Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவின் செயற்பாட்டால் தமிழ், சிங்கள மக்களின் உறவு மேலும் பாதிக்கும்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் செயற்பாட்டால் தமிழ், சிங்கள மக்களின் உறவு மேலும் பாதிக்கும்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!!

சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் செயற்பாடுகளால் தமிழ், சிங்கள மக்களின் உறவுகள் மேலும் பாதிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கையையே சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

'இலங்கையில் தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது' என அண்மையில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரின் இக்கூற்றுத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொரியாதது போன்ற ஒரு நாடகத்தினை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச நடத்துகின்றார்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு விடயங்கள் இடம்பெறத் தொடங்கி விட்டது.

தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பாரிய பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை ஆரம்ப காலத்தில் இருந்த சிறிலங்காவின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.

இவர்கள் எல்லோரும் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றது. அவர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும், அவர்களுடன் அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், தமிழ் மக்கள் என்பது ஒரு தேசிய இனம், அவர்கள் வடக்கு, கிழக்கில் பெரும்பாண்மையாக வாழ்கின்றார்கள் என்ற ரீதியிலேயே தந்தை செல்வா காலத்தில் இருந்து இந்தப் பிரச்சினை கையாளப்பட்டது.

ஆனால் சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சவின் செயற்பாடுகள் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் மேலும் மேலும் எதிரிகளாக்கும் விடயமாகவே இருக்கின்றது.

தமிழ் மக்களும், சிங்கள மக்களும் ஒன்றாக வாழமுடியாத சூழலைத்தான் அவர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். கோத்தபாய ராஜபக்ச முதலில் தான் என்ன விடயத்தை செய்கின்றார் என்பதை யோசிக்க வேண்டும். அவருடைய நடவடிக்கை முழுவதும் தமிழ் மக்களை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கையே.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவர் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் சமத்துவம், ஒற்றுமை உள்ளது என்பது அவருடைய சிந்தனையில் ஏற்பட்டுள்ள குழறுபடியா அல்லது அவர் ஒன்றும் தெரியாத பாவியாக இருக்கின்றாரா என்பது தெரியவில்லை.

ஆகவே அவர் சொல்கின்ற விடயம் எல்லாம் எந்தவிதத்திலும் உப்புச்சப்பில்லாத விடயம். இவ்வாறு சொல்லிக் கொண்டு இருப்பதால் எந்தப் பிரச்சினையும் தீரப்போவதில்லை என்பதை அவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்' என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=7776c3d9-79ff-46f2-aa71-f5beff34ded4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.