Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக கூறும் பாதுகாப்பு தரப்பு புதிய முகாம்களை அமைப்பது அம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக கூறும் பாதுகாப்பு தரப்பு புதிய முகாம்களை அமைப்பது அம்பலம்

19 நவம்பர் 2012

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

யாழ்.குடாநாட்டில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக கூறும் பாதுகாப்பு தரப்பு மறுபுறத்தே சத்தமின்றி தீவகப்பகுதிகளினில் படைகளை குவித்து வருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.யாழ்.குடாநாட்டில் சுமார் 40 ஆயிரம் வரையிலான படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்ற போதும் அரச தரப்போ வெறுமனே 15 ஆயிரம் படையினரே நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது.யாழ்ப்பாணத்தல் படைக்குறைப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் பொய்பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகிந்த கத்துருசிங்க அண்மையில் தெற்கு ஊடகவியலாளர்களிடையே உரையாற்றுகையினில் தெரிவித்துள்ளார்.

எனினும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்படுவதாக கூறப்படும் படையினரை சத்தமின்றி மக்கள் நடமாட்டம் குறைவான தீவகப்பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.குறிப்பான 1990ம் ஆண்டினில் இடப்பெயர்விற்குள்ளான தீவகப்பகுதிகளில் பெரும்பாலும் மீள்குடியமர்வு திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.பெருமளவிலான வீடுகள் காணிகள் குடியிருப்புக்கள் அற்றதாகவேயுள்ளன.இதனை பயன்படுத்தியே இங்கு புதிய புதிய படைமுகாம்களை சத்தமின்றி அமைத்து அங்கு படையினரை குவித்து விடுவதினில் படைத்தரப்பு கூடிய ஆர்வம் காட்டிவருவதாக தெரியவருகின்றது.

அவ்வகையில் மக்கள் மீள்குடியமர்வு திருப்திகரமாக இடம்பெறாத வேலணை-அராலி வீதிப்பகுதியினில் புதிய படைத்தளமொன்று அமைக்கப்பட்டு இங்கு படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.இதற்கென சீன உதவியின் கீழ் உடனடியாக பொருத்தப்படக்கூடியதான பொருத்துக்களை கொண்டு முகாம் அமைக்கப்பட்டுவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்பு பற்றி பேசியவாறே யாழ்.நகரில் கைவிப்பட்ட சிங்கள மகாவித்தியாலய காணி மற்றும் அதனையண்டிய பகுதிகளிலும் அதே போன்று வடமராட்சியின் வல்லைப்பகுதியிலும் புதிய படை முகாம்;கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85578/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

army%20cam.jpg

[size=3][size=4]வல்வைச்சந்தியில் புதிய படைமுகாம் ஒன்றினை அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.[/size]

[size=4]குறித்த பகுதியினை துப்பரவு செய்யும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

கடந்த சிலநாட்களாக படைஊர்தியில் வந்திறங்கும் படையினர் குறிப்பிட்ட பகுதியில் கனரகவாகனங்களை கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த பகுதியில் பாரிய படைத்தளம் ஒன்றினை அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஏற்கனவே வடமாரட்சியின் வல்வைபகுதியில் படைமுகாம்ஒன்று அமையப்பெற்றுள்ளதுடன் அதன்ஊடாக செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் படையினரின் தேவைகளுக்கு ஏற்ப பதிவுகளை மேற்கொண்டுவிட்டே வடமராட்சிக்கு செல்லவேண்டும்.

இரவுநேரங்களில் இ;ந்த வீதிஊடாக பணிக்கு செல்லும் அனைவரும் படையினரிடம் தங்களை பதிவு செய்துவிட்டு பணிக்கு செல்லவேண்டிய நிலைக்கு தற்போதும் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தற்போது இருக்கும் படைமுகாமிற்கு எதிராக பாரிய படைத்தளத்தினை அமைக்கும் நோக்கில் அங்கு நிற்கும் பனைவடலிகள்,சவுக்குமரங்களை படையினர் தறித்து படைமுகாமினை அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாக மக்கள்தெரிவித்துள்ளார்கள்.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.