Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி பயணிக்கவிருந்த விமானத்தில் கோளாறு; விசாரணை சி.ஐ.டி.யினரிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahimda3(6).jpg

[size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயணம் செய்யவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில் விசாரணை நடத்தும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரி வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விசாரணைக்கென பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தனி நபர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனததிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஞாயிற்றுக்கிழமை, டுபாய்க்கு ஸ்ரீலங்;கன் எயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் புறப்படவிருந்தார். அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது இறுதி நேரத்தில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்தே அவர் பிரிதொரு விமானத்தின் மூலம் டுபாய்க்கு சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...3-16-14-05.html[/size][/size]

ஆண்டவன் இருக்கிறான்,ஆதலால் தான் இன்னும் இருந்து அனுபவி என்று விட்டு விட்டான் போல...அது சரி எதற்காக டுபாய் போகின்றார்?

துபாயில் வரும் 27ம் தேதி சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

[size=3]துபாய்: அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் வகையில் வரும் 27ம் தேதி மாலை 6.30 மணிக்கு துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.[/size]

[size=3]அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வரும் 27ம் தேதி மாலை 6.30க்கு சமூக நல்லிணக்க நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களை குறித்தும் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் கேள்வி-பதில் நிகழ்ச்சியாக நடைபெறும்.[/size]

[size=3]சவுதி அரேபியாவில் இருந்து வரும் அப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறைவேதம், இறைத்தூதர் வாழ்வில் உள்ள சான்றுகளை அடிப்படையாக கொண்டு பதிலளிக்க உள்ளார்.[/size]

[size=3]இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 055-5188249, 050-9431980, 050-5959697 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புக் கொண்டு கூடுதல் விபரங்களை பெற்று கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் மண்டல தமுமுக சார்பாக, மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.[/size]

நவ. 2ம் தேதி துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ 11வது ஆண்டு விழா

[size=3]துபாய்: துபாய் த‌மிழ் ச‌ங்க‌த்தின் 11வது ஆண்டு விழா நவம்பர் 2ம் தேதி மாலை 5 ம‌ணிக்கு துபாய் இந்திய‌ ப‌ள்ளி ஷேக் ராஷித் அரங்கில் ந‌டைபெற‌ உள்ளது.[/size]

[size=3]துபாய் த‌மிழ் ச‌ங்க‌த்தின் 11வது ஆண்டு விழா அடுத்த மாதம் 2ம் தேதி மாலை 5 ம‌ணிக்கு துபாய் இந்திய‌ ப‌ள்ளி ஷேக் ராஷித் அரங்கில் ந‌டைபெற‌ உள்ளதாக நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ர் ஏ.முஹ‌ம்ம‌து தாஹா தெரிவித்துள்ளார்.[/size]

[size=3]இதில் ஆசியாவின் புக‌ழ் பெற்ற‌ நட‌ன‌ குழுவான‌ சிங்கப்பூர் மாயா தியேட்ட‌ர் குழுவின‌ரின் க‌ண்க‌வ‌ர் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ உள்ளது. இந்த குழுவினர் முத‌ல் முறையாக‌ வ‌ளைகுடா ப‌குதியில் த‌ங்க‌ள‌து க‌லைத்திற‌னை வெளிப்ப‌டுத்த‌ உள்ளனர்.[/size]

[size=3]இந்நிகழ்ச்சியில் பின்ன‌ணி பாட‌க‌ர்க‌ள் மால‌தி, பிரியா, ர‌விச‌ங்க‌ர், ஷியாம், பிர‌காஷ் ஆகியோர் கலந்து கொண்டு, தங்களின் இனிய குரலால் பாடி ர‌சிக‌ர்க‌ளை ம‌கிழ்விக்க‌ உள்ளனர். பிரபல மிமிக்கிரி கலைஞர்களான ரோபோ ச‌ங்க‌ர் ம‌ற்றும் அர்விந்த் ஆகியோரின் க‌லக்க‌ல் காமெடியும் இட‌ம் பெற‌ உள்ளது.[/size]

[size=3]நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்க‌ விரும்புவோர் இல‌வ‌ச‌ முன் அனும‌தி சீட்டு பெற வேண்டும். முன் அனும‌தி சீட்டு பெற‌ 050 467 4399 என்ற செல்போன் எண்ணில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.[/size]

துபாயில் வரும் 26ம் தேதி செம‌ சிங்க‌ர் 2012 நிகழ்ச்சி

[size=3]துபாய்: துபாய் ஸ்மைல் அமைப்பின் சார்பாக செம‌சிங்க‌ர் 2012 நிக‌ழ்ச்சி வரும் 26ம் தேதி மாலை அல் ஸ‌பா ப‌குதியில் அமைந்துள்ள‌ ஜே.எஸ்.எஸ் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ உள்ளது.[/size]

[size=3]துபாய் ஸ்மைல் அமைப்பின் சார்பாக செம‌சிங்க‌ர் 2012 நிக‌ழ்ச்சி வரும் 26ம் தேதி மாலை அல் ஸ‌பா ப‌குதியில் அமைந்துள்ள‌ ஜே.எஸ்.எஸ் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ உள்ளதாக, நிக‌ழ்ச்சியின் அமைப்பாள‌ர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.[/size]

[size=3]இந்நிக‌ழ்வில் திரைப்ப‌ட‌ பின்ன‌ணி பாட‌க‌ர்க‌ளான மாணிக்க‌ விநாய‌க‌ம், மால‌தி, ம‌துமிதா ஆகியோர் ப‌ங்கேற்க உள்ளனர்.[/size]

[size=3]இது குறித்து மேலும் விபரங்களுக்கு 052 8388370 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது semasinger2012@gmail.com எனும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.[/size]

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் இருக்கிறான்,ஆதலால் தான் இன்னும் இருந்து அனுபவி என்று விட்டு விட்டான் போல...அது சரி எதற்காக டுபாய் போகின்றார்?

அதுசரி சந்தேகத்தின் பேரில் எத்தனையோ அப்பாவி இளைஞர்கள், யுவதிகள் சிறைச்சாலைகளில் சித்திரவாதைகளை தினமும் அனுபவித்து வருகிறார்கள். ஆண்டவன் இருக்கிறார். அதனால் தான் அவர்களையும் அனுபவி என்று விட்டு விட்டாரோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.