Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக்கொடி சூத்திரதாரி நம்பியார் விவகாரத்தை உள்ளடக்க தவறிய ஐ.நா. அறிக்கை- இரா.துரைரத்தினம்

Featured Replies

[size=3]

VijayNambiar-150x150.jpgவன்னியில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா நிறைவேற்றத் தவறியது பற்றிய விவரங்கள் அடங்கிய உள்ளக விசாரணை அறிக்கை ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் கடந்த புதன்கிழமை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் அந்த அறிக்கை பற்றிய பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.[/size][size=3]

ஐக்கிய நாடுகள் சபை தான் விட்ட தவறை சுயவிமர்சனம் செய்வது போல அந்த அறிக்கை அமைந்திருக்கிறது. வன்னியில் நடந்த இறுதிப் போரின் போது யுத்தப்பிரதேசத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வெளியேறியிருந்தனர்.

கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கு முதலில் வன்னிப்பிரதேசத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் உட்பட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியனவற்றை அங்கிருந்து வெளியேறுமாறு சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருந்தது.[/size][size=3]

சாட்சிகள் எதுவும் இன்றி படுகொலைகளை நடத்துவதற்கு ஏதுவாக சிறிலங்கா அரசு விடுத்த உத்தரவை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட போது தங்களை விட்டு செல்ல வேண்டாம் என பொதுமக்கள் மன்றாடி கேட்டனர். கிளிநொச்சியில் இருந்த ஐ.நா. அலுவலகத்தை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் தங்களை பாதுகாக்குமாறும், தங்களை விட்டு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.[/size][size=3]

அப்படி செல்வதாக இருந்தால் தங்களையும் அழைத்து செல்லுமாறும் சில பொதுமக்கள் மன்றாடி கேட்டனர். இவை எதுவுமே ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் காதுகளில் விழவில்லை. சிறிலங்கா அரசின் உத்தரவை தலைமேல் கொண்டு கொழும்பை நோக்கி புறப்பட்டனர் ஐ.நா. அதிகாரிகள்.[/size][size=3]

விடுதலைப்புலிகளும் பொதுமக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. சிறிலங்கா அரசு சாட்சிகள் அற்ற வகையில் கேட்பார் இன்றி வகை தொகையற்ற வகையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த தாக்குதலில் சுமார் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என பான் கீ மூன் முன்னர் அமைத்திருந்த தர்ஸ்மன் தலைமையிலான ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்திருந்தது.[/size][size=3]

ஆனால் வன்னியில் நடைபெற்ற இறுதிப்போரில் 146,679 தமிழர்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயிருப்பதாக சார்ல்ஸ் பெட்ரி தலைமையிலான ஐக்கிய நாடுகள் குழு வெளியிட்டிருக்கும் தற்போதைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் பான் கீ மூன் உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருப்பதன் மூலம் இதனை ஐ.நாவின் உத்தியோகபூர்வ அறிக்கையாகவும் ஏற்றுக்கொள்ள முடியும்.[/size][size=3]

இந்த அறிக்கையில் பக்கம் 38 சரத்து 5 ல் வன்னிப் போரில் காணால்போன 146,679 தமிழர்களின் கதி குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.[/size][size=3]

சிறீலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையத்தின் முன் கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூலப் புள்ளிவிபரத்தில் 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வன்னியில் 429,059 பொதுமக்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.[/size][size=3]

இப்புள்ளி விபரத்தை வன்னியிலிருந்து அகதிகளாக வவுனியாவுக்கும் யாழ் குடாநாட்டிற்கும் வந்தடைந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டோர் என 2009 யூலை மாதம் பதிவு செய்யப்பட்டோருடன் ஒப்பிடும் பொழுது 146,679 தமிழர்கள் காணாமல் போயிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது[/size][size=3]

128 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்பட்டிருக்கிறது.[/size][size=3]

சார்ல்ஸ் பெட்ரியினால் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையின் பல பகுதிகளை கறுப்பு மையினால் அழித்த பின்பே பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்கிறது. கறுப்பு மையினால் அழிக்கப்பட்ட விடயங்கள் என்ன என்பது பற்றி சார்ல்ஸ் பெட்ரி தலைமையிலான குழுவினருக்கும் பான் கீ மூனுக்கும் மட்டுமே அவை தெரியும். ஆனால் சில பகுதிகள் அழிக்கப்பட்டது ஏன்? இறுதிப் போரின் போது சிறிலங்காவை காப்பாற்றுவதற்கு ஐ.நா.செயலாளர் நாயகமும், ஐ.நா.அதிகாரிகளும் செயல்பாட்டார்கள் என குற்றம் சாட்டப்படுவது போல இந்த அறிக்கை விடயத்திலும் சிறிலங்காவையோ அல்லது சிறிலங்காவுடன் போரை நடத்திய சில அயல்சக்திகளையோ பான் கீ மூன் காப்பாற்ற முற்பட்டிருக்கிறரா என்ற சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும்.[/size][size=3]

சிறிலங்கா அரசின் அச்சுறுத்தலினால் பரந்தளவிலான படுகொலைகள் குறித்து தகவல்களை வெளியிட ஐ.நா அதிகாரிகள் பயந்தார்கள் என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா பாதுகாப்புச்சபை தெளிவான உத்தரவை வழங்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.[/size][size=3]

இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின் போது தமிழ் மக்களைக் காக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயற்படுத்தவில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.[/size][size=3]

எதிர்வரும் காலங்களில் சர்வதேச மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை அற்றுப் போகாதிருக்க, போதிய அளவு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார்.[/size][size=3]

இலங்கையில் நடந்து முடிந்த போரின் இறுதிக்கட்டத்தில், ஐநா மன்றம் செயல்பட முடியாமல் தோல்வியடையந்தது போன்று மீண்டும் சீர்குலைவு ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு ஆலோசனை கூற ஐ.நா செயலாளர்நாயகம் பான் கி மூன், மீண்டும் ஒரு குழுவை நியமித்திருக்கிறார்.[/size][size=3]

வன்னிப் போரின் பின்னர் ஐ.நா.பொதுச்செயலாளரினால் நியமிக்கப்படும் மூன்றாவது குழு இதுவாகும். இலங்கையில் ஐ.நாவின் செயல்பாடுகள் தோல்வியடைந்தது போல எதிர்காலத்திலும் ஏற்படாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.[/size][size=3]

இக்குழு சமர்ப்பிக்கப் போகும் அறிக்கையினாலோ அல்லது ஐ.நா. எதிர்காலத்தில் போர் நடைபெறும் இடங்களில் எடுக்கப்போகும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு எந்த நீதியும் தீர்வும் கிடைக்கப்போவதில்லை.

ஆனால் சார்ல்ஸ் பெட்ரி தலைமையிலான குழு சமர்ப்பித்திருக்கும் உள்ளக அறிக்கையும் அதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட தர்ஸ்மன் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை போல கிடப்பில் போடப்பட்டு விடுமோ என்ற அச்சம் மனித உரிமை அமைப்புக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.[/size][size=3]

வழக்கம் போல சிறிலங்கா அரசு இதை நிராகரித்திருக்கிறது. தாங்கள் ஐ.நா. அதிகாரிகளை அச்சுறுத்தவில்லை, வெளியேற்றவில்லை, என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் பற்றிய எண்ணிக்கை அடிப்படை அற்றது என்றும் மறுத்திருக்கிறது. சிறிலங்கா தன்மீது யாராவது குற்றம் சாட்டினால் ஒரு வாய்ப்பாட்டை வைத்திருக்கிறது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டும் மனித உரிமை அமைப்புக்கள் அல்லது சர்வதேச ஊடகங்களிலும் புலிகள் ஊடுருவிட்டார்கள் என குற்றச்சாட்டை சுமத்தி தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிலிருந்து விலகி கொள்ளும் தந்திரத்தை சிறிலங்கா அரசு வழமையாக கொண்டிருக்கிறது.[/size][size=3]

ஐக்கிய நாடுகள் சபையிலும் புலிகள் ஊடுருவிட்டார்கள், அவர்களின் செல்வாக்கு அதிகரித்து விட்டது. இதனால்தான் இத்தகைய அறிக்கைகள் வெளிவருகின்றன என சிறிலங்கா அரசாங்கம் சொல்வதற்கு காலம் எடுக்காது.

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்றொரு பழமொழி உண்டு. ஐ.நா.மீதும் சிறிலங்கா இந்த குற்றச்சாட்டை சுமத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.[/size][size=3]

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிக்கை உள்ளக அறிக்கை அது பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் சிறிலங்கா பதிலளிக்கலாம். எது எப்படி இருந்த போதிலும் இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து சிறிலங்கா மிக இலகுவாக தப்பிக்கொள்ள முடியாது. அதற்கான முழு முயற்சிகளில் சிறிலங்கா இப்போது ஈடுபட்டிருக்கிறது.[/size][size=3]

இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் எதிரொலிக்கலாம் என உணர்ந்து கொண்ட சிறிலங்கா இப்போதே அதற்கான ஆயத்த வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது.[/size][size=3]

அரபு நாடுகளை தன்பக்கம் இழுத்துக்கொண்ட சிறிலங்கா தற்போது ஆபிரிக்க நாடுகளின் ஆதரவை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக ஆபிரிக்க நாடுகளுக்கு விசேட இராஜதந்திரிகளை நியமித்திருப்பதுடன் அந்நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது.[/size][size=3]

இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் உகண்டா ஜனாதிபதியின் இலங்கை விஜயமும், சிறிலங்காவுடன் உகண்டா செய்து கொண்ட ஒப்பந்தங்களும் ஆகும். இதேபோன்று ஆபிரிக்க நாடுகளுடன் சிறிலங்கா நல்லுறவுகளை வளர்த்து ஐ.நாவில் தன்னை காப்பாற்றுவதற்கான ஆதரவு தளத்தை தேடி வருகிறது.[/size][size=3]

இந்த ஆதரவு தளத்தை திரட்டும் பின்னணியில் இந்தியா மிக முக்கிய பங்காற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இம்மாதம் ஜெனிவாவில் எவ்வாறு இந்தியா தன்னை காப்பாற்றியதோ அதே போன்று மார்ச்சிலும் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கை சிறிலங்காவுக்கு உண்டு.[/size][size=3]

இதனால் ஐ.நா.வின் இந்த அறிக்கை பற்றி சிறிலங்கா அச்சம் கொண்டதாக தெரியவில்லை. ஐ.நாவின் இந்த அறிக்கையில் சில பகுதிகள் கறுப்பு மையினால் மறைக்கப்பட்டது போல மிக முக்கியமான ஒரு விடயமும் இடம்பெற வில்லை.

வன்னியில் இறுதிப் போரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களையும் தளபதிகளையும் சுட்டுக்கொன்ற விவகாரத்தில் பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் முக்கிய சூத்திரதாரியாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த விடயம் ஐநா உள்ளக அறிக்கையில் இடம்பெற வில்லை.[/size][size=3]

சிறிலங்காவில், போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த போது ஐநா பொதுச் செயலாளரின் பிரதிநிதியாக சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார் ஆவார்.[/size][size=3]

போரின் முடிவில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டது தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் அவர் முக்கியப் பங்கு வகித்திருந்தார். ஆனால், விஜய் நம்பியாரின் உத்தரவாதத்தின் பேரில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பலர், படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுடன் கூட வந்த குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் அச்சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.[/size][size=3]

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குத் துணைபோனதாக விஜய் நம்பியார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், ஐநா உள்ளக அறிக்கையின் அவர் தொடர்பிலான குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

விடுதலைப்புலிகளின் தளபதிகளையும் அரசியல் பிரிவு தலைவர்களையும் சரணடையுமாறு கூறி அவர்களை படுகொலை செய்த சூழ்ச்சியில் விஜய் நம்பியார் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு ஆகியோருக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.[/size][size=3]

விஜய் நம்பியார், சந்திரகாந்தன் சந்திரநேரு, மற்றும் பிரித்தானிய பெண் ஊடகவியலாளர் ஒருவர் ஆகியோர் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனுடன் தொலைபேசியில் இறுதி வரை தொடர்பில் இருந்து அவர்களுக்கு வெள்ளைக்கொடியுடன் சென்று சரணடையுமாறு உத்தரவாதத்தை வழங்கியிருந்தனர்.[/size][size=3]

ஆனால் வெள்ளைக்கொடியுடன் சென்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் இது தொடர்பான உண்மைகளை விஜய் நம்பியாரோ அல்லது சந்திரகாந்தனோ வெளிப்படுத்தவில்லை.[/size][size=3]

வெள்ளைக்கொடியுடன் சரணடைய செல்பவர்களை சுட்டுக்கொல்வது மிகப்பெரிய போர் குற்றமாகும். இந்த போர்க்குற்றத்திற்கு துணைபோன நம்பியார் போன்றவர்களை ஐ.நா. ஏன் காப்பாற்ற முற்பட்டிருக்கிறது?[/size][size=3]

இரா.துரைரத்தினம்[/size]

[size=3]

http://www.thinakkathir.com/?p=43586[/size]

[size=4]ஐ.நா. பெரும் அழுத்தத்தை ஒவ்வொரு இடமாக 'அமுக்கி' 'மறைக்க' முயல, அது இன்னொரு இடத்தில் வெடிக்கும், இல்லை உடைக்கும். [/size]

[size=1]

[size=4]ஒரு பயங்கரவாத அழிப்பு என்ற பெயரில் ஒரு இலட்சம் மக்களுக்கு மேலே கொலை செய்த உண்மைகள் வெளியே வந்தே தீரும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.