Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகத்திலும் இன அழிப்பு! தற்போதைய அரசுக்கு முக்கிய பங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10578459281896472638yoges.jpg

மலையகத்திலும் இன அழிப்பு! தற்போதைய அரசுக்கு முக்கிய பங்கு

காலா காலமாக நடைபெற்று வருகின்ற பெருந்தோட்ட இந்திய வம்சாவளி இன அழிப்பு நடவடிக்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு முக்கிய பங்கு உள்ளதென ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்திய வம்சாவளி இன அழிப்ப மலையக சமூகத்தின் பாரிய சமூக, அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே இதனை உணர்ந்து மலையக அரசியல் தலைமைகள் இன அழிப்பிற்கு எதிராக சிந்தித்து சமூக வாழ்வாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் விடை காண முன்வரவேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து மலையக தோட்ட பகுதிகளில் இயங்கும் அரச வைத்தியசாலைகளில் கர்ப்பத்தடை சம்பந்தமாக விஷேட பிரிவுகள் இயங்குவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், வேறு எந்த நோய்க்கும் இவ்வாறு விஷேட பிரிவுகள் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் இயங்குவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மலைய பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவலம் குறித்து பலமுறை மத்திய மாகாண சபை அமர்வில் தனி நபர் பிரேரணை சமர்பித்து மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரதி பலன் மிகவும் மோசமான அடிமைத்தனத்திற்கு பெருந்தோட்ட இந்திய சமூகத்தை கொண்டு செல்லும் எனவும் மாறாக சமூக, அரசியல் மாற்றத்தின் மூலம் இந்த அவலம் மாற்றப்பட வேண்டுமெனவும் முரளி ரகுநாதன் கோரியுள்ளார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=31013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.