Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெஹெல்கா, இந்திய புலனாய்வு ஊடகத்தின் உச்ச வடிவம்.!

Featured Replies

[size=4]

இந்தியாவில் அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் விலைபோன ஊடகத்துறை, ஊழல்களை அம்பலப்படுத்தி உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் புலனாய்வு ஊடகத்துறை ஆகிய இரண்டும் இருக்கின்றன. முதலாவது ரகத்திற்கு பல உதாரணங்கள் உண்டு. இரண்டாவது ரகத்திற்கு தெஹெல்கா(Tehelka), ஹெட்லைன்ஸ் ருடே (Headlines Today), பெர்ஸ்ற்போஸ்ற்(Firstpost) வின் டிவி (Win Tv) தொலைக்காட்சியின் நீதியின் குரல் என்பன முக்கிய உதாரணங்கள்.[/size][size=4]

தெஹெல்கா செய்திக் சஞ்சிகை (Tehelka Magazine) அச்சு வடிவம் பெறமுன்பு தெஹெல்கா டொற் கொம் (Tehelka.com) என்ற இணையப் பக்கமாக இருந்தது. இரு வடிவங்களுக்கும் ஆசிரியர் தருண் தேஜ்பால் (Tarun Tejpal) என்ற ஊடகவியலாளர். அவர் இவற்றை ஆரம்பிக்க முன்பு இந்தியா டுடே (India Today) அவுட்லுக் (Outlook) போன்ற சஞ்சிகைகளில் எழுத்துப் பணியாற்றியவர்.[/size][size=4]

தெஹெல்கா டொற் கொம் அகப்பக்கத்தை தேஜ்பால் 2000ம் ஆண்டு ஆரம்பித்தார். அது முழுக்க முழுக்கப் புலனாய்வுச் செய்திகளை வழங்கியது. பிறர் வெளிப்படுத்தத் தயங்கிய ஊழல்களைத் தேஜ்பால் துணிச்சலாக வெளியிட்டார். அவர் பயன்படுத்திய கருவி ஒருவரும் அறியாமல் படம் பிடிக்கும் இரகசியக் கமரா.[/size][size=4]

அவர் கிரிக்கெற் விளையாட்டில் பரவலாக நடக்கும் சூதாட்டத்தை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்தார். இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்கள் சிலர் நாட்டிற்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பதற்குப் பதிலாக சூதாட்டத்தை நடத்துவோர் கொடுக்கும் பணத்திற்கு தோல்விக்காக விளையாடினார்கள். இதனால் முன்னாள் கப்டன் அசாருதீன் போன்றவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக வளர்ந்தனர்.[/size][size=4]

அடுத்ததாகத் தருண் தேஜ்பாலின் கமரா இராணுவத்திற்கு ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்யும் உயர்மட்ட அதிகாரிகள் பெற்றுக் கொண்ட கையூட்டுக்களைக் கையும் மெய்யுமாகப் படம் பிடித்துக் காட்டியது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக நேர்ந்தது. பல மூத்த அரசியல்வாதிகளின் காந்தீய வேடம் கலைய நேர்ந்தது.[/size][size=4]

தேஜ்பாலின் நடவடிக்கைகள் இந்திய அரசிற்கு கடும் எரிச்சல் ஊட்டியது. அரசு கொடுத்த அழுத்தத்தை எதிர்த்து போராடமுடியாமல் அவர் தெஹெல்கா டொக்கமை நிறுத்தினார். ஆனால் அவர் சும்மா இருக்கவில்லை. ஊடகத்; தொழிலைக் கைவிடவே இல்லை.[/size][size=4]

2004ம் ஆண்டு ஆதாரவளர்களின் நிதி உதவியோடு தெஹெல்கா செய்திச் சஞ்சிகையை ஆரம்பித்தார். அது அச்சுப் பிரதியாக வெற்றி பெறுகிறது. இந்திய ஊடகத்துறையில் தொடங்கியவுடனே அது தனிமுத்திரை பதிக்கின்றது.[/size][size=4]

அரசியல் வாதிகளுக்கும் அவர்களுடைய கட்சிகளுக்கும் துதிபாடும் பாராம்பரியத்தை அது அறவே ஒதுக்கியது. அதிகார வர்கத்திற்கு எதிர்ப்புக் காட்டும் (Adversarial power as a polarity to power) பாரம்பரியத்தை அது நிலைநாட்டியது. தெஹெல்கா சஞ்சிகை பற்றி நாவல் ஆசிரியர் ஷோமா சவுத்திரி (Shoma Chaudhury) சொல்கிறாh. “அதிகார பலத்தின் அடிப்படை நோக்கம் தீமையானது” (The fundamental impulse of power is corrosive).[/size][size=4]

2004 தொடக்கம் இன்று வரை வெளிவரும் முக்கிய ஊழல்களை (Exposures)இந்த சஞ்சிகை அம்பலப்படுத்தி வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் பழங்குடி மக்களுக்கு எதிராக அரசு நடத்தும் போர், மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற தலைப்பில் நில அபகரிப்பு மற்றும்; தேசிய வளங்கள் சூறையாடுதல் ஆகியவற்றை தெஹெல்கா சஞ்சிகை பதிவு செய்கிறது. அரசும் அரசுக்கு நெருக்கமானவர்களும் நடத்தும் ஊழல் இத்தியாதிகளை வெளிப்படுத்திய சிறப்பு அதற்கு உண்டு.[/size][size=4]

தெஹெல்கா சஞ்சிகையைப் பொழுது போக்காகப் படிக்க முடியாது. குமட்டல் எடுக்கும், வலி ஏற்படும் ஆனால் ஒவ்வொரு இந்தியனும் அதைப் படிக்க வேண்டும். குறிப்பாக 2007 செப்டம்பர் 08ம் திகதி இதழைப் படிக்க வேண்டும். 2002ம் ஆண்டு குஜராத் படுகொலைகளை நடத்திய பாபு பஜ்றங்கி (Babu Bajrangi) என்பவனை நீதியின் முன் நிறுத்த உதவியது பற்றி அந்த இதழ்; குறிப்பிடுகிறது.[/size][size=4]

எத்தனை அப்பாவி முஸ்லிம்களை மார்ச்சு 2002ல் வெட்டிக் குவித்தேன் என்று பாபு பஜறங்கி பிதற்றுவதைத் தெஹெல்காவின் மறைந்திருந்த ஒளிப்பதிவுக் கருவிகள் பதிவு செய்தன. இந்தக் கொலைஜன் சிறை செல்ல அவை உதவின.[/size][size=4]

தருண் தேஜ்பால் போல் ஹெட்லைன்ஸ் ருடேயின் இராஜேஷ் சுந்தரம், வின் தொலைக்காட்சியின் பாஸ்கரன் போன்ற ஒரு சிலர் இருக்கிறார்கள். இந்திய அரசின் ஆணையை மீறிச் சனல்4 தயாரித்த சிறிலங்காவின் படுகொலைக் களம் (Sri Lanka’s killing fields) என்ற வீடியோவை ஒளிபரப்பிய சாதனை ஹெட்லைன்சுக்கு உண்டு.[/size][size=4]

அது மாத்திரமல்ல “சிறிலங்கா இன அழிப்பிற்கு நான் சாட்சி” என்ற தலைப்பில் ஒரு ஒளிப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட இன்னொரு சிறப்பும் ஹெட்லைன்ஸ் ருடேக்கு உண்டு.[/size][size=4]

வின் தொலைக்காட்சியின் சி.ஆர்.பாஸ்கரன் 2012 மார்ச்சு 12ம் நாள் நெறிப்படுத்திய ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா நிறைவேற்றிய இலங்கைக்குச் சாதகமான தீர்மானம் பற்றிய கருத்தரங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.[/size][size=4]

சர்வதேச குற்றவியல் விசாரணையை முடக்கி ஈழத் தமிழின அழிப்பை விசாரணை செய்யும் பொறுப்பை குற்றவாளி இலங்கையிடமே அமெரிக்கத் தீர்மானம் பொறுப்பு வழங்கியது. தோழர் தியாகு, பேராசிரியர் தீரன், ஓவியர் புகழேந்தி ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றார்கள்.[/size][size=4]

இந்தக் கருத்தரங்கு சுட்டிக் காட்டியது போல் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச போர்குற்ற விசாரணை அமெரிக்க இந்திய கூட்டுச் சதியால் கானல் நீராக்கப்பட்டுள்ளது. மார்ச்சு 24 (2012) தெஹெல்கா சஞ்கையில் அதன் செய்தி நிருபர் சாய் மானிஷ் (Sai Manish) அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்று எழுதியுள்ளார்.[/size]

நன்றி

தமிழ்க் கதிர் இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.