Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரிதி மீதான படுகொலைத் தாக்குதல் புலத்துத் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் மீதான தாக்குதல்! பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Featured Replies

பரிதி மீதான படுகொலைத் தாக்குதல் புலத்துத் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் மீதான தாக்குதல்! பிரதமர் வி.உருத்திரகுமாரன்

By naatham On 11 Nov, 2012 At 07:25 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments

oic1-199x300.jpgதமிழீழத் தாயகத்தில் அரசியல்வெளி மறுக்கப்பட்டதொரு சூழலில், மேற்குலகின் சனநாயகச்சூழல் ஈழத் தமிழர் தேசத்துக்கு வழங்கும் வாய்ப்புக்களைச் சாதகமாக்கி நமது தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டச் செயற்பாடுகளை அச்சுறுத்தி அடக்கும் நோக்கமே இக்கொலைக்கான காரணமாக இருந்திருக்கும் என தாம் கருதுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி (நடராஜா மதீந்திரன்) மீது நடந்தேறிய படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

புலம்பெயர் மக்களைப் போராட்டம் நோக்கி அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பரிதி அவர்கள் மீது மேற்கோள்ளப்பட்ட இப் படுகொலைத் தாக்குதல் புலம்பெயர் மக்கள் தம் கையிலெடுத்துள்ள சனநாயக அரசியல்வழிவகையில் அமைந்த விடுதலைப்போராட்டம் மீதான தாக்குதல் என்றே கருதப்படவேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்படுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் :

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளரும,; தமிழீழ விடுதலைச் செயல்வீரருமான திரு பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்கள் பாரிஸ் நகரில் 08.11.2012 அன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த செய்தியறிந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகுந்த துயரும் தார்மீகக் கோபமும் அடைகிறது.

சிங்களத்தால் ஈழத் தமிழர் தேசம் மீது மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின் அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில் ஈழத் தமிழர் தேசம் தனது விடுதலையினை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துவரும் காலகட்டத்தில் இப்படுகொலை இடம் பெற்றிருக்கிறது.

அண்மைக் காலமாக சிறிலங்கா அரசு புலத்துவாழ் தமிழ் மக்கள் மீது இலக்கு வைத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இக் கொலை நடைபெற்ற விதம், இக் கொலைக்கு இருந்திருக்கக்கூடிய நோக்கம், இக் கொலையின் ஊடாக எட்ட முனைந்திருக்கக்கூடிய இலக்கு ஆகிய சூழ்நிலைச் சாட்சியங்கள் ஆவன சிறிலங்கா அரசால் ஏவிவிடப்பட்ட நன்கு பயிற்றப்பட்ட கொலையாளிகளே இக்கொலையின் பின்னணியில் உள்ளார்கள் என்பதனை வெளிப்படுத்துகின்றன.

தமிழீழத் தாயகத்தில் அரசியல்வெளி மறுக்கப்பட்டதொரு சூழலில், மேற்குலகின் ஜனநாயகச்சூழல் ஈழத் தமிழர் தேசத்துக்கு வழங்கும் வாய்ப்;புக்களைச் சாதகமாக்கி நமது தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டச் செயற்பாடுகளை அச்சுறுத்தி அடக்கும் நோக்கமே இக் கொலைக்கான காரணமாக இருந்திருக்கும் என நாம் கருதுகிறோம்.

புலம்பெயர் மக்களைப் போராட்டம் நோக்கி அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த பரிதி அவர்கள் மீது மேற்கோள்ளப்பட்ட இப் படுகொலைத் தாக்குதல் புலம் பெயர் மக்கள் தம்கையிலெடுத்துள்ள அரசியல் ஜனநாயக வழிவகையில் அமைந்த விடுதலைப்போராட்டம் மீதான தாக்குதல் என்றே கருதப்படவேண்டும்.

இப் படுகொலையினைப் புரிந்தவர்களையும், இப் படுகொலைக்கான காரணங்களையும் விசாரணைகள் மூலம் கண்டறிந்து குற்றவாளிகளை நீதியின்முன் காலதாமதமின்றி நிறுத்துமாறும் நாடு கடந்த அரசாங்கம்; பிரான்ஸ் நாட்டுக் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இக் கோழைத்தனமான படுகொலையினை மிகவன்மையாகக் கண்டனம் செய்வதோடு தாயக விடுதலைப்பணியில் தன்னுயிரை ஈகம் செய்த பரிதி அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கங்களைச் செலுத்தி நிற்கிறது.

இவரது இழப்பினால் துயருறும் மனைவி, மகள், உற்றார், உறவினர், நண்பர்கள் தோழர்கள், மக்கள் ஆகியோருடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது கரங்களை இணைத்துக் கொள்கிறது.

இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் சுடப்பட்ட புலிகளின் மூத்த தளபதி றேகன்: புலனாய்வுத் தகவல் சில கசிந்துள்ளது!

தமிழீழ விடுதலை புலிகளின் நீண்டநாள் உறுப்பினர் பரிதி பிரான்சில் சுடப்பட்டமை தொடர்பாக சில தகவல்கள் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆங்கிலமோ இல்லை சிங்களமோ தெரியாத 17 தமிழ் இளைஞர்களுக்கு கோத்தபாயவின் சிறப்பு பணிப்பின் பெயரில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திஇ முதன் முதலாக சிங்கள ஊடகம் ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது.

தமிழ் ஊடகங்கள் சில இச் செய்தியைப் பிரசுரித்தாலும்இ அதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்கஇ தமிழ் இளைஞர்கள் 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுஇ அவர்களுக்கு இலகுரக ஆயுதங்கள் பாவிப்பதற்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9அஅ என்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கிப் பயிற்சி மற்றும் இலகுரக ஆயுதங்களைப் பாவிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அச் சிங்கள ஊடகம் மேலும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வி ஒரு புறம் இருக்கஇ நேற்றைய தினம் இரவு பிரான்சில் புலிகளின் முன்னாள் தளபதி நடு வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தியும் தமிழர்களை உலுக்கியுள்ளது.

மாபியா கும்பல் பாணியில் இப்படுகொலை நடந்தேறியுள்ளது. பரிதி என்று அழைக்கப்படும் றேகன்இ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 80 பதுகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அக்காலப் பகுதியில் இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் பயிற்சியினை வழங்கி வந்தது.

அணி…. அணியாக இந்தியா சென்று பயிற்சி எடுத்து நாடு திரும்பிக்கொண்டு இருந்தார்கள் விடுதலைப் புலிகள். அக்காலப் பகுதியில் 2 வது அணியில் சென்று ஆயுதப் பயிற்சி எடுத்தவர் றேகன் ஆவார். பின்னர் அவர் 1990 ஆண்டு முதல் பிரான்ஸ் வந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இன்றுவரை செயற்பட்டு வந்தவர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக புலத்தில் போராடிய போராளி! இன்று நடுத்தெருவில் வைத்து சுடப்பட்டுள்ளார் என்பது தமிழர்களை உலுக்கும் செய்தியாக மட்டும் அமையவில்லை. மாறாக ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும்.

கொல்லப்பட்ட விதத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் என்ன?

நேற்றைய தினம்இ பிரான்சின் புறநகர் பகுதியில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு வெளியே வந்த றேகன்இ பஸ் தரிப்பிடம் ஒன்றுக்கு அருகாமையில் செல்லும்வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் சுடப்பட்டுள்ளார். கறுப்பு நிற தலைக் கவசம் அணிந்து வந்த நபர் ஒருவர் றேகனை நோக்கி 2 தடவைகள் சுட்டுள்ளார்.

உடனே நிலத்தில் விழ்ந்த றேகனுக்கு அருகாமையில் வந்துஇ மீண்டும் அவர் மீது 2 தடவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். கொலையாளி பாவித்தது இலகுரக கையடக்க துப்பாக்கி ஆகும் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பிரெஞ்சுப் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

பலர் நடமாடும் இடத்தில்இ இவ்வாறு றேகனைச் சுட்டுவிட்டுஇ பின்னர் அவர் உயிர் பிழைக்கக்கூடாது என்று அருகில் சென்று மீண்டு அவர் மார்பு மீது சுடும் அளவுக்கு கொலையாளி தைரியமாக இருந்திருக்கிறார். தான் தப்பிச் செல்வது குறித்துஇ யோசிப்பதை விடுத்துஇ றேகன் உயிரிழக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கிறார் என்பதும் தெளிவாகப் புலப்படுகிறது.

இதில் இலங்கைப் புலனாய்வின் பங்கு என்ன?

சமீபகாலமாக றேகன் அவர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் புதிதாக முளைத்த சில குழுக்கள் இவரை அச்சுறுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக றேகன் சுடப்பட 2 நாட்களுக்கு முன்னதாகக் கூடஇ அவரை அழைத்து ஒரு குழு மிரட்டியுள்ளது. இந் நிலையில் றேகனை சுடவேண்டும் என்ற அவசியம் ஏன் வந்தது என்று அனைவரும் கேட்க்கலாம். இதில் நாம் சில விடையங்களை தெரிந்துகொள்வது நல்லது.

பிரித்தானியாஇ ஜேர்மன்இ நோர்வே போன்று நாடுகளில் ஒருவர் மீது இவ்வளவு இலகுவாக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது. காரணம் அங்குள்ள கடும் சட்டதிட்டங்கள் ஆகும். மற்றும் அந் நாட்டுப் பொலிசார் குற்றச்செயல்களைக் கண்டுபிடிப்பதில் கில்லாடிகள். இலகுவில் குற்றவாளி தப்பிக்க முடியாது. ஆனால் பிரான்ஸ் நாடு அப்படியல்ல. மாதம் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெறும் ஒரு நாடாக அமைந்துள்ளது.

இதேவேளை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தை இணைக்கும் எல்லைப் பகுதியில்இ இலகுரக ஆயுதங்களை குறைந்த பணத்திற்கு வாங்க முடியும். அங்கே பல அறிவிக்கப்படாத ஆயுதக் கடத்தல் காரர்கள் இருக்கிறார்கள். இவர்களூடாகவே ஆயுதங்கள் பிரான்ஸ் எல்லையை அடைகிறது. சுமார் 300 யூரோக்களுக்கு கைத்துப்பாக்கி வாங்க முடியும் என சில பிரெஞ்சுப் பத்திரிகைகள் முன்னர் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களை மிரட்டவும்இ மாவீரர் தினத்தை குழப்பவும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறுஇ பல திட்டங்களை தீட்டியுள்ளது என அறியப்படுகிறது. ஏற்கனவே மாவீரர் தினத்தை இரண்டாக உடைக்க தமது ஆட்களை அவர்கள் அனுப்பி புலத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் நடைபெற்ற மாவீரர் தினங்களுக்கும் மக்கள் சென்றார்கள்.

மக்கள் மாவீர்களை மதிப்பதால் அந் நிகழ்வு தடையின்றி நடைபெறுகிறது. இந் நிலையில் இதனை உடைக்க வேறு வழிகளில் திட்டம் தீட்டிய இலங்கைப் புலனாய்வுத் துறை குற்றங்கள் இலகுவாக நடைபெறும் பிரான்ஸ் நாட்டை தனது களமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

இலங்கை அரசின் பின் புலத்தில் அவர்களுடன் இணைந்து செயல்படும் குழு ஒன்றின் ஆதரவுடனேயே இப் படுகொலை நடந்தேறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் இரு நபர்கள் உள்ளபோதும் கொலையாளி தலைக் கவசம் அணிந்திருந்ததால் அவரை அடையாளம் காணுவதில் சிரமங்கள் இருக்கிறது.கொலையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் வீதியில் ஏற்படுத்திய டயர் கீறல் அடையாளம் மற்றும் வீதியோர CCTV கமராக்கள் போன்றவற்றை வைத்து பொலிசார் தமது புலனாய்வு விசாரணைகளை முடிக்கிவிட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது<p>

http://asrilanka.com/2012/11/09/10792;

Edited by Iraivan

  • தொடங்கியவர்

பரிதி படுகொலை:பிரான்ஸிடம் நீதிவிசாரணை கோரும் நாடுகடந்த அரசாங்க பிரதிநிதிகள்!

By naatham On 10 Nov, 2012 At 03:24 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments

france_TGTE-300x223.jpgபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களை பெரும் அதிர்சிக்கும் பரபரப்புக்கும் உள்ளாக்கியுள்ள பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் பரிதி என அழைக்கப்படும் நடராஐா மதீந்திரன் படுகொலைச் சம்பவம் தொடர்பில் நீதி விசாரணை நடத்தப்படத்தி குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்ஸ்-மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை மனிதவுரிமைகள்,அரசியல் சனநாயக உரிமைகளைப் பேணும் ஜரோப்பிய நாடொன்றில் தனிமனிதப் பாதுகாப்பிற்கு உத்தவாதமின்மை,பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வினை பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்திருப்பதாக இக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரென்சு அரசுத்தலைவர் தலைமை அமைச்சர் உள்துறை அமைச்சர் வெளிவிவாரத்துறை அமைச்சர் உட்பட பிரென்சு உயர்நீதித்துறையினை நோக்கி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

உத்தியோகபூர்வமாகன முறையில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு பல பிரென்சு அரசியல் பிரதிநிதிகளிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த படுகொலைச் சம்பவத்தினை மையப்படுத்தி பல்வேறு பிரென்சு ஊடகங்களுகம் செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில் தமிழர் தரப்பின் இக்கோரிக்கை தொடர்பில் அவ்வூடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு மோதல் பிரச்சினைகளுக்குள் குறித்த படுகொலைச் சம்பவத்தினை பிரென்சு காவல்துறையினர் உள்ளடக்கி விடாதிருக்கும் பொருட்டு, சட்ட வல்லுனர்களை அமர்த்துவதன் மூலம் முறையான சட்ட நடவடிக்கைகளின் வழியே குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவதனை உறுதி செய்யும் விதத்தில் இதற்கான தொடர் நடவடிக்கைகளை நா.த.அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் மகிந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் முன்னெடுப்பார் என நா.த.அரசாங்கத்தின் அமைச்சரவைக் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பரிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவருக்கு மதிப்பளிக்கும் பொருட்டு வேறு விடயங்கள் எதுவும் பேசப்படாது நிறைந்வடைந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

[size=4]இதில் சிங்கள அரசு தொடர்புபட்டு இருப்பதை உறுதிப்படுத்தினால், அது ஒரு 'பயங்கரவாத அரசு' என நிறுவ உதவும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.