Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோரை நினைவு கூறும் 22ஆவது தேசிய நினைவூட்டும் நிகழ்வு

Featured Replies

[size=4]காணாமல் போனோரை நினைவு கூறும் 22ஆவது தேசிய நினைவூட்டும் நிகழ்வு, சீதுவை, ரத்தொலுவ சந்தியிலுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மதத் தலைவர்கள், 'கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான சுதந்திர முறைமையை அமுல்படுத்துமாறும் காணாமல் போனவர்களை திருப்பித் தருமாறும் அவர்களது குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறும்' கோரிக்கை விட்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில், காணாமல் போனோரின் உறவினர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.[/size]

P01(113).jpg

P04(46).jpg

http://www.tamilmirror.lk/--main/51396-2012-10-27-13-02-25.html

  • தொடங்கியவர்

[size=5]'காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக் கூறவேண்டும்'[/size]

[size=4]இலங்கையில் காணாமல்போனவர்களின் 22 வது- தேசிய ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.[/size][size=3]

[size=4]கொழும்பின் புறநகர்ப்பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த நிகழ்வு நடந்தது.[/size][/size]

[size=3]

[size=4]1988-89களில் தெற்கில் காணாமல்போனவர்கள் மற்றும் கடந்த சில ஆண்டுகளில் வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் என பல பகுதிகளிலும் காணாமல்போனவர்களின் குடும்ப உறவினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.[/size][/size][size=3]

[size=4]இந்த நிகழ்வை ஆண்டுதோறும் ஒழுங்குசெய்துவரும் காணாமல்போனவர்களுக்கான அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்ணாண்டோ, அரசாங்கம் காணாமல்போனவர்களுக்காக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தவேண்டும் என்று கூறினார்.[/size][/size][size=3]

'அந்தக் காலத்தில் ஐநாவுக்கு சென்று, சர்வதேசத்துக்கு சென்று, வீதிகளில் பேரணி சென்றுதிரிந்த மகிந்த ராஜபக்ஷ காணாமல்போனவர்களுக்காக நீதி வழங்குவதாகவும் அப்படி இனிமேல் நடக்காது என்றும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தார். [size=4]ஆனால் அவர் மறந்துபோன அந்த உறுதிமொழிகள் தான் எங்களிடம் தற்போது உள்ளன.இன்று அதற்காக குரல் கொடுப்பவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டுள்ளனர். நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளனர். இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமானது என்பதை நாங்கள் தான் நிலைநாட்டவேண்டும்' என்று பிரிட்டோ பெர்ணாண்டோ கூறினார்.[/size][/size]

[size=4]கடந்த சில ஆண்டுகளில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அரசுதான் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.[/size]

110908153247_tamil_demo.jpg

[size=5]வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பல பிரதேசங்களில் [/size]

[size=5]கடந்த காலங்களில் பல தமிழர்கள் காணாமல்போயுள்ளனர்.[/size]

[size=3]

[size=4]இந்த ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து சென்றிருந்த பெண்கள் சிலர் பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்தனர்.[/size][/size]

[size=3]

[size=4]கிழக்கு மாகாணத்தில் அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் கடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருக்கின்ற பலர் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர்.[/size][/size]

[size=3]

[size=4]இராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினராலும் இராணுவ புலனாய்வுப் பிரிவினராலும் கைதுசெய்யப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள பலர் இன்னும் காணாமல்போனவர்கள் என்ற நிலைமையிலேயே பதியப்பட்டிருப்பதாக காணாமல்போயுள்ளவர்களின் குடும்பத்தினர் கூறினர்.[/size][/size]

[size=3]

[size=4]கிழக்கு மாகாணத்தில் 2000-களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருப்பவர்கள் தொடர்பில், அக்காலத்தில் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் தான் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர்களில் பலர் கூறினர்.[/size][/size]

[size=3]

[size=4]விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் இன்று அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இருப்பதாகவும் அதனால் அவர்களின் காலத்தில் நடந்த விடயங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டினர்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121027_missingpeoplecommomeration.shtml

இது மனிதத்தின் பிரச்னை .............இனம், மொழி. சமயம், இந்த வேறுபாடுகளின்றி அணுகவேண்டிய பிரச்னை ,பாதிக்கப்பட்டவர்களுக்கே அந்த வலியின் கொடுமை தெரியும் ........இதையும் நாகரீக உலகம் புரியுமா .............அல்லது உலக அழிவு வரை காத்திருக்குமா ??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.