Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் சீனர்களே தொழில் வாய்ப்பு பெறுகின்றனர்: ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ravi-karunayake-seithy-20121009-150.jpg

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்கள் சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களிலும் சீனத் தொழிலாளர்களே அதிகளவில் கடமையாற்றி வருகின்றனர்.

இலங்கை இளைஞர், யுவதிகள் வேலையில்லாப் பிரச்சினையினால் திண்டாடி வரும் நிலையில், ஏன் சீனர்களுக்கு தொழில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்? எனினும், அரசாங்கம் எந்த நேரத்திலும் தேசப்பற்றைப் பற்றியே பேசுகின்றது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் கிடைக்கும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு நிவாரணமும் 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் முன்வைக்கப்படவில்லை. மோட்டார் பந்தய கார்களை இறக்குமதி செய்வதற்காக மட்டும் வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த வரவு செலவுத் திட்டம் வறிய மக்களை மேலும் வறுமையில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.ஊடகவியலாளர்களுக்கு வாகனக் கடன் மற்றும் மடி கணனிகளை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் குறித்த திட்டத்தில் 104 ஊடகவியலாளர்களே நன்மை அடைந்துள்ளனர்.

தனியார் துறையைச் சேர்ந்த 74 லட்ச தொழிலாளர்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உதாசீனம் செய்யப்பட்டுள்ளனர் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

[size=4]அமெரிக்காவின் கடனை அதிகளவில் வைத்திருப்பது - சீனா. மலிந்த டாலரை வைத்து தனது மக்களுக்கு சம்பளத்தையும் கொடுத்தும் அதே அமெரிக்காவிற்கு தனது பொருட்களையும் ஏற்றுமதி செய்கிறது. [/size]

[size=1]

[size=4]சிங்கள நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது. கொடுத்த கடனையும் பெற முடியாது என்ற பயம். [/size] [size=4]ஆகவே, தனது தொழிலாளர்களை (இதில் குற்றவாளிகளும் உள்ளனர்), ஏற்றுமதி செய்கின்றது. இந்த தொழிலாளர்கள் வேலை உட்பட சகல தொழில்களையும் தமது கையில் எடுக்க முயலுவார்கள், குறிப்பாக கசிப்பு, கஞ்சா :D[/size][/size]

சீனா இதே முறையத்தான் எங்கும் பின் பற்றுகிறது. மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்காசியா,ஆபிரிக்க. எங்கும்தான் லிபியா அடிவாங்கும் பொது 40,000 சீனர்களை கப்பலில் ஏற்றி இறக்கியது. ஒருதடவை போலந்த்தில் ஒரு தெருக்கள் மீளமைப்புக்கு ஜேர்மன் கம்பனி போலந்து சப்கொன்றாக்டேசை போட்டு செய்வதாக விலை குறித்து கொடுத்தார்கள். சீனர்கள் அதன் காசுக்கு 50% கீழே சீனத்தொழிலாளிகலுடன் வந்து செய்வதாக விலை கொடுத்தார்கள். போலந்து தன் நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கிறது என்றாலும் 50% கூட கொடுப்பதில் பலன் இல்லை என்று ஜேர்மன் கம்பனியை கழித்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.