Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவப்பு மழை; அபத்த வெள்ளம் யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு மழை; அபத்த வெள்ளம் யமுனா ராஜேந்திரன்

25 நவம்பர் 2012

எண்பதுகள் முதலாகவே இயக்குனர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் முதல் மணிரத்தினத்தின் கன்னத்தை முத்தமிட்டால் வரை ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. 2009 மே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பும் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

புகழேந்தி செல்வராஜின் இயக்கத்தில் உச்சிதனை முகர்ந்தால், லீனா மணிமேகலை இயக்கத்தில் செங்கடல், இகோர் இயக்கத்தில் தேன்கூடு, செந்தமிழன் இயக்கத்தில் பாலை, கலைவேந்தன் இயக்கிய புலம் ஈழம் மற்றும் ஈழக் கனவுகள், ஆனந்த் மய்யூர் சீனிவாஸ் இயக்கிய மிதிவெடி, சுரேஷ் சோச்சிம் நடித்துத் தயாரித்த சிவப்பு மழை போன்ற, ஈழப் பிரச்சினையை மையமாகக்கொண்டு முழுநீளத் தமிழ்படங்கள் 2009 ஆம் ஆண்டின் பின் தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மிதிவெடி ஆஸ்திரேலிய ஈழத் தமிழராலும், சிவப்பு மழை கனடிய ஈழத் தமிழராலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிற படங்களை இயக்கியவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள். இவற்றில் உச்சிதனை முகர்ந்தால், பாலை, சிவப்பு மழை, புலம் ஈழம் மற்றும் ஈழக் கனவுகள் போன்ற படங்கள் பரவலாக அனைவரும் பார்க்கக் கிடைக்கின்றன. செங்கடல் உலகின் பல திரைப்பட விழாக்களிலும், சிறப்புத் திரையிடல்களிலும் காண்பிக்கப்பட்டாலும் பரவலாக பார்க்கப்பட முடியாத திரைப்படமாக இருக்கிறது. இணையத்தில் பார்க்கும் வகையில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட மிதிவெடியின் கட்டணத் திட்டம் நடைமுறைத்தப்பட்டதாகத் தெரியவரவில்லை.

ஈழம் குறித்து தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்கள் இந்தியத் தணிக்கை, மரபான மனோரதிய நாடகீய சினிமாச் சட்டகம், பார்வையாளர்களை எட்டுவதற்கான திட்டமின்மை, முறையான விநியோக ஏற்பாடுகள் இன்மை எனும் சிக்கல்களால் பொதுவாகத் தமிழ்த்திரை ரசிகர்களிடம் சென்று சேரவேண்டிய நிகழ்கால அரசியல் செய்திகளைப் பகிரமுடியாத நிலைமையில் இருக்கின்றன.

சிவப்பு மழை(2010) திரைப்படத்தினை கனடிய ஈழத் தமிழரான ஜோச்சிம் எழுதி கதாநாயகனாக நடித்துத் தயாரித்திருக்கிறார். பிரபல தமிழ் நடிகையான மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுமன், ராஜீவ் போன்றவர்களும் நடித்திருக்கும் இப்படம் முழுமையாகத் தமிழ் சினிமா மசாலா பாணிக்கும், தணிக்கைக்குத் தப்பிய திருகலான கதைக்கும், சொதப்பலான அசட்டுத் தமிழ்பக்தி அரசியலுக்கும் பலியான படம் என்று சொல்லாம்.

அமைச்சரொருவரின் மகளைக் கடத்தி வைத்துக் கொண்டு தான் விரும்பும் சில சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிற ஆயுமேந்திய தீவிரவாதியொருவன் குறித்த திரில்லர் திரைப்படமாக சிவப்பு மழை உருவாகியிருக்கிறது.

சிங்கள ராணுவத்தினால் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராளி இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கும் சில தமிழர்களும் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். மோதல்களில் காயம்பட்ட மக்களுக்கு தியாக மனப்பான்மையுடன் முகாம் அமைத்து மருத்துவ உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் மருத்துவத் தம்பதிகள். அறுவைச் சிகிச்சையின் போது உபயோகப்படுத்த அவசியமான மயக்கமருந்து கூட இலலாமல் குழந்தைகளுக்கு வைத்தியம் செய்ய வேண்டிய நிலைமைகளை வலியுடன் நினவுகூர்கிறாள் பெண்மருத்துவர்.

முகாமில் எங்கிலும் காயம்பட்ட மனிதர்களின் ஓலம். அங்கு சிங்கள ராணுவ வாகனம் வருகிறது. அதிலிருந்து இறங்கும் ராணுவத் தளபதி போராளிகளுக்கு மருத்துவத் தம்பதிகள் வைத்திய உதவி செய்வதாகக் குற்றம் சாட்டுகிறார். சந்தேகத்திற்கு உரியவர்களைக் கைது செய்யவும் திட்டமிடுகிறார்கள். காயம்பட்டவர்களுக்கு அவர்கள் போராளிகளே ஆனாலும் அவர்களுக்கு சிகிச்சை செய்வது எம் உரிமை என வாதிடுகிறார்கள் மருத்துவ தம்பதிகள். ராணுவத் தளபதி திரும்பிச் செல்கிறார்.

சென்றவர்கள் முகாமை சோதனையிட்டு மருத்துவத் தம்பதிகளைக் கைது செய்யும் உத்தரவுடன் திரும்பவும் வருகிறார்கள். எதிர்த்துப் பேசும் தமிழ் நோயாளிகளைச் சுட்டுக் கொல்கிறார்கள். விசாரணைககு என அழைத்துச் செல்லப்படும் மருத்துவத் தம்பதிகள் சித்திரவதை செய்யப்படுபடுகிறார்கள். பெண் மருத்துவரை வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். இந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தமது மனைவியைத் தானே கொலை செய்துவிடுகிறார் மருத்துவர்.

சிங்கள ராணவத் தளபதி அவனை நையப்புடைக்கிறார். மனைவியின் மரணத்தை நினைத்து நீ வாழ்நாளெல்லாம் துன்புற வேண்டும் என அவனுக்குச் சாபமிடுகிறார். தன்னை எதிர்த்துப் பேசியமைக்கான தண்டனை இது எனவும் அவர் எக்காளம் செய்கிறார்.

காயம்பட்ட நோயாளிகளைக் கொன்றது, மருத்துவர்களைக் கைது செய்து சித்திரவதை தேற்கொண்டது, பெண்மருத்துவரைச் சீரழித்தது என மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை சிங்கள ராணுவத் தளபதியின் மீது சுமத்துகிறது சர்வதேசிய மன்னிப்புச் சபை. இலங்கை அரசும் ராணுவமும் இதனை ஏற்றுக் கொண்டு அந்தத் தளபதியைக் கைது செய்ய வந்து கொண்டிருக்கிறது.

மனித உரிமை மீறல் புரிந்த சிங்களத் தளபதியும் சிங்களப் படையினர் சிலரும் இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பி தமிழ்நாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள். தமது பெயரையும் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொள்கிறார்கள். சிங்களத் தளபதி தனது பெயரை முகுந்தன் என மாற்றிக் கொள்கிறான். இவனை ஈழத்தீவிரவாதி எனச் சந்தேகிக்கும் தமிழகக் காவல்துறை அவனைக் கைது செய்து அதியுயர் பாதுகாப்புச் சிறையில் அடைத்திருக்கிறது. அவனை விடுதலை செய்யுமாறு அவனோடு தப்பி வந்த இன்னொருவன் நீதிமன்றில் மனு கொடுத்திருக்கிறான்.

இச்சூழலில் அதே முகுந்தனை விடுதலை செய்யுமாறு தமிழக அமைச்சரொருவரின் மகளைக் கடத்தி வைத்துக்கொண்டு நிபந்தனை விதிக்கிறார் நிஜமான ஈழத் தமிழர் ஒருவர்.

யார் இவர்? போராளியா அல்லது சிங்களத் தளபதியின் சகபாடியா? இரண்டும் இல்லை. இவர் சிங்களத் தளபதியால் சித்திரவதை செய்யப்பட்ட, தனது மனைவியைப் பறிகொடுத்த தமிழ் மருத்துவர். சிங்களத் தளபதியைப் பழிவாங்க அவரும் தமிழகம் வந்திருக்கிறார். போராளி போல வேடமிட்டிருக்கும் முகுந்தனை, அவரது இயக்கம் சார்ந்த போராளி போலவே வேஷமிட்டு அவரை விடுதலை செய்து தன் கையினால் சுட்டுக்கொல்வது அவரது திட்டம்.

காவல்துறை உயரதிகாரியும் அமைச்சரும் பெண்ணைக் காப்பாற்ற வேண்டி இவரது நிபந்தனைக்கு உட்பட்டு முகுந்தன் எனும் சிங்களத் தளபதியை விடுதல செய்யச் சம்மதிக்கிறார்கள். மருத்தவரின் துன்பத்தையும் துயர்களையும் அறிந்து கொள்ளும் அமைச்சரின் மகளான தொலக்காட்சிச் செய்தியாளரான மீரா ஜாஸ்மின் ; தன்னைக் கடத்தியவன் மீது பிரியம் கொள்கிறாள். இதனைக் காதல் என்று கருதிக்கொள்கிற மாதிரி ஒரு டூயட் பாட்டும் இருக்கிறது.

கிளைமாக்ஸ்தான் படத்திலேயே மிகக் கொடுமையான விஷயம்.

காவல்துறை முகுந்தனையும் அவனது சகா ஒருவனையும் விடுதலை செய்து மருத்துவரின் இருப்பிடத்திற்குக் கொண்டு வருகிறது. காவல்துறை அதிகாரி மருத்துவரிடம் தனது துப்பாக்கியைக் கொடுத்து சிங்களத் தளபதியான முகுந்தனையும் அவனது சகாவையும் சுட்டுக்கொல்லச் சொல்கிறார். இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல் புரிந்த கொடுங்கோலர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் தமிழக காவல்துறைக்குத் தந்திருக்கிறுது என்கிறார் அந்த அதிகாரி.

இலங்கை அரசு, இலங்கை ராணுவம், இந்திய அரசு, தமிழக காவல்துறை என அனைத்தும ஒன்றிணைந்து, மனமொத்து தமிழருக்கு எதிராக மனித உரிமை மீறல் புரிந்த சிங்கள ராணுவத்தினரை தண்டிக்க முடிவு செய்கிறது.

தமிழக காவல்துறை அதிகாரி ஒரு தந்திரத்தின் வழி அந்தத் தண்டனையைப் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழன் கையினாலேயே நிறைவேற்றச் செய்கிறார். மருத்துவர் தன்னைச் சித்திரவதை செய்த, தன் மனைவியின் சாவுக்குக் காரணமான, பற்பல தமிழ் மக்களின் சாவுக்குக் காரணமான சிங்களத் தளபதியையும் அவனது சகாக்களையும் சுட்டுக்கொல்கிறான்.

கடைசியில் காவல்துறை அதிகரியினால் தப்பவிடப்படும் கதாநாகனான மருத்துவரைத் தேடி, கதாநாயகியும் அமைச்சரின் மகளுமான கடத்தப்பட்ட மீரா ஜாஸ்மினின் காதல் விழிகள் சுழல்கின்றன. சுபம்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மிக்குறைந்த நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப் பெற்றிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்;றன. அவ்வாறான சாதனையை இது செய்திருக்கவும் முடியும். அதனை திரைப்பட விமர்சகனாக நான் சரிபார்த்துக் கொள்ளவில்லை. ஆழமானதாக அல்ல, மிகப் பொதுவான ஈழ அரசியலை வைத்துப் பார்ப்பவர்களுக்கே இந்தச் சிவப்பு மழை; அபத்த வெள்ளம் என்பது புரிந்துவிடும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85795/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.