Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட 2000 உழவு இயந்திரங்கள் எங்கே? - சிவசக்தி ஆனந்தன் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்ட 2000 உழவு இயந்திரங்கள் எங்கே? - சிவசக்தி ஆனந்தன் கேள்வி

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னி மாவட்ட விவசாயிகளால் முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டுச் சென்ற இரண்டாயிரம் உழவு இயந்திரங்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாகப் பகிரங்க விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நட்டஈடுகளை வழங்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

கமநல சேவைகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும்போதே சிவசக்தி ஆனந்தன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

வன்னி மாவட்ட விவசாயிகள் கடினமான சொந்த உழைப்பால் செல்வந்தர்களாக வந்தவர்கள். மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் விவசாயிகள் கடைசி யுத்தத்தின்போது தமக்குச் சொந்தமான 2 ஆயிரம் உழவு இயந்திரங்களையும் முள்ளிவாய்க்கால் வரை கொண்டுசென்று கைவிட்டுச் சென்றனர்.

இப்பிரதேசம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. யுத்தம் முடிந்த பின்னர் இந்த உழவு இயந்திரங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்து அதன் பதிவுகளைக் கொண்டுவாருங்கள் என அறிவிக்கப்பட்டது.

பொலிஸ் முறைப்பாட்டில் பதிவுகளுடன் சென்றபோதும் அவர்களுடைய உழவு இயந்திரங்கள் கையளிக்கப்படவில்லை.

விவசாயிகளின் உழவு இயந்திரங்கள் அரச படையினரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இயந்திரங்கள் உதிரிப்பாகங்களாகப் பிரித்து தென் பகுதிக்கு விற்கப்பட்டுள்ளன.

இவற்றிற்கும் மேலாக பெருமளவிலான இயந்திரங்கள் நிறம் மாற்றப்பட்டு இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தமது உழவு இயந்திரங்களை அடையாளம் கண்டு அவற்றைத் திருப்பித் தரும்படி கேட்டால் படையினரால் அச்சுறுத்தப்படுகின்றனர்.

இந்த இரண்டாயிரம் உழவு இயந்திரங்கள் தொடர்பாகப் பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும்.

கொக்கிளாய், முந்திரியன் குளம் பிரதேசத்தில் காலங்காலமாக விவசாயம் செய்யப்பட்ட 500 ஏக்கர் காணியில் தென் பகுதி சிங்களவர்கள் விவசாயம் செய்கின்றனர். அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளின் காணிகள் மீண்டும் தமிழ் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் 460 பாரிய குளங்கள் முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளன. இந்த விவசாய குளங்கள் புனரமைக்கப்படவேண்டும்.

மேலும், ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குளங்கள் சுற்றி அடைக்கப்பட்டு அங்கே நன்னீர் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வன்னி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் தொழில் செய்த பிரதேசங்களில் தென்பகுதி மீனவர்கள் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளனர். சிங்கள மீனவர்களுக்குப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இவ்விடயம் தொடர்பாக அமைச்சு தலையிட்டு தமிழ் மீனவர்கள் தமது சொந்த பிரதேசத்தில் சுதந்திரமாக தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனதுரையில் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=21863652-8e07-4440-ab54-caf99ad083ad

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.