Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா மொன்றியலில் வாகனத்துடன் எரித்து இரு தமிழர்கள் கொலை: - அனலைதீவைச்சோ்ந்த பெண் என ஒருவர் இனங்காணப்பட்டார்.

Featured Replies

மொன்றியலில் மூன்று பிள்ளைகளின் தாயான அழகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காலையில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துவிட்டு வேறு இரு பெண்களுடன் நடந்து வரும் போது குறித்த வாலிபர் பெண்ணின் பின் தலையைத்தாக்கி அவர் மயக்கமுற ஏற்கனவே தயார் நிலையில் இருந்த வாகனத்தில் தூக்கிபோட்டு தானும் ஏறி இருந்து இருவரும் தீயில் மாண்டுள்ளனர்.இவர் தாக்கியபோது மற்ற இருவரும் அலறி அடித்து ஓடியுள்ளார்கள்.கண்விழித்துமூடுமுன் காரியத்தை கச்சிதமாக முடித்துள்ளார் குற்றவாளி.

இதுபற்றி பிந்திக்கிடைத்த தகவல்களின்படி பொலிசார் தெரிவிக்கையில் இது ஒரு கொலையும் தற்கொலையும் சேர்ந்ததாகும் என்றார்கள்.இவரின் கணவர் ஒரு குடிப்பழக்கமுள்ளவர் என்றும் கொலையாளி நிகழ்வொன்றின் மூலம் குறித்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என்றும் சொல்லபடுகிறது.கொலையாளி அடிக்கடி இப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.அண்மையில் இப் பெண் பொலீசுக்கு தகவல் கொடுத்து கொலையாளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறை மீண்ட ஒருதலைக்காதலன் வாழ்வா சாவா என்று நிலை தடுமாறி தனது கவுரவத்துக்காக அல்லது வாழ முடியாத சூழலில் அந்த பெண்ணின் மூன்று பிள்ளைகளை மறந்து இக்கொலையை புரிந்து தானும் மாண்டுள்ளார்

http://www.cbc.ca/ne...burned-car.html

105762.jpg

Edited by BLUE BIRD

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனடா மொன்றியலில் வாகனத்துடன் எரித்து இரு தமிழர்கள் கொலை: - அனலைதீவைச்சோ்ந்த பெண் என ஒருவர் இனங்காணப்பட்டார்.

[Thursday, 2012-11-22 13:10:33]

கனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 29 ம் திகதி (Oct 29, 2012) மொன்றியலில் வைத்து 37 வயதுடைய அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்பவர் வாகனத்துடன் சேர்த்து எரிக்கபட்டுள்ளதாக மொன்றியல் போலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவதினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்தை பல 911அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.

இது ஒரு கொலை, தற்கொலை (Murder-Suicide) என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கண்டெடுத்த 2 உடல்களில் ஒன்று ஆணினுடையதும், ஒரு பெண்ணினுடையதும் என்பதும், இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்பதும் ஆனால் முன் விரோதமே கொலைக்கு காரணம் என்றும் நம்பப்படுகிறது.

http://seithy.com/breifNews.php?newsID=70624&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ரொன்டோவில் சாதனை படைத்த தமிழர்கள் இப்பொழுது மொன்றியலிலும் சாதனை படைக்கிறார்கள்....

புலம் பெயர்ந்த நாடுகளில் இது தேவையா?

[size=3]

Rani-analaitivu-150x150.jpgகனடா மொன்றியலில் அனலைதீவை சேர்ந்த விக்னேஸ்வரன் யோகராணி என்ற 37வயதுடைய பெண் வாகனத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. கடந்த மாதம் 29 ம் திகதி மொன்றியலில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.[/size][size=3]

எரிந்த நிலையில் இவரின் சடலம் மீட்கப்பட்ட போது இன்னொரு ஆணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆணுக்கும் இப்பெண்ணுக்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும், இந்நிலையிலேயே இப்பெண்ணை அவர் கொலை செய்து விட்டு இந்நபர் தான் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.[/size][size=3]

சம்பவதினம் காலை 9 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் எரிந்த வாகனத்துகுள் இருந்து இரண்டு உடல்களை கைப்பற்றி விசாரணையை தொடர்ந்தனர்.

ஒன்று கொலை, மற்றொன்று தற்கொலை என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.[/size][size=3]

இந்த கொலை மற்றும் தற்கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் இன்னும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[/size][size=3]

இந்த பெண் கணவனை விட்டுவிட்டு எதற்காக இந்த ஆணுடன் சென்றார், இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்ற முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் போது பல உண்மைகள் வெளியாகும் என கனடா தகவல்கள் தெரிவிக்கின்றனyogarani.jpg[/size]

[size=3]

www.Thinakkathir.com[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.