Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபை முறைமையை மாற்றுவதே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான பிரதான ஆயுதம்! - மகிந்த ராஜபக்ச

Featured Replies

மாகாணசபை முறைமை இரத்துச் செய்யப்பட வேண்டும் என சிறிலங்காவின் கடும் போக்குடைய அமைச்சர்களும், பேரினவாத அமைப்புகளும் கோசம் எழுப்பி வரும் நிலையில், மாகாணசபை முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2013ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தேசிய தராதரங்களைப் பயன்படுத்தி மாகாணசபை முரண்பாடுகளை இல்லாதொழிப்பதே தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான பிரதான ஆயுதம் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'எமது மக்களுக்கு அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு தற்போது நாம் மாகாணசபை முறைமையை மாற்ற வேண்டியது அவசியமாகும்.

அத்தகைய மறுசீரமைப்பு அதிக செலவினம் கொண்டதாகவோ, மக்கள் மீது சுமையை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டதாகவோ இருக்க முடியாது.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலில் இருந்தும் என்னைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அல்லது சிங்கள மக்கள் அனைவரும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறந்த வாழ்க்கைத்தரம் மற்றும் நாட்டில் சம அந்தஸ்துடன் வாழ்தல் என்பவற்றையே வேண்டினர். தேசிய தராதரங்களைப் பயன்படுத்தி மாகாண முரண்பாடுகளை இல்லாதொழிப்பதே தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான பிரதான ஆயுதமாகும்.

இந்த அரசாங்கம் எமது மக்களின் அபிலாஷைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்குத் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

எனவே, எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆகியோர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எம்முடன் இணைந்து செயற்பட வருமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

இம்முயற்சியானது எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்படுத்தாது மிகவும் சுயமரியாதையுடன் கூடியதாகும்.

எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் நான் உட்பட இப்பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு எமது வாழ்க்கையிலும், அரசியலிலும போதியளவான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றோம்' என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டலத்தை இரத்துச் செய்ய வேண்டும் என சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னர் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.

http://ponguthamil.c...f6-266b30dfde65

ஆறுதலாகப் பேசப் போகிறராம் – மகிந்தவின் ஒளிப்பட இராஜதந்திரம் [ வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2012, 01:41 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

TNA-MR-2012.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆறுதலாக பேசப் போவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்த சிறிலங்கா அதிபர், பின்னர் அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

தேநீர் விருந்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், பொன்.செல்வராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பீலிக்ஸ் பெரேராவுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்று அவர்களுடன் உரையாடியுள்ளார்.

நீதித்துறை விவகாரங்கள் குறித்து அவர்களுடன் பேசிய மகிந்த ராஜபக்ச, “உங்களுடன் ஆறுதலாக பேசவேண்டும். ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

எனினும் என்ன விடயம் தொடர்பாக பேசவேண்டும் என்று அவர் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.

குறுகிய நேரம் நடந்த இந்தச் சந்திப்பை அங்கிருந்து எல்லா ஒளிப்படப் பிடிப்பாளர்களும் பதிவு செய்து கொண்டனர்.

சிறிலங்காவின் இன்றைய அனைத்து நாளிதழ்களிலும் இந்தச் சந்திப்பு ஒளிப்படமே முகப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20121109107263

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]இப்பிடியே காலத்தை ஓட்டுங்கோ.......................[/size][size=1]

[size=3]மக்களின் துன்பம் எப்படி உங்களுக்கு விளங்கப்போகுது [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை முறைமை இரத்துச் செய்யப்பட வேண்டும் என சிறிலங்காவின் கடும் போக்குடைய அமைச்சர்களும், பேரினவாத அமைப்புகளும் கோசம் எழுப்பி வரும் நிலையில், மாகாணசபை முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியம் என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடு கேட்டு, அரசில் பாதி கேட்டு, ஐந்து ஊர் கேட்டு, கடைசியில் ஆகக் குறைந்தது ஐந்து வீடுகள் என்றாலும் தாருங்கள் என்று கேட்ட பாண்டவர்களின் பரிதாபமிக்க மகாபாரதக் கதைபோல தமிழர்களின் நிலைமை இருக்கின்றது.

டிஸ்கி:

எப்பவுமே வானத்திற்கு ஆசை பட்டால் தான் ந்டசதிரமாவது கிடைக்கும் .. இந்தியாக்காரனை நம்பி கூத்தமைப்பு சென்றதால் இப்போ இதுக்கே சிங்களவன் ஆப்பு இறக்குறான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.