Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பிறப்புரிமையியல் தகவல்


Recommended Posts

பதியப்பட்டது

பிறப்புரிமையியல் பரம்பரைத் தகவல்களை விலங்குகளில் காவுவது தாய் மற்றும் தந்தையில் இருந்து வரும் புணரிக்கலங்களில் உள்ள டி என் ஏ (DNA) என்பது யாவரும் அறிந்ததே..! தற்போது டி என் ஏ வகையினை ஒத்ததும் புரதத் தொகுப்பில் பங்கு வகிப்பதுமான ஆர் என் ஏயும் (RNA) எம் ஆர் என் ஏ (mRNA) வடிவில் பரம்பரை அலகுக்குரிய இயல்புகளை காவுவதாக ஓர் அரிய ஆர்ச்சரியத்துக்குரிய ஆய்வுத்தகவலை நேச்சர் (Nature)வெளியிட்டுள்ளது..!

இது குறித்து ஆர்வமுள்ள யாழ் கள உறுப்பினர்கள் கீழுள்ள முகவரியில் மேலதிக தகவலை ஆங்கிலத்தில் அறியலாம்..!

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5011826.stm

மீண்டும் அவசியம் தேவை கருதின் சந்திக்கும் வரை செய்திகளுடன் குருவிகள்..!

Posted

தகவலுக்கு நன்றிகள் குருவிகள்.

Posted

நன்றி குருவிகள் இங்கு இணைத்தமைக்கு

Posted

அட இரண்டு பேர் என்றாலும் இவற்றையும் வாசிக்கிறீங்கள்..கவனம் அறிவு பெருகிடும் என்று கவலைப்படப் போகினம்..! :wink:

சமூகத்துக்கு உதவாததுகள் கதைக்க என்டா... இல்ல சமூகத்தில உதவாததுகளை வைச்சு ஒரு பமிலி கதை எழுதினா..குழந்தைல இருந்து கிழவன் வரை வாசிக்கும்..காலமிது..! :wink: :P

Posted

என்ன குருவிகள் கொஞ்சம் சூடாக இருப்பது போல் தெரிகிறது? யார் மீது எப்படி கோவம்? தகவலுக்கு நன்றிகள்!

Posted

ஐயோ...சூடா இல்லை... யாழில விஞ்ஞானம் அறிவியல்...ஏன் அதிகம் பேசப்படுறதில்லை. அதிகம் பேர் படிச்ச இல்ல படிக்கிற பெருமக்களாத்தான் இங்க வருகினம்..நாங்கள் எல்லாம் அந்தளவுக்கு படிக்கல்ல..! ஆனால் வாசிப்பதையாவது பகிர்ந்து கொள்ள நினைக்கிறம். மற்றவர்கள் எங்களை விட அதிகம் பங்களிக்கலாம். நவீன விஞ்ஞான உலகில் தினம் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் 1 வீதம் கூட எம்மக்களை அடைகிறதா...??! ஆங்கிலப் பத்திரிகைகள் சாதாரண செய்திகளோடு விஞ்ஞானச் செய்திகளுக்கும் முக்கியம் அளிப்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள்..! அண்மையில் மரபணுரீதியில் முற்றிலும் புற்றுநோய் வாய்ப்பு தவிர்க்கப்பட்ட மனித முளையம் ஒன்று உருவாக்கப்பட்டது. அது பல செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக வர பலராலும் வியந்து பேசப்பட்டது..ஆனால் யாழில்...???! ஏன் இந்த நிலை...! அதுதான்..! :P :idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிச்சயமாக குருவிகள்! ஆனால் உங்களைப் போன்ற ஓரிருவருக்குத் தான் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட தெளிவு அதிகம்!(சத்தியமாக ஜஸ் அல்ல இது) எம்மால் வாசிக்கமுடியுமே தவிர, அது பற்றி கருத்துக் கூறத் தகுதியில்லை! நீங்கள் போடுங்கள்! நாங்கள் வாசிக்கின்றோம்! இந்த சில நாட்களில் 185 பேர் பார்த்திருக்கின்றார்கள் என்பதையும் கணக்கில் வைத்தால் உங்களுக்கு பார்வையாளர்கள் பற்றித் தெரியும்!

Posted

ஐயோ தூயவன். நமக்கு விஞ்ஞானம் பெரிசா தெரியாது. அதை யாழ் களத்தில் பல விஞ்ஞான வல்லுனர்கள் தங்கள் பலமான சுய ஆய்வுக் கருத்துக்கள் மூலம் நிரூபித்து வேறு இருக்கின்றனர். இருந்தும் நாம் நமக்குள் விளங்கிக் கொண்டதை மற்றவர்கள் பார்வைக்கும் வைக்க முற்படுகின்றோம். அதில் கூட இங்கும் பிற இடங்களிலும் ( இங்குள்ளவர்கள் தான் அங்கும் வந்து) தங்கள் மட்டம் தட்டுதலைக் கொட்டிச் சென்றிருக்கின்றனர். அந்த மேதைகள் ஏன் யாழ் களத்தில் இவற்றைக் கவனிக்க தவறுகின்றனர்...??! தாங்களும் எழுதாயினம் எழுதிறவனையும் விடாயினம்...! இவர்கள்...தமிழுக்கு சமூகத்துக்கு செய்யும் தொண்டுதான் என்ன...??????????! நமக்கு அதுதான் புரியல்ல...! தமிழர்கள் புத்திசாலிகளாக இருந்தும் முட்டாள்களாக இருப்பதன் காரணமே இவர்கள் போன்ற மட்டம் தட்டும் வல்லுனர் கூட்டம் தான்...!

தயவுசெய்து உங்கள் திறமைகளை பெறப்பட்ட அறிவை உங்களுக்குள் பூட்டி வைக்காமல் வெளிப்படுத்துங்கள். பல இந்திய மாணவர்கள் பல ஆய்வுக்கட்டுரைகளை தெளிவுற தமிழில் வழங்க முற்படுவது போல நீங்களும் செய்யலாமே. யாழ் களம் அதற்கான வளமான ஏன் அமையக் கூடாது. பெண்ணியம் பேசினால் விழுந்தடிக்கும் கூட்டம் ஏன் இப்படியானவற்றில் உண்மையான சிந்தனை ஓட்டத்தை செலுத்தக் கூடாது. குறிப்பாக கணணித்துறையில் பல அசூர மாற்றங்கள்... நவீன இலத்திரனியல் உபகரண வரவுகள் என்று உலகம் தொழில்நுட்பத்துறையில் அசூர வளர்ச்சி காணும் வேளையில் லண்டன் மாநகரில் கணணி அறிவற்ற தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா...??! இருக்கிறார்கள்..அதுவும் திறமை சாலிகள்..! இவர்களுக்கு யாழ் களம் ஒரு தமிழ் மொழிமூல தகவல் களஞ்சியமாக ஏன் விளங்கக் கூடாது. நமக்கு லண்டன் புதிது இப்பதான் தெரியுது லண்டனில் எம்மவர்கள் நிலை...! பலருக்கு நவீன இலத்திரனியல் உபரணங்களின் பாவனை கூட தெரியாமல் இருக்கிறது. ஒரு நவீன செல்லிடத் தொலை பேசியை வாங்கும் ஒரு இளையவர் அதன் முழுப் பாவனை குறித்தும் விளக்க மற்றவராக இருக்கிறார். ஆனால் இந்த நிலை மேற்குலக இளைய சமூகத்தில் குறைவு...எம்மவர்களோடு ஒப்பிடும் போது. ஏன் இந்த நிலை. எல்லாம் படிச்சவை பார்த்துக்குவினம் என்ற தட்டிக் கழிப்பின் தொடர்ச்சிதான்..! படிச்சவைக்கு இதுக்கு எங்க நேரமிருக்கு...???! அவைக்கு வேற அலட்டலுக்கு எல்லோ நேரம் இருக்கு..! அல்லது தங்களைப் பற்றி சுயதம்பட்டம் அடிக்க எல்லோ எழுத வரும்..! இவர்கள் தான் மற்றவர்களையும் மட்டம் தட்டி சமூகத்தையும் அறிவியல் உள்வாங்கல் ஆர்வமற்றவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எனக்குச் சொல்கின்ற பதில் மாதிரித் தெரியவில்லையே! :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.