Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் உகண்டா ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உகண்டா ஜனாதிபதி

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2012 10:01 0 COMMENTS

உகண்டா ஜனாதிபதி யோவேறி கபுடா முஷவேனி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்துள்ளார். நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா ஜனாதிபதியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர்.

உகண்டா ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

http://tamil.dailymirror.lk/--main/52595-2012-11-13-04-33-31.html

  • கருத்துக்கள உறவுகள்

ugandan-President-6.jpg

ugandan-President-5.jpg

ugandan-President-4.jpg

ugandan-President-3.jpg

ugandan-President-2.jpg

ugandan-President-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு இப்ப வரிசையா இவங்களைக் கூப்பிடுபடுது? :huh:

[size=4]அடுத்த ஐ.நா. மனித உரிமை தொடருக்கு வாக்குப்பலம் சேர்க்க அழைக்கப்படுகின்றார்கள்.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உகண்டாவுடன் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

புதன்கிழமை, 14 நவம்பர் 2012 11:18 0 COMMENTS

01(738).jpg

இலங்கை மற்றும் உகண்டா அரசாங்கங்களுக்கு இடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அலரி மாளிகையில் இரு நாடுகளினதும் ஜனாதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்றது.

இலங்கை – உகண்டாவுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் உகண்டாவில் தொழிற்பயிற்சி மத்திய நிலையமொன்றை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச நிதி முதலீட்டு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகமவும் உகண்டா ஜனாதிபதியின் பாரியாரும் அந்நாட்டு அமைச்சருமான ஜெனட் கடகா முஸாமி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இரு நாட்டு பொருளாதார, வணிக மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் உகண்டா ஜனாதிபதியின் பாரியாரும் அந்நாட்டு அமைச்சருமான ஜெனட் கடகா முஸாமி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

உல்லாசப் பயணத்துறை தொடர்பான ஒப்பந்தமொன்றும் இரு நாடுகளினதும் அரசியல் ஆலோசனை விவகாரம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

இறுதியாக, கலாசாரத்துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கலாசாரத்துறை அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க மற்றும் உகண்டா ஜனாதிபதியின் பாரியாரும் அந்நாட்டு அமைச்சருமான ஜெனட் கடகா முஸாமி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/52655--5-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.