Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனந்த விகடன் கொழுத்திப் போட்ட நெருப்பில் தமிழீழ இலட்சியம் கரைந்து போகாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடன் கொழுத்திப் போட்ட நெருப்பில் தமிழீழ இலட்சியம் கரைந்து போகாது!

[Tuesday, 2012-11-06 11:39:07]

தமிழக வார சஞ்சிகையான ஆனந்த விகடன் கொழுத்திப் போட்ட நெருப்பு ஒன்று, தமிழீழ மக்களின் இதயங்களை ரணகளமாக்கி, கொதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இதற்காகத்தானா இதுநாள் வரையும் ஆனந்தவிகடன் இரை போட்டுக் காத்திருந்ததா, என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. 'நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி' என்ற கட்டுரை ஈழத் தமிழ் மக்களைச் சுற்றி இன்னொரு வலை விரிக்கப்படுகின்றதா? என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது.

வக்கிரங்களைத் தோண்டித் துருவுவதும், அதன்மூலம் வாசகர் மத்தியில் மனக்கிளர்ச்சியைத் தூண்டுவதும் தமிழகப் பத்திரிகை, சஞ்சிகைகளின் தாராளப் போக்காகவே உள்ளன. அந்தப் போக்கில், ஈழத்தின் அவலங்களும் ஆனந்தவிகடனின் பசிக்கு இரையாக்கப்படுகின்றதா? என்ற கேள்விக்கும் அப்பால், இந்தப் புனை கதையின் பின்புலங்களை ஆராய்வது தவிர்க்க முடியாதது.

'நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி' என்ற கட்டுரை தமிழீழ விடுதலை என்ற தமிழர்களது இலட்சியம் குறி வைத்து அடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஈழத்தில் இத்தகைய அவலங்களைத்தான் உருவாக்கியுள்ளது... தமிழ் மக்களை நம்பிப் போர்க் களத்தில் குதித்த விடுதலைப் போராளிகள் அநாதரவாக விடப்பட்டு அல்லல்களுக்கும், தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள்... தமிழீழத் தேசியத் தலைவர் இறந்துவிட்டார். தமிழீழம் இனி ஒருபோதும் சாத்தியம் இல்லை... தமிழீழத்திற்காகக் குரல் கொடுக்கும் தமிழகத் தேசிய உணர்வாளர்கள் உண்மையானவர்கள் அல்ல... என்ற கருத்துக்களைத் திணிக்கும் நோக்கத்தைக் கொண்டது.

இந்தக் கட்டுரையை எழுதிய ம. அருளியன் யார்? என்பது தெரியாவிட்டாலும், அவரது நோக்கம் புரியப்பட முடியாதது அல்ல. ஆனால், இந்தக் கட்டுரையை வெளியிட்டதன் மூலம் ஆனந்த விகடன் தன்மீது காலத்தால் கழுவ முடியாத கறையைப் பூசிக்கொண்டுள்ளது.

தமிழீழத்தின் ஊடகப் பரப்பிலும், அரசியல் பரப்பிலும், இப்போதும் நடமாடும் நிலையில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும் தொடர்புகளை ஏற்படுத்தியபோது, அவர்களிடமும் இதே கேள்விகளும், கவலைகளுமே வெளிப்பட்டன. ஒரு கற்பனைப் பாத்திரம் மூலம் தமிழீழ மக்கள் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அசிங்கப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஒரு போராளியை விபச்சாரியாக உருவகப்படுத்தியதன் மூலம் விடுதலைப் புலிகளது வீரமும், தியாகமும், மாண்பும் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. இது சாதாரணமான சாமானியர்களால் வெளிப்படுத்த முடியாத கொடூரம்.

தமிழீழ விடுதலை என்பது வெறுமனே மண்ணின் விடுதலை மட்டுமானது அல்ல. சமூக விடுதலையின் அத்தனை படிமானங்களையும் இலக்காகக் கொண்டவர்கள் விடுதலைப் புலிகள். அதற்காகக் களமாடியவர்கள். அதற்காக மரணித்தவர்கள். அவர்கள் எந்தக் கணத்திலும் தம்மை இழக்கத் துணியாதவர்கள். அந்த வழியில் வாழ்ந்த ஒரு பெண் தன்னை எந்தப் பொழுதிலும் தாழ்த்திக்கொள்ளமாட்டாள். ஒரு சமூகக் கொடூரத்திற்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ளமாட்டாள். இந்தப் பெண் அப்படித் தவறிப் போயிருந்தால், அவள் விடுதலைப் புலியாகத் தன்னை அறிவித்துக்கொள்ள முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் கொடுத்த வலியும், அவமானமும் தமிழீழ மண் எங்கிலும் ரணத்தை விதைத்துள்ளது. விலைக்கு வாங்கப்பட்ட அல்லது சோரம் போய்விட்ட சில முன்னாள் போராளிகள் சிங்கள தேசத்திற்காக உளவு பார்க்கும் ஈனச் செயலிலும் இறங்கி விட்தால், விடுதலைப் புலிகள் என்று இனங்காணப்படுபவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில் ஏராளமான தமிழர்கள் சிங்களப் படைகளால் தண்டிக்கப்படும் நிலையை எதிர்கொண்டதால் அந்த உறவு நிலை விரிசல் கண்டது உண்மையே.

ஆனாலும், பசி என்றால் சோறூட்டவும், தேவை என்றால் கொடுத்துதவவும் தமிழீழ மண் என்றுமே தவறியதில்லை. இன்றும், பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் தம் உறவுகளுக்காகவும் சேர்த்தே கட்டடக் காடுகளின் நடுவே குளிருடன் போராடி வருகின்றார்கள். 'விபச்சாரியாவதற்கு முன்னர் எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே...' என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் ஆதங்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இலட்சியத்தின்மீது தாக்குதல் தொடுக்க எண்ணிய அருளியன் தன்னையும் மீறித் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். சாதாரணமாக, எதிரிகளைத் தவிர யாரும் தேசியத் தலைவர் அவர்களது பெயரை உச்சரித்ததில்லை. அருளியனின் கதாபாத்திரம் பல இடங்களில் தேசியத் தலைவர் அவர்களைப் பிரபாகரன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தேசத்தின் நோக்கங்களோடு சமாந்தரமாகப் பயணிக்கும் சில தமிழர்களைத் தவிர, தேசியத் தலைவர் அவர்களது மரணத்தை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொண்டதில்லை. அதைத் தனது பாத்திரத்தினூடாக நிறுவ முயன்றிருக்கின்றார் அருளியன்.

'எப்போது உங்கள் அடுத்த போராட்டம்' என்று ஒரு விபச்சாரியிடம் கேட்டா தமிழீழ விடுதலைப் போர்க்களம் திறக்கப்படும் என்று அருளியன் எண்ணுகின்றார்?

நேற்றைய பொழுதிலும், இன்றைய பொழுதிலும், நாளைய பொழுதிலும் குற்றவாளிகளாலும், கொடியவர்களாலும், கொலைகாரர்களாலும், விபச்சாரிகளாலும் உலகம் நிறைந்தே இருக்கும். அவர்களுக்கான நியாயங்களும் அருளியன்களால் ஓதப்பட்டே வரும். அதனை வேதங்களாக மாற்ற ஆனந்த விகடன்களும் இருக்கவே செய்யும்.

ஆனாலும், தேசத்தின் விடுதலையை வென்றெடுக்கும் ஈழத் தமிழர்களது இலட்சியம் இதனால் கரைந்து போகாது. நெருப்பில் என்றுமே கறை ஏற்ற முடியாது. விடுதலைப் புலிகளும் நெருப்பிற்கிணையானவர்களே. தமிழீழத்தை மீட்கும்வரை, அவர்கள் கரைந்து போகமாட்டார்கள்.

சி. பாலச்சந்திரன் - மக்கள் பிரதிநிதி

ஆசிரியர் - ஈழநாடு

http://seithy.com/breifNews.php?newsID=69677&category=TamilNews&language=tamil

சரியாய் சொன்னீர்கள் . தங்களுடைய அரசியல் மாதிரி நினைத்து விட்டார்கள் .

ஈழப்போராட்டம் சும்மா கண்டவன் நின்றவன் எல்லாம் விமர்சிக்கமுடியது . அதில் ஆனந்தவிகடனும்

உள்ளடக்கம் . தேசியத்தலைவர் மீது பற்றுள்ள எவனும் அவரை பெயர் சொல்லி அழைத்தது இல்லை .

அவர் மீதுள்ள அன்பும் பாசமும் . இந்த கட்டுரையை எழுதிய பண்ணி யார் என்று தெரியவில்லை .

சோனியாவின் எலும்பு பொறுக்கி

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களின் அவலங்களை காசாக்கும் ஈனப்பிறவிகள்.

தேசியத்தலைவர் மீது பற்றுள்ள எவனும் அவரை பெயர் சொல்லி அழைத்தது இல்லை .

மிக மிக உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஒரு மனிதன் திருடனாகிவிட்டான்" என்றால் இருவகையான அடிப்படைகளின் பொருட்டு மனிதக் கோவம் தூண்டப்படலாம்! ஒன்று, ஒரு நல்லவனை ஒரு திருடனாக்கிய சூழ்நிலையை நொந்து.

இரண்டு, திருடனாக்கப்பட்டவன் அடையாளமாகும் வகுப்பிற்கு நேரும் அவகௌரவத்தின் பொருட்டு.

மனிதம் குப்பையாக் கிடப்பதை காணப் பொறுக்கும் கண்களுக்கு பொறுப்பாக உணர்த்துவதற்காகவும் இந்த விடயம் சொல்லப்பட்டும் இருக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதிய பேனை குப்பையில் கிடக்கலாம்; கடவுள் என்று எழுதப்பட்ட எழுத்து கோயில் ஆக்கப்படவேணும் என்ற கவலையின் வகையா இது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.