Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தத்துக்கு எதிரான முனைப்புக்கள் தொடர்பில் இந்தியா மௌனம் காப்பது ஏன்? - சரவணபவன் கேள்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தத்துக்கு எதிரான முனைப்புக்கள் தொடர்பில் இந்தியா மௌனம் காப்பது ஏன்? - சரவணபவன் கேள்வி!

'சிறிலங்காவின் கடும் போக்குக் கொண்ட கொள்கையாளர்களான அமைச்சர்கள் விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் 13வது திருத்தச் சட்டமூலத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் எனத் தீவிரமாகச் செயற்படும் போது இந்திய அரசு மௌனம் சாதிப்பது ஏன்? இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட உரையின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'ஆயுதப் போராட்டத்திற்கும் அழிவுக்கும் இந்தியாவே பின்புலமாக இருந்தது என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். எனவே, இன்று நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது.

ஆனால், கடும் போக்காளர்களான சிறிலங்கா அமைச்சர்கள் 13வது திருத்தச் சட்டமூலத்தை ஒழிக்க வேண்டும் என சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முனையும் போது இந்தியா ஏன் மௌனமாக இருக்கின்றது?

சிறிலங்கா ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் வடக்கு மாகாணத்தை முற்றாகப் புறக்கணிக்கப்பட்டே தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். மாகாணசபைகளின் அபிவிருத்திக்கு 60 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும் வடமாகாண சபைக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை.

இன்று வடமாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழகம் இன்று ஓர் அமைச்சரின் கட்டளைகளின்படியே இயங்குகின்றது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் இன்று மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினரின் கடும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் சீரழிந்துவிட்டது.

பல்கலைக்கழக அபிவிருத்திக்குப் பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எப்படி, யாரால் நிர்வகிக்கப்படப் போகின்றது என்பது கேள்விக்குறியாகவுள்ளது. வடமாகாண ஆளுநரும் இன்று அமைச்சரின் கைப்பொம்மையாக இருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 3,000 பேர் சிவில் பாதுகாப்புப் படையில் இணைக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. காலப்போக்கில் எல்லாமே இராணுவ மயமாக்கப்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றோம்

சிறிலங்கா ஜனாதிபதியின் உரையில் மாநகர சபைகள் அதிகாரம் காட்டும் அமைப்புகளாகும் என்று கூறினார். ஆனால், மாநகர சபை ஒருபோதும் இலாபமீட்டியதாக இல்லை. மாநகர சபையின் நிரந்தர வைப்பில் நீண்டகாலமாக வைப்பிலிடப்பட்டிருந்த பணம் மீளப்பெற்று சம்பளமாக வழங்கப்படுகின்றது.

ஈ.பி.டி.பி. கட்சியின் ஆதரவாளர்கள் 400 பேருக்கு தற்காலிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் மேயர் உட்பட கட்சித் தலைவர் மற்றும் அரசியல்வாதிகளின் சொந்தத் தேவைகளையும், வீட்டுப் பணிகளையுமே செய்கின்றனர். இவர்களுக்கு மாநகர சபையின் பணம் சம்பளமாக வழங்கப்படுகின்றது.மாநகர சபைகள் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதியின் கூற்று ஒரு மயக்க நிலையிலேயே காணப்படுகின்றது.

நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும் என ஒரு பக்கம் கூறுகின்றனர். மறுபக்கம் 13வது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூச்சலிடுகின்றனர். அதிகாரப்பகிர்வை வழங்க 13வது திருத்தச் சட்டத்தை ஒழித்துத்தான் புதிய சட்டத்தை உருவாக்க வேண்டுமா? இருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை மேலும் பலமுள்ளதாக்கக் கூடாதா?

13வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என விமலும், சம்பிக்க ரணவக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகின்றார்களாம். இவர்கள் முன்பு உயர்நீதிமன்றத்தின் மூலம் வடக்கையும், கிழக்கையும் பிரித்தவர்கள்' என்று சரவணபவன் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=23610964-1a99-49f6-9c7f-6c18244f5e17

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை இழுத்தடிப்பதில், இருப்பதையும் இல்லாமல் செய்வதில் சிங்களப் பயங்கரவாதிகள் வீரவன்சவும் சம்பிகவும் முன்னணியில் இருந்தாலும் இதன் பின்னணியில் ஆட்டுவிப்பவர்கள் ராஜபக்ச கும்பல் மற்றும் சுதந்திரக் கட்சி, ஐ.தே. கட்சி, பௌத்த பிக்கு பயங்கரவாதிகள் என அனைவரும் உள்ளனர் என்பதை மறக்கக் கூடாது.

தமிழ் அரைவேக்காடு அரசியல் விமர்சகர்கள், தமிழ் அரைவேக்காடு ஊடகவியலாளர்கள் தொடர்ந்து ஒரே தவறைச் செய்து வருவது நல்லதல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.