Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மானிலிருந்து பரிணாமம் அடைந்ததா ஒட்டக சிவிங்கி?

Featured Replies

deer%2Bevolution-1.jpg

பெண் மான்: கீழே இவ்வளவு இலை தழைகள் இருக்க ஏன் கஷ்டப்பட்டு கிளைகளின் இலைகளுக்கு முயற்சிக்கிறே!

ஆண் மான்: நம்முடைய முன்னோர்களில் பலர் இவ்வாறு முயற்சித்து ஓட்டக சிவிங்கியாக மாறினதா டார்வின் சொல்றாரே! நீ கேள்வி படலியா! அதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

பெண் மான்: ஆமாம். அதை அப்படியே நம்பிட்டியே. அதற்கு ஏதாவது ஆதாரங்கள் கொடுத்தாராமா?

ஆண் மான்: அத மட்டும் கேட்காதே! டார்வின் சொல்லிட்டார். நான் நம்புறேன். அவ்வளவுதான்.

பெண் மான்: ??????????????????

----------------------------------------------------------------

1) காட்டில் மான்கள் வாழ்ந்துவந்தன.

2) வறட்சி மற்றும் போட்டி காரணமாக புல்வெளிகளில் உணவு அருகிப்போனது. எனவே இந்த மான்கள் கிளைகளில் உள்ள தழைகளை சாப்பிட முயற்சித்து சிறுக சிறுக இவற்றின் கழுத்து நெடிதானது.

3) குட்டையான கழுத்தைக்கொண்ட மான்கள் இறந்து போயின.

4) சிறிது நீளமான கழுத்துள்ள மான்கள் பிழைத்தன.

5) அம்மான்களிடையே இனப்பெருக்கம் நிகழ்ந்தது

6) இம்முறை பிறந்த குட்டிகளின் கழுத்து முன்பை விட நீளமாக இருந்தது (நீளமான கழுத்துடைய மான்கள் கலப்பில் ஈடுபட்டதால்)

7) இவ்வகை இயற்கையின் தேர்வு மில்லியன் வருடங்களில் மானினத்தை ஒத்த ஒட்டைச்சிவிங்கியின் தோற்றத்துக்கு வகை செய்தது.

இதுவே டார்வின் சொன்ன ஒட்டக சிவிங்கியின் சுருக்கமான பரிணாம தியரி.

இப்படி பல படித்தரங்களை சொன்ன டார்வின் இதற்கு ஆதாரங்களை எந்த இடத்திலும் சமர்ப்பிக்கவில்லை. அறிவியல் அறிஞர்கள் எவரும் இதனை ஒத்துக் கொள்ளவும் இல்லை. மானிலிருந்து ஒட்டக சிவிங்கி வரை பரிணாமம் நடைபெற்றிருந்தால் நடுத்தர உயரத்தையுடைய ஒட்டக சிவிங்கிகளின் படிமங்கள் கிடைத்திருக்க வேண்டும். வழக்கம் போல் இது எவற்றையும் பரிணாமவியலை ஆதரிக்கும் எந்த விஞ்ஞானியும் சமர்பிக்கவில்லை.

பழங்கள் காய்கள் வேண்டுமானால் மரங்களின் உயரத்தில் இருக்கும். ஆனால் மான்கள் சாப்பிடும் இலை தழைகள் மானினுடைய உயரத்திலேயே கிடைத்து விடுவதைப் பார்க்கிறோம். இவற்றிற்கு உயரமான மரங்களில் உள்ள இலை தழைகளை தேட வேண்டிய அவசியம் எழ வாய்ப்பே இல்லை. வறட்சி பஞ்சத்தினால் புல் பூண்டுகள் அழிந்து விட்டன என்ற வாதமும் நிற்காது. ஏனெனில் அத்தகைய கடுமையான வறட்சியில் மரங்களும் கூட தங்களின் உற்பத்தியை நிறுத்தி விடும். மேலும் மான்களை ஒத்த ஆடு மாடுகள் காட்டெருமைகள் யானைகள போன்ற பல மிருகங்களின் உணவு இலை தழைகளே! பஞ்சம் வந்தால் எல்லா மிருகங்களுமே பாதிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் எல்லா மிருகங்களின் கழுத்துக்களும் ஒட்டக சிவிங்கியைப் போல் நீண்டிருக்க வேண்டும். அப்படி எந்த மிருகத்துக்கும் கழுத்து நீண்டதாக நாம் பார்க்கவில்லை. அப்படியிருக்க மான்களுக்கு மாத்திரம் எவ்வாறு கழுத்து நீண்டது?

ஜூராஃபா என்ற வார்த்தையே அரபி மொழியிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் 'அழகிய ஒன்று' என்ற பொருளில் வரும். மனிதன் மிருகங்களுக்கு பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்த நாளிலிருந்தே ஒட்டக சிவிங்கிகள் தற்போதுள்ள அமைப்பிலேயே இருந்துள்ளன என்பதை அறியலாம். தற்போது இவை சுதந்திரமாக வாழ்வதற்குரிய எல்லைகள் குறுக்கப்பட்டதால் இதன் முக்கியத்துவ்தை இழந்துள்ளது.

giraffe%2Bdrinking%2Bwater.jpg

ஒட்டக சிவிங்கி தண்ணீர் அருந்தும் அழகை பாருங்கள். இந்த நீண்ட கால்களும் நீண்ட கழுத்தும் ஓரிடத்தில் ஸ்திரமாக நிற்பதற்கு உதவுகின்றன. அது நடக்கும் போதே ஒரு நாட்டியம் போல் தோன்றும். இந்த உயரங்களில் எது ஒன்று குறைந்தாலும் ஒட்டக சிவிங்கி படுத்து விடும். கழுத்து நீண்டதற்கு காரணத்தை சொன்னவர்கள் கால்கள் உயரமானதற்கு எந்த அறிக்கையும் சமர்பிக்கவில்லை.

ஒட்டக சிவிங்கியின் இதயம் இரத்தத்தை அதன் மூளைக்கு சுமார் இரண்டு மீட்டருக்கு பம்ப் செய்து அனுப்புகிறது. இதன் கழுத்து நீளமானதால் அதன் தேவைக்கு ஏற்ப இதயத்தின் சக்தி கூட்டப்பட்டுள்ளது. இதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறை துடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இந்த மாற்றத்தை நிகழ்த்தியது யார்? மனிதனிலிருந்து மற்ற எந்த உயிரினத்துக்கும் இவ்வளவு அதி சக்தி வாய்ந்த இதயம் அமையவில்லை. இந்த உயிரினத்துக்கு இப்படி ஒரு இதயம் பொருத்தப்பட்டால்தான் இதனால் உயிர் வாழ முடியும் என்று திட்டமிட்ட ஒருவரால்தான் இவ்வாறான இதயத்தைப் பொருத்த முடியும்.

அகாசியா போன்ற உயரமான கருவேல மரத்தின் இலைகளையே இவை சாப்பிடும் என்ற வாதமும் அடிபட்டு போகிறது. ஒட்டக சிவிங்கி மற்ற மிருகங்களான மான்கள் ஆடுகள் சாப்பிடும் வழமையான புற்களையும் சாப்பிடுவதை ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். மேலும் காலடியில் இருக்கும் புற்களைக் கூட தனது கழுத்தை வளைத்து சாப்பிடும் திறனில் படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தரையோடு ஒட்டிய புற்களை ஒட்டக சிவிங்கி சாப்பிடுவதை இங்கு நாம் பார்க்கிறோம்.

zurafa%2Beating%2Bgrass%2Bdown%2Bbig%2Bphoto.jpg

மரபணு ஆய்வுகளும் ஒட்டக சிவிங்கியின் பரிணாம வாதத்தை ஒத்துக் கொள்ளவில்லை.

The evidence from genetic studies has not supported the Darwinian position. In a study of 27 species, including bovidae and giraffes, the results were ‘far from constant’.42

A study of chromosomes found the pronghorn family was the most similar karyotypically, and that the giraffe differed from the other artiodactyls in many significant ways, such as ‘having a preponderance of biarmed autosomes’.43

42. Georgiadis, N.J., Kat, P.W. and Oketch, H., Allozyme divergence within

the bovidae, Evolution 44(8):2135–2149, 1991.

43. Gallagher, D.S. Jr, Derr, J.N. and Womack, J.E., Chromosome conservation

among the advanced pecorans and determination of the primitive

bovid Karyotype, J. Heredity 85(3):204–210, 1994.

இவ்வாறு அறிவியல் துறையில் நிரூபிக்கப்படாத ஒட்டக சிவிங்கியின் பரிணாம செய்தியை உலகம் முழுவதும் பல ஆராய்ச்சி பிரிவு மாணவர்களுக்கு பாடமாக வைத்திருக்கிறார்கள். ஆராய்ச்சி பிரிவில் இவ்வாறு டார்வினின் அநுமானங்களை பாடமாக வைப்பதை அறிஞர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். உண்மைகளை அந்த மாணவர்களுக்கு பாடங்களாக வைக்க வேண்டும்.

இன்னும் பல கேள்விகள் ஒட்டக சிவிங்கியின் பரிணாமத்தைப் பற்றி எழுகின்றன. அவற்றை பிற்பாடு பார்ப்போம்.அறிவியல் அறிஞர குட் தனது ஆய்வில் இந்த கேள்விகள் அனைத்தையும் வைக்கிறார். பதில் சொல்லத்தான் இன்று டார்வின் நம்மிடம் இல்லை. அவரது ஆதரவாளர்களாவது பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

In fact, we have no scientific evidence supporting any one of his naturalistic

explanations, nor do we we have evidence to prefer any plausible naturalistic version over another. All explanations are an attempt to try to explain what exists by developing what amounts to what Gould calls ‘just so stories’.

http://creation.com/images/pdfs/tj/j16_1/j16_1_120-127.pdf

Gould, S.J., Bully for Brontosaurus, Norton, New York, 1991.

Sherr, L., Tall Blondes, a Book about Giraffes, Andrews McMeel, Kansas

City, p. 40, 1997.

Lamarck, J.B. de., Zoological Philosophy, translated by Elliot, H., Macmillan,

London, p. 122, 1914.

'என்னை விட்டுட்டு நீங்க மட்டும் எப்படி சாப்பிடலாம்?'

giraffe%2Bin%2Bkitchen.jpg

'யாருப்பா இது...என்னை விட உயரத்துல பறக்குறது?'

giraffe%2Bsaw%2Ba%2Bplan.jpg

'அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்'

love%2Bwith%2Bkids.jpg

http://suvanappiriyan.blogspot.fr/2012/10/blog-post_8898.htmlµ

கூர்ப்பு தத்துவங்களை பிழையாக விளங்குதால் தான் இந்த தடுமற்றம் வருகிறது.

ஆபிரிக்கருக்கு சொண்டுகள் தடித்திருக்கின்றன, மங்கோலியருக்கு கண்கள் வளைந்திருக்கிறது, வெள்ளையர்கள் எம்மை விட உயரம் பெருப்பம் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த பேதங்களை அவர்களின் மரபணு ஒற்றுமைகளுடன் ஒப்பிடும் போது மில்லியங்களில் ஒன்று. அதாவது உண்மையில் நமது கண்ணுக்கு தெரியும் இந்த பேதம் அவர்களின் உடலில் இல்லை என்றே வைத்துக்கொள்ளலாம்.

அதாவது மனிதர் எல்லோரும் ஒன்றே. ஆனால் பிறக்கும் ஒவ்வொருவரும் சில பேதங்களுடன்தான் பிறப்பார்கள். அதாவது, இது, என்றுமே குட்டி தாயைப்போல பிறக்காது என்ற உண்மையே. இந்த மெல்லிய பேதம் பல ஆயிரம் ஆண்டுகளில் சீனர், தமிழர், வெள்ளையர் என்றாகிறது.

இதில் காடு வற்றவுமில்லை ஒட்டகச்சுவிங்கி கழுத்தை நீட்டவுமில்லை. முதல் முதல் உயிர் உருவான அன்று அதில் மாற்றத்திற்கான செயல்ப்பாடுகள் ஏற்றப்பட்டுவிட்டன.(அது எப்படி என்பது தெரியாது). ஈரின சேர்க்கை ஆரம்பித்த அன்றிலிருந்து இந்த மாற்றம் மிக பலமாக தொழில்ப்படுகிறது.

சில மான்களுக்கு கால்கள், தலை, உடம்பு போன்ற அவயங்கள் அவை தோன்றிய ஆதி மானின வர்க்கத்திலிருந்து வேறுபட ஆரம்பித்துவிட்டது. அந்த மான்கள் உயரத்தில் இருக்கும் குழைகளையும் உண்ணத்தக்கவையாக இருக்கின்றன. ஆக, காடு வற்றியிருந்தால் இவை தப்பியிருக்கலாம், மறுவளம் உண்மை அல்ல(அதாவது காடு வற்றும் போது மான்களுக்கு கழுத்து நீண்டு பிறக்க ஆரம்பிக்க மாட்டா). ஆனால் கடு வற்றினால் தண்ணிக்கு அவை எங்கே போயிருக்கும் என்பதை தெரியாமல் விஞ்ஞானிகள், "காடு வற்றிய போது தோன்றிய மான்கள் ஒட்டக சுவிங்கிகள் என்றார்கள்" என்ற விளக்கம் உண்மை இல்லாதது. காடு வற்றினால் அங்கு புல், செடி, கொடிகள் இறக்கு முன்னர் மிருகங்கள் தண்ணிர் இன்றி இறந்துவிடும். எனவே இது எப்போதும் விஞ்ஞான விளக்கத்தில் வைக்கப்படவில்லை.

மாற்றங்கள் தானாக நடந்துகொண்டிருக்கு. அந்த மாற்றங்கள் தற்கால சூழலுடன் ஒத்து போகுமாயின் அவை தப்பிப் பிழைக்கும். மறு வளமும் உண்மை; சூழல் மாறினால் மாற்றத்தை காணாத இனங்கள் அழிந்துவிடும்.

சூழலும், உயிரினமும் தொடர்ந்து மாறுகின்றன. ஒன்றுக்கொன்று ஒத்து போகும் போது உயிரினம் தப்பும். (மறுவளம் உண்மையோ தெரியாது- அதாவது எப்போதாவது சூழல் தப்ப முடியாமல் போகலாம்? :huh::icon_idea: )

  • தொடங்கியவர்

விளக்கமான கருத்துக்கு மகவும் நன்றிகள் மல்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.