Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

கருணா மீதான 'இந்து" வின் ஆதங்கம்

விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்திற்கு எதிராக கருணா மேற்கொண்ட கிளர்ச்சியின் போது தெளிவான ஒரு கட்டத்தில் பல்லினத்துவ கிழக்கிலங்கையின் எதிர்காலம் பற்றிய பெறுமதியான பல கேள்விகளை அவர் எழுப்பிருந்ததாகவும் பிறிதொரு கட்டத்தில் அவரது கிளர்ச்சி, இலங்கையின் சமாதான முயற்சியானது சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் நீங்கலாக வெறுமனே அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலானது என்பதை தெளிவுபடுத்தியிருப்பதாகவும

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கருணாவுடன் இணைந்து செயற்பட்ட பலர் மீண்டும் புலிகள் அமைப்பில் இணைய விருப்பம்

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களை விடுதலைப் புலிகள் மீண்டும் தமது ப10ரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையடுத்து கருணா மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அவருடன் இணைந்து செயற்பட்டுவந்த பல முக்கியஸ்தர்கள் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைய முன்வந்துள்ளனர்.

இது தொடர்பான தங்கள் விருப்பத்தை அவர்கள் உள்@ர் தலைவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

வினோதன் படையணித் தளபதி ஜிம்கெலி தாத்தா, கருணா அணியின் அரசியல் துறைப் பொறுப்பாளர் விசு, நிர்வாகப் பொறுப்பாளர் துரை, வாகனப் பிரிவுப் பொறுப்பாளர் திருமால் மற்றும் நிசாம், சர்மா உட்படப் பலர் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, கருணாவின் பிடியில் மட்டக்களப்பு இருந்த காலத்தில் அட்டகாசம் புரிந்தவர்களை மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், விடுதலைப் புலிகளின் வாகரை மீட்பு நடவடிக்கையின்போது காயமடைந்த தளபதி பாரதிராஜ் புலிகள் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

'கேணல்" தரம் வழங்கி ரமேர்; கௌரவிப்பு

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியான த.ரமேர்{க்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் கேணல் தரம் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தளவு உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்புடன் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களை மீளக் கைப்பற்றியமைக்காகவே அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டதாக தெரிகின்றது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அதன் படையணித் தளபதிகளின் தரங்கள் அவர்களது மறைவுக்குப் பின்பே வழங்கப்படுவது வழக்கம். விதிவிலக்காக குறிப்பிட்ட சில தளபதிகள் மாத்திரமே கேணல் தரத்திலுள்ளனர். அந்த வரிசையில் கேணல் ரமேர்{ம் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

Army rejects LTTE request to carry arms in cleared areas

Alladin Hussein in Colombo, April 17, 2004, 5.13 pm. The LTTE is reported to have requested the Sri Lankan Army to allow them to carry weapons in cleared areas, in the North and East province, sources said. However, the Army is reported to have strongly rejected to this LTTE appeal. The LTTE made this request, early this week (15th), during an LTTE Army meeting held in Vavuniya. The meeting was chaired by the Sri Lanka Monitoring Mission Chief Major General Trond Furuhovde.

The security forces also emphasized that the LTTE should not kidnap persons or recruit children for war, while also requesting them not to extort money from the public, famously known as Tiger Tax.

Brigadier Vajira Wijeyagoonewardena and Col. Laksiri Amaratunga represented the Sri Lanka Army, while the LTTE was represented by leaders Kausalyan and Ramesh.

  • தொடங்கியவர்

TNA opposes Presidents move to change the constitution

Alladin Hussein in Colombo, April 17, 2004, 5.15 pm. Amidst strong opposition by many minorities political parties against President Chandrika Kumaratungas decision to change the constitution, the LTTE backed Tamil National Alliance has also declared their strong opposition to her decision to change the constitution.

The TNA has accused that the President is trying to change the constitution not for the benefit of the country but merely for her own personable benefits. According to TNAs S. Addaikalanathan, President Kumaratunga is trying to change the constitution, for her own personal gain, he has claimed.

The TNA, which contested under the Illankai Thamil Arasu Kachchi at the recent General Elections, secured 22 Parliamentary seats and will sit in the Opposition, when it resumes on the 22nd.

President Kumaratunga early this week appointing a panel comprising: Foreign Minister Lakshman Kadirgamar, Presidents Councils M.M. Zuhair and Dr. Jayampathy Wickramaratne, Professor Ranjith Ameresinghe, Mr. R.K.W. Gunesekera, Professor Gamini Keerawella and Mr. Nigel Hatch, as her first step towards amending the constitution.

She is also scheduled to meet this panel, shortly, to discuss the recent people's mandate to repeal and replace the 1978 Constitution, the Presidential Secretariat claimed this week..

  • தொடங்கியவர்

சகாக்களையும் கைவிட்டு கருணா மாயம்

கொழும்பில் தவித்த 8 பேர் புலிகளால் மீட்பு!

விடுதலைப் புலிகளின் மீட்பு அணிகளின் அதிரடித் தாக்குதல்களை அடுத்து மட்டக்களப்பிலிருந்து தப்பியோடிய கருணா, தன்னுடன் இருந்த எட்டுப் பேரையும் நட்டாற்றில் கைவிட்டுக் கம்பி நீட்டியுள்ளார்.

கொழும்பில் தனித்து விடப்பட்ட நிலையில் செய்வதறியாது தவித்து நின்ற அந்த எட்டுப் பேரையும் புலிகள் மீட்டு நேற்றுமுன்தினம் மாலை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தனர். கருணாவால் தளபதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த ஐpம்கெலி தாத்தா, திருமால், றொபேட், துரை ஆகியோரும் கருணாவின் மெய்ப்பாதுகாவலர்கள் நால்வருமே இவ்வாறு அநாதரவாகக் கைவிடப்பட்டனர்.

கருணா தப்பிச்சென்ற இடம் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. கருணாவைத் தமிழீழத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம் பித்த விடுதலைப் புலிகளின் படைய ணிகள் கஞ்சிகுடிச்சாறுப்பகுதியை மீட்டு தரவைப் பகுதி நோக்கி முன்னேறிய சமயம் கருணாவுடன் அவரது விசுவாசிகளான நிலாவினி, வரதன், காயா, ஐpம்கெலி தாத்தா, திருமால், றொபேட், துரை ஆகியோரும் தப்பி ஓடினர். இவர்களுடன் கருணாவின் நான்கு மெய்ப்பாதுகாவலர்களும் சென்றனர்.

இவர்கள் முதலில் மின்னேரியா இராணுவத்தளத்துக்கு சென்றனர். அங்கிருந்து கருணா, வரதன், நிலாவினி, காயா ஆகியோர் ஒருவாகனத்திலும் ஏனைய எட்டுப்பேரும் இன்னொரு வாகனத்திலும் ஏற்றப்பட்டு இராணுவத்தினரால் அழைத்துச்செல்லப்பட்டனர்.பிர

  • தொடங்கியவர்

மரணித்த பிரதேசவாதம்: சிங்களத்திற்கான மீளமுடியாத தோல்வி

மட்டு-அம்பாறை மாவட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வலிந்ததொரு பிரதேசவாதத்திற்குள் சுமார் 39 நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது. சமூக வாழ்வியலின் உச்ச உணர்வலையாக இருக்கும் தான் சார்ந்த சமூகம் குறித்த ஒட்டுதல், தனது இருப்பிற்கான போராட்டம் என்பவற்றின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையை தமிழர் தரப்பு கொண்டுள்ளதாகத் திணிக்கப்பட்ட கருத்தானது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லையென்ற போதிலும், அதனை செயலாக்கம் பெறவைப்பதற்கான நெருக்குதலை கருணா இறுதி வரை கொடுத்து வந்தார். ஏனெனில், கருணா கிழக்கின் சக்தியாக தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையை சதியாளர்கள் அவருக்கு ஏற்படுத்தியிருந்தார்கள்.

குறிப்பாக, இந்த விவகாரத்தில் நேரடியாகவே சம்பந்தப்பட்ட ஒரு தரப்பாக மாறியிருந்த முப்படைத்தளபதி பலகல்லவும், ஐனாதிபதி அலுவலகமும் கருணாவை ஒரு தாக்கமிகு பாத்திரமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மறைமுகமாகச் செயற்படுத்தி வந்தனர். குறிப்பாக திராணியற்ற ஒரு படையைக் கொண்டுள்ள சிறீலங்கா, எதிராளியான தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்த முன்னின்ற அதேவேளை, தமிழர் தரப்புப் பிளவுபட்டால், தமிழர்களின் பேசும் பலம் குறைக்கப்படலாம் என்பதிலும், தமிழர்களின் ஒரே தலைமை விடுதலைப்புலிகள் தான் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையுடனும் ஒரு நீண்ட கால நோக்கில் இத்திட்டத்தை முன்னெடுத்தது.

இதனடிப்படையில் கருணாவிற்கான சகல ஆதரவுகளையும் வழங்கும் உத்தரவாதத்தை மேற்படி தரப்பு வழங்கியிருக்க வேண்டும். அதன் காரணமாக கருணா தனித்து இயங்குவதற்கான நடவடிக்கைகளாக நிதி மோசடி, வயதுகுறைந்த போராளிகளை தலைமைக்குத் தெரியாமல் இணைத்தல், தனது நம்பிக்கைக்குரியவர்களை பொறுப்புக்களில் நியமித்தல் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வந்தார். ஆனால் தலைமைப்பீடம் இவரது நடவடிக்கைகள் பற்றிய ஐயப்பாட்டினை உடனேயே வெளிப்படுத்தியதானது, 'சதிக்கான காலம் கனிய முதலே" தனது சதித் திட்டத்தை அறிவிப்பதற்கான சங்கடத்திற்குள் கருணாவைத் தள்ளியிருந்தது.

மறுபுறத்தே கருணாவின் இந்தத் திடிர் அறிவிப்பு சிறீலங்காவின் திட்டத்தை உருக்குலைப்பதாகவே இருந்தது. போர் ஒன்று மீண்டும் ஆரம்பமாகும் போது மட்டு-அம்பாறைப் பிளவு தொடர்பான தனது நிலைப்பாட்டை கருணா அறிவிப்பதற்கான தயாரிப்புக்களிலேயே சிறீலங்கா கருணாவை ஈடுபடுத்தி வந்தது. ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையில் இச்சதி அறிவிப்பு வெளியிடப்படும் போது, தமிழர் தரப்பு போரரங்கைச் சந்திக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதுடன், வட-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வர அது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்க

தேசிய முன்னனி பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் சுய விருப்பின் பெயரில் விலகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

(முழுமையான செய்திகள் இன்னமும் கிடைக்கவில்லை)

  • தொடங்கியவர்

ராஜீவ் கொலையில் நீலனுக்குத் தொடர்பு இருந்ததை மறுக்கிறார் இந்திய உயர் அதிகாரி டி.ஆர்.கார்த்தியேகன்

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்புஇ அம்பாறை மாவட்ட உதவிப் புலனாய்வுப் பொறுப்பாளர் நீலனுக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் பங்களிப்பு இருந்ததை மறுக்கிறார் படுகொலை வழக்கை விசாரணை செய்த இந்திய விசேட விசாரணைப் பிரிவின் தலைவரான டி.ஆர்.கார்த்தியேகன் நீலன் கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு மருத முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு ராஜீவ் கொலையுடன் நேரடி தொடர்பு இருந்ததற்கு ஆதாரமில்லையென கார்த்திகேயன் கூறினார்.

ஆனால்இ சிவராசன்இ நீலனின் செல்லிட வயர்லஸ் செட்டை பயன்படுத்தியாதாகவும் தான் சொந்தமாக வயலர்ஸ் செட்டை பெற்றுக் கொள்ளும்வரை சிவராசன் நீலனின் செல்லிட வயர்லஸ் செட்டை பயன்படுத்தினால் எனவும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

1990 இறுதிக் காலாண்டுப் பகுதியில் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானால் நீலன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கு புலனாய்வுத் தளத்தை அமைக்கவே அவர் அங்கு அனுப்பப்ட்டதாகவும் கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.

நீலனின் வயலர்ஸ் செட்டை சிவராசன் பயன்படுத்தினாலும்இ ராஜீவ் கொலைச் சதியில் ஈடுபட்ட குழுவில் நீலன் அங்கம் வகிக்கவில்லை எனவும் கார்த்தியேன் தெரிவித்துள்ளார்.

நீலன் படுகொலை தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள பல இந்திய தமிழ்இஆங்கில மொழிப் பத்திரிகைகளும்இ கொழும்பில் இருந்து வெளியாகும் சில ஆங்கிலப் பத்திரிகைகளும் ராஜீவ் படுகொலையுடன் தொடர்புடைய நீலன் கொலை செய்யப்பட்டு விட்டாரென்ற தலையங்கத்துடன் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டிருந்தன.

தினக்குரல்.

  • தொடங்கியவர்

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒரு அரசியல் இயக்கத்தை முதன் முதலில் முன்னெடுத்த ஒரு கட்சியின் மூலவர்களுள் ஒருவர் என்பதை ஏற்பதில் எவருக்கும் தயக்கம் வேண்டியதில்லை. எனினும், நடைமுறை அரசியலில் மலையக மக்கள் பற்றியோ முஸ்லிம்கள் பற்றியோ தென்னிலங்கையில் குடி யேறிய பல்வேறு தமிழ் பேசும் மக்கள் பற்றியோ கூடத் தமிழ்த் தேசியவாதத் தலைமை எதற்குமே தெளிவான ஒரு பார்வை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி 1948 இல் தோற்றுவிக்கப்பட்ட போதும், 1956 வரை மட்டக்களப்பில் அதன் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தும் சூ ழ்நிலை ஏற்படவில்லை. 1948 இல் மலையக மக்களது குடியுரிமை பறிக்கப்பட்ட போதும், 1956 வரை அதைப் பறிக்க உதவி செய்த தமிழ்க் காங்கிரஸ் தலைமை வடக்கில் மக்களால் நிராகரிக்கப்படவில்லை. இலங்கை முழுவதும் பரவி வாழும் முஸ்லிம்களுக்கு சேர் பொன்னம்பலம் இராமநாதன் கடந்த எண்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு துரோகியாகவே தெரிந்துள்ளார். முஸ்லிம்கள் தமிழ் பேசுவதால் மட்டும் எல்லாத் தமிழருக்கும் பொதுவாக உருவாக்கக் கூ டிய ஒரு கோரிக்கையை அவர்கள் சார்பிலும் முன்வைக்க இயலாது என்ற எளிய உண்மை என்றுமே தமிழ்த் தேசியத் தலைமைகளுக்கு உறைத்ததில்லை. இவ்விடயத்தில் தமிழரசுக் கட்சியை விடத் தமிழ்க் காங்கிரஸ் தனது யாழ்ப்பாண வேளாள மேலாதிக்க அரசியல் காரணமாக யதார்த்தமான ஒரு பார்வையைக் கொண்டி ருந்தது.

தமிழ் மக்களிடையே ஒற்றுமையைக் குலைப்பதற்கான முயற்சிகளில் தமிழ்க் காங்கிரஸ் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டிலும் நியாயம் உண்டு. சமர்;டி க் கோரிக்கை, தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற கருத்துக்களை வன்மையாக எதிர்த்த வரலாறு தமிழ்க் காங்கிரஸினுடையது. வட்ட மேசை மாநாடு என்று ஜி.ஜி.பொன்னம்பலம் பேசியபோது வட்ட மேசையா சதுர மேசையா என்றெல்லாம் கிண்டல் செய்து அவரை ஓரங்கட்ட முயன்ற பெருமை தமிழரசுக் கட்சியினது. எனவே, தமிழ்க் கட்சிகள் என்பன தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்த விரும்புகின்றன என்பதை தான் என்றுமே நம்பியதில்லை. தமிழ் மக்களைத் தம் ஏகபோக ஆதிக்கத்தினுள் வைத்திருக்க ஒவ்வொரு கட்சியும் முயன்றுள்ள அளவுக்கு அவர்களை ஒற்றுமைப்படுத்த என்றுமே முயன்றதில்லை. இப்பத்திரிகையில் முன்பு குறிப்பிட்டது போல தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது சாதி, வர்க்கம் என்ற ஆதிக்க முரண்பாடுகளை மீறி இயலுமானதல்ல. முதலில் சமூக ஒடுக்குமுறைகள் பற்றிய நேர்மையான அறஞ்சார்ந்த ஒரு நிலைப்பாட்டை ஒரு தலைமை மேற்கொள்ளாத வரை, அதனால் ஒரு தேசிய இனத்தையோ ஒரு நாட்டையோ ஒற்றுமைப்படுத்த இயலாது.

சாதி பேதங்களை தமிழரசுக் கட்சித் தலைமை களைந்ததாகப் பேசப்பட்டது. அதே தலைமை தான் 1960 களில் சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சியிற் சாதி வெறியர்கள் தரப்பில் நின்றது. இன்னமும் தீண்டாமையும் சாதிப் பாகுபாடும் வடக்கில் பல இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றனவென

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் போராட்டம் சரியான தடத்தில் செல்வதை கோடிýட்டு காட்டிýய 'கருணாவின் கலக முறியடிýப்பு"

கருணாவின் கலகத்தை விடுதலைப் புலிகள் மிகச் சாதுரியமாக முறியடிýத்தமை சமாதான நடவடிýக்கைகளிலிருந்து ஒரு தடையை அகற்றியிருக்கும் அதே சமயம், தமிழ் மக்களின் ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் மீண்டும் கோடிýட்டுக்காட்டிýயிருப்பதா

  • தொடங்கியவர்

ஆனந்தசங்கரி ஐயாவுக்கு

தேர்தலுக்கு முன்னரேயே உங்களுக்கு ஒரு கடிýதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பல, விதமான சிக்கல்களுக்கு மத்தியில் நீங்கள் களமிறங்கியிருந்ததால், எனது கடிýதத்தை ஆற அமர வாசிப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்காது என்று கருதி அப்போது எழுதுவதைத் தவிர்த்தேன்.

இப்போது தேர்தல் அலுவல் களைப்பெல்லாம் மாறி ஆறுதலாக, இருப்பீர்கள்- கடிýதத்தை வாசிக்கவும் போதிய அவகாசம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கின்றேன். அதனால் இந்த மடல்.

சுமார் 4 தசாப்த காலமாக அரசியல் வாழ்வில் இருக்கும் நீங்கள் தந்தை செல்வா, அமிர், சிவா ஐயா எல்லோரும் வகித்த, தமிழர் விடுதலைக் கூýட்டணியின் மேன்மை மிகு தலைமைப் பதவிக்கு, வந்த பின்னர், சுயேச்சைக் குழுவாகப் போட்டிýயிட வேண்டிýய துரதிர்ர்;டம் உங்களுக்கு ஏற்பட்டது குறித்து உண்மையிலேயே எனக்கு மனவருத்தம். நம்பினால் நம்புங்கள்.

தேர்தலுக்குப் பிறகு நீங்கள் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிýகளில் எல்லாம், யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லையென்று குறை கூýறியிருந்தீர்கள். முகமாலைக்குச் சென்று உங்கள் வாக்கைக் கூýடப் பதிவு செய்ய முடிýயாத அளவுக்கு உங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாகவும் கூýறியிருந்தீர்கள்.

உலகில் பாராளுமன்றத் தேர்தல்கள் எல்லாம் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதாக நான் ஒருபோதும் நம்புகிறவன் அல்ல. ஆனால், கிளிநொச்சியில் கிராம சபைத் தேர்தல் தொடக்கம் பாராளுமன்றத் தேர்தல் வரை எத்தனையோ களங்களைக் கண்ட நீங்கள், தோல்வியடைந்த தேர்தலை மாத்திரம் முறைகேடுகள் மிகுந்ததாக வர்ணிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிýயவில்லை.

1977 பொதுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிýப்படையில் தனி நாட்டுக்கான தமிழ் மக்களின் அங்கீகாரத்தை உங்கள் கட்சி அன்று அமிர், சிவா தலைமையில் கோரி நின்ற வேளையில் கூýட, கள்ளவாக்குப் போட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். இதனால், நீங்கள் வெற்றி கண்ட தேர்தல்களிலும் முறைகேடுகள் இடம்பெற்றுத் தான் இருந்தன என்கின்றேன் நான்.

தோல்வி கண்ட தலைவர்கள் தமிழ் மக்களைத் திட்டிýத் தீர்த்ததில் ஒரு பிரத்தியேகமான பாரம்பரியத்தைக் கொண்டது ஐயா. தமிழர்களின் அரசியல், அது உங்களுக்குத் தெரியாததும் அல்லவே?

1970 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மார்ட்டிýனிடமும், அல்பிரட் துரையப்பாவிடமும் தோல்வி கண்டு மூýன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ஜி.ஜி. பொன்னம்பலம் ஐயா கச்சேரி வளவில் என்ன கூýறிவிட்டு ஜீப்பில் ஏறிச் சென்றார் தெரியுமா? - எளிய தமிழ்ச் சாதி.

அதே எளிய தமிழ்ச்சாதிதான் மலேசியாவில் உயிரை விட்ட அதே பொன்னம்பலத்தின் ப10தவுடலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்து, பின்னர் பருத்தித்துறைக் கடற்கரையில் தகனம் செய்தது. பொன்னம்பலத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ' எளிய தமிழ்ச் சாதி"யின் எண்ணிக்கையையும், நெல்லியடிýச் சந்தியில் இருந்து மாலி சந்திவரை எத்தனை கூýட்டுப் பறை மேளங்கள் வானதிர முழங்கின என்பதையும் நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். நேரில் கண்டிýருப்பீர்கள் - இத்தனை மரியாதையையும் அவருக்குச் செய்தது எளிய தமிழ்ச் சாதி!

அதே தேர்தலில் வட்டுக்கோட்டையில் தியாகராஜாவிடம் தோற்றுப் போன அமிர் என்ன சொன்னார்? கச்சேரி வளவில் கூýடிý நின்ற பெருந்திரளான மக்கள் மத்தியில் என்ன பேசி விட்டு அமிர் காரில், மனைவியுடன் ஏறிச் சென்றார் என்பதை இப்போது பகிரங்கமாகக் கூýறினால், இந்தளவுக்கு அரசியல் முதிர்ச்சியற்றவரா அமிர் என்று 'அதே எளிய தமிழ்ச் சாதி" வியக்கும்.

காலமானவர்களைப் பற்றி கண்டபடிý கதைக்காமல் இருப்பதுவும் எங்கள் 'தமிழ்ப் பண்பாடுகளில" ஒன்றல்லவா சங்கரி ஐயா. அதனால் அந்தப் பழைய கதைகளைக் கைவிடுவோம்!

அண்மைக் காலத்தில் உங்களை அறியாமலேயே நீங்கள் உங்களை ஒரு பொருந்தாத் தன்மைக்குள் வீணே சிறைப்படுத்தி விட்டPர்கள் என்று நினைக்கின்றேன். மனதுக்கு அசௌகரியமாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

இன்று "அவர்களை' ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக் கொண்டு தேர்தலில் வென்றிருப்பவர்களில் சகலருமே உத்தம புத்திரர்கள் இல்லை. நான் எந்தக் கிலேசமும் இன்றி இதை வெளிப்படையாகவே கூýறுகின்றேன். கோபித்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை.

தமிழ் மக்களின்'ஏக பிரதிநிதிகளுக்காக" பாராளுமன்றம் செல்லப் போகின்றவர்களில் எத்தனை பேர் தங்களின் கடந்த கால அரசியல், அழுக்குகளை வெட்டிýப் புதைத்துவிட்டுப் ' புனிதர்களாக" முன் வந்து நிற்கின்றார்கள்? இது என்ன மக்களுக்குத் தெரியாத விடயமா?

ஆனால், நீங்கள் நினைத்திருந்தால் இந்த 'இடறலை" வெகு சுலபமாகவே தவிர்த்திருக்கலாம். பாராளுமன்ற அரசியலில் தப்பிப் பிழைத்துமிருக்கலாம். யாரோ உங்களை தடுத்தாட்கொண்டு விட்டார்கள் என்று பலரும் பேசுவதைக் கேட்கும் போது, என்னாலும் ஒன்றும் கூýற முடிýயாமல் தான் இருக்கிறது. இவ்வாறு தடுத்தாட் கொள்ளப்பட்டவர்களின் வரிசையில் நீங்கள் ஏன் ஐயா மாட்டுப்பட்டPர்கள்? எனக்குப் புரியவில்லை.

தேர்தலில் தோல்வி கண்ட உங்களைப் பாராளுமன்றக் கதிரையில் மீண்டும் அமர வைத்துப் பார்த்துப் பரவசமடைய முன் வந்தவர்களைப் பார்க்கும் போது எங்களுக்கே ஆச்சரியம். யார் யாருக்கெல்லாம் நீங்கள் உதவிக் கரம் நீட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றார்கள் பார்த்தீர்களா சங்கரி ஐயா!

காவியுடைதரித்தோரின் கரங்களால் அரவணைக்கப்படாமல் அதையும் தவிர்த்து விட்டPர்கள். நீங்கள் விடுத்த பத்திரிகை அறிக்கையில் உங்கள்'கொள்கை" அதற்கு இடம், தரவில்லை என்று கூýறியிருந்தீர்கள். இதே 'கொள்கை" உறுதிப்பாடாவது எஞ்சி நிற்கட்டும்!

'அவர்கள்" ஏகப் பிரதிநிதிகளா இல்லையா என்ற சர்ச்சை வேண்டாம். நீங்கள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற

  • தொடங்கியவர்

தகர்ந்து போன கருணாவின் திட்டங்கள்!

பாரிய உயிர்ச் சேதமின்றி புலிகள் வகுத்த தாக்குதல் திட்டம்

கருணா எங்கே போய்விட்டார்? இதுதான் இன்று அனைவராலும் எழுப்பப்படும் கேள்வியாகும். மட்டக்களப்பில் இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளை தன்பிடிýயில் வைத்திருந்த கருணா, சுமார் நாற்பது நாள் புரட்சியின் பின் மட்டக்களப்பை விட்டுத் தப்பியோடிý விட்டார். அவரும் அவரது சகாக்கள் சிலரும் தற்போது கொழும்பிலிருப்பதாக சில தகவல்கள் கூýறும் அதேநேரம், கருணா வெளிநாடொன்றுக்குத் தப்பிச் சென்று விட்டதாகவும் கூýறப்படுகிறது.

புலிகளுக்கெதிரான தனது புரட்சி இவ்வளவு நாட்களுக்குள் முடிýவுக்கு வந்து விடுமென அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் மட்டக்களப்பில் தனது கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இடையிலான புவியியல் அமைப்பு தனக்குச் சாதகமாயிருப்பதையுணர்ந்தே கருணா இந்தப் புரட்சியில் ஈடுபட்டார்.

ஆனாலும், கருணாவோ அல்லது அவரைத் தூண்டிýய சக்திகளோ அல்லது இலங்கைப் படையினரோ எதிர்பார்த்திராத வகையில் விடுதலைப்புலிகள் இதற்கு முற்றுப் புள்ளி வைத்து மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளை மிக விரைவாகவும் இரத்தக் களரியின்றியும் தங்கள் கட்டுப்பாட்டிýனுள் கொண்டு வந்து விட்டனர்.

வட பகுதியைப் போலன்றி கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட புவியியல் நிலைமையும் அங்கு நிலை கொண்டிýருந்த படையினரின் ஆதரவும், புலிகளால் தன்னை சுலபமாக நெருங்க முடிýயாதென்ற மாயத் தோற்றத்தை கருணாவுக்கு ஏற்படுத்தியிருந்தன. தற்போது அமுலிலுள்ள போர்நிறுத்தமும், பாரிய படையணி நகர்வொன்றை தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ கிழக்கில், புலிகளால் மேற்கொள்ள முடிýயாதென்ற கருணாவின் நினைப்பு பொய்த்து விட்டது.

திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பிரிக்கும் குறுகிய தரைப்பரப்பு வெருகல் பகுதியிலுள்ளது. இந்தக் குறுகிய தரைவழியும் வெருகல் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிராகப் புரட்சி செய்ததும் இந்த வெருகல் ஆற்றுக்கு தெற்கே, தனது படையணிகளை நிலை கொள்ள வைத்த கருணா, வெருகல் பகுதிக்கு தெற்கே சில கிலோ மீற்றர் தூரத்திலிருக்கும் கதிரவெளியிலுள்ள தனது கடற்புலித் தளத்தின் மூýலம் கடற் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தினார்.

புலிகளுக்கிடையே ஏற்பட்ட இந்தப் பிரச்சினையை மிகவும் சாதகமாகப் பயன்படுத்தி புலிகளை அழிக்க அல்லது பெருமளவில் பயன்படுத்தத் திட்டமிட்ட இலங்கைப் படையினர், கருணாவுக்கு சார்பாகச் செயற்படத் தொடங்கினர். புலிகளின் ஒவ்வொரு அசைவுகள் குறித்தும் தங்கள் புலனாய்வுப் பிரிவுகள் மூýலம் கண்காணித்த படையினர் அவை பற்றியெல்லாம் கருணா தரப்புக்கும் தெரியப்படுத்தினர்.

புலிகளைப் போன்று படை பலத்திலோ, புலனாய்வுத்துறையிலோ அல்லது போரிடும் ஆற்றலிலோ கருணா குழுவினர் வல்லமை படைத்திருக்கவில்லை. அதைவிட தாங்கள் தமிழர்களுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகமிழைப்பதை பல போராளிகள் உணர்ந்து கொண்டதால் அவர்கள் மனோ ரீதியில் வலுவிழந்து போய்விட்டனர். இதனால், அவர்களால் எதுவுமே செய்ய முடிýயாது போய்விட்டது.

புலிகளுக்கெதிராக கருணா செய்த புரட்சிக்கு மக்கள் ஆதரவும் கிட்டாத அதேநேரம், அவரை விட்டு விலகிச் செல்லும் போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனாலும், மட்டக்களப்பு-அம்பாறையில் நிலை கொண்டிýருந்த போராளிகள் அனைவரும் தன்னுடன் இருப்பதாகவும் தனது கட்டளைகளுக்குப் பணிந்து செல்வார்களென்றும், புலிகளுக்கெதிராகப் போரொன்று வந்தால் அதில் அவர்கள் குதிப்பார்களென்றும் கருணா பெரிதும் நம்பியிருந்தார்.

இதைவிட மட்டக்களப்பின் புவியியல் நிலைமை காரணமாக, புலிகளால் வன்னியிலிருந்து பெரும் படையணியையோ அல்லது ஆட்லறிகள், பாரிய மோட்டார்கள் போன்ற கனரக ஆயுதங்களையோ தரைவழியாக அல்லது கடல் வழியாக மட்டக்களப்பிற்குள் நகர்த்த முடிýயாதெனவும் கருணா நம்பியிருந்தார். புலிகளுக்கெதிரான புரட்சியைச் செய்த அதேநேரம், மட்டக்களப்பிற்குள் புலிகள் நுழையக் கூýடிýய வெருகல் தரை வழியையும், தனது படையணியைக் கொண்டு மூýடிý விட்டார். கடல் வழியால் புலிகள் நுழைவதாயின் திருகோணமலை கடற்படையினரின் கண்களில் மண் தூவி விட்டுத்தான் மட்டக்களப்பின் குறிப்பிட்ட சில பகுதிக்குள் தரையிறங்க வேண்டிýய நிலை புலிகளுக்கு ஏற்படுமெனவும் எனினும் அது சாத்தியப்படாததொன்றெனவும் கருணா கருதினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை வெருகல் முதல் பனிச்சங்கேணி வரையான கரையோரப் பகுதியே இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதியிலுள்ளது. அதிலும் கதிரவெளிப் பகுதியில் தனது கடற்புலித் தளமிருப்பதால் பாரிய படையணியுடனும் கனரக ஆயுதங்களுடனும் இந்தப் பகுதிகளுக்குள் புலிகள் தரையிறங்குவதும் சாத்தியமில்லை எனக் கருணா கருதினார்.

இதைவிட, வெருகல் பகுதியில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தினால் அதனை ஆட்லறிகள் மற்றும் பாரிய மோட்டார்கள் மூýலம் கடுமையான பதிலடிýத் தாக்குதலைத் தொடுப்பதற்கு வசதியான வெருகல் ஆற்றின் வட பகுதியை இலக்கு வைத்து கதிரவெளிப் பகுதியில் ஆட்லறி மற்றும் மோட்டார் தளங்களும் அமைக்கப்பட்டிýருந்தன.

ஆனாலும், இந்தப் பீரங்கிப் படையணியின் திறமை குறித்து சந்தேகமே ஏற்பட்டிýருந்தது. வட பகுதிப் போர்முனை போன்று கிழக்கில் மரபுவழிச் சமர்கள் பெருமளவில் நடைபெறாததால் இந்தப் படையணிகளின் செயற்பாடும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தது.

இதேநேரம், தாக்குதலொன்றை புலிகளே தொடுக்க வேண்டிýயிருந்ததால் மட்டக்களப்பின் புவியியல் தோற்றத்திற்கமைய தற்காப்பு மற்றும் முறியடிýப்புச் சமருக்கான திட்டங்களை வகுத்தால் மட்டும் போதுமானதென்ற நிலையே கருணாவிற்கிருந்தது.

புலிகளுடனான புரட்சிக்குப் பின் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் சிங்கள, ஆங்கில ஊடகங்களுக்கும் கருணா பல பேட்டிýகளை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டிýகளிலெல்லாம் தன்னைப் பற்றி அவர் புகழ்ந்து தள்ளியதுடன் தானொரு ஜாம்பவானென்றும் தானில்லாவிட்டால் புலிகளால் மரபுவழிச் சமரை நடத்த முடிýயாதென்றும் முறியடிýப்புச் சமரைக் கூýட நடத்த முடிýயாதென்றும் கூýறியிருந்தார்.

அந்தளவிற்கு, தான் மரபு வழிச் சமரிலும் முறியடிýப்புச் சமரிலும் ஜாம்பவானென்ற தலைக்கனம் அவருக்கிருந்தது.

மட்டக்களப்பு புவியியல் நிலைமை, போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருத்தல், திருகோணமலையில் நிலை கொண்டிýருக்கும் கடற்படையினரின் பலம், மட்டக்களப்பிலுள்ள படையினரின் உதவியெனத் தனக்கு இந்தச் சமரில் சாதகமான நிலையே அனைத்து வழிகளிலுமிருப்பதாக கருணா கருதினார்.

புலிகளால் தனக்கெதிராகத் தாக்குதலைத் தொடுக்க முடிýயாதளவிற்கு இவ்வளவு காரணிகள் இருக்கையில், தனது பாதுகாப்பு பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் புலிகளால் தன்னை எதுவுமே செய்ய முடிýயாதளவிற்கு அவர்களைப் பொறியில் சிக்க வைத்து விட்டதாகவும் கருணா எண்ணிக் கொண்டிýருந்தார்.

பாரிய உயிர்ச் சேதமின்றி கருணாவைத் தனிமைப்படுத்தும் தாக்குதலை ஆரம்பிக்கும் அதேநேரம், இந்தத் தாக்குதலானது, கருணா வசமுள்ள போராளிகளை, அவர்களுக்கு எதுவித சேதமுமில்லாது மீட்கும் தாக்குதலாகவும் அமையவேண்டுமென்பதில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தீவிரம் காட்டிýனார்.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்றதும் உடனடிýயாகத் தாக்குதலை நடத்த பிரபாகரன் விரும்பவில்லை. கருணாவை தனிமைப்படுத்தும் அதேநேரம், கிழக்கு மக்களும் போராளிகளும் உண்மை நிலையை அறிய நன்கு கால அவகாசம் வழங்கியதுடன், கருணாவின் பின்னணியில் நிற்பவர்கள் யார் என்பதை முழு உலகுக்கும் அம்பலப்படுத்த வேண்டுமெனவும் பிரபாகரன் விரும்பினார்.

கருணாவை ஆதரிக்கவும், அவரைக் காப்பாற்றவும், அவரைப் பெரும் சக்தியாகக் காட்டவும் தென்பகுதி சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் போட்டிý போட்டன. கருணாவுக்கு தோள் கொடுக்கப் படையினரும் முன்வந்தனர். அவர்களுடன் கருணாவும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியிருந்ததால், கருணாவுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தால் அதில் இரானுவத்தினரும் ஏதோவொரு விதத்தில் தலையிட முற்படுவரெனப் புலிகள் உணர்ந்து கொண்டனர்.

இந்தத் தாக்குதல் நடவடிýக்கை ஒரு சில தினங்களுக்குள் முடிýந்து விட வேண்டுமென்றும், அது இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பரவிச் செல்லக் கூýடாதென்றும் இல்லையேல் கருணாவுக்கு வெளி உதவிகள் பெருமளவில் கிடைக்க வாய்ப்பிருப்பதையும் புலிகள் புரிந்து கொண்டனர். ஆனாலும், கருணா தப்பிச் செல்ல வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் கருணா தரப்பிலிருந்த போராளிகள் உண்மை நிலையை உணர்ந்து கொண்டனர். இதற்காக புலிகள் உளவியல் யுத்தமொன்றையும் நடத்தியிருந்தனர். இது முழு அளவில் வெற்றியுமளித்திருந்தது.

கடந்த காலங்களில் நடைபெற்ற பல சமர்கள் மற்றும் யுத்தங்களின் போது கருணா சாதாரணமாக தலைவர் பிரபாகரனின் திட்டங்களை களமுனைத் தளபதிகளுக்கு ஒப்படைக்கும் அல்லது ஒப்புவிக்கும் ஒரு தூதுவராகவே செயற்பட்டுள்ளார்.

பிரபாகரனின் மதி நுட்பத்தையோ, தாக்குதல் விய10கங்களையோ அல்லது முறியடிýப்புச் சமருக்கான உத்திகளையோ கருணா பெரிதும் அறிந்திருக்கவில்லை. பிரபாகரன் வகுத்த திட்டங்களை ஏனைய தளபதிகளிடம் ஒப்புவிப்பதில் சிறந்து விளங்கியதால் பல போர்களில் அவர் பற்றி முன்னிலைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவந்தன.

இதனால், தன்னைப் பற்றி அதீத கற்பனை கொண்ட கருணா, மட்டக்களப்பிலிருந்த போராளிகளின் மனோ நிலை பற்றி அறிந்திருக்கவில்லை. வெருகல் ஆற்றைத் தாண்டிýய புலிகள் கருணாவின் பகுதிக்குள் நுழைந்த போது தான் கருணா உண்மை நிலையை அறிந்து கொண்டார். அங்கிருந்த போராளிகள் எவருமே தன்னுடனில்லை என்பதும் புரிந்த போது எல்லாமே முடிýவுக்கு வந்து விட்டன.

புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட போராளிகள் எல்லோரும், புலிகளுடன் இணையத் தொடங்கவே, முன்னேறி வந்த புலிகளுடன் மோதுவதற்கு கருணா தரப்பில் போராளிகள் எவருமே இருக்கவில்லை. இதனால் களமுனைக்கு மேலும் போராளிகளை அனுப்ப முடிýயாத நிலையேற்பட்டது.

களமுனை சென்ற போராளிகளெல்லோரும் புலிகளுடன் இணைவது உடனடிýயாகவே பேராபத்துக்களை ஏற்படுத்துமென்பதால், வாகரைப் பகுதி நோக்கி புலிகள் முன்னேறவே கருணாவின் முக்கிய சகாக்கள் அங்கிருந்து பின் வாங்கினர்.

நிலைமையெல்லாம் தலைகீழாகிவிடவே கொழும்பு- மட்டக்களப்பு (ஏ11) வீதியை ஊடறுத்து புலிகளின் படையணிகள் வீதிக்கு தெற்கே வருவதற்குள் இருப்பிடங்களைக் காலி செய்து விட்டு தப்பி விட வேண்டிýய அவசர நிலை கருணாவுக்கு ஏற்பட்டது. இதற்காக அவருக்குத் துணைபுரிய படையினரும் முன் வந்தனர்.

முன்னேறும் புலிகள் கொக்கட்டிýச்சோலை, கரடிýயனாறு, தொப்பிக்கல பகுதிக்குள் பெருமெடுப்பில் நுழைய வேண்டுமானால், இந்த வீதியை (ஏ11) கடந்தேயாக வேண்டும். ஆனால், இந்த வீதியில் குவிக்கப்பட்ட படையினர் அடிýக்கு ஒருவர் என வீதியின் இரு மருங்கிலும் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

'ஏ 11" வீதியில் படையினரின் இந்த அரணமைப்பு தங்களுக்குப் போதிய அவகாசத்தை வழங்குமென கருணா நினைத்திருந்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை இரவு புலிகளின் அணிகள் கொக்கட்டிýச்சோலை, கரடிýயனாறு மற்றும் தொப்பிக்கல பகுதிக்குள் ஊடுருவி விடவே கருணா திகைத்துப் போனார். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், புலிகளிடம் தான் சிக்கி விடலாமென்பதை உணர்ந்த அவர், பதில் தாக்குதல் திட்டங்களைக் கைவிட்டு விட்டு தப்பியோடத் தொடங்கினார். மிகவும் வேண்டப்பட்ட சிலருடனேயே தப்பினார்.

அதற்கு முன் தான் தடுத்து வைத்திருந்த முக்கிய போராளிகள் பலரை சுட்டுக் கொன்றதுடன் கனரக ஆயுதங்கள் மற்றும் பெருமளவு வாகனங்களையும் முக்கிய ஆவணங்கள் பலவற்றையும் தீயிட்டுக் கொளுத்தினார். அதன் பின், நெருங்கிய சகாக்கள் சிலருடன் மாவடிýவேம்பு இரானுவ முகாமுக்கு வந்து அங்கிருந்து படையினரின் பலத்த பாதுகாப்புடன் பொலநறுவைக்குச் சென்று தம்புள்ள ஊடாக கொழும்புக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகளுடனிருக்கும் போது அவருக்கு கிடைத்த பாராட்டுகளும், கௌரவமும் அவரை தன்னிலை மறக்கச் செய்துவிட்டது. சர்வதேசச் செய்தியாளர்கள் முன்னிலையில் பிரபாகரன் தோன்றிய போது அவருக்கு அருகில் அன்ரன் பாலசிங்கமும் கருணாவுமே அமர்ந்திருந்தனர்.

இவ்வாறு கருணாவிற்கு உள்@ýரில் பிரபாகரனால் மிகப் பெரும் மதிப்பும், கௌரவமும் அளிக்கப்பட்டு ஒரு பிரதேசமே அவரிடம் ஒப்படைக்கப்பட்டிýருந்த நிலையில், இலங்கை அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவில் கருணாவிற்கு இடமளிக்கப்பட்டது. இது கருணாவை முற்று முழுதாக நிலை தடுமாற வைத்தபோது, அவருக்கு சில தீய சக்திகளின் தொடர்புகள் கிடைக்கவே தன்னை ஒரு தலைவனாகப் பிரகடனப்படுத்தி மேற்கொண்ட, சதிப்புரட்சி தோல்வியில் முடிýவடையவே, வீரமும் களத்தே போட்டு வெறுங்கையுடன் தப்பியோடிý விட்டார்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

கருணாவின் இருப்பிடம் குறித்து தொடர்ந்து ஊகங்கள்3 பேர் மட்டுமே உடனிருப்பதாகத் தெரிவிப்பு

மட்டக்களப்பிலிருந்து தப்பிச் சென்ற கருணாவுடன் தற்போது மூýவர் மட்டுமே இருப்பதாகவும், ஏனையவர்களை அவர் கைகழுவி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாவும், அவருடன் சுமார் 15 பேரும் தொப்பிக்கல காட்டிýலிருந்து வாகனங்கள் மூýலம் மின்னேரியா இரானுவ முகாமுக்குச் சென்றே அங்கிருந்து இவர்கள் தரை வழியாக கொழும்புக்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை மின்னேரியா இரானுவ முகாமிலிருந்து படையினரின் பலத்த பாதுகாப்புடன், கிழக்கு மாகாணத்தின் முக்கிய அரசியல்வாதியொருவரே கொழும்புக்கு கூýட்டிýச் சென்றுள்ளார்.

கருணாவுடன் கொழும்புக்கு வந்து பின்னர் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மட்டக்களப்புக்குச் சென்றுள்ள போராளி ஒருவரே இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது கருணா அவரது பேச்சாளர் வரதன், கருணாவின் மகளிர் படையணித் தளபதி நிலாவினி, மகளிர் படையணியைச் சேர்ந்த தீந்தமிழ் ஆகியோரே ஒன்றாகத் தலைமறைவாகியுள்ளனர்.

மின்னேரியா இரானுவ முகாமுக்கு வந்த மேற்படிý அரசியல்வாதி (தற்போது எம்.பி.) கருணாவையும் அவரது சகாக்களையும், படையினரின் ப10ரண பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூýறப்படுகிறது.

கருணாவுடன் தற்போது தலைமறைவாகியுள்ள மேற்படிý மூýவரும் ஒரு வாகனத்தில் சென்ற அதேநேரம் ஏனைய, பத்திற்கும் மேற்பட்டோர் வேறு வாகனங்களில் கொழும்புக்குச் சென்றுள்ளனர்.

கருணா பின்னர் தங்களுடன் எதுவிதத் தொடர்பையும் மேற்கொள்ளவில்லை என்றும் தங்களை அழைத்து வந்த படையினர் பின்னர் ஹோட்டலொன்றில் தங்களை தங்க வைத்துவிட்டுச் சென்ற போதும் பின்னர் தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை எனவும் அந்தப் போராளி தெரிவித்தார்.

தாங்கள் கருணாவுடனும், ஏனையோருடனும் தொடர்புகளை மேற்கொள்ள முயன்றபோதிலும் பின்னர் அது சாத்தியப்படாது போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹோட்டலில் துரை, விசு, ஜிம்ஹெலித் தாத்தா, ராபர்ட், திருமால், நிஸாம், சுதா உட்பட பத்துப் பேர் தங்கியிருந்தபோதும் கருணாவோ அல்லது படையினரோ இவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை.

கருணாவால் தாங்கள் கைவிடப்பட்டதை உணர்ந்த இவர்கள் தற்போது புலிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்துள்ளனர்.

இதேவேளை, கருணாவின், மூýத்த சகோதரனும் வாகரைப் பகுதிக்குப் பொறுப்பாகவுமிருந்த ரெஜி, முதல் நாள் சண்டையில் தப்பிச் சென்றதாகவும் எனினும், அவருக்கு என்ன நடந்தது? அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி எதுவும் தெரியவரவில்லை.

முதல் நாள் சமரில் கண்ணிவெடிýத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூýறப்பட்ட பிள்ளையான் சிறு காயங்களுடன் தப்பி தற்போது இரானுவ முகாமொன்றில் தங்கியிருப்பதாகவும் கூýறப்படுகிறது.

இதேநேரம், கருணாவும் ஏனைய மூýவரும் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றித் தொடர்ந்தும் ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தினக்குரல்

  • தொடங்கியவர்

72 மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வந்த கிழக்கு

கருணா தனிவழி செல்வதாக அறிவித்து பின்னர் மட்டக்களப்பு பிராந்தியத்தில் இடம் பெற்ற பேயாட்டம் 41 தினங்களில் முடிவுக்கு வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக கருதப்பட்ட வரும், ஆறு சுற்று பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவராக கலந்து கொண்டவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கேணல் கருணா, மார்ச் மாதம் 3ஆம் திகதி புலிகள் தலைமை மீது பிரதேசவாத முலாம் ப10சப்பட்ட குற்றப்பத்திரத்தை முன்வைத்து, தாம் விலகுவதாக அறிவித்தார்.

புலிகள் தலைமையை எந்தளவுக்கு அவமதிக்க முடியுமோ அந்தளவுக்கு அவமதிக்கும் வகையில் கொடும்பாவி எரிப்பு, பேரினவாத ஊடகங்களுக்கு தீனிபோடும் வகையில் பேட்டிகள், அறிக்கைகளை வழங்கி, தமிழ் தேசியத்தை மாசுபடுத்தினார் கருணா. அது மட்டுமல்ல உச்சமாக யாழ்ப்பாண வர்த்தகர்கள், பொதுமக்களை மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசத்திலிருந்து வெளியேற்றி ஆடிய பேயாட்டம் முடிவுக்கு வந்து, இப்போது கிழக்கு மண்ணிலிருந்து பேயாட்டம் ஆடியோர் விரட்டப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழும் நிலை புலிகள் தலைமையால் மீளவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்து ஏழு தினங்களாக யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி குறித்து நாடு கவனம் செலுத்திக் கொண்டிருந்தபோது இம்மாதம் 9ஆம் திகதி வெள்ளி அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் அணி தென் தமிழீழத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையைத் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனால் மிகவும் துல்லியமாக உயிரிழப்புகள் இல்லாது அல்லது மிகமிக குறைவாக இருக்கக்கூடியதாக மீட்பு வியூகம் அமைக்கப்பட்டது.

மீட்பு நடவடிக்கை வாகரை பிரதேசத்திலேயே ஆரம்பமாகும் என்பதை நன்கு அறிந்த முன்னாள் தளபதி கருணா தரவை மீனகம் தளத்திலிருந்து படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஏ-11 மரதன்கடவல - திருக்கண்டி மடுநெடுஞ் சாலையை (கொழும்பு வீதி) ஊடறுத்து போர்த் தளபாடங்களையும், தமது உறுப்பினர்களையும் அனுப்பி வைத்தார். இதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாக புலிகள் அமைப்பில் மீண்டும் இணைந்துள்ள மகளிர் படைத்துறை நிர்வாகப் பொறுப்பாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருவாரங்களுக்கும் மேலாக கருணா குழுவினர் தயார் நிலையில் இருந்த அதேவேளை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இதனை வீரப் பிரதாபங்களுடன் மடல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்படுத்தின. தேர்தலன்று நள்ளிரவு மீட்பு நடவடிக்கை ஆரம்பமாகுமென்று பலரும் எதிர்பார்த்திருந்த போதிலும் நாட்கள் நகர நகர எதிர்பார்ப்பு தளர்ந்த நிலையில் அதிரடியாக மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

வெருகல்துறை வலது பக்கமாக தளபதி நாகேஸ் தலைமையில் ஒரு அணியும், கதிரவெளி கடற்கரைப் பக்கமாக தளபதி பிரபா தலைமையில் இன்னொரு அணியும் பால் சேனை ஊடாக nஐயந்தன் படையணித் தளபதி றியாத்தன் தலைமையில் மூன்றாவது அணியும் பெட்டி வடிவில் வியூகம் அமைத்தே மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு கட்டளை தளபதியாக சிறப்பு தளபதி ரமேஸ் செயற்பட்டதுடன் இழப்புகளை இயன்றவரை குறைக்கும் வகையிலான கட்டளை அவ்வப்போது விடுத்துக் கொண்டிருந்தார். புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளான சொர்ணம், பானு ஆகியோரும் மீட்புத் தாக்குதலுக்காக வாகரை வந்து சென்ற தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. nஐயந்தன் படையணியே வாகரை மீட்பில் முக்கிய பங்கு வகித்தது.

வெள்ளி அதிகாலை புலிகளின் மீட்பு அணி பெட்டிவியூகம் அமைத்தபின் மெகா போன் மூலம் 'நாங்கள் nஐயந்தன் படையணி வந்துள்ளோம். வாருங்கள் எம்மோடு, எம்மோடு இணைந்து உயிராபத்தை தவிருங்கள் என்ற அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக நூற்றுக்கணக்கான மெகா போன்களை புலிகள் தலைவர் வே.பிரபாகரன் விசேடமாக தருவித்து மீட்பு அணியினரிடம் வழங்கியிருந்தார்.

பலமுனைகளிலும் இருந்து வந்த அழைப்பை தொடர்ந்து கருணா அணியிலிருந்த உறுப்பினர்கள் சாரி சாரியாக அழைப்பு வந்த முனைகளை நோக்கி சென்றார்கள். கதிரவெளியிலுள்ள கட்டளைத் தளபதி ரெஐpயின் தளத்திலிருந்தும், மார்க்கன் தளத்திலிருந்தும் சூட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் சிறு மோதல்கள் இடம்பெற்றன.

கதிரவெளியில் இடம்பெற்ற தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மூவர் வீரமரணம் அடைந்ததாக புலிகள் அறிவித்தனர். 2ஆவது லெப்டினன் சங்கொலியன், (கந்தசாமி அருட்செல்வம்), லெப்டினன் பொதிகைத்தேவன் (பாண்டியன் வேலு), வீரவேங்கை மலர்க்குமரன் (தங்கராசா குகன்) ஆகியோரின் வித்துடல்கள் சம்ப10ர் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டன.

வாகரை பிரதேசத்தில் ஐந்து மணித்தியால நேர நடவடிக்கையில் கருணா தரப்பில் ஆறு பேர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்தனர். தளபதி பாரதிராஐ; என்பவரும் படுகாயமடைந்தார். (இவர் இப்போது புலிகள் அமைப்பின் பராமரிப்பில் உள்ளார்.) புலிகள் மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தால் நு}ற்றுக் கணக்கில் உயிர்ச் சேதம் ஏற்படுமென பல தரப்பினரும் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தவேளை அதுவும் உயிரிழப்புகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பலத்த சவால்களை எதிர்கொள்வார்களென பலரும் எதிர்பார்த்திருந்த வேளை. மிக மிக சொற்பமான இழப்புடன் ஐந்து மணித்தியாலத்திற்குள் வாகரைப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மீண்டது.

வாகரை மீட்பு சுலபமாக வீழ்ந்தாலும் புலிகள் மீனகம் இராணுவத்தளம் உள்ளிட்ட படுவான்கரைப் பிரதேசத்தை கைப்பற்ற முற்படும்போது பல இழப்புகளை எதிர்நோக்க நேரிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை, புலிகள் தரப்பு, வாகரையிலிருந்து தரவை நோக்கி நகர்வை மேற்கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பில் ஏ-11 நெடுஞ்சாலையில் இராணுவத்தினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறு படுவான்கரை நோக்கிய நகர்வு இடம்பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதிப்புகளுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அனர்த்த குழுவும் அரச அதிபரால் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், வாகரை வீழ்ந்த 72 மணித்தியாலங்களுக்குள் அம்பாறை மாவட்டமும், படுவான்கரை பிரதேசமும் எந்த யுத்தமுமின்றி புலிகளிடம் வீழ்ந்தது. ஏற்கனவே வெல்லாவெளி பக்கமாக ஊடுருவியிருந்த தளபதி ரமணன் தலைமையிலான குழுவினர் கொக்கட்டிச்சோலை நோக்கி நகர்ந்து அரசியல்துறை மாவட்ட செயலகம், தமிழ் அலை தினசரி காரியாலயம் என்பவற்றை ஞாயிறு மாலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

வன்னியோடு வழங்கல் மார்க்கத்தை ஏற்படுத்திய புலிகள் அமைப்பு, வாகரையிலிருந்து எப்படியாவது படை நகர்வை ஏற்படுத்தி, தன்னைச் சுற்றிவளைக்கும் என்பதை நன்குணர்ந்த கருணா ஞாயிறு மாலையே பின்வாங்கும் தீர்மானத்தை படிப்படியாக செயற்படுத்த தொடங்கிவிட்டார். அவ்வேளை ஐனாதிபதியின் ஆலோசகர் கே. பாலபெட்டபந்தி, இராணுவத் தளபதி லயனல் பல்கல்ல ஆகியோர் 23. 3ஆவது படைப்பிரிவு கட்டளைத் தலைமையகம் இயங்கும் மட்டக்களப்பு மாநகரசபை கட்டிடத்தில் தங்கியிருந்தார்­கள். ஞாயிறு இரவு முழுவதும் இருந்த அவர்கள் மறுநாள் காலையே கொழும்பு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகரை புலிகளிடம் வீழ்ந்ததையடுத்து போராளிகளின் பெற்றோர்களும் மீனகம் தளத்திற்கு சென்று, பிள்ளைகளை தருமாறு கருணாவை நச்சரித்ததாகவும், அதனை சமாளிக்க முடியாத அளவுக்கு பெருந்தொகையான பெற்றோர்கள் சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்தே திங்கள் அதிகாலை தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து பின்வாங்கும் முடிவை கருணா அறிவித்ததுடன் விரும்பியவர்கள் கொழும்புக்கு வரலாமென்றும் தெரிவித்தார். அறிவிப்பை அடுத்து போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தும் சிலர் நின்ற இடத்தில் போட்டு விட்டும் தமது வீடுகளை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.

இதனையடுத்து படுவான்கரைப் பிரதேசத்திலும் படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் ஆங்காங்கே ஊடுருவியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அணிகள் படுவான்கரை பிரதேசத்தில் நுழைந்து தமது கட்டுப்பாட்டை ஒரு துளி இரத்தமும் சிந்தாது நிலைநாட்டினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் தேனகம், மீனகம், மற்றும் கருணா அணி நிலைகொண்ட தளங்களில் தேடுதல் மேற்கொண்டார்கள்.

மீனகம் தளத்திலும், மீனகத்திற்கு செல்லும் வழியிலும் உழவு இயந்திரங்களில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்தததை கண்டார்கள். ஆட்லறி, மல்ரிபரல், சினைப்பர் என்பன சேதமாக்கப்படாத நிலையில் காணப்பட்ட போதிலும் சக்தி வாய்ந்த அதேவேளை படைத்தரப்பினரிடம் இல்லாத நவீன மோட்டார் எறிகணைகள் சில வெளியேற்றப்பட்டிருப்பதை மீட்பு அணியினர் கண்டு வேதனைப்பட்டனர். படைத்தரப்பிற்கு கையளிக்கவே உழவு இயந்திரங்களில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டிருக்கலாமென்றும் அதற்கு அவகாசம் கிட்டாத நிலையில் கைவிட்டிருக்கலாமென்றும் நம்பப்படுகிறது.

ஆனால், பலகோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்

  • தொடங்கியவர்

Karunas cadres taking refuge in Colombo?

Alladin Hussein in Colombo, April 19, 2004, 12.17 pm. Troops loyal to LTTE renegade Eastern leader Karuna are reportedly entering the countrys commercial capital, Colombo, in large numbers with their families, Tamil sources claimed. Most of them are moving in for reasons of security while the others are trying to leave the country. A large number want to leave for India while, some others want to apply for visas to travel to European destinations, they claimed. .

This has prompted intelligence cadres and pistol gangs loyal to LTTE leader Velupillai Prabhakaran to hunt for them in the city.

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியாவில் கருணா குழு தஞ்சம்?

கருணா அணியிலிருந்த பலர் தற்போது விடுதலைப் புலிகளுடன் தம்மை இணைத்து வருகின்ற நிலையில் கருணாவும் அவரது நெருங்கிய சகாக்களும் மலேசியா ஊடாக, போலி மலேசிய கடவுச்சீட்டுக்களை பாவித்து அவுஸ்திரேலியாவின் நகரங்களில் ஒன்றான பிறிஸ்பேன் நகரத்தில் வந்து இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களின் போக்குவரத்துக்கு மலேசியாவில் வசிக்கும் முன்னாள் கிழக்கு மாகாண அரசியல்வாதி ஒருவரின் குடும்பம் உதவி புரிந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த புதுவருட தினத்தன்று அவுஸ்திரேலியா வந்து இறங்கிய கருணாவும் அவருடைய மூன்று சகாக்களும் கடந்த வெள்ளியன்று அவுஸ்திரேலிய குடிவரவு இலாகாவுக்குச் சென்று தாம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக அவரது விண்ணப்பங்களுக்கு உதவி புரிந்த ஒருவர் உறுதிப்படுத்தியதாக நேயர் ஒருவர் இந்த செய்தியை வானொலி நிகழ்ச்சியில் உறுதி செய்தார்.

நன்றி: இன்பத் தமிழ் ஒலி - வணக்கம் அவுஸ்திரேலியா

  • தொடங்கியவர்

கருணாவைத் தேடிý கொழும்பில் புலிகளின் பிஸ்டல் குழு?

கொழும்பில் மறைவிடமொன்றில் தங்கியிருக்கும் கருணாவைத் தேடிý புலிகளின் பிஸ்டல் குழு கொழும்பு வந்துள்ளதாக இரானுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பிலிருந்து தப்பிய கருணாவும் அவரது மூýன்று சகாக்களும் தற்போது கொழும்பில் மறைவிடமொன்றில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பில் தங்கியிருப்பதை அறிந்து புலிகளின் புலனாய்வுப் பிரிவும் பிஸ்டல் குழுவும் கொழும்பு நகருக்குள் ஊடுருவியுள்ளதாகவும் இரானுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினக்குரல்

  • தொடங்கியவர்

moorthy.gif

தினக்குரல்

  • தொடங்கியவர்

கருணாவை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டோர்பிரபாகரனிடம் நேரடியாக பயிற்சி பெற்ற படையணியினர்

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கருணாவை வெளியேற்றும் தாக்குதல் நடவடிக்கையில், புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் நேரடி ப் பயிற்சியில் உருவாக்கப்பட்ட புதிய தாக்குதல் படையணி மிக முக்கிய பங்காற்றியதாகத் தற்போது தகவல்கள் கூறுகின்றன.

இது பற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில்:

புலிகளின் தலைவரால் மிக இரகசியமாகத் தெரிவு செய்யப்பட்டு அவராலேயே பயிற்சியளிக்கப்பட்ட இந்த விNர்ட படையணியின் மிக நுட்பமான தந்திரோபாயச் செயற்பாடுகளுக்கு வசதியாக எதிரியின் இலக்குகளை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்குதல்களை நடத்தும் விதத்தில் மிக நவீன தொழில்நுட்ப ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த விNர்ட படையணிக்கு நீண்ட தூரம் ஊடுருவிச் சென்று தாக்குதல்களை நடத்தும் வகையில் சிறப்புப் பயிற்சிகளும், ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் படையணியின் தாக்குதல் திறனும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதத் திறனும் எந்தப் பெரிய எதிரிக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் அவர்களை முற்றுமுழுதாக நிலை குலையச் செய்யும் விதத்திலும் அமையுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பில் வெருகலுக்குத் தெற்கே கேணல் சொர்ணம் தலைமையிலான திருகோணமலைப் படையணியும், ரமேர்; தலைமையிலான படையணியும் மேற்கொண்ட தாக்குதலின் போது இந்தப் படையணிகளின் உதவியுடன் மேற்படி விNர்ட படையணியும் களமிறங்கியிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து கருணா துரத்தியடி க்கப்பட்டதும், இந்தப் படையணியும் அங்கிருந்து உடனடியாகவே முற்றாக வாபஸ்பெற்றுவிட்டது.

பெருமளவில் தருவிக்கப்பட்ட மிக நவீன ஆயுதங்களை இலகுவாகக் கையாளும் விதத்தில் இந்தப் படையணிக்கு மிக நவீன பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினக்குரல்

  • தொடங்கியவர்

இரானுவத்திடம் சரணடைய விரும்பிய கருணா இணைந்து செயற்படவும் முன்வருகை?

விடுதலைப் புலிகளிடம் தோல்வியைத் தழுவிய கருணா, இரானுவத்திடம் சரணடைய முன்வந்ததுடன், இரானுவத்துடன் இணைந்து செயற்படவும் முன்வந்ததாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டிý இரானுவ ஆய்வாளரொருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் புலிகள் தாக்குதலை ஆரம்பித்த பின்னர், தான் தோல்வியின் விளிம்பில் நிற்பதை உணர்ந்த கருணா, வேறு வழியின்றி இரானுவத்திடம் சரணடையவும் இரானுவத்துடன் இணைந்து செயற்படவும் முன்வந்ததாகவும் இந்த ஆய்வாளர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், கருணாவையோ அல்லது அவரது சகாக்களையோ தங்களுடன் இணைத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானதென இரானுவ சிரேர்;ட அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

கருணாவையும் சகாக்களையும் ஏற்றுக் கொள்வதென்பது, நோர்வே அனுசரணையுடனான சமாதான முயற்சிகளை உடனடிýயாகவே தன்பாட்டிýல் முடிýவுக்குக் கொண்டு வந்து விடுமென்பதை படை அதிகாரிகள் உணர்ந்து கொண்டிýருந்தனர்.

கருணா விவகாரம் தங்களது உள்பிரச்சினை என்பதால் இதில் படைத்தரப்பு எவ்விதத்திலும் தலையிடக் கூýடாதென புலிகள் வலியுறுத்தி வந்தனர்.

கருணா இரானுவத்திடம் சரணடைந்திருந்தால், எந்தவொரு சமாதானப் பேச்சுக்களும் ஆரம்பமாகுவதற்கு முன்னர் கருணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு புலிகள் கடும் வற்புறுத்தலைக் கொடுத்திருப்பர்.

இதனால் தான், மட்டக்களப்பிலிருந்து தப்பி தென்பகுதிக்கு வருவதற்கு முன்னர், அங்கு புலிகளின் உட்கட்டமைப்பை எவ்வளவு தூரம் சிதைக்க முடிýயுமோ அந்தளவிற்கு சிதைக்க முற்பட்டுள்ளார் எனவும் அந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

இந்திய படையின் நித்திகைக்குள முற்றுகையை உடைத்தெறிந்த பிரபாகரன் - 'றோ'வுக்கு ஏற்பட்ட அவமானம்

தலைவர் பிரபாகரனின் மனஉறுதியையும் திடமிடும் திறனையும், போர் உத்திகளின் சிறப்பையும் சரியாகக் கணிக்கத் தெரியாதோர் மட்டுமே கருணாவின் விலகலால் அல்லது பிளவால் விடுதலைப்புலிகளின் பலம் பலவீனமடையும் என்று கூறுவர். பிரபாகரனின் மனஉறுதிக்கும் - போர் உத்திக்கும் ஒரேயொரு சிறந்த உதாரணம் மட்டும் போதுமானது என்று நான் நினைக்கிறேன்.

1988ல் இந்தியப் படைகளுடனான மோதலின்போது வன்னியின் அடர்ந்த காட்டுப்பிரதேசமான நித்திகைக்குளத்தில் தலைவர் பிரபாகரனதும் சில நூறு கெரில்லாப் புலிப் போராளிகளும் சுமர் இருபதினாயிரம் போர் வீரர்களைக் கொண்ட இந்திய அமைதிப்படையினரால் மூன்று அடுக்கு வலைச் சுற்றிவளைப்பில் சிக்கியிருந்தவேளை இந்தியச் செய்தி அமைதிப்படைத்தளபதி மூலம் அப்போதைய இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்திக்கு உடனடியாக வான் அலை மூலம் அனுப்பப்டுகிறது.

அடுத்தகணம்!..... அகில இந்திய இராணுவ கடல் ஆகாப்படைகளின் தளபதிகளுக்கும் இச்செய்தி கிடைக்கிறது. முற்றுகையை மேலும் இறுக்குமாறும் பிரபாகரனை தப்பிவிடாது பார்த்துக் கொள்ளுமாறும் ஈழ-வன்னிக்களத்திற்கு செய்தி காற்றில் பறந்துவந்து சேர்கின்றது. முப்படைத்தளபதிகள் யாவரும் தத்தமது படைகளின் தளபதிகளுடன் வான் அலைமூலம் திட்டங்களை மேலும் கூர்மையாக வகுத்துச்செயல்படத் தொடங்கினர். இதன்மூலம் மேலதிகமாக மன்னார் -வவுனியா கிளிநொச்சிப் பிரதேசங்களிலிருந்து 10000 படையினர் நித்திகைக்குளத்தை நோக்கி விரைந்தனர்.

இருபதுக்கு மேற்பட்ட வான் ஊர்திகள், பதினைந்துக்கு மேற்பட்ட குண்டுவீச்சு விமானங்கள். சுமார் ஜந்து வேவு விமானங்கள். முல்லைத்தீவு-திருமலை கடல் எல்லையை காவல் செய்தவாறு சுமார் எட்டுப்போர்க்கப்பல்கள்- இருபதுக்கு மேற்பட்ட அதிநவீன தாக்குதல் விசைப்படகுகள் (தாக்குதலுக்கு தயார் நிலையில்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றைவிட 1000 மராத்திய அதிரடிப்படையினரும் 1000 கூர்க்கா அதிவிசேட அதிரடிப் படையினரும் அச்சுற்றிவளைப்புப் பிரதேசத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டனர்.

இச்செய்தி 'றோ' RAW வுக்கும் தெரிவிக்கப்படுகிறது. பிரபாகரனை உயிருடனோ, சடலமாகவோ, பிடித்துவிடவேண்டுமென்ற அவா எப்போதுமே இந்திய அமைதிப்படையை விட 'றோ'வுக்கு அதிகம் உண்டு. ஏன் தெரியுமா? 1987ல் 'றோ'வின் பின்பலத்துடன் ராஜீவ் -ஜே ஆரால் சமர்ப்பிக்கப்பட்ட சமரசத்திட்டத்தை 'டெல்லி' ஹோட்டல் ஒன்றில் வைத்து நிராகரித்தவர் பிரபாகரன்.

இது ராஜீவுக்கு ஏற்பட்ட தோல்லி என்பதைவிட 'றோ'வுக்கு ஏற்பட்ட அவமானம் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது. கிட்டத்தட்ட ஒரு கைதியின் நிலையில்தான் பிரபாகரன் அன்று டெல்லி ஹோட்டலில் வைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு 'றோ' வற்புறுத்தியது. பின்புற அழுத்தங்களும் - துப்பாக்கிகளும் பலமாக இருந்த சூழலில் மிகத்துணிவுடன் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்துப்போட மறுத்தமை பிரபாகரனின் துணிச்சலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

தலைவர் பிரபாகரன் டெல்லி ஹோட்டலில் காவிலில் வைத்திருப்பதைக் கண்டித்து ஈழமக்கள் எழுச்சிப்போராட்டத்தில் உடனடியாகக் குதித்தனர். சகல இந்திய அமைதிப்படை முகாம்களின் முன்பும் வீதியில் வரும் இந்திய அமைதிப்படையின் டாங்கிகள் - வாகனங்கள் முன்பும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டுவந்து அமர்ந்து மறியல் போராட்டம் செய்யத்தொடங்கினர்.

யாழ்.கோட்டை இராணுவ முகாமின் முன்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. அதில் கவிஞர் காசி ஆனந்தன், லோறன்ஸ் திலகர், தியாகி திலீபன் உட்பட பலர் சிறப்புரையாற்றினர். தலைவர் பிரபாகரனை உடனடியாக ஹோட்டல் காவலில் இருந்து விடுவித்து ஈழத்துக்கு அனுப்பி வைக்குமாறு பேச்சாளர்கள் மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பேசினார். அன்று... தியாகி திலீபன் பேசும்போது......

'தலைவர் பிரபாகரன் ஈழத்தமிழர்களின் மட்டுமல்ல உலகத்தமிழர்களின் இணையற்ற தலைவர் அவரைப் போல் ஓர் அற்புதமான வீரரும் சிந்தனைத்திறனும் - செயலாற்றலும் நிறைந்த ஒரு தலைவரை உலகத்தமினம் இதுவரை கண்டதில்லை. அப்படிப்பட்ட ஒரு தலைவரை டெல்லி ஹோட்டலில் அடைத்துவைத்து அழுத்தங்களைப் பிரயோகிப்பதால், உப்புச்சப்பற்ற அந்த ஒப்பந்தத்தில் பிரபாகரன் பயந்து, கையெழுத்து போடுவார் என்று இந்திய அரசும் அதன் பிரதமர் ராஜீவ்காந்தியம் -றோவும் நினைத்தால் அது நிச்சயம் நடைபெறப்போவதில்லை.

தலைவர் தன்னுயிரை கொடுப்பாரே தவிர ஈழத்தமிழரின் நலனுக்கு கேடுவிளைவிக்கும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போடமாட்டார்.....

என்று மிக உணர்ச்சி வசமாகப் பேசியபோது அலை, அலையாக மக்கள் எழுந்து ஆர்ப்பரித்து கைதட்டி அதை வரவேற்றதை என்றும் மறக்கமுடியாது. (இனி நித்திக்குளம் முற்றுகைக்கு வரும்வோம்)

தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்காக போடப்பட்ட எல்லா முற்றுகைகளிலும் நித்திக்குளம் முற்றுகைதான் மிகப்பெரிய முற்றுகை. கடல்-தரை - ஆகாப்படைகள் இணைந்து நடத்திய முக்கிய முற்றுகை அது. முற்றுகைச் செய்தி 'றோ'வுக்கு அறிவிக்கப்பட்டதும் 'ஓ... பிரபாகரன் தொலைந்தார். இனி ஈழப்போராட்டம் முடிந்துவிடும்" என்று நினைத்த றோவின் முக்கிய அதிகாரிகள் சிலர் உடனடியாக டெல்லியிலிருந்து சென்னை நோக்கிப் பறந்துசென்றனர்.

சென்னை திருவான்மியூரில் வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் யாழ். மாவட்டத்தளபதி கேணல் கிட்டுவை 'றோ"வும் கியூ Q அமைப்பின் சில அதிகாரிகளும் நள்ளிரவில் சென்று சந்தித்தனர்.

'உங்கள் தலைவர் நித்திக்குளத்தில் மூன்று வலைப்பின்னல் முற்றுகைகுள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார். அவர் சில ஆயுதங்களை மட்டும் பத்திரிகையாரள் முன்பாக எம்மிடம் ஒப்படைந்துவிட்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்துப்போடுவதாக இருந்ததால் எமது படையினர் உடனடியாக முற்றுகையை நீக்கிவிட்டார்கள். இல்லையேல் 200தொன்களுக்கு மேல் வெடிப்பொருட்களை நிரப்பிய பொம்பர்களும், ஹெலிகொப்டர்களும் -முப்பதினாயிரம் படையினரும் அவரையும் - அவரைக்காக்கும் புலிகளையும் நித்திக்குளக் காட்டையும் பதினைந்து நிமிடங்களில் அழித்து சாம்பராக்கிவிடுவார்கள்.

பின்னர் பிரபாகரனின் உடலைக்கூட உங்களால் பார்க்கமுடியாது. நாங்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் நீங்களே அவருடன் பேசிச் சந்தேகத்தைத் தீர்ந்துக்கொள்ளுங்கள்" என்று கூறினர். கிட்டு இதைக்கேட்டு அதிர்ந்துவிட்டார். உடனே வான் அலை மூலம் பிரபாகரனுடன் தொடர் கொண்டார் றோவும்-கியூவும் கூறியதை அப்படியே பிரபாகரனிடம் ஒப்புவித்தார். அதற்கு பிரபாகரன் என்ன சொன்னார் தெரியுமா?

'சரணடைவதோ ஆயுதங்களை ஒப்படைப்பதோ அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதோ என்ற பேச்சுக்கே இடமில்லை. இயக்கத்தில் வீரமரணமடைந்த ஒவ்வொரு வீரனும் தனது உயிரைக்கொடுத்து வளர்த்த போராட்டம் இது. இதை ஒரே நொடியில் விலைபேசி விற்க எனக்கு உரிமை இல்லை. என்னால் முடிந்தால் முற்றுகையை உடைத்தெறிந்து வெளியில் வருவேன்.

....சிலவேளை இந்த முயற்சியில் நான் இறந்தால் உங்களுக்குள் ஒரு தலைவரை தெரிவு செய்து போராட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள்... ஓவர்" கிட்டுவின் பதிலுக்குக்கூடக் காத்திராமல் வான் அலை தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

பிரபாகரனின் முடிவு 'றோ'வுக்கும் கியூவுக்கும் அறிவிக்கப்படுகிறது. 'றோ' மூலம் ராஜீவ்காந்திக்கும் - இந்தியப்படைக்கும் தளபதிகளுக்கும் இலங்கை அமைதிப்படைத் தளபதிகளுக்கும் செய்தி உடனடியாகப் பறந்து செல்கிறது.

அன்று விடியற்காலை.... ! நான்கு மணி இருக்கும். குண்டுவீச்சு விமானங்கள் குண்டு மழைபொழிய கடற்படைக்கப்பல்கள் பீரங்கி குண்டுகளை கிரிக்கெட் பந்துகளைப்போல் விரைவாக வீச- இந்தியப்படை சிப்பாய்கள். காட்டின் நடுவே ஆயுதபாணிகளாக முன்னேறத் தொடங்கினர். அந்தோ!..முன்னேறியயோரில் பலர் 'ஆ....ஊ..." அம்மா! என்று அலறியபடி நிலத்தில் துடிதுடித்தவாறு விழத்தொடங்கினர்.

புலிகளின் ஜொனி கண்ணிவெடியிலும் கிளைமோர் வெடிகளிலும் சிக்கி கால்களை இழந்தவர்களையும் உயிரிழிந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு வான் ஊர்திகள் அடிக்கடி பலாலி முகாமை நோக்கிப் பறந்த வண்ணமிருந்தன.

கத்தியை எடுத்தால் இரத்தம் காணாமல் வைக்கமாட்டார்கள் என்ற வைராக்கியம் கொண்ட கூர்க்காப் படையினர் நித்திகைக்குளத்தின் காடுகளில் உள்ள கறையான் புற்றுகளின் அருகே இரத்தம் காணாத கத்திகளுடன் துடிதுடித்துச் செத்துக்கொண்டிருந்தார்கள்.

காடு! ஆம்! அது யுத்தகளமாகிவிட்டது. நித்திகைக்குளத்துக் காட்டின் மரங்கள் செடிகள் கொடிகள் ஒவ்வொன்றுமே இந்திய அமைதிப்படையினருக்குப் புலிகளாகத்தெரிந்தனர். கண்ணிவெடிகள் அங்கே புதைக்கப்பட்டிருக்கவில்லை. விதைக்கப்பட்டிருந்தன. பாரதயுத்தமே பார்த்திருக்கமுடியாத யுத்தத்தின் சத்தம் அங்கே மொத்தமாக வந்து காதுகளை அடைந்தன.

புலிகளின் வீரர்கள் ஒரு புதிய அர்ச்சுணனை இந்த ஈழத்துக் கீதையில் பார்த்த வரலாறு அந்த நித்திகைக்குளத்தில் தான் நடந்தேறியது.

ஆம்; அந்த முற்றுகையிலிருந்து பிரபாகரனும் வீரர்களும் வெற்றிகரமாகத் தப்பினர். வரலாறு தனது பொன் ஏட்டில் ஒருவீர அத்தியாயத்தின் நினைவை மௌனமாகவே குறித்துக்கொண்டது.! தொடர்ந்து நடத்த யுத்தங்களும் ஊரடங்குச்சட்டங்களும் இரண்டு வருடங்களுக்குமேல் நீடித்த இந்திய அமைதிப்படை நடவடிக்கைகளும் வெளிநாட்டு பத்திரிகை நிருபர்களின் வரவுநின்று போனதும் உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததும் அன்று இந்த நிகழ்வு சரித்திரம் பெருமளவில் வெளிவராமல் போனதற்கான முக்கிய காரணங்களாகும்.

கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன். தினக்குரல்.

  • தொடங்கியவர்

புலிகளைப் பிரிக்கும் முயற்சியில் ஜனாதிபதிக்குப் படுதோல்வி!

ஆப்பிழுத்ந குரங்கின் நிலையில் அவர் என்று ஹக்கீம் வர்ணனை

போர்க்களத்தில் மட்டுமன்றி இப்போது அரசியல் களத்திலும் பலம் பெற்றி ருக்கும் விடுதலைப் புலிகளைப் பிரித்துவைத்து அதன்மூலம் குளிர்காய முனைந்தார் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. அந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. அதனால், அவர் ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருந்து தவிக்கிறார் என்றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்ச ருமான ரவூப் ஹக்கீம்.

புத்தளம் மஜிதுல்ஹீதா பள்ளி வாசல் மைதானத்தில் இடம்பெற்ற வடமேல் மாகாணசபையின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியா கக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரவ10ப் ஹக்கீம் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐ. தே.முன்னணியின் சின்னத்தில் புத் தளம் மாவட்டத்தில் போட்டியிடும் எஸ்.ஏ.எஹியா, எஸ்.எச்.எம்.நியாஸ், எம்.ராதாகிரு~;ணன் ஆகியோரை ஆதரித்து இக்கூட்டம் கடந்த வெள் ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு புத்தளம் நகரசபை யின் முன்னாள் தலைவர் ஏ.எம்.எச். ஹ{சைன் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு முன்பதாக ரவ10ப் ஹக்கீம் மற்றும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ் ஆகியோருக்குப் புத்தளம் வாழ் மக் களால் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திறந்த ஜீப் வண்டியில் சுமார் 11 கிலோமீற்றர் து}ரமான புத்தளம் நகர வீதிகளில் மோட்டார் பவனியும் இடம்பெற்றது.

கூட்டத்தில் உரையாற்றிய ரவ10ப் ஹக்கீம் மேலும் கூறியதாவது:-

அறுதிப் பெரும்பான்மையற்ற நிலையில் ஆட்சி செய்யும் ஜனாதிபதி யின் அரசுக்கு நாம் முண்டுகொடுத்து உதவுவோம் என்று அரசுத் தரப்பினர் நினைத்துக்கொண்டிருக்கின்றன

  • தொடங்கியவர்

தேசிய முன்னனி பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் சுய விருப்பின் பெயரில் விலகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

(முழுமையான செய்திகள் இன்னமும் கிடைக்கவில்லை)

மட்டு. மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான கிங்ஸ்லி இராஜநாயகம் இராஜிநாமா

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கிங்ஸ்லி இராஜநாயகம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக இராஜிநாமாக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 38 633 வாக்குகளைப் பெற்றுள்ள தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதேநேரம், இவரது இராஜிநாமா தொடர்பாக அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது நாட்டி ன் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டும் சுயவிருப்பின் பேரிலும் இராஜிநாமாச் செய்துள்ளதாக குடும்பத்தினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதேவேளை, இராஜிநாமாச் செய்துள்ள கிங்ஸ்லி இராஜநாயகத்தின் இடத்திற்கு தமிழ் அலை பத்திரிகையின் பணிப்பாளராகவிருந்து இராஜிநாமாச் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பா.அரியநேத்திரன் நியமிக்கப்படலாமென்றும் அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றொரு பெண் பாராளுமன்ற உறுப்பினரான செல்வி.க.தங்கேஸ்வரியும் இராஜிநாமாச் செய்துள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவரிடம் கேட்ட போது அவர் இதனை மறுத்திருக்கிறார்.

நாளை செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளுடன் நடைபெறும் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அழைப்புக் கிடைத்துள்ளதாகவும், தான் வன்னிக்குச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கில் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எவரையும் தாம் இராஜிநாமாச் செய்யுமாறு கோரவில்லையென்று தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா நேற்று தினக்குரலுக்குத் தெரிவித்தார்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

மற்ற ஊடகங்கள் மாங்காய் பறித்தனவா?

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணா எனப்படுகின்ற முரளீதரன் விடயம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கருணாவை வெளியேற்றும் நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றமை யாவரும் அற்pந்ததே.அவர் இப்போது எங்கு இருக்கின்றார் என்பதிலேயே தற்போது ஊடகங்கள் தீவிரமாக ஆரூடங்களை தெரிவித்து வருகின்றன.

இதுநிற்க மேற்படி விடயம் சம்பந்தமான செய்திகளை தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் எடுத்துச்செல்லும் பணியில் இலங்கையில் என்ன சர்வதேசத்திலென்ன அனைத்து ஊடகங்களும் முண்டியடித்துக்கொண்டு செயல்பட்டன என்பதை யாரும் மறுக்கமுடியாது.ஆனால் எத்தனை ஊடகங்கள் சரியான தகவல்களை வழங்கின? எத்தனை இதனை தமிழ்த்தேசியத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எதிரான பிரச்சாரமாகப்பயன்படுத்தின? எத்தனை தமிழ்தேசியத்துக்கு ஊறு விளைவிக்காவண்ணம் மக்களுக்கு ஆறுதல்தரக்கூடிய வகையில் செயற்பட்டன.? இந்தக்கேள்விகள் நன்றாக அலசி விடைகாணப்படப்பட வேண்டியவை.

சிங்கள ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் தினமுரசு தினகரன் போன்ற ஒரு சில தமிழ் ஊடகங்களும் தமிழ்த்தேசியத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் எதிரான பிரச்சாரமாகப்பயன்படுத்தின.இ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.