Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் மீண்டும் ஆரம்பமானது

Featured Replies

[size=4]அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரை மாநிலங்களைத் தாக்கி, நியு யார்க் மற்றும் நியு ஜெர்ஸி மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்திய சாண்டி சூறாவளியை அடுத்து கடந்த மூன்று நாட்களாக இரு பிரதான கட்சிகளாலும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிபர் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமையிலிருந்து மீண்டும் தொடங்கியது.[/size]

[size=4]அதிபர் ஒபாமா நேற்று புதன்கிழமை இரவுவரை நியூ ஜெர்ஸி மாநிலத்தில் புயல் பாதித்த பகுதிகளை அம்மாநில ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டியுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.[/size]

[size=4]புயலால் பாதிக்கபப்ட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ஒபாமா, நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.[/size]

[size=4]இன்று அதிபர் ஒபாமா நெவாடா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.[/size]

[size=4]இந்த மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க வல்ல போர்க்கள மாநிலங்கள் பட்டியலில் அடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]அதேபோல, குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னியும், மற்றுமொரு போர்க்கள மாநிலமான புளோரிடாவில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவரும் சாண்டியால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அங்கே குறிப்பிடத் தவறவில்லை.[/size]

[size=4]இதனிடையே, சாண்டி புயல், இந்த அதிபர் தேர்தலில் கடும் போட்டியை எதிர்கொண்டிருந்த அதிபர் ஒபமாவுக்கு ஓரளவு கைகொடுத்திருப்பது போல தோன்றுகிறது. சாண்டி போன்ற ஒரு பெரிய இயற்கை பேரழிவு நடந்த நிலையில், கட்சி மாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் தலைமைத் தளபதி என்ற நிலையில், அவர் பங்காற்றியிருக்கிறார் என்று பொதுவான ஒரு தோற்றப்பாட்டை அவரது நடவடிக்கைகள் உருவாக்கியிருக்கியிருப்பதாக செய்தி ஊடகங்களும் விமர்சகர்களும் கூறுகிறார்கள்.[/size]

[size=4]தேர்தல் பிரச்சாரத்தை அவர் முன்பே இடைநிறுத்தி தலைநகர் வாஷிங்டனுக்கு விரைந்து வந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்னர் புயல் நிவாரணப்பணிகளையும் மேற்பார்வை செய்தமை, அவரின் சரிந்து கொண்டு வந்த கருத்துக் கணிப்பு புள்ளிகளை மீண்டும் தூக்கி விட்டிருப்பது போல தோன்றுகிறது.[/size]

[size=4]நியு ஜெர்ஸி மாநிலத்தின் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி குடியரசுக் கட்சியை சேர்ந்தவர். அதிபர் ஒபாமாவை பத்து நாட்களுக்கு முன்புவரை கூட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கடுமையாக விமர்சித்து வந்த இவர், புயல் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு அதிபர் ஒபாமா அளித்து வரும் ஒத்துழைப்பை வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது, ஒபாமாவிற்கு பெரிதும் அரசியல் ரீதியாக இந்த சிக்கலான கால கட்டத்தில் உதவியிருக்கிறது என்றே கூறலாம்.[/size]

[size=4]இன்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமும் நடத்திய கருத்துக் கணிப்பில், [size=5]ஒபாமாவுக்கு 49 சதவீத வாக்குகளும், ரொம்னிக்கு 49 சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கின்றன[/size]. இந்த கருத்துக் கணீப்பு ஒக்டோபர் 27 லிருந்து 30 வரை நடத்தப்பட்ட ஒன்றாகும். அதாவது புயல் தாக்கிய கால கட்டம்.[/size]

[size=4]அதேபோல ஏறக்குறைய இதே காலகட்டத்தில் குடியரசுக் கட்சிக்கு சாதகமான ஒரு ஊடகமாகப் பார்க்கப்படுகின்ற பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் [size=5]மற்றுமொரு கருத்துக் கணிப்பு, ஒபாமாவும், ரோம்னியும் தலா 46 சதவீத வாக்குகளைப் பெற்று சம நிலையில் இருப்பதாகவே காட்டுகிறது[/size].[/size]

[size=4]நியூயார்க் டைம்ஸ் நாளேடும், சிபிஎன் நியூஸ் நிறுவனமும் , புயல் தாக்கியதற்கு சற்று முன்பு நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், [size=5]ஒபாமா 48 சதவீதமும், ரோம்னி 47 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர்[/size]. எனவே சராசரியாக இரு வேட்பாளர்களும் ஏறக்குறைய சமநிலையில் இருப்பது போலவே இந்தக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.[/size]

[size=4]ஆகவே வரும் ஒரு சில நாட்களில், தேர்தல் பிரச்சாரம் மீண்டும் உச்சகட்டத்துக்கு செல்லும் என்பது நிச்சயம்.[/size]

http://www.bbc.co.uk/tamil/global/2012/11/121101_uscampainresume.shtml

  • தொடங்கியவர்

[size=5]சற்று முன்னர் வெளியான வேலை வாய்ப்புகள் பற்றிய புள்ளி விபரம் ஒபாமாவுக்கு பலம் சேர்க்கலாம்![/size]

[size=6]Pre-Election Jobs Report Shows Some Gain; Rate 7.9%[/size]

[size=5]American job creation improved in October with 171,000 new jobs but the unemployment rate moved higher to 7.9 percent, setting the stage for a final push to the finish line in the heated presidential campaign.[/size]

[size=5]Economists had been expecting the report to show a net of 125,000 new jobs and a steadying of the unemployment rate at 7.8 percent. Nomura Securities predicted the rate would fall to 7.7 percent, but most expected no change.[/size]

[size=5]Most of the job creation came in the services sector, with a gain of 150,000, while government employment rolls saw a collective decrease of 13,000.[/size]

[size=5]A broader measure of unemployment that includes discouraged workers and those employed part-time who would rather work full-time ticked lower to 14.6 percent.[/size]

[size=5]The labor force participation rate, a key metric that measures those working and looking for jobs, edged higher to 63.8 percent after wallowing around 31-year lows for the past several months.[/size]

[size=5]Unemployment for blacks showed the highest increase in the survey, surging to 14.3 percent from 13.4 percent.[/size]

[size=5]Also, the average duration of unemployment climbed to a 2012 high of 40.2 weeks.[/size]

http://finance.yahoo.com/news/pre-election-jobs-report-shows-124021282.html

  • தொடங்கியவர்

[size=5]நியூயோர்க் நகரமேயர் ஒபாமாவுக்கு ஆதரவு[/size]

[size=4]சான்டி புயலுக்கு பின்னர் பெரியளவில் அமெரிக்காவில் பேசப்படும் நபர் நியூயோர்க் சிற்றி முதல்வர் மிச்சேல் புளும்பேர்க் ஆகும்.[/size]

[size=4]புயலினால் ஏற்பட்ட பாதிப்பக்களுக்கு மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து குறுங்காலத்தில் நல்ல பெயரையும் தேடிக் கொண்டுள்ளார்.[/size]

[size=4]அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் எதிரணியான றிப்பப்ளிக்கன் கட்சியை சேர்ந்த இவர் தமது கட்சியின் வேட்பாளர் மிற் றொம்னியை கைவிட்டு, அதிபர் பராக் ஒபாமாவையே அதிபர் தேர்தலில் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]ஏற்கெனவே றிப்பப்ளிக்கன் கட்சியை சேர்ந்த கொலின் பவல் ஒபாமாவுக்கே ஆதரவு என்று வெளிப்படையாக அறிவித்துவிட்ட பின் நேற்று முன்தினம் நியூயேர்சியின் றிப்பப்ளிக்கன் கவர்னர் கிறிஸ்டியும் ஒபாமாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில்லை என்ற அறிவித்த பின் ஏற்பட்டுள்ள இன்னொரு திருப்பம் இதுவாகும்.[/size]

[size=4]மிச்சேல் புளும்போர்க் நியூயோர்க் சிற்றியில் வெப்பம் பெருகி வருவதாகவும், ஒபாமாவின் காலநிலை, புவிவெப்பமாதலை தடுக்கும் கொள்கைகள் நியூயோர்க் சிற்றிக்கு பொருத்தமாக இருப்பதால் அவரையே ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.[/size]

http://www.alaikal.com/news/?p=116363

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இன்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் ஏபிசி நியூஸ் செய்தி நிறுவனமும் நடத்திய கருத்துக் கணிப்பில், [size=5]ஒபாமாவுக்கு 49 சதவீத வாக்குகளும், ரொம்னிக்கு 49 சதவீத வாக்குகளும் கிடைத்திருக்கின்றன[/size]. [/size]

மீதமுள்ள‌ அந்த 2% வாக்குகள் யாழ்களத்தின் அமெரிக்க மெம்பர்களுக்கு உரித்தானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்..! :D இதனால் ஜஸ்ரின், நுணாவிலான், எரிமலை, மருதங்கேணி, மல்லையூரான் போன்றவர்களுக்கு அமெரிக்காவில் திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது..! :wub:

மீதமுள்ள‌ அந்த 2% வாக்குகள் யாழ்களத்தின் அமெரிக்க மெம்பர்களுக்கு உரித்தானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்..! :D இதனால் ஜஸ்ரின், நுணாவிலான், எரிமலை, மருதங்கேணி, மல்லையூரான் போன்றவர்களுக்கு அமெரிக்காவில் திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது..! :wub:

நன்றி இசை.

புயலின் போது ஓபாமாவின் அக்கறையான, நேரத்துடனான நடவடிக்கைகள் ஜனநாயகட்சிக்கு சாதகம் என்ற கருத்து எவ்வளவு சரி என்பதை தேர்தல்தான் சொல்ல வேண்டும். பிரதானமாக, புயல் வீசியது ஜனநாயக கட்சி மானிலங்கள் மீதே. இதில் ஒபாமா செயல்ப்படாமல் இருந்திருந்தால் அவற்றை இழந்திருப்பாரா தெரியாது. ஆனால் செயல்ப்பட்டதால் அவருக்கு இந்த மானிலங்களில் ஆதாயம் ஒன்றும் இல்லை.

1. ஆளுனர் கிறிஸ்ரி ஒபாமவை தேர்தலில் ஆதரிக்காவிட்டாலும் பகிரங்கமாக ஒபாமாவை புகழ்ந்தது மெல்லிய தாகத்தை நாடு முழுவதும் கொடுத்திருக்கும். அவரை நாடு முழுவதுக்கும் தெரியும் என்பது மட்டுமல்ல, பிரபல ஜனநாயகட்சி எதிர்ப்பாளனாகிய அவர் ஒபாமாவை புகழ்வது வசிட்டர் வாயால் விசுவாமித்திரராகும்.

2. குடியரசுக்கட்டி மேயர் மைக்கேல் புளூம்பேக் ஒரு சுயேட்சை வாதியாக கருதப்படுபவர். இவர் ஒபாமாவை ஆதரிக்கும் போது கொடுத்த காரணம் சுவாத்திய மாற்றம். இப்போது சுவாத்திய மாற்றக்கதைகள் அமெரிக்காவில் ஒரு மந்த நிலை கண்டுவிட்டன. தேர்தலில் யாரும் அதை உசுப்பேத்தவும் இல்லை. எனவே இதன் பலனை கண்டுபடிப்பது கஸ்டமாக இருக்கும்.

சில கருத்து கணிப்புகளின் படி ஒபாமா ஒகாயோவை வெல்வார் என்றும் இதனால் இவர் திரும்பி வருவார் என்றும் கூறுகின்றன. அதிக பட்சம் எதிர்பார்ப்பு காட்டும் கருத்து கணிப்புகள் அவர் 2008ல் வென்ற மானிலங்களில் வட கரோனினாவைத்தவிர மற்றயவை எல்லாவற்றையும் இந்த முறையும் பெறுவார் என்கின்றான. ஆனாலும் இப்போதைய பார்வையில் புளோரிடாவையோ அல்லது கொலராடாவையோ பெற்றாரானால் அது ஆச்சரியமே.

எமக்கு வெற்றி மட்டும்தான் தேவை எனபதால் ஓகாயோவே போதும்.

  • தொடங்கியவர்

[size=5]வாக்கு புள்ளிகளில் விளையாடுகிறது தேர்தல் களம்…[/size]

[size=2][size=4]கடந்த 2000 ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் ஐனநாயகச் கட்சி வேட்பாளர் ஆன அல் கோர் அரைமில்லியன் வாக்குகளை குடியரசு கட்சி வேட்பாளர் யோஷ் புஷ்சுக்கு எதிராக பெற்றுக்கொண்டார். ஆனால் வல்மன் எனச் சொல்லக்கூடிய அதிகூடிய புள்ளிகளை பெற்ற யோஷ் புஷ் சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.[/size][/size]

[size=2][size=4]இதே போன்று இம்முறை தேர்தல் முடிவுகளும் அமையலாம் என பல ஊடகங்கள் தெரிவிக்கின்ற போதும் வழமைபோல் நிலையற்ற மாநிலங்களின் இம்முறைத் தேர்தலிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே தற்போதைய கணிப்புகளில் அதிகூடிய புள்ளிகளின் ( வல்மன்) நிலவரங்களையும், மாற்றம் செய்யக்கூடிய இந்ந மாநிலங்களின் தற்போதைய நிலைமைகளையும் அவதானிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 530 வல்மன்கள் ( புள்ளிகள் ) உண்டு. ஒவ்வொரு மாநிலத்தில் வசிக்கும் பொதுமக்களின் தொகையை அடிப்படையாக வைத்து வல்மன்கள் பிரிக்கப்பட்டுள்ளது. சனத்தொகை கூடிய மாநிலமான கலிபோனியா மாநிலத்தில் 55 வல்மன்களும், ஒரு சிறிய சனத்தொகையுடன் இருக்கும் மாநிலமான வடக்கு டக்கோத்தாவிற்கு 3 வல்மன்களும் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.[/size][/size]

[size=2][size=4]வரும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மிற் றொமினியோ சரி, ஐனநாயக்கட்சி வேட்பாளர் பராக் ஓபாமாவோ சரி மொத்தமாகவுள்ள இந்த 530 வல்மன்களில் பெருபான்மையான 270 வல்மன்களைப் பெறும் சனாதிபதி வேட்பாளர் அடுத்த சனதாதிபதியாகப் தெரிவு செய்யப்படுவார்.[/size][/size]

[size=2][size=4]தற்போதைய கணிப்புகளில் பரக் ஓபாமா 172 வல்மன்களையும், மிற் றொமினி 142 வல்மன்களையும் உறுதியாக பெறமுடியுமென கணிப்புகள் கூறுகின்றன. மேலும் இந்த கணிப்புகளில் மேலதிகமாக 75 வல்மன்களை கூடிய பச்சம் பரக் ஓபாமா பெறுவார் என்றும் மிற் றொமினி 49 வல்மன்களை தம்பக்கம் பெற்றுக்கொள்ள கூடுதலான வாய்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றன.[/size][/size]

[size=2][size=4]இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது பரக் ஓபாமா 247 வல்மன்களையும், மிற் றொமினி 191 வல்மன்களையும் பெற வாய்புள்ளது. ஆனால் இங்கு எஞ்சியுள்ள 100 வல்மன்களை தம் பக்கம் பெறுவதற்கான இறுதி தேர்தல் பிரச்சாரங்கள் இரவு பகலாக சில குறிப்பிட்ட மாநிலங்களில் மின்னல் வேகத்தில் நடந்த வண்ணம் உள்ளது.[/size][/size]

[size=2][size=4]தற்போதைய கணிப்புகளின் படி பெருபான்மையான 270 வல்மன்களை பெறுவதற்கு பராக் ஓபாமாவிற்கு 23 வல்மன்களும், மிற் றொமினிக்கு 79 வல்மன்களும் தேவைப்படுகின்றன. எனவே இதை அடிப்படையாக கருத்தில் கொண்டே பராக் ஓபாமா மீண்டும் சனாதிபதியாக வருவதற்கு கூடிய வாய்புகள் உள்ளதென ஊடகங்கள் கூறுகின்றன போலும்.[/size][/size]

[size=2][size=4]நிலையற்ற மாநிலங்கள்[/size][/size]

[size=2][size=4]பொதுவாக பொதுத் தேர்தல் வரும் பொழுது நிலையற்ற மாநிலங்களின் ( ஸ்விங் ஸ்ரேடஸ் ) முடிவுகளில் அமெரிக்க சனாதிபதியின் வெற்றி, தோல்வி முடிவு செய்யப்படுகின்றது.[/size][/size]

[size=2][size=4]இந்த விடயம் உண்மை என்று சொல்லும் அளவிற்கு இம்முறையும் இந்த மாநிலங்களின் முடிவுகள்ளில் இரு சனாதிபதி வேட்பாளர்களும் தங்கியுள்ளனர். தற்போதைய கணிப்புகளில் 100 வல்மன்களை பிரதிநிதிதப்படுத்தம் இந்த எட்டு மாநிலங்களை கீழே அவதானிப்போம்.[/size][/size]

[size=5]1. Nevada, ( 6 ) [/size]

[size=5]2. Colorado, (9) [/size]

[size=5]3. Iowa, (6) [/size]

[size=5]4. Ohio, (18)[/size]

[size=5]5. New Hampshire, (4) [/size]

[size=5]6. Virginia, (13)[/size]

[size=5]7. North Carolina, (15) [/size]

[size=5]8. Florida (29).[/size]

[size=2][size=4]ஆறு வல்மன்களை கொண்டிருக்கம் நெவேடா மாநிலத்தில் பராக் ஓபாமா 50 வீத வாக்குகளையும், மிற் றொமினி 47 வீத வாக்குகளை பெற வாய்புள்ளதாக கூறப்பட்டாலும் இறுதி நேரத்தில் இதே போன்று அமையாது என்றும் கூறப்படுகின்றது.[/size][/size]

[size=2][size=4]ஓன்பது வல்மன்கனை கொண்டிரக்கம் கொலராடோ மாநிலத்தில் பராக் ஓபாமா 47 வீத வாக்குகளையும், மிற் றொமினி 48 வீத வாக்குகளை பெற வாய்புள்ளதாக கூறப்படுகின்றது. இங்கேயும் கடும் போட்டி நிலவுதை அவதானிக்கலாம்.[/size][/size]

[size=2][size=4]ஆறு வல்மன்களை கொண்டிருக்கம் ஐயோவா மாநிலத்தில் பராக் ஓபாமா 49 வீத வாக்குகளையும், மிற் றொமினி 46 வீத வாக்குகளை பெற வாய்புள்ளதாக கூறப்படுகின்றது.[/size][/size]

[size=2][size=4]கடந்த சில தினங்களாக இரு வேட்பாளர்களும் ஓகாயோ மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் முழு கவனத்தையும் இந்த மாநிலத்தில் செலுத்தியுள்ளார்கள். பதினெட்டு வல்மன்களை கொண்டிருக்கம் ஓகாயோ மாநிலத்தில் பராக் ஓபாமா 49 வீத வாக்குகளையும், மிற் றொமினி 46 வீத வாக்குகளை பெற வாய்புள்ளதாக கூறப்பட்டாலும் இறுதி நேரத்தில் இதே போன்று அமையுமா என உறுதியாக கூறமுடியாது.[/size][/size]

[size=2][size=4]நான்கு வல்மன்களை கொண்டிருக்கம் நியு காம்ஸ்ச மாநிலத்தில் பராக் ஓபாமா 49 வீத வாக்குகளையும், மிற் றொமினி 48 வீத வாக்குகளை பெற வாய்புள்ளதாக கூறப்பட்டாலும் இந்த மாநிலம் எந்தப்பக்கமும் மாறலாம் எனச் சொல்லப்படுகின்றது.[/size][/size]

[size=2][size=4]பதின்மூன்று வல்மன்களை கொண்டிருக்கம் வெய்யீனா மாநிலத்தில் பராக் ஓபாமா 47 வீத வாக்குகளையும், மிற் றொமினி 47 வீத வாக்குகளை பெற வாய்புள்ளதாக கூறப்பட்டாலும் அடுத்த சனாதிபதி இந்த மாநிலத்தில் தான் முடிவு செய்யப்படுமோ தெரியவில்லை.[/size][/size]

[size=2][size=4]பதின்ஐந்து வல்மன்களை கொண்டிருக்கம் நோத் கறோலினா மாநிலத்தில் பராக் ஓபாமா 46 வீத வாக்குகளையும், மிற் றொமினி 48 வீத வாக்குகளை பெற வாய்புள்ளதாக கூறப்படுகின்றது.[/size][/size]

[size=2][size=4]இருபத்தொன்பது வல்மன்களை கொண்டிருக்கம் ப்புளோரிடா மாநிலத்தில் பராக் ஓபாமா 48 வீத வாக்குகளையும், மிற் றொமினி 48 வீத வாக்குகளை பெற வாய்புள்ளதாக கூறப்பட்டாலும் இந்த மாநிலம் இரு வேட்பாளரின் வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் மாநிலமாகவும் அமைந்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]சூரிய மாநிலம் என வர்ண்ணிக்கப்படும் இந்த மாநிலத்தில் லத்தீன் அமெரிக்கர்கள் கூடுதலாக வசிக்கின்றனர். இந்த சூரிய மாநிலமான ப்புளோரிடா கடலை அண்டி அமைந்துள்ளதால், கடந்ந பல வருடங்களாக செல்வந்த வயோதிபர்கள் வேறு மாநிலங்களில் இருந்து, இங்கு குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த செல்வந்த வயோதிபர்களின் வாக்குகள் குடியரசுக்கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.[/size][/size]

[size=2][size=4]ஏன் இந்த எட்டு மாநிலங்கள்தான் சனாதிபதி தேர்தல் முடிவு தங்கியுள்ளது ஏனைய நாற்பத்திரண்டு மாநிலங்களின் நிலவரங்கள் என்ன என்ற கேள்விக்கு விடை காண்போமானால், ஏற்கனவே பல மாநிலங்களில் பராக் ஓபாமா முண்ணனியிலும், மிற் றொமினியும் முண்ணனியிலும் உள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]உதாரணத்தக்கு கலிபோனியா மாநிலத்தில் பராக் ஒபமா 55 வீதமான வாக்குகளையும், மிற் றொமினி 35 வீத வாக்குகளையும் பெற வாய்புள்ளதாக கூறப்படுகின்றது. இந்ந கணிப்புகளையும் மீறி இந்த மாநிலத்தில் மிற் றொமினி வென்றால் நேரடியாக வெள்ளை மாளிகைதான்.[/size][/size]

[size=2][size=4]இதே போன்று இன்னொரு பெரிய மாநிலமான ரெக்ஸ்சஸ் மாநிலத்தில் மிற் றொமினி 55 வீத வாக்குகளையும், பராக் ஓபாமா 39 வீதமான வாக்குகளை பெற வாய்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. இதையும் தாண்டி பராக் ஓபாமா இந்த மாநிலத்தில் வென்றால் தொடர்ந்தும் நான்கு வருடஙகள் வெள்ளை மாளிகையில் ஓபாமா இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.[/size][/size]

[size=2][size=4]எனவே வரும் செய்வாய்க்கிழமை நடக்கவுள்ள அமெரிக்காவின் சனாதிபதித் தேர்தலில் மேல் குறிப்பிட்ட மாநிலங்களின் முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறுவதோடு, இந்த முடிவுகள் பெருபான்மையான 270 வல்மன்களை வேட்பாளருக்கு பெற்றுக் கொடுக்கும் என்றும் கூறமுடியும்.[/size][/size]

[size=2][size=4]கடந்த சனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையான வெள்ளை அமெரிக்க வாக்காளர்கள் பராக் ஓபாமாவை ஆதரித்திருந்தார்கள் , இம்முறைத் தேர்தலிலும்; இந்த வாக்காளர்களின் ஆதரவு பராக் ஓபமாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வாக்காளரின் ஆதரவை தொடர்ந்தும் தங்கவைத்துள்ளாரா என்பதைத் தேர்தல் முடிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=116467#more-116467

  • தொடங்கியவர்

[size=6]அமெரிக்க அதிபர் தேர்தல்: இலங்கைத் தமிழர்கள் ஆதரவு யாருக்கு?[/size]

[size=4]அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கிருக்கும் இனச்சிறுபான்மையரின் மனோநிலை எவ்வாறு இருக்கிறது?[/size]

பெற்றோரில் ஒருவர் கறுப்பர் என்பதால் அரைக் கறுப்பினத்தவரான பராக் ஒபாமா 2008 அதிபர் தேர்தலில் வென்றது அமெரிக்க அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பார்க்கப்பட்டது.

[size=4]உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு, மிகவும் சக்திவாய்ந்த ஜனநாயகம் என்றெல்லாம் அடைமொழிகள் கொடுக்கப்படும் அமெரிக்காவில், கறுப்பின மக்களுக்கு சம உரிமைகள் கிடைக்கவே 20 நூற்றாண்டின் இரண்டாம் பாதி வரை கறுப்பினத்தவர்கள் போராட வேண்டியிருந்தது.[/size]

[size=4]இந்தப் பின்னணியில், 2008ல் ஒபாமா அடைந்த வெற்றி இனச்சிறுபான்மையர்களூக்கு அமெரிக்க ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது எனலாம்.[/size]

[size=4]ஆப்ரிக்க அமெரிக்கர்கள் தவிர மற்றுமொரு முக்கிய இனச்சிறுபான்மையரான ஹிஸ்பானியர்கள் எனப்படும் ஸ்யானிய மொழி பேசும் மெக்சிகர்கள் மற்றும் இந்தியர்கள், சீனர்கள் போன்றோர் இந்த தேர்தலிலும் பொதுவாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.[/size]

[size=4]ஒபாமா ஒரு இனச்சிறுபான்மையைச் சேர்ந்தவர் என்பது ஜனநாயகக் கட்சிக்கு, சிறுபான்மையினரின் ஆதரவை சேர்க்கிறது என்ற கருத்து வெளிப்படுகிறது.[/size]

[size=4]இந்நிலையில் இலங்கைத் தமிழர்கள் இத்தேர்தலை எப்படிப் பார்க்கிறார்கள்?[/size]

[size=4]தமிழர்கள் ஒரு குழுவாக அமெரிக்க தேர்தலில் தலையிட்டது என்பது கடந்த 2008ம் ஆண்டு தேர்தலின் போதுதான் என்று கருதப்படுகிறது.[/size]

[size=4]இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் அது. போரை நிறுத்தவும், இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்காணவும் , அமெரிக்காவில் குடியேறிய மிகச் சொற்ப எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்களில் ஒரு குழுவினர், டமில்ஸ் ஃபொர் ஒபாமாஎன்ற ஒரு அமைப்பைத் தோற்றுவித்து, பராக் ஒபாமாவிற்காக ஆதரவு திரட்டினர்.[/size]

[size=4]இந்த அமைப்பு தற்போதும் இயங்குகிறது. ஒபாமாவுக்கு ஆதரவு தருகிறது.[/size]

[size=4]அமெரிக்கத் தேர்தலில் ஒரு பாரிய தாக்கத்தைச் செலுத்தும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[/size]

[size=4]ஆயினும், தமிழர்களின் வாக்க்கள் குறைவானதாக இருந்தாலும், கடும் போட்டி நடக்கும் போர்க்கள மாநிலங்களில் தமிழர்களின் சொற்ப வாக்குகள் கூட முடிவை நிர்ணயிப்பதாக அமையலாம் என டமில்ஸ் ஃபொர் ஒபாமா வாதிடுகிறது.[/size]

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/11/121103_sltamilamericaelection.shtml

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களில் சிலர் ரொம்னிக்கு ஆதரவு..! பஸ் பயணத்தில் இருக்கிறார்களாம்..!!

http://www.lankanewspapers.com/news/2012/11/79713_space.html

  • தொடங்கியவர்

[size=6]அமெரிக்கா: 'போர்க்கள' மாநிலங்களில் உச்சகட்ட பிரச்சாரம்[/size]

[size=4]அமெரிக்காவில் அடுத்த செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நிலையில் உள்ள மாநிலங்களில்-அதாவது யாருக்கு ஆதரவு கிடைக்கும் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியாத 'போர்க்கள மாநிலங்களில்' இரண்டு வேட்பாளர்களும் இறுதிக்கட்ட சூறாவளிப் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.[/size]

பராக் ஒபாமா ஓஹியோ, விஸ்கோன்சின், ஐயோவா மற்றும் வேர்ஜினியா ஆகிய மாநிலங்களில் இன்று சனிக்கிழமை பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்.

[size=3][size=4]நியூ ஹாம்ப்ஷையர், ஐயோவா மற்றும் கொலராடோ ஆகிய மாநிலங்களில் மிட் ரோம்னி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.[/size][/size]

[size=3][size=4]கருத்துக் கணிப்புகளின் படி, கடுமையான போட்டி நிலவும் சில மாநிலங்களில் ஒபாமா சற்று முன்னணியில் இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் இருவரும் சமநிலையில் தான் இருக்கிறார்கள்.[/size][/size]

[size=3][size=4]சாண்டி சூறாவளியின் பின்னர் அந்த இயற்கை அழிவை கையாண்ட விதம் தொடர்பில் அதிபர் ஒபாமாவுக்கு நல்ல பாராட்டுகள் கிடைத்துள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[/size][/size]

[size=3][size=4]நியு யோர்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க்கின் ஆதரவும் ஒபாமாவுக்கே கிடைத்திருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]அமெரிக்க தேர்தல் சட்டப்படி, மக்கள் நேரடியாக அளித்த வாக்குகளில் பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்கு மேலதிகமாக, 'தேர்வு செய்வோர் அவையில்' (electoral college) 270 வாக்குகளை பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.[/size][/size]

[size=3][size=4]இதனால் மிக நெருக்கமான போட்டி நிலவுகின்ற சிறிய மாநிலங்களின் வாக்குகளும் இம்முறை தேர்தலில் தீர்க்கமானவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[/size][/size]

[size=3][size=4]எனவே, அதிபரைத் தேர்வு செய்யும் அவையில் 18 உறுப்பினர்களைக் கொண்ட ஓஹியோ மாநிலத்தின் ஆதரவு அதிபரை தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/global/2012/11/121103_usswingstates.shtml

எல்லாம் நல்ல இணைப்புக்கள் அகுதா. (electoral college) என்ற சிக்கல் எனக்கு அண்மை காலம் வரையும் விளங்கவில்லை. பலகாலம் வரையும் ஏன் அல்கோர் தோற்றார் என்பதை சரியாக விளங்க முடியவில்லை. இந்த மூன்றும், தேர்தலில் ஆர்வமுள்ள எவர்க்கும் அதை எளிதாக விளங்க வைக்கிறது.

ஒபாமாவின் நிலை ஒகாயோவை அல்லது புளோரிடவை வென்றால் பதவிக்கு வரமுடியும். மற்றவையை வென்றால் எத்தனையை வெல்ல வேண்டும் என்பது சிறிய கணக்கு போடவேண்டும்.

புளோரிடா கிஸ்பானிக் சமுதாயம், கிளிரன் கஸ்ரோவுக்கு எதிராக போக மறுத்ததன் பின் குடியரசுக் கட்சியுன் நிற்கிறார்கள். அது தற்காலிகம் என்றாலும் இந்த தேர்தலில் அதில் பெரிய மாற்றம் இருக்காது. எனவே ஒபாமா ஓகாயஒவை திருப்பிவிட்டார் ஆனால் தேர்தல் வென்றமாதிரித்தான். ஆகவே ரோமினி ஒபாமவை சரிக்கு சரி பந்தயத்தில் இழுக்க வேண்டுமாயின் ஒபாமா ஒகாயோவை பெற்று அவர் முன்னணியில் நிற்பதை தடுக்க வேண்டும். இதனால் ரோமினி பெருந்தொகயான பணத்தையும் நேரத்தயும் அங்கே போடுகிறார். இது ஒபாமா தனது பணத்தையும் நேரத்தயும் கூட அங்கே போடவைக்கிறது. இந்த விளம்பரங்களால் அந்த பக்க மக்கள் தாம் தொலை காட்சி, தொலை பேசி என்பவற்றை பாவிப்பது கூட கஸ்டமாக இருக்கிறது என்று முறையிடுகிறார்கள். தெருக்கள், தலைவர்கள் அங்கே போவதால் அடிக்கடி தடைப்படுகிறது.

  • தொடங்கியவர்

[size=4]கனடாவிலும் கூட இந்நிலை உள்ளது. உதாரணத்திற்கு ஒரு மாநிலமான பிரின்ஸ் எட்வேர்ட் ஐலாண்டில் உள்ள மக்கள் தொகை - ஒரு இலட்சம் அளவில். ஆனால் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டும் உறுப்பினர்கள் - நாலு. அதேவேளை இராதிகா அவர்கள் தெரிவான தொகுதியில் உள்ள மக்கள் எண்ணிக்கை - அண்ணளவாக ஒரு இலட்சம். [/size]

[size=1]

[size=4]இப்படி பார்த்தால் தாயகத்தில் தமிழர் பிரதிநிதிகள் அதிகமாக இருக்கவேண்டும், ஆனால் அங்கே மேலும் மேலும் குறைக்க பார்க்கின்றனர். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.