Jump to content

MI-24 உலங்கு வானூர்தி..


Recommended Posts

1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது.

ஈழத்தில் இந்தியக் காடையர் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி" , "மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய Mi- 24 உலங்குவானூர்தியில் தேசியத் தலைவர் அவர்களை புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவிற்கும் ஈழத்திற்க்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணம் ஆக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

1960 களில். தாக்குதற் திறனுடன் கூடியதும் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதுமானஉலங்குவானூர்திகளின் தேவை சோவியத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான Mikhail Leont'yevich Mil என்பவரால் உணரப்பட்டது. ஆரம்பத்தில் சோவியத் படைகளின் பயன்பாட்டிலிருந்த UH-1A Huey என்ற உலங்குவானூர்தியின் வடிவத்தை ஒத்த வடிவமுடைய உலங்குவானூர்தியே Mil அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அவரது வடிவம் எட்டுத் துருப்புக்களைக் காவிச்செல்லக் கூடியதாகவும் இருபக்கங்களிலுமமைந்த இறக்கைகளில் மொத்தம் ஆறு ஏவுகணைகளைத் தாங்கிச்செல்லக் கூடியதாகவும் அமைந்திருந்தது. இது "பறக்கும் தாங்கி" என அழைக்கப்படுகிறது.

இரண்டு தாரை இயந்திரங்களால் இயக்கப்படும் இதன் பிரதான சுழலியானது (rotor) நான்கு சுழலித் தகடுகளையும் (rotor blade) வாற்சுழலியானது (tail rotor) மூன்று சுழலித் தகடுகளையும் கொண்டுள்ளன. துப்பாக்கி இயக்குபவரும் விமானியும் ஒருவர்பின் ஒருவராக தனித்தனி அறைகளில் (cockpit) அமர்ந்திருப்பர். இருபக்கங்களிலுமுள்ள இறக்கைகள் பலவகையான தாக்குதல் ஆயுதங்களைக் காவவல்லதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடவடிக்கையின் தன்மைக்கேற்ப இவ் உலங்குவானூர்தி ஆயுதங்களைக் காவிச்செல்லவல்லது.

இவ் உலங்குவானூர்தியின் உடற்பகுதி மற்றும் சுழலித் தகடுகள் 50 கலிபர் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறு காப்பிடப்பட்டுள்ள அதேவேளை அதன் விமானியறைகள் 37 மில்லிமீற்றர் கனரக துப்பாக்கித் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கவல்லது. வேகமான பறப்பின்போது இதன் சிறப்பான வடிவமைப்பையுடைய இறக்கை உலங்குவானூர்திக்குத் தேவையான மொத்தத் தூக்குசக்தியின் (lift) 25 வீதமான பங்கை வழங்குகின்றது.

1977 – 1978 காலப்பகுதியில் எதியோப்பியப் படைகள் சோமாலியர்களுக்கு எதிராக நடாத்தியயுத்தத்தில் இவ் உலங்குவானூர்திகள் முதன்முதலாக எதியோப்பியப் படைகளுக்கு ஆதரவாகக் களமிறக்கப்பட்டன. அதன் பின்னர் கம்போடிய-வியட்னாமிய யுத்தம், லிபிய யுத்தம் மற்றும் சோவியத்துடனான ஆப்கானிஸ்தான் யுத்தம் என்பவற்றில் இவ் உலங்குவானூர்திகளின் பங்கு கணிசமாகதாக இருந்தது. சிறிலங்கா போரைப் பொறுத்தளவில், ஈழத்தில் இந்தியக் காடையர் படை இவ்வகை உலங்குவானூர்திகளை 1987 – 1990 காலப்பகுதியில் பயன்படுத்தியிருந்தனர். 1995 ஆம் ஆண்டு இவ்வகை உலங்குவானூர்திகள் சிறிலங்கா விமானப் படையிலும் இணைத்துக்கொள்ளப்பட்டு தமிழருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

1979 ஏப்ரல் மாதத்தில் ஆப்கான் படைகளுக்கு Mi-24 வகை உலங்குவானூர்திகள் சோவியத்தால் வழங்கப்பட்டது. ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகளால் பயன்படுத்தப்படும் இவ்வகை உலங்குவானூர்திகள் சமர்க்களங்களில் அவற்றின் திறனை நிருபித்துள்ளன.

http://vinnummannum.blogspot.com/2012/06/mi-24.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை; சீமான் பேட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்சினையையும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையையும் கிளப்புகின்றனர்.நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா?. மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாது. இனிவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது. எங்களது எண்ணத்திற்கு விருப்பமுள்ள சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டிற்கு மதுரையும், தொழில் வளர்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னையும், ஆன்மிகத்திற்கு கன்னியாகுமரியும், நிர்வாகத்திற்கு திருச்சியும் ஆகியவற்றை தலைநகராக வைக்க வேண்டும்\” இவ்வாறு அவர் பேசினார்.   https://akkinikkunchu.com/?p=292308
    • தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு! தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தாம்  எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களிப்புக்கு  712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில்  6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  கூறினார். https://athavannews.com/2024/1400450
    • ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள-தேர்தல் ஆணைக்குழு! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் உள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு, கம்பஹா, பொலன்னறுவை, திருகோணமலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வன்னி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 40 வீதத்தை தாண்டியுள்ளது. இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 20 வீதத்தை தாண்டியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1400443
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.