Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தவின் வெள்ளைவானில் அழைத்துக் செல்லப்பட்டு போராளிகள் சித்திரவதை.- நான்காம் மாடிக்கு மாற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தவின் வெள்ளைவானில் அழைத்துக் செல்லப்பட்டு போராளிகள் சித்திரவதை.

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 18, 2012 AT 09:35

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்து, பலதரப்பட்ட விசாரணைகளின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் விசாரணை என்ற போர்வையில் இராணுவ புலனாய்வாளர்களால் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னாள் போராளிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த கோணேஸ் என்ற முன்னாள் போராளியும் ஒருவராவார். இவர் யுத்தத்தால் தனது ஒரு கையை இழந்துள்ளார்.

வெள்ளை வானில் வந்த இராணுவ புலனாய்வாளர்களே மேலதிக விசாரணைகளுக்காக இவர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றதாகவும் விசாரணையின்போது இராணுவ புலனாய்வாளர்களால் பலமாக தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் தற்போது அம்பாறை இராணுவ முகாமொன்றில் இவர்கள் உள்ளதாகவும் நாளைய தினம் இவர்களை கொழும்புக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதால் முன்னாள் போராளிகள் அனைவரும் பெரும் அச்சமான சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.

http://thaaitamil.com/?p=38637

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி நான்காம் மாடிக்கு மாற்றம்!

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 18, 2012 AT 23:59

அம்பாறையில் சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட பரஞ்சோதி கணேஸ் என்ற முன்னாள் போராளி கொழும் நான்காம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நான்கு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த கோணேஸ் என்ற முன்னாள் போராளியும் ஒருவராவார்வெள்ளை வானில் வந்த படை புலனாய்வாளர்களே மேலதிக விசாரணைகளுக்காக இவர்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளார்கள்.

கடந்த வியாழக்கிழமை இவரது கடைக்கு சாதாரண உடையில் சென்ற படைபுலனாய்வாளர்கள் கடையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட இவர் எதற்காக கொண்டு செல்லப்பட்டார்கள் என்று தெரிவிக்காத காரணத்தினால் அவரை தந்திரமாக கோவிலில் கதைத்பதாக கூறிவிட்டு நாங்கள் கொழும்பில் இருந்து வந்த புலனாய்வுத்துறை அவரை விசாரணைக்காக கொண்டு செல்கின்றோம் என்று இவரது துணைவிக்கு அறிவித்துள்ளார்கள்.

ஒருபிள்ளையின் தந்தையான இவர் கடந்த காலத்தில் இரண்டரை ஆண்டுகள் சிறீலங்காவின் படையினரின் புணர்வாழ்வு முகாமில் இருந்து அண்மையில் விடுதலையாகிய நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை கைதுசெய்த புலனாய்வாளர்கள் பொத்துவில் காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு மேலதிக விசாரணைக்காக கொழும்பு நான்காம் மாடிக்கு இன்று கொண்டுசென்றுள்ளார்கள்.

இத்தகவலை இவரது துணைவி அறிவித்துள்ளார்.

அவரை கைதுசெய்துள்ளதற்கான ஆதாரம் என்பதற்கான துண்டு ஒன்றும் இவரது கைது தொடர்பில் மனிதஉரிமைஆணைக்குழுவில் துணைவியாhர் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=38701

[size=4]ஒரு போரளிக்கோ இல்லை ஒரு குழுவிற்கோ நாம் உதவுவது மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.