Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

Featured Replies

[size=4]தமது ஜனாதிபதிப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நஷீட் ஜனாதிபதி மஹிந்தவின் உதவியைக் கோரியபோதிலும் மஹிந்தவால் அந்த விடயத்தில் எதுவுமே செய்ய இயலாதுபோயிற்று.[/size]

[size=4]இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு மிக நெருங்கிய நண்பர். அவர் என்னை அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது பாதுகாப்புக் குறித்து விசாரித்தறிகிறார். அதனை நான் பாராட்டுகிறேன்; மதிக்கிறேன்''[/size]

[size=4]கடந்த பெப்ரவரி மாதத்தில் சர்வதேச ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றின் போது மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீட் மேற்கண்ட கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். [/size]

[size=4]மாலைதீவில் ஆட்சி மாற்றத்தையடுத்து, நஷீட்டை கைது செய்து காவலில் வைக்க வேண்டாமென மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதியிடம், மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கையொன்றை விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. [/size]

[size=4]ஆனாலும், நீதிமன்ற உத்தரவின்பேரில் அண்மையில் நஷீட், மாலைதீவு அரசால் கைது செய்யப்பட்டார். தாம் மாலைதீவு அரசால் கைது செய்யப்படவுள்ளதான தகவல் கிட்டியதும் நஷீட், தமது மனைவி, பிள்ளைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துவிட்டார். நஷீட்டின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மஹிந்த, நஷீட்டின் மனைவி, பிள்ளைகளைப் பாதுகாப்பாக இலங்கையில் தங்க வைப்பதாக நஷீட்டுக்கு உறுதியளித்திருந்தார். [/size]

[size=4]அதேபோன்று தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க நஷீட் இலங்கையில் அரசியல் தஞ்சம் கோரியிருந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆயினும் அந்தச் செய்தியை மறுத்து, தாம் மலைதீவில் தங்கியிருந்தவாறே அரசுக்கு எதிராகப் போராடப் போவதாக நஷீட் தெரிவித்திருந்தார்.[/size]

[size=4]மஹிந்த ராஜபக்ஷ இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த வேளையிலிருந்தே நஷீட்டுடன் உறவைப் பேணி வந்துள்ளார். இலங்கையில் தங்கியிருந்தவாறே நஷீட், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமின் ஆட்சியை வீழ்த்த மாலைதீவுப் பொதுமக்களைத் தயார்படுத்தி வந்துள்ளார். [/size]

[size=4]அந்த வேளையில் அவரது அந்த முயற்சிக்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் ஆதரவு வழங்கி வந்தனர். 1994 ஆம் ஆண்டில் மஹிந்த அங்கம் வகித்த சுதந்திரக் கட்சி, இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டவேளை மஹிந்தவின் தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசின் உதவி மேன்மேலும் நஷீட்டுக்குக் கிட்டியது. [/size]

[size=4]அந்த வேளையில் நஷீட் எப்போதுமே மஹிந்தவின் அமைச்சு அலுவலகத்தில் காணப்பட்டார். இலங்கையில் தங்கியிருந்தவாறே மாலைதீவின் அப்துல் கயூமின் தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்கான திட்டங்களை நஷீட் செயற்படுத்தி வந்தார். [/size]

[size=4]மேற்குலக நாடுகளின் தூதராலயங்கள், சர்வதேச ஊடகங்கள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற தரப்புக்களுடன் தொடர்புபேணி நஷீட் மாலைதீவின் அரசியலில் தாம் ஈடுபடத்தக்கதொரு சுதந்திர சூழலை உருவாக்கிக் கொண்டு, மாலைதீவுக்குச் சென்று அப்துல் கயூமின் ஆட்சியை வீழ்த்தி, தாம் மாலைதீவின் ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். மாலைதீவின் "நெல்சன் மண்டேலா' வாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டார். [/size]

[size=4]நஷீட் மாலைதீவின் ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட வேளையில் இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். தமது நெருங்கிய நண்பராக நஷீட் மாலைதீவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றமை மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பெரு மகிழ்ச்சியை உண்டாக்கிவைத்தது.[/size]

[size=4]மாலைதீவின் ஜனாதிபதியாகிய பின்னர் நஷீட் இலங்கைக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டுவந்தார். ஒரு சமயம் நஷீட்டின் கூட்டணி அரசுக்குள் பிளவு ஏற்பட்டு, நஷீட்டின் அரசு வீழ்ச்சி காணும் நிலை ஏற்பட்ட போது, அமெரிக்கா அவ்விடயத்தில் தலையிடுவதற்கு முன்பாக, நஷீட், ஜனாதிபதி மஹிந்தவைத் தொடர்புகொண்டு மாலைதீவு அரசுக்குள் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைத்து உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.[/size]

[size=4]ஜனாதிபதி மஹிந்தவும் உடனடியாக மாலைதீவுக்குச் சென்று அரசின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு மேற்கொண்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்க முயன்றார். ஆயினும் பின்னர் அமெரிக்காவின் தலையீட்டினாலேயே பிரச்சினை தற்காலிகமாகத் தீர்க்கப்பட்டது.[/size]

[size=4]நஷீட், மாலைதீவின் ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட்ட மேற்குலக நாடுகளே உதவியிருந்தன. நஷீட்டுக்கு முன்பாக மாலைதீவின் ஜனாதிபதியாகவிருந்த அப்துல் கயூமை நாட்டின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை முறைப்படி கடைக்கொள்ளுமாறு அழுத்தத்தின்மேல் அழுத்தம் விடுத்து, நஷீட் மாலைதீவுக்குச் சென்று அரசியலில் ஈடுபடத்தக்க சுதந்திர சூழலை உருவாக்கிக் கொடுத்தவை அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளே. [/size]

[size=4]அதேபோன்று அப்துல் கயூமுக்கு எதிராக நஷீட்டின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியொன்றை உருவாக்கி அதனைப் பலப்படுத்தி உதவியவையும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளே.[/size]

[size=4]மேற்குலக நாடுகளின் செல்லப்பிள்ளையான நஷீட் மாலைதீவின் ஜனாதிபதிப் பதவியைக் கைப்பற்றியதையடுத்து, தமக்கும் அவருக்கும் இடையேயான நெருங்கிய பிணைப்பைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்குலக நாடுகளால் இலங்கைக்கு எதிராகச் சுமத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்களைத் தோற்கடிக்க நஷீட்டைப் பயன்படுத்திக் கொண்டார். ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக நாடுகளால் முன்வைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுப் பிரேரணை தொடர்பாக மஹிந்தவுக்கு ஆதரவாக நஷீட் நீண்ட உரையொன்றை ஆற்றியிருந்தார்.[/size]

[size=4]ஆனால் நீண்ட நாள்கள் கடப்பதற்கு முன்னர் நஷீட், ஜனாதிபதி மஹிந்தவின் செல்லப்பிள்ளை என்ற நிலை மாற்றம் கண்டது. சார்க் நாடுகளின் உச்சி மாநாடு மாலைதீவில் இடம்பெற்ற வேளையையண்டி முதன்முதலாக மாலைதீவில் சீன பிரதித் தூதரகமொன்று திறக்கப்பட்டமை, அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக நாடுகளைவிட இந்தியாவையே கடும் திகைப்புக்கு உள்ளாக்கக் காரணமாகியது. [/size]

[size=4]நஷீட்டுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பலமடைய மஹிந்தவே காரணமென சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மாலைதீவில் சீன பிரதித் தூதுவர் அலுவலகம் திறக்கப்பட்டு நீண்ட நாள்கள் கழியும் முன்னரே நஷீட், மாலைதீவின் ஜனாதிபதிப் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட நேர்ந்தது.[/size]

[size=4]தமது ஜனாதிபதிப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நஷீட் ஜனாதிபதி மஹிந்தவின் உதவியைக் கோரியபோதிலும் மஹிந்தவால் அந்த விடயத்தில் எதுவுமே செய்ய இயலாதுபோயிற்று. ஆகக்குறைந்து நஷீட்டை கைது செய்ய வேண்டாமென தற்போதைய மாலைதீவு ஜனாதிபதியிடம் மஹிந்த விடுத்த வேண்டுகோள் கூட புறந்தள்ளப்பட்டது என்பது தற்போது தெளிவாகியுள்ளது.[/size]

[size=4]இன்று நஷீட் மீண்டும் அமெரிக்கா, ஐரோப்பா உட்பட்ட மேற்குலக நாடுகளிடமே உதவிகோர வேண்டி நேர்ந்துள்ளது. நஷீட்டிடமிருந்து ஜனாதிபதி மஹிந்த கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இரண்டென்றல்லாது ஏராளமுண்டு. அதிகார இழப்பு என்பது எத்துணை கசப்பானது என்பது அவற்றில் முக்கியமானதொன்று. *[/size]

[size=4]தமிழில்: வியெஸ்ரி [/size]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=4081939930732427

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.