has always been kept fully briefed on all developments.

  • தொடங்கியவர்

சிறிலங்கா இனப்பிரச்சனையில் இந்தியா நேரடியாகப் பங்கேற்கும் - புதிய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 ஏப்பிரல் 2004, 23:16 ஈழம் ஸ

தொடரவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகள், இனப்பிரச்சனை தொடர்பான முன்னெடுப்புக்கள் அனைத்திலும், இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு இருக்கும் என்று புதிதாக மீண்டும் நியமனம் பெற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இன்று தெரிவித்துள்ளார்.

'இந்திய-சிறிலங்கா கூட்டு முயற்சிகளுக்கும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கும் இது பொற்காலம்" என்று குறிப்பிட்டுள்ள கதிர்காமர், புதிய பிரதமர் மஹிந்தவுடனும், வெளிவிவகார அமைச்சரான தன்னுடனும் சந்திப்புக்களை நடாத்திய இந்திய து}துவர் நிருபம் சென், அதன்பின்னர் உடனடியாக புதுடில்லி பயணமாகி அங்கு அவசர பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதையும் உறுதி செய்தார்.

இதுவரை பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாளர்களாகவும், நடுநிலையாளர்களாகவும் விளங்கிய நோர்வே பிரதிநிதிகள், இனிமேல் வெறும் ஒழுங்குனர்களாக மட்டுமே செயலாற்றுவார்கள் என்றும், இரு பகுதியினரையும் சந்திக்க வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வது மட்டுமே நோர்வேயின் பணியாக இருக்கும்

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சந்திரிகா தேசிய தொலைக்காட்சியில் தெரிவிப்பு

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 07 ஏப்பிரல் 2004, 23:20 ஈழம் ஸ

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக, பொதுத் தேர்தலுக்குப்பின்னர் நாட்டு மக்களுக்கு தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஐனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

எப்போது என்றோ அல்லது என்ன நிபந்தனையின் கீழ் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் என்றோ அல்லது யார் யார் கலந்து கொள்வார்கள் என்றோ குறிப்பிடாது, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஐனாதிபதி கூறியிருப்பது, ஒரு கண்துடைப்பு பிரச்சாரமே என்று கொழும்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்
ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசங்களை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆறுமுகம் தொண்டைமான் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதிலும் பார்க்க கூடுதலான தேசியபட்டியல் ஆசனங்களை கேட்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
  • தொடங்கியவர்

புலிகளின் உள்பிரச்சனைகளை சாதகமாக்க முயல்வார்களாயின் அது எமக்கு எதிராகவே கருதப்படும்: சு.ப.தமிழ்ச்செல்வன்

ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ வியாழக்கிழமை, 08 ஏப்பிரல் 2004, 7:25 ஈழம் ஸ

இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் எந்தக் கட்சியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்பிரச்சினைகளை சாதகமாகப் பயன்படுத்த முனைவார்களாயின், அது அந்த இயக்கத்துக்கு எதிராகவே கருதப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நேற்று சந்தித்து உரையாடிய போதே அவர் இக்கருத்தைத் கூறியுள்ளார்.

இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் எனத் தெரிவித்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், கருணாவுடனான பிரச்சினையை எந்தவொரு தரப்பினரும் அரசியல் ஆதாயமாக்க முற்பட்டால் அதன் விளைவு விபாPதமாகும் என்ற செய்தியை தென்பகுதிக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதற்கிணங்க தாம் உரிய தரப்பினருக்கு இச்செய்தியைப் பரிமாறியுள்ளதாகவும் மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

புதிய பிரதமர் தெரிவின் பின்னணியில் இந்தியா?

ஜ தமிழ்நெற் ஸ ஜ வியாழக்கிழமை, 08 ஏப்பிரல் 2004, 7:29 ஈழம் ஸ

சிறிலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஐபக்ஷ தெரிவு செய்யப்பட்டதின் பின்னணியில் இந்தியாவே இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருந்;த போதும், இந்தியாவின் அழுத்தம்காரணமாகவே பிரதமர் பதவிக்கான வாய்ப்பு மகிந்த ராஐபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக இவ்வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மகிந்த ராஐபக்ஷவின் பதவியேற்றதின் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை இந்தியத் து}துவர் நிரூபம் சென் முற்றாகமறுத்துள்ளார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்தியத் து}துவர், இலங்கையின் உள்நாட்;;;டு விவகாரங்களில் இந்தியா தலையிடவேண்டிய அவசியம் இல்லையெனத்தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுடனும் தொடர்ந்தும் முன்னெடுத்;;துச் செல்லப்படுமெனவும் நிரூபம் சென் நம்பிக்;கை தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்

இந்த செய்தி உண்மையானால் கதிர்காமரை விட மகிந்த ராஜபக்ஷவை ஏன் இந்தியா விரும்புகின்றது? விசுவாசி?

  • தொடங்கியவர்

புதிய அமைச்சரவையில் 35 பேர் நாளை சுபநேரத்தில் பதவியேற்பு

ஈ.பி.டி.பி. க்கும் ஓர் இடம்; பாதுகாப்பு, நிதி ஐனாதிபதி வசம்

ஜ வீரகேசரி ஸ ஜ வியாழக்கிழமை, 08 ஏப்பிரல் 2004, 7:31 ஈழம் ஸ

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை காலை சுபநேரத்தில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சரவை 35 உறுப்பினர்களை கொண்டிருக்கும் என்றும் இதில் நான்கு அமைச்சர் பதவிகள் Nஐ.வி.பி. க்கு ஒதுக்கப்படும் என்றும் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் முக்கிய அமைச்சர் பதவியொன்று வழங்கப்படும் என்றும் தெரியவருகிறது.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கலாம் என்று நேற்று முன்தினம் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற உரையாடல் ஒன்றின்போது முன்னணியின் பொதுச் செயலாளரான சுசில் பிரேம்ஐயந்த கூறியிருந்தார். ஆனாலும் அமைச்சுப் பொறுப்புகளை ஒதுக்குவதில் இழுபறி நிலை தோன்றியதால் திட்டமிட்டபடி மந்திரி சபையின் பட்டியல் நேற்று மாலை வரை ப10ர்த்தியாக்கப்படவில்லை. இதனை ப10ர்த்தி செய்யும் பணியில் ஐனாதிபதியும் பிரதமரும் மற்றும் கட்சித்தலைவர்களும் நேற்று ஐனாதிபதி செயலகத்தில் நீண்டநேரம் ஈடுபட்டிருந்தனர். புதிய அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம் ஐயந்திடம் வினவிய போது நாளை வெள்ளிக்கிழமையே பதவியேற்க விருப்பதாகக் பதிலளித்தார்.

Nஐ.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்சவும் இதனை ஊர்ஐpதம் செய்தார். வெள்ளிக்கிழமை காலை 8.51 க்கும் 9 மணிக்குமிடையேயுள்ள சுபவேளையில் புதிய மந்திரிசபை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு ஆகியவற்றின் பொறுப்புக்களை ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தாமே வைத்திருப்பாரென்றும் அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கிய அமைச்சான நிதி அமைச்சையும் ஐனாதிபதியே வைத்துக்கொள்ளலாமென அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் பிரதிஅமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோரை தெரிவு செய்யும் பணிகளும் நேற்று நடந்தன.

இதேவேளை, புதிய அரசு தனது ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து சிறிய கட்சிகளின் உதவியை நாடிவருவதாகத் தெரியவருகிறது.

225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிடம் 105 ஆசனங்களே உள்ளன. அரசாங்கம் ஸ்திரநிலையை அடைய வேண்டுமெனில் மேலும் 8 ஆசனங்கள் தேவை.

இ.தொ.கா. விடம் போனஸ் ஆசனங்கள் இரண்டையும் சேர்த்து 8 ஆசனங்கள் உள்ளன. எனினும் இ.தொ.கா. இதுவரை தனது உறுதியான நிலைப்பாடு என்ன என்று கூறவில்லை. அதன் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அனைத்து வாய்ப்புக்களும் திறந்த நிலையிலுள்ளன என்று மாத்திரம் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எடுத்துக் கொண்டால் அதன் வசம் ஐந்து ஆசனங்கள் உள்ளன. எனினும் அங்கிருந்தும் சரியான 'சமிக்ஞை"கள் புதிய அரசுக்கு வந்ததாகத் தெரியவில்லை. பௌத்த பிக்குகள் அமைப்புக்கு ஒன்பது ஆசனங்கள் உள்ளன. அதன் தலைவர் அரசாங்கத்துடன் இணைந்து சில விடயங்களுக்காக வாக்களிப்போம் என்றும் கூட்டுச் சேர்வது பற்றி நாம் சிந்திக்கவில்லை என கூறியுள்ளார்.

இவ்வாறானதோர் இக்கட்டான சூழ்நிலையில் புதிய அரசு தனது ஸ்திரத்தன்மையைப் பாராளுமன்றத்தில் நிரூபிப்பதற்கும், அதற்கு முன்னர் அமைச்சரவையை தெரிவு செய்வதற்கும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நன்றி - புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதுகாப்புக்கு வந்த இராணுவத்தினால்

மட்டு - அம்பாறை தமிழ் எம்.பிக்கள் ஐவரும்

பலவந்தமாகக் கூட்டிச்செல்லப்பட்டனர்!

கருணாவின் உத்தரவை அடுத்து

எடுக்கப்பட்ட நடவடிக்கை?

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத் திலிருந்து தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவான ஐந்து எம்.பிக்களும் நேற்று கொழும்பிலிருந்து பலவந்தமாகக் கிழக்குக்குக் கூட்டிச் செல்லப்பட்டிருக் கின்றார்கள் எனத் தெரியவருகின்றது.

தமிழர் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டம் நேற்றும், முன்தினமும் கொழும் பில் நடைபெற்றதால் அதில் பங்குபற்று வதற்காக கொழும்பிற்கு இந்த ஐந்து எம்.பிக்களும் வந்திருந்தனர்.

இராணுவத்தினரே அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளித்து அவர்க ளைக் கொழும்பிற்குக் கூட்டிவந்தனர். எனினும், அவர்களின் பாதுகாவலர்கள் என்ற க்Pதியில் கருணாவின் ஆள்கள் சிலரும் கூட வந்ததாகக் கூறப்படுகின் றது.

நேற்றுமுன்தினம் கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தில் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டம் நடைபெற்ற சமயம் கருணா வின் ஆள்களும் உள்ளே புகுந்து அமர்ந்துகொண்டனர் என்றும் -

எனினும், நேற்றைய கூட்டத்தில் எம்.பிக்களைத் தவிர வேறு எவரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் இவர் களால் முதலில் உள்ளே நுழைய முடிய வில்லை என்றும் - தெரிவிக்கப்பட்டது.

அதனால் வாசலில் மறித்தவர்க ளுடன் வாய்த்தர்க்கப்பட்ட பின்னர் அவர்கள் திரும்பிச்சென்றனர்.

எனினும், பின்னர் கூட்ட முடிவில் பத்திரிகையாளர்கள் உள்ளே அனும

திக்கப்பட்டபோது அந்தச்சாக்கில் அவர்களும் உள்ளே நுழைந்து கொண்டனர்.

இதனிடையே நேற்றும், நேற்று முன்தினமும் கொழும்பில் தங்கி நின்ற மட்டு. - அம்பாறை தமிழ் எம்.பிக்கள் அனைவரும் தொடர்ந்தும் கொழும்பில் தங்கியிருக்க விரும்பினர்.

ஆனால், சம்பந்தப்பட்ட கருணாவின் ஆள்கள் கிழக்குக்குத் தொடர்பு கொண்டு இது குறித்துத் தகவல் தெரிவித்தனர் என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட எம்.பிக் களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் கூட்டிவந்த இராணுவத்தினர் தாங்கள் உடனடியாக கிழக்கே திரும்ப வேண்டும் என்றும் -

எம்.பிக்களைப் பத்திரமாகக் கூட்டிச் செல்லவேண்டிய பொறுப்பு தங்களுடையது என்பதால் அந்த எம்பிக்கள் தங்களுடன் வரவேண்டும் என்றும் அடம்பிடித்தனர்; பலவந்தப்படுத்தினர்.

தமிழ்க் கூட்டமைப்பு சிரே~;ட எம்.பியான இரா. சம்பந்தன் உடனடியாக இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு நிலைமையைச் சமாளிக்க முயன்றார். எனினும், அவரது முயற்சி பலிக்கவில்லை.

இராணுவத்தினர் அந்த ஐந்து எம்.பிக்களையும் வற்புறுத்தித் தம்முடன் அழைத்துச் சென்றனர். அவர் கள் ஐவரும் பதற்றத்துடன்- கிழக்கே சென்றதும் தாங்கள் எதிர்கொள்ளக் கூடிய நெருக்குதல் குறித்து அச்சத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

புறப்பட்ட சமயம் அவர்களில் ஒருவரின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்ததாகவும் அதனை அவதானித்த ஒருவர் தெரிவித்தார். தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் ஒன்றிணைந்து செயற் பட இணங்கியதற்காக இவர்கள் ஐவரும் கருணாவின் ஆள்களின் கடும் நெருக்குதலுக்கு ஆளாவார்கள் எனக் கருதப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் 20 எம்.பிக்களும் நாளை வெள்ளிக் கிழமை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்துப்பேசவுள்ளமை தொடர்பாக முன்னர் வெளிவந்த செய்தி 9ஆம் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.

www.uthayan.com

  • தொடங்கியவர்

Karuna Says Prabhakaran Cannot Force a Solution on the East

Bandula Jayasekara in Colombo, SLT 5.00 A.M Thursday April 8. (by Bandula Jayasekara in Karuna's Thoppigala Camp) LTTE's rebel eastern commander Karuna Amman says that LTTE leader Vellupillai Prabhakaran cannot force a solution on the east and only Karuna has the responsibility to speak on behalf of his people's aspirations and to represent them. He told 'The Island' newspaper "I can tell you openly and clearly that the solution to our people in the east cannot be inflicted or forced by Prabhakaran." He said that he wants a stake in any future peace talks between the government and the LTTE.

Commenting on the new Freedom Alliance government, Karuna told 'The Island "It is a government elected by the people. I hope that they would try to fulfill the aspirations of the people who elected them. He expressed hope that the new government would approach the issues concerning his people in a positive way. LTTE's eastern commander described the new Prime Minister, Mahinda Rajapakse as a good person who got long experience as a politician of Sri Lanka. Karuna said, "We think that it is a good appointment."

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளுடன் மாத்திரம் ஐனாதிபதி பேசக்கூடாது - ஜாதிக ஹெல உறுமய

இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் மாத்திரம் ஐனாதிபதி சந்திரிகா பேச்சுவார்த்தை நடாத்தக்கூடாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐனாதிபதி ஏதாவது ஒரு வகையிலான உடன்படிக்கையை செய்து கொள்ளும் நோக்கில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டால் அதனை முற்றாக எதிர்ப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது.

விடுதலைப் புலிகளுடன் ஐனாதிபதி எந்த அடிப்படையில்இ எந்த நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்த முற்படுகின்றார் என்பது குறித்துஇ நன்கு ஆராய வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் அத்துனலிய ரத்தின தேரர் தெரிவித்தார்.

தமிழ் மக்களை பிரதிநித்துவப் படுத்தும் வகையிலே; அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

முஸ்லிம்கள் தமது தேசியம் பற்றி சிந்திக்கவேண்டிய வேளை இது

பி.பி.ஸி பேட்டியில் ஹக்கீம் தெரிவிப்பு

தமிழர்கள் தமிழ்த் தேசியம் குறித்து சிந்திக்கின்ற வேளையில், முஸ்லிம்க ளும் தமது தேசியம் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

- இப்படித் தெரிவித்தார் ஸ்ரீ.மு.கா தலைவர் ரவூப்ஹக்கீம். புதிதாகப் பதவி ஏற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்~ ஹக்கீமை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்புக் குறித்து பி.பி.ஸியின் தமி ழோசைக்கு அவர் அளித்த பேட்டியி லேயே இப்படிக் கூறினார். அப்பேட் டியில் ஹக்கீம் மேலும் கூறியதாவது:- புதிதாகப் பதவி ஏற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்~வின் அரசு ஒரு சிறுபான்மை அரசாகவே உள்ளது. ஆயினும், நிபந்தனையுடனான ஆதர வைப்பற்றி நாங்கள் இன்னும் தீவிரமா கப் பரிசிலிக்க இயலும் . எதிர்க்கட்சி யிலிருந்து கொண்டே அவர்களை ஆதரிப் பது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமாதான முன்னெடுப்புக்களை இந்த அரசு எவ்வாறு முன்கொண்டு செல்லப்போகிறது என்பது குறித்த தெளிவான சமிஞ்ஞைகள் இது வரை இல்லை. அதேநேரம், அரசமைப்புத் திருத் தம் தொடர்பாக ஜனாதிபதி ஏற்கனவே எடுத்துள்ள முடிவுகள் குறித்தும் சரி யான விவரங்களை எம்மால் பெற முடியவில்லை.

வடக்கு - கிழக்கைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் தமது தேசி யம், சுயநிர்ணயம் போன்றவற்றை வலி யுறுத்தி தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கியுள்ளனர். இதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் முஸ்லிம் மக்கள் தமது சுயாட்சிக்கோரிக்கையை வலியுறுத்தி ஆணைவழங்கியுள்ளனர். இந்த விடயங்களைத் தொடர்பு படுத்தி சமாதானப் பேச்சுக்களை முன் னெடுப்பதில் புதிய பிரதமருக்கு உள்ள அக்கறை குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். எமது கட்சியின் அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிக்க முன்னர் இலங்கைத் தமி ழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்களோடும் பேசுவது அவசியமாக உள்ளது. அவர்களை வழிநடத்து கின்ற புலிகளோடும் பேசவேண்டும். கடந்த காலத்தில் ஸ்ரீ.மு.கவுக்கும் புலிக ளுக்கும் இடையில் உடன்பாடுகள் எட் டப்பட்டிருந்தன. அவற்றிலே துரதிர்~;டவசமாக சில கருத்து வேறுபாடுகளும் தோன்றியிருந்தன. ஆனபோதிலும், எமக்கு இடையிலே மீண்டும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துச் சிந்தித்துப்பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் - முஸ்லிம்களிடையே திறந்த மனதுடனான கருத்துப்பரிமாறல்கள் இடம்பெறுவது அவசியமானதாகும். - இப்படி ஹக்கீம் கூறினார்.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

தமிழ்க் காங்கிரஸிலிருந்து சி.வி.கே.சிவஞானம் விலகல்

யாழ். மாநகரசபையின் முன்னாள் ஆணையாளரும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவருமான சி.வீ.கே.சிவஞானம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரி மையில் இருந்தும் தன் பொறுப்புகளில் இருந்தும் இராஜினா மாச் செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டி யிட்ட அவர் விருப்பு வாக்குக் குறைவாகப் பெற்றமையால் (25,954) நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவில்லை. அதேசமயம், இவரது கட்சியைச் சேர்ந்தவரான கஜேந்திர குமார் பொன்னம்பலம் 60,768 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். இந்த நிலையில், தனது கட்சி தனது வெற்றிக்காகப் பாடுபடவில்லை என்று கடும் சீற்றமடைந்திருந்த சிவஞானம் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தான் இராஜினாமாச் செய்வதாகப் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம் பலத்துக்கு நேற்றுக் கடிதம் அனுப்பிவைத்தார். அக்கடிதத்தில், தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்குக் கட்சியும் அதன் நிர்வாகிகளும் தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள் ளார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சி.வீ.கே.சிவ ஞானம் முதற்றடவையாகப் போட்டியிட்டவர். அப்போதும் சுமார் 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படவில்லை. இரண்டாவது தட வையாக இந்த முறையும் அவர் தோல்வியடைய நேரிட்டுள்ளது. தனது தோல்விக்குக் கட்சி நிர்வாகிகளின் பாராமுகமே காரணம் என்று அவர் உறுதியாக நம்புகின்றார்.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

ஈழவேந்தன், ஜேசப் ஆகியோர் தேசியப் பட்டியல் எம்.பிக்கள்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக வடக்கில் மா.க.ஈழவேந்தனும் கிழக்கில் ஜோசப் பரராஜசிங்கமும் நியமிக் கப்படவுள்ளனர்.

கூட்டமைப்புக்குக் கிடைத்த இரு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி களை வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத் தும்வகையில் இருவருக்கு வழங்கு வது எனக் கூட்டமைப்பு ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதற்கமைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் தமிழீழ விடுதலை அணிச் செயலாளருமான மா.க.ஈழ வேந்தனையும் மட்டக்களப்பு மாவட் டத்தைச் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரே~;ட உபதலை வரான ஜோசப் பரராஜசிங்கத்தையும் தேசியப்பட்டியல்மூலம் நியமிப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ்க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகளின் தலைமையைச் சந்தித்த பின்னர் தேசியப்பட்டியல் உறுப்பினர் விவரம் உத்தியோகப10ர்வமாக வெளியிடப்படும்.

நன்றி - உதயன்

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.