Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் ரொறன்ரோ இசை நிகழ்ச்சி ரத்து! (காணொளி இணைப்பு)

Featured Replies

கனடாவில் இடம்பெறுவதாக இருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

நேற்று மாலை ஸ்காபுறோ அஞ்சப்பர் செட்டிநாட் உணவகத்தில் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வை ஏற்பாடுசெய்த டிரினிட்டி ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான டான்டன் பீற்றர் மற்றும் கிசான் நித்தி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

எமது சக்திக்கும் இசைஞானி இளையராஜா குழுவினரின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் இந்த இயற்கை அனர்த்தம் நிகழ்ந்து விட்டது.

எதிர்பாராத விதமாக சென்னையைத் தாக்கிய ‘நீலம்’ என்ற கடும் புயலின் காரணத்தினாலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரும் அழிவை ஏற்படுத்திய ‘சாண்டி’ புயலின் காரணமாக ஏராளமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாகவும் நவம்பர் 3 ஆம் திகதி ரொறான்ரோவில் நடைபெற இருந்த “எங்கேயும் எப்போதும் ராஜா” இசை நிகழ்ச்சி பிற்போடப்பட்டள்ளது என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையைத் தாக்கிய நீலம் புயலால் விமான நிலையம் மூடப்பட்டுவிட்டது.

[size=4]

இந்த எதிர்பாராத நிகழ்வுகளினால் கனடா நிகழ்ச்சியில் பங்கு பெற இருந்த கலைஞர்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு விட்டது.[/size][size=4]

ரசிகர்களிடமும், எங்களது வாடிக்கையாளர்களிடமும் இந்த மாற்றத்தினால் ஏற்படும் சங்கடங்களுக்காக மனப்பூர்வமான வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.[/size][size=4]

ஏற்கனவே அனுமதிச் சீட்டுக்கள் வாங்கியவர்கள் தங்களிடமுள்ள நுழைவுச் சீட்டுக்களை பாவித்து புதிய திகதியில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியை இரசிக்க முடியும்.அனுமதிச் சீட்டுக்களை திரும்பவும் ஒப்படைத்து பணம் பெற விரும்புகின்ற இரசிகர்கள் பணத்தினை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், நாங்களோ, எங்களது நிறுவனமோ எதற்கும் எதிரானவர்கள்அல்லர்.எனவே எதிர்வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் இசைஞானியின் இந்த இசை நிகழ்ச்சியை நாங்கள் திட்டமிட்ட முறையில் அதே றோஜர்ஸ் சென்ரரில் நடாத்துவோம்.முன்னர் திட்டமிட்டதை விட இன்னும் சிறப்பாக இசைஞானியின் இசை நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்.இயற்கையின் அனர்த்தத்தால் ஒத்தி வைக்கப்பட வேண்டிய நிலையில் எமது நிறுவனம் சில இலட்ச டொலர்களை நஷ்டமடைய வேண்டி இருந்தாலும், இசைஞானியின் ஆர்வம் அதிகமுள்ள ரசிகர்களை நாங்கள் மிக விரைவில் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்.அனைத்துத் தரப்பினருடனும் விரிவாக ஆலோசித்து இன்னும் பிரமாண்டமாக விரைவில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவோம்.[/size][size=4]

-கனடாவிலிருந்து ஆர்.என் லோகேந்திரலிங்கம்-[/size]

சண்டியால் கனேடிய விமான நிலையங்கள் மூடப்படவில்லை. இந்திய விமான நிலையங்களில் மூடப்படவில்லை. தாமதங்கள் மட்டுமே. அமெரிக்க விமான நிலையங்கள் கூட திறக்க தொடங்கிவிட்டன.

நான் நொவெம்பரில், புலம் பெயர் வாழ்நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதை எதிர்க்கவில்லை. அரசு தொடர்பான நிகழ்சிகளை எல்லா மாதங்களிலும் ஜனநாயக முறைகளை பின்பற்றி எதிர்ப்பேன். புலம் பெயர்நாடுகளில் நடைபெறும் எதிர்ப்பு நிகழ்சிகளில் அந்தந்த நாட்டு ஜனநாயக விழுமியங்களை பின்பற்றவேண்டும்.

ஆனால் இந்த அமைப்பு ஆரம்பம் தொடக்கம் சந்தேகத்திற்கிடமாகவே நடந்து வருகிறது.

"இந்த அமைப்பு அரசு தொடர்புடையது" என்று குற்றம் சாட்டப்பட்ட போது "எமக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பில்லை" என்று தெளிவாக ஒரு அறிக்கை வெளிவிட மறுத்தது.

இளையராஜாவின் ஒத்திகை பயணத்தில் அவர் திருப்தியாக இல்லாதது போல் காணப்பட்ட போது அதை பற்றி அலட்டிக்காமல் நடந்தது.

எதிர்ப்பு அதிகரித்த பின்னர் எதிர்ப்பாளர்களை, ஆர்வலர்களை அழைத்து இடைநடு முயற்சிகளுக்கு இடம்கொடுக்காமல், போடி போக்கான (வியாபாரரீதியானதல்லாத) அரசியல் அறிக்கை ஒன்றை வெளிவிட்டது.

ரிக்கெட் விலைப்பாடில் பாரிய வீழ்ச்சி கண்டபின்னர் வெட்டு விலைக்கு கொடுத்து நிகழ்ச்சியை முன்னெடெடுக்க போனது. இது அமைப்பு நட்டத்தில் நிகழ்சியை நடத்த பணம் எங்கிருந்து இவர்களுக்கு வரலாம் என்ற கேள்வியை எழுப்பி இவர்களையும் அரசையும் தொடர்பு படுத்தி கதைகள் வெளிவர வைத்தும் அவற்றை மறுக்காமல் வாளாவிருந்தது.

முள்ளிவாய்காலின் வைத்தியசாலை கொலைகளுக்கு செஞ்சிலுவை மட்டும்தான் என்பது நிரூபனமான பின்னர் தமிழ் மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் தம்மோடு சேரும்போது அவற்றில் நம்பிக்கை வைப்பது கிடையாது. இதை அறிந்திராதவர்கள் போல, நிகழ்ச்சி இனி மேலே போக முடியாததென்ற நிலைமை வந்த பின்னர், சர்வதேச தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுக்க முன் வந்தார்கள். ஆனால் எத்தனையோ நம்பிக்கையான தமிழர் அமைப்புக்கள் இந்த நன்மையை பெற முடியவில்லை. இதனால் இந்த அறிவிப்பு ஏற்கனவே நம்பிக்கை இழந்த நிகழ்ச்சி மீது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கடைசிவரைக்கும் நட்டத்திலும் இசை நிகழ்சியை நடத்த தயாராக இருப்பதாக நடித்து பொறுப்பில்லாமல் வெட்டு விலையில் ரிக்கெட் விற்றார்கள். ஒருவர் வந்தாலும் நிகழ்ச்சி நடை பெறும் என்று யதார்த்தமில்லாத அப்பட்டமான பொய்வார்த்தை கொடுத்து, ரிக்கெட் வாங்குபவர்களை ஏமாற்றி பணம் சேர்த்தார்கள். இது நிறுவனத்தின் அரசியல் குணத்தை தெளிவாக காட்டியது. இவர்களின் வியாபாரரீதியான நோக்கத்தை சந்தேகிக்க வைத்தது.

நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒருவர் வந்தாலும் நிகழ்ச்சி நடத்த தாயாக இருப்பத்தாக சொன்னவர்கள், அதில், தம்மில் ஒருவருக்கு வந்து சேர நேரம் தடங்கலாகியிருந்தால் நிகழ்ச்சி நடை பெறாது என்பதை சூசகமாக சொல்லியா இருந்தார்கள். விமான தடங்கல்களால் வரமுடியாதவர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் வந்திருக்க முடியாதா? இல்லை இவர்கள் பயணங்களில் விமானத்தடங்கல்கள் வருவதை அறிந்திருக்காதவர்கள் என்பதால் இப்படி ஒரு பிரமாண்ட நிகழ்சியை மாற்றுத்திட்டம் ஒன்று இன்றி ஒழுங்குபடுத்தினார்கள் என்கிறார்களா?

உண்மையானவர்கள் என்றால் இனி கூட வந்து நிகழ்ச்சியை நடத்த முடியும்

http://www.flightsta...portQueryType=0

சந்தர்ப்பம் கிடைத்த முதல் சம்பவத்தில் வெட்டு விலைக்கு விற்ற ரிக்கெட்டுகளுக்கு காப்புறுதி பெற நிகழ்சியை ரத்து செய்கிறார்கள். அதுதான் நடந்த உண்மை.

Edited by மல்லையூரான்

என்னை பொறுத்த வரை எந்த பெரிய புகழ் பெற்ற கொம்பனாக இருந்தாலும் எங்கள் போராட்ட காலத்தில் எங்களை திரும்பிக்கூட பார்க்காதவர்கள் இப்போ எங்களிடம் வரும்போது நிச்சயமாக எதிர்ப்பை எங்களது மன உணர்வை வெளிப்படுத்து வது அவசியம். அது இளைய ராஜாவுக்கும் பொருந்தும் எல்லாருக்கும் பொருந்தும்.

நாங்கள் ஒன்றும் எருமை மாடுகள் இல்லை உணர்வற்று நனைவதற்கு,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.