Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை

Featured Replies

[size=4]சிறிலங்காவின் தலைமை நீதியரசர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை[/size] [size=4][ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 01:32 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ][/size]

[size=4]shirani.jpgசிறிலங்காவின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில் சிறிலங்காவின் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிராணி பண்டாரநாயக்கவின் கணவர் பிரதீப் காரியவசம் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்தபோது, முறைகேடு இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

இந்தநிலையில், கணவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை நீதியரசர் பதவியில் சிராணி பண்டாரநாயக்க இருப்பது சரியல்ல என்பதாலேயே அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர சிறிலங்கா அரசதரப்பு முனைவதாக கூறப்படுகிறது.

தானாக முன்வந்து அவர் பதவி விலகாது போனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாகவும் சிறிலங்காவின் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த மாத முற்பகுதியில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன[/size]

[size=4]http://www.puthinappalakai.com/view.php?20121029107208[/size]

போய்வா மகளே போய்வா. சொல்கெயும் சமானத உடன்படிக்கையுடன் வந்து உன்னையும் காப்பாற்ற முயலும் போதுமட்டும் (அதில் என்ன எழுதிருக்கு எனறு படித்து பார்த்துவிட்டு) மறுக்காமல் கையழுத்திட்டுவிடு. இல்லெயேல் சோனியாவின் இரசாயன குண்டுகள் உன்வீட்டு மீதும் விழுந்து வெடிக்கும்.

[size=6]தலைமை நீதியரசர் விவகாரம்: அரசின் நடவடிக்கையில் சந்தேகம்[/size]

[size=4]இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான கண்டனத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஃப்ரீ மார்ச் என்ற சட்டத்தரணிகளின் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது. [/size]

[size=4]தலைமை நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் வெளிப்படுத்தாமல் இருக்கின்றமை, அந்த விசாரணைகள் தொடர்பில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.[/size]

தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

[size=3][size=4]அந்த குற்றச்சாட்டுக்கள் என்ன என்று கேட்கப்பட்டபோதிலும், அதுபற்றி தற்போது தெரியபடுத்த முடியாது என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.[/size][/size]

[size=3][size=4]இதன்மூலம் அவருக்கு எதிரான விசாரணைகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகியிருப்பதாக ஃப்ரீ மார்ச் அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]இதேவேளை, பதவி நீக்குவதற்கான கண்டனத் தீர்மானத்தை எதிர்நோக்கியுள்ள தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு விசாரணை முடியும் வரையில் வழக்கு விசாரணைகளில் ஈடுபட சட்டத்தில் இடமிருக்கிறதா என்று ஊடகவியலாளர்கள் சட்டத்தரணி பண்டார ஏக்கநாயக்கவிடம் வினவினர்.[/size][/size]

[size=3][size=4]அதற்கு பதிலளித்த சட்டத்தரணி பண்டார, வழக்கு விசாரணைகளில் ஈடுபடுவதற்கு தலைமை நீதியரசருக்கு இப்போதைக்கு சட்டரீதியாக பிரச்சனை இல்லை என்று கூறினார்.[/size][/size]

[size=3][size=4]முன்னாள் தலைமை நீதியரசர் நெவில் சமரக்கோனுக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அந்த விசாரணைகள் நடந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலும் அவர் வழக்கு விசாரணைகளை நடத்தியதை ஃப்ரீ மார்ச் அமைப்பின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.[/size][/size]

[size=3][size=4]நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான விசாரணைகள் நடக்கும்போது, தலைமை நீதியரசரை நீதிமன்ற வழக்கு விசாரணைகளிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு தடை உத்தரவு பிறப்பிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/11/121103_chiefjustice.shtml

[size=5]பிரதம நீதியரசர் விவகாரத்தை கையில் எடுத்தது ஐ.நா.; [/size]

[size=5]ஆணையாளர் நவநீதம்பிள்ளை தீவிர கவனம்[/size]

[size=2]

[size=4]இலங்கையின் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூடுதல் கவனம் செலுத்தி அதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றார் என்று ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நேற்றுத் தெரிவித்தது.[/size][/size]

[size=2]

[size=4]அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் விரைவில் விளக்கம் கோரும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் "உதயனி'டம் தெரிவித்தார்.[/size][/size]

[size=2]

[size=4]அதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருவதால் இலங்கைக்கான தனது விஜயத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார் மீள்பரிசீலனை செய்து வருகின்றார் என்று நம்பகரமாக அறியமுடிகின்றது.[/size][/size]

[size=2]

[size=4]குறிப்பாக இலங்கையின் பிரதம நீதியரசருக்கெதிராக நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அமெரிக்கா உட்பட்ட நாடுகள் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்கு ஏதாவது முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவா என்று ஜெனிவாவிலுள்ள "சுடர்ஒளி'யின் விசேட பிரதிநிதி அந்த அலுவலகத்தின் பேச்சாளரிடம் வினவினார்.[/size][/size]

[size=2]

[size=4]இதன் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக பேச்சாளர் ஒருவர், பிரதம நீதியரசர் விடயம் குறித்து பல்வேறு தரப்புக்கள் ஆணையாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளன என்றும், அவர் இதுதொடர்பில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார் எனவும் தெரிவித்தார்.[/size][/size]

[size=2]

[size=4]"மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தி உள்ளது. கூடிய விரைவில் இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்கவுள்ளோம். நீதித்துறையில் தலையீடு செய்வதாக இந்த விடயம் அமைந்துள்ளதென்று பல்வேறு நாடுகளும் தெரிவித்திருப்பதால் இதை ஒரு சாதாரண விடயமாக கருதி விட முடியாது'' என்றும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.[/size][/size]

[size=2]

[size=4]அதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் மேம்பாட்டில் திருப்தியான முன்னேற்ற நிலைமை இல்லாத காரணத்தினால் இலங்கைக்கான பயணத்தை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன என்று தெரியவருகிறது.[/size][/size]

http://onlineuthayan.com/News_More.php?id=722291580704427775

அமெரிக்கா, ஐ.நா. போன்றவர்களுக்கு இன்னமும் ஒன்று விளங்கவில்லை. இலங்கை சர்வாதிகார நாடல்ல. மக்களால் ஆட்சிசெய்யப்படும் நாடு. இரண்டு மாதங்களுகு முன் நடந்த மக்களின் கருத்துக்கணிப்பு போன்ற கிழக்கு மாகாண தேர்தலில் கணிசமான முஸ்லீம்களும் சிங்களவரும் அரசுக்கு மட்டும்தான் வாக்களிதிருந்தார்கள். மற்றய இரண்டு மாகாணங்களிலும் யாருக்கு மக்கள் வாக்களித்தார்கள் என்ற கேள்வியே வர இடமில்லை.

இந்த அரசியல் அமைப்பு மகிந்தா ராசபக்கா, ஜெயவர்த்தனா, சிறிமா பண்டாரநாயக்கா, போன்றோர் கொண்டுவந்ததல்ல. D.S சோல்பரியிடம் கேட்டு பெற்றது. இதில் ஐ.நா தலையிட முடியாது. இந்த நீதியரசர் குடும்பம், அரச கட்சியின் புகழ் பெற்ற ஆதரவாளர்கள். மேலும் அவர்கள் குடுமபத்தில் தாக்கப்படுபவர் சிங்களவர் அல்லாத ஒருவரான அவரின் கணவரே.

ஐ.நா. இலங்கையில் தலையிடத்தக்கது சோல்பரி, வலோற்காரமாக இலங்கையுடன் இணைத்து வைத்த தமிழ்ழீழம் ஒன்றை பற்றினதே.

Edited by மல்லையூரான்

[size=5]சர்வதேச அவதானிப்பாளர்களை அனுமதிக்கவும்: ஐ.தே.க[/size]

[size=4]பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக குற்றவில் பிரேரணை தொடர்பான விசாரணைகளின் போது சர்வதேச மற்றும் உள்ளூர் சட்ட நிபுணர்களை அவதானிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் இந்த விசாரணையை நேரடியாக தொலைக்காட்சிகளில் அஞ்சல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசிய கட்சி இந்த தெரிவுக்குழுவில் அரசியல் அமைப்பின் பிரகாரம் பங்கேற்கும் என அவர் தெரிவித்தார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51930-2012-11-04-13-20-57.html

[size=4]இந்த விடயம் சிங்களத்திற்கு ஒரு பாரிய தலையிடியை கொடுக்கும் சர்வதேச விடயமாக மாறும் சாத்தியங்கள் உண்டு. சிங்களத்திற்கு எதிராக அடுத்த மார்ச் மாத ஐ.நா. தொடரில் இதுவும் சேர்ந்து ஒரு திருப்பத்தை தரலாம். [/size]

[size=5]சர்வதேச அவதானிப்பாளர்களை அனுமதிக்கவும்: ஐ.தே.க[/size]

[size=4]பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக குற்றவில் பிரேரணை தொடர்பான விசாரணைகளின் போது சர்வதேச மற்றும் உள்ளூர் சட்ட நிபுணர்களை அவதானிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.[/size]

இயக்கததை விட்டுவிட்டோடின கருணாவை வைத்து புலிகளை அழித்தவர் என்று நினைத்து சிராணியை வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அழிக்கலாம் என்று நினக்கிறரோ. பொன்சேக்காவை விடுவிக்க முடியாதவர்! இதனால் இவருடன் பொன்சேக்கா சேர மறுத்து வருகிறார்.

[size=5]நீதிச் சுதந்திரத்திற்கு என்றுமே அழுத்தம் கொண்டுவர மாட்டேன்[/size]

[size=3]

[size=4]ஊடகவியலாளர், கலைஞர்களுக்கு வட்டியில்லா வாகனக்கடன், மடிகணனி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி[/size][/size]

  • [size=2]
    [size=4]19 வருடங்களாக நான் சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளேன்[/size][/size]
  • [size=2]
    [size=4]நீதி, சுதந்திரத்தை நான் தலைவணங்கி கெளரவிக்கின்றேன்[/size][/size]
  • [size=2]
    [size=4]நீதி எல்லோருக்கும் சரிசமமாக இருக்க வேண்டும்[/size][/size]
  • [size=2]
    [size=4]பயங்கரவாதிகள் இன்று ஊடகங்களை ஆயுதமாக வைத்துப் போராடுகின்றனர்[/size][/size]

[size=3]

[size=4]வசதிகள், வாய்ப்புகளுக்கு மேலாக ஊடகவியலாளர்கள் பயம் அச்சமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.[/size][/size]

[size=3]

[size=4]செய்தியாளர் மாநாடுகளில் சுதந்திரமாகக் கேள்வியெழுப்பவும் பயப்பட்ட சூழல் இந்நாட்டில் இருந்தது. அதனை நாம் மாற்றியுள்ளோம். இப்போது எங்கும் சென்று சுதந்திரமாகச் செயற்படவும் சுதந்திரமாக எழுதும் உரிமையையும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், நீதித்துறைக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தங்களைக் கொண்டுவர விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இத்தகைய சுதந்திரத்தை தாய் நாட்டின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.[/size][/size]

[size=3]

[size=4]ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு மடிகணனி, வாகனக் கொள்வனவுக்கான வட்டியில்லாக் கடன் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடை பெற்றது. அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, அநுர பிரியதர்ஷன யாப்பா, தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் சிரேஷ்ட ஊடக மற்றும் கலைத்துறை சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி: கடந்த வரவு - செலவுத் திட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு மடிக்கணனி, வாகனக் கொள்வனவுக்கான வட்டியில்லாக் கடன் வழங்குவது தொடர்பில் வாக்குறுதியளித்தேன்.[/size][/size]

[size=3]

[size=4]அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.[/size][/size]

[size=3]

[size=4]எனினும் மடிகணனிகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் வட்டியில்லாமல் வாகனக் கடன் வழங்கினாலும் அரசு அந்தக் கடனை பொறுப்பேற்று வழங்க வேண்டியுள்ளது. வாகனம், மடிகணனிகளை விட ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் முக்கியம். சுதந்திரமாக போய் தகவல்களைத் திரட்டுவதற்கான சூழல் அவசியம். அதனை நாம் உருவாக்கியுள்ளோம்.[/size][/size][size=3]

[size=4]சுதந்திரமாகத் தகவல்களை வழங்குவதற்கான சூழல் அனைத்தையும் விட மிக முக்கியமானது. அத்தகைய சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத் துள்ளோம்.[/size][/size]

[size=3]

[size=4]பிரபாகரன் வடக்கில் நடத்திய செய்தியாளர் மாநாடு எனது நினைவுக்கு வருகிறது. அங்கு எமது ஊடகவியலாளர்கள் எத்தனை பேர் போனீர்களோ எனக்குத் தெரியாது. அந்த மாநாட்டிற்கு இந்தியா உட்பட பல நாட்டு ஊடகவியலாளர்கள் வந்திருந்தார்கள்.[/size][/size][size=3]

[size=4]இந்தியாவிலிருந்து வந்த ஊடகவியலாளர்கள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் கேள்வி கேட்டனர். [/size][/size]

[size=3]

[size=4]அதற்கு பாலசிங்கம் மன்னிப்புக் கோரினார். பலர் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். எனினும் இலங்கையில் நாட்டுத் தலைவர்கள், அரசியல் தலைவர்களென ஆர். பிரேமதாச, லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க போன்றோர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நமது ஊடகவியலாளர்கள் கூட கேள்வியெழுப்பவில்லை. புனித தலதா மாளிகை, ஸ்ரீமா போதி போன்ற மதத்தலங்களுக்குக் குண்டுத்தாக்குதல் நடத்தியமை, திம்புலாகல, அரந்தலாவை பகுதிகளில் பெளத்த மத பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து நம்மவர் எவரும் எத்தகைய கேள்வியும் எழுப்பவில்லை.[/size][/size]

[size=3]

[size=4]சில வேளை அது தொடர்பில் அங்கு கேள்வி எழுப்பியிருந்தால் அங்கிருந்து மீள திரும்பியிருக்க முடியாது. ஊடகவியலாளர்களுக்கு அப்போதிருந்த சுதந்திரம் அவ்வளவுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.[/size][/size]

[size=3]

[size=4]இன்றும் புலிகள் வெளிநாடுகளில் பணத்தினால் சில ஊடக நிறுவனங்களையே தமக்கு ஆதரவாக்கிக் கொண்டுள்ளனர். அன்று ஆயுதம் வாங்கவும் புலிகளின் பெற்றோரை பராமரிக்கவும் பெரும் நிதியைச் செலவிட்டவர்கள் இவ்போது அரசுக்கெதிரான செயற்பாட்டுக்குச் செலவிடுகின்றனர். இப்போது ஊடகங்கள் மூலமான மோதல் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பில் சகலரும் குறிப்பாக ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்துடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும்.[/size][/size][size=3]

[size=4]இன்றைய தினம் யுனெஸ்கோ அமைப்பினர் 28 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்களிடம் நான் நாட்டில் நிலவும் சுதந்திரச் சூழல் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தேன்.[/size][/size]

[size=3]

[size=4]நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கு சிலர் என்னிடம் இலங்கையில் இடம்பெறும் நல்லவைகளன்றி அங்கு நடக்கும் குற்றங்கள் தொடர்பாகவே இங்கு செய்திகள் வருகின்றன எனக்கேட்பர். அதற்கு நான் பதில் சொல்ல நேரிடும்.[/size][/size][size=3]

[size=4]ஊடகவியலாளர்களுக்குப் பொறுப் புள்ளது தாய் நாட்டைப் பற்றிய உண்மை நிலையை உலகிற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.[/size][/size]

[size=3]

http://www.thinakaran.lk/2012/11/05/?fn=n1211051[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.