Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரிவுரையாளர்களுக்கு ரூபா 43,000, தனியார் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ரூபா 93,000, எது நியாயம்?

Featured Replies

[size=4]நாட்டில் புத்தி ஜீவிகளை உருவாக்கும் பேராசிரியர்களுக்கு விரிவுரையாளர்களுக்கு சம்பளம் ரூபா 43,000. ஆனால், பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு வழங்கும் தனியார் நிலையப் பொறுப்பதிகாரியின் சம்பளம் ரூபா 93,000. இது எவ்வாறு நியாயமாகும் என பாராளுமன்றத்தில் ஐ.தே. கட்சி எம்.பி. கபீர் ஹாசிம் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உயர் கல்வி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின்போதே கபீர் ஹாசிம் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

கல்விக்கான நிதியே அதிகளவில் குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம்மனித வள அபிவிருத்திக்காக கவனம் செலுத்தவில்லை. இன்று சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற்று அரசாங்கம் ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சம்பள அதிகரிப்பை மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களின் வளங்களை, வசதிகளை அபிவிருத்தி செய்யுமாறும் நிதியை அதிகம் ஒதுக்குமாறும் போராட்டம் நடத்தினர். இது தொடர்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உயர்கல்வி அமைச்சருடனும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் (பூட்டா) பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் போது இனங்காணப்பட்ட விடயங்கள் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. பல்கலைக்கழகத்திற்கு புதிதாக 5,850 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன்போது புதிதாக விரிவுரையாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனரா?

விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் கோரிய சம்பள உயர்வு வழங்கப்படுமா அது தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே, எவ்வாறு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ரேஸிங் கார்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், உயர் கல்விக்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. பல்கலைக்கழகங்களில் பதவியுயர்வுகள் வழங்குவதும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனைத்து விடயங்களிலும் தலையிடுகிறது. அரசாங்க சேவைகள் ஒரு போதும் தனியார் மயமாக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு தனியார் நிறுவனங்கள் இரண்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு பிரிவு இருக்கும்போது பல மில்லியன்களை வழங்கி ஏன் தனியார் துறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் சுயாதீனம் மீறப்பட்டு, அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளது. உலக அழிவை, சவால்களை வெற்றி கொள்ளவும் உள்நாட்டில் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு ஆலோசனைகளை வழங்கும் மாணவர்களை உருவாக்குபவர்கள் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆவார்கள்.

ஆனால், அவர்களுக்கு ரூபா 43,000 சம்பளம் கிடைக்கிறது. பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கடமையிலுள்ள பொறுப்பாளர்களுக்கு ரூபா 93,000 சம்பளம் வழங்கப்படுகின்றது. நாட்டின் புத்தி ஜீவிகளுக்கு நியாயமான சம்பளம் இல்லை. ஓய்வூதியம் இல்லை. வாகனம் இல்லை.

தனியார் பாதுகாப்பு பிரிவினருக்கு உயர் சம்பளம் வழங்கப்படுகிறது. மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் தரம் உயர்த்தப்படவில்லை. மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வளங்கள் கிடையாது. பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்கும் சந்தையாக மாறியுள்ளது. சுகபோக வாகனங்கள் ரேஸிங் கார்களுக்கு வரி விலக்கு வழங்கி வரிகளை நீக்கும் அரசாங்கம் ஏன் உயர்கல்விக்கு நிதியொதுக்கவில்லை.

லிபரல் வாதக் கொள்கைக்கமைய பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1755

ஆனால், அவர்களுக்கு ரூபா 43,000 சம்பளம் கிடைக்கிறது. பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கடமையிலுள்ள பொறுப்பாளர்களுக்கு ரூபா 93,000 சம்பளம் வழங்கப்படுகின்றது. நாட்டின் புத்தி ஜீவிகளுக்கு நியாயமான சம்பளம் இல்லை. ஓய்வூதியம் இல்லை. வாகனம் இல்லை.

கோத்தாவின்ரை ஆள் என்றால் கூடத்தானே கொடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.