Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இடம்பெற்றது திட்டமிட்ட இனஅழிப்பு! லண்டன் மாநாட்டில் கஜேந்திரகுமார் !!

Featured Replies

[size=4]தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையை ஓர் இனஅழிப்பு எனக் கூறுவதற்கு சர்வதேச சமூகம் பின்னடிக்கலாம் ஆனால் உண்மையில் இடம்பெற்றது இன அழிப்பத்தான். இலங்கைத்தீவில் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்காகவே அரசினால் தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையானது கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.

உலகத் தமிழர் மாநாடு பிரித்தானிய பாராளுமன்றக் கட்டடத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழு என்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழு மேற்படி மாநாட்டிற்கான அழைப்பினை விடுத்திருந்தது.

அவர்களது அழைப்பின் பெயரில் தாயகத்தில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளது பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

7ம் திகதி ஆரம்பமான இம்மாநாட்டில் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி கருத்தினை கூறியுள்ளார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு.

"இலங்கைத்தீவில் தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்காகவே சிறீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையானது கடந்த 60 ஆண்டுகளாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை ஓர் இனஅழிப்பு எனக் கூறுவதற்கு சர்வதேச சமூகம் பின்னடிக்கலாம் ஆனால் உண்மையில் இடம்பெற்றது இன அழிப்பத்தான் என்று வலியுறுத்துவதற்கு தமிழர்களாகிய நாம் ஒருபோதும் பின்னிற்கக்கூடாது.

அண்மைக்காலமாக சர்வதேச மட்டத்தில் இடம்பெற்றுவரும் கருத்தாடல்களை நோக்கினால் அவை குறிப்பிட்ட ஒரு சில விடயங்களைப் பற்றியதாக மட்டுமே உள்ளன. அதாவது சர்வதேச சமூகமானது போரின் இறுதிக்கட்டங்களில் அதாவது 2009 ஆம் ஆண்டின் தை தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றது.

போர் தீவிரமடைந்து மக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சர்வதேச சமூகத்தினரை சந்தித்து போரை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திய வேளையில் அவர்கள் இரண்டு வாக்குறுதிகளை கூறிக்கொண்டிருந்தனர்.

1 வன்னியில் ஓர் இரத்தக்களறி ஏற்பட்டால் இலங்கை அரசானது அதற்காக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும்

2. சர்வதேச சமூகத்தின் பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஓர் பயங்கரவாத அமைப்பாகக் காணப்படுகின்றது. அவ்வமைப்பு அழிக்கப்பட்டுவிட்டால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் அங்கீகரிக்கப்படுவதுடன், இலங்கைத்தீவில் சமாதானமும் நிலவும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

சர்வதேச சமூகத்தினாரால் கூறப்பட்ட இரண்டு வாக்குறுதிகளுமே நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் போர்க்குற்றச் சாட்டுக்கள் பற்றி மட்டுமே கவனம் செலுத்துவதானது நாம் விரும்புகின்ற அரசியல் விளைவுகளுக்கு எதிர்மறையான விளைவுகளையே அரசியல் ரீதியாக ஏற்படுத்துகின்றன.

போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்று இலங்கைத்தீவில் யுத்தம் இல்லை. ஆகவே யுத்தக்குற்றங்களும் தற்போது இடம்பெறவில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வன்னியில் வாழும் தமிழ் மக்களுடன் நாம் மிகவும் நெருக்கமாக நின்று செயற்பட்டுவருகின்றோம்.

அந்த மக்களுடன் உரையாடும்போது “இன்று நாம் இப்படியான வாழ்கை வாழ்வதனை விடவும் இறுதியுத்தத்தில் செத்திருக்கலாம்” என்று கூறுகின்றனர். அவ்வாறு அந்த மக்கள் விரக்தியடைந்துள்ள அளவுக்கு குற்றங்களும் அடக்குமுறைகளும் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசினால் புரியப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் போர்க்குற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. யுத்தத்தின்போது இடம்பெற்ற மிகமோசமான போர்க் குற்றங்களைப் பற்றிப் பேசுகின்ற அதே வேளை நாம் அவற்றைத் தாண்டி இன அழிப்பு என்ற கோணத்தில் விசாரணைப் பரப்பை விரிவடையச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தற்போதும் தாயகத்தில் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது மக்களை மிகவிரைவில் இழந்துவிடுவோம்.

இலங்கையில் இடம்பெறுகின்ற இன அழிப்பு எவ்வாறானது என்பதனையும் நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு மதக் குழுமம் ஒன்றின் மீதான அழிப்போ அல்லது சிறிய குழு ஒன்றின் மீதான அழிப்போ அல்ல மாறாக இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக வாழ்வதனை திட்டமிட்டு அழிக்கின்ற ஓர் இன அழிப்புச் செயற்பாடாகும்.

சர்வதேச சமூகமானது இலங்கைத்தீவில் இடம்பெற்றது ஓர் இனஅழிப்பு என்று ஏற்றுக் கொள்வதற்கோ, அல்லது தமிழர்கள் ஓர் தேசம் ‘யேவழைn’ என்பதனை அங்கீகரிப்பதற்கோ விரும்பவில்லை என்பதானது, தமிழ் தரப்பினரும் “தமிழர்கள் ஓர் தேசம்” என்பதனை வலியுறுத்தக்கூடாதென்பதோ அல்லது தாயகத்தில் இடம்பெறும் உண்மையான இனஅழிப்புச் சம்பவங்கள் பற்றி தமிழர்களும் பேசக் கூடாதென்றோ அர்த்தமல்ல.

இன்றைய இந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தினருடன் தமிழர்களது அரசியல் தீர்வு தொடர்பாக நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் எமக்கிடையில் பொதுவான அரசியல் செயற்திட்டம் ஒன்று இருக்க வேண்டும்.

ஏனென்றால் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் சர்வதேச சமூகம் அளித்த இரண்டு வாக்குறுதிகள் தொடர்பாக. சர்வதேச சமூகத்தினரை பொறுப்புக்கூற வைக்க வேண்டும்.

தமிழர்களாகிய நாம் ஒரு தேசம் என்பதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கோணத்தில் இருந்தே சர்வதேச சமூகத்தினை அணுகவேண்டும். யுத்த அழிவுகள் நடைபெற்றபோது சர்வதேச சமூகம் அளித்த உத்தரவாதம் தொடர்பில் அவர்களை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும். அந்த உத்தரவாதத்தினை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே இன்றும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழ் தேசத்தினை இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டினை தடுத்து நிறுத்த முடியும். இதனை நாம் செயற்படுத்தத் தவறின் இன்று நாம் நடத்தும் இந்த மாநாடும் அதன் தீர்மானங்களும் கூட எவ்வித பயனும் அற்றவையாகவே அமையும்"

இவ்வாறு கஜேந்திரகுமார் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

மேற்படி மாநாட்டில் வெளியிடுவதற்காக பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானத்தில் தமிழர்கள் ஓர் தேசம் என்பனையும், அந்தத் தேசத்தை இல்லது ஒழிப்பதற்காகவே திட்டமிட்ட இன அழிப்பு சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்பதனையும், சர்வதேச விசாரணையானது மேற்படி இனஅழிப்புத் தொடர்பில் மேற்பொள்ளப்பட வேண்டுமென்பதனையும் வலியுறுத்துவதாக அந்தத் தீர்மானம் அமைந்திருக்கவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாநாட்டிற்கு முன்னதாக மேற்கொண்ட கடுமையான முயற்சியின் விளைவாக இலங்கையில் தமிழ்கள் ஓரு தேசம் என்பதும், தமிழ் தேசத்தினை இல்லாது அழிப்பதற்காகவே சிறீலங்கா அரசினால் திட்டமிட்ட இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டதென்றும், சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையானது நடைபெற்ற முழுமையான இனஅழிப்புத் தொடர்பில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தும் காத்திரமான தீர்மானம் ஒன்றை அம்மாநாட்டில் கொண்டுவரச் செய்ய முடிந்துள்ளது.

அதனால் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் நின்று எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் விளைவுகளை பெற்றுத் தரக்கூடிய பெறுமதிமிக்க தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற முடிந்துள்ளது.

தீர்மானங்கள்

இனம் என்ற அரசியல் காரணங்களுக்காகவே தமிழர்கள் சிறீலங்கா அரசினால் அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளமையை வரவேற்கின்றோம்.

டப்ளின் நிரந்தர தீர்ப்பாயத்தின் தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் வரவேற்கின்றோம்.

2009 ம் ஆண்டு மே மாதம் போர் முடிவுற்ற பின்னரும் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது ஒழிக்கும் தொடர்ச்சியான செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதனை சுட்டிக்காட்டுகின்றோம்.

சுர்வதேச சமூகத்தினது, சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் றோம் சட்ட விதிகளின் கீழானதும், பாதுகாப்பதற்கான கடமை என்ற கோட்பாட்டின் கீழானதுமான கடமைகளை நினைவுபடுத்துகின்றோம.

இலங்கை அரசினால் தமிழ் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பாக மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், மற்றும் இன அழிப்பு என்பன தொடர்பில் ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றினை விரைவாக மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளைக் கோருகின்றோம்.

சர்வதேச சமூகத்தின் தலைவர்களையும், சர்வதேச சிவில் சமூக அமைப்புக்களையும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கக் கோருகின்றோம்.

1. இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நிலவும் உண்மைநிலைமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் முகமாக எவ்வித தடைகளுமின்றி அங்கிருந்து தகவலிகளை பெற்றுக் கொள்வதற்கான வெளியை உருவாக்குதல்.

2. தமிழ் தேசத்தின் இருப்பை இலங்கை அரசு அழிப்பதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.

3. தமிழ் மக்களின் மரபு வழித்தாயகத்தினை சிங்களமயப்படுத்துவதனை தடுத்தல்.

4. தங்களது ஐனநாயக உரிமைகளை எவ்வித அச்சமும் இன்றி பிரயோகிப்பதற்கு ஏதுவாக தமிழ் மக்களது மரபுவழித் தாயகத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றுதல்.[/size]

[size=4]http://www.tamilleader.com/mukiaya/7448-2012-11-12-10-33-51.html[/size]

Edited by ஊர்பூராயம்

[size=5]

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.