Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது - இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டது - இந்தியா

01 நவம்பர் 2012

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

சீ.பி.ஐ. அதிகாரிகளும், இந்திய புலனாய்வுப் பிரிவு முகவர்களும் அண்மையில் இலங்கைக்கு சென்று குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ராஜீவ் கொலையுடன் தொடர்பு உண்டா என்பது குறித்து குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜீவ் கொலைத் திட்டம் தொடர்பில் குமரன் பத்மநாதன் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், இந்தத் தாக்குதலுக்கான நிதி உதவிகள் எவ்வாறு கிடைக்கப் பெற்றன என்பது பற்றி தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் விஜயங்களை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் இலங்கை மற்றும் மலேசியாவிடம் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/84943/language/ta-IN/article.aspx

[size=4]அப்படியானால் ஏன் இந்தியா இன்றும் இராஜீவ் கொலை சம்பந்தமாக சர்வதேச காவல்துறை ஊடாக இவரை தேடிவருகின்றது?[/size]

[size=5]ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: கே.பி.[/size]

[size=4] [/size]

[size=4]முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.

இந்திய மத்திய புலனாய்வு, அதிகாரிகள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளதாக த இண்டியன் எக்ஸ் பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்த விசாரணையின் போது, முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை தொடர்பில் கே.பியிடம் வினவப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் இடம்பெற்ற இந்த விசாரணை தொடர்பான எவ்வித முன்னேற்ற அறிக்கைகளும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், அண்மையில் செய்தி சேவை ஒன்றுக்கு குமரன் பத்மநாதன் அளித்த செவ்வியில், தமக்கும் அந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1409

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.