Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்திற்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்யும் முன்னாள் போராளிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திற்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்யும் முன்னாள் போராளிகள்.

சிறீலங்கா | ADMIN | OCTOBER 25, 2012 AT 09:12

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் சுமார் மூவாயிரம் பேர் இதுவரை சிவில் பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டுள்ளனராம்.இவர்களில் 2,200 பேர் ஆண்கள் என்றும் 800 பேர் பெண்கள் என்றும் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 350 பேர் இன்று (24) சிவில் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ளனராம்.மேலும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்களும் இந்தப் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனராம்.

இவ்வாறு சிவில் பாதுகாப்புப் படையில் சேர்க்கப்படும் புலிகளின் முன்னாள் உறுப்பினர்ள். வடபகுதியில் இராணுவத்திற்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுவர் என்று கூறப்படுகின்றது. இதில் முதல் கட்டமாக கிளிநொச்சியில் பொது மக்களின் சுமார் 200 ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டு பண்ணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=36604

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகள் 350பேர் பாதுகாப்பு படையில் இணைப்பு

Wednesday, October 24th, 2012 at 12:19

601650.jpg

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் போராளிகளில் 350பேர் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 350பேரே இவ்வாறு படையில் இணைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்தது.

இனிவரும் நாட்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளையும் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்படையின் வட பிராந்தியப் பொறுப்பதிகாரி மேஜர் அனில் பண்டார தெரிவித்தார்.

இந்நிலையில், மேற்படி போராளிகள் உள்ளடங்களாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் இளைஞர் யுவதிகள் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 2200 பெண்களும் 800 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களை உள்ளடக்கிய விவசாய வேலைத்திட்டமொன்று இன்று புதன்கிழமை, கிளிநொச்சி, அம்பால்நகர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விவசாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேஜர் அனில் பண்டார மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.