Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு அலுவலகங்களுக்கு தனிச் சிங்களத்தில் சுற்றறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு, கிழக்கு அலுவலகங்களுக்கு தனிச் சிங்களத்தில் சுற்றறிக்கை
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அலுவலர்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை தனிச் சிங்கள மொழியில் அனுப்பப்படுவதால் அரச உத்தி யோகத்தர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கை தனிச்சிங்களத்தில் மட்டும் அனுப்பப்படுவதால் தமிழர்களின் உரிமை மீறப்படுகிறது.
இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
 
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சமூக நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லயனல் குருகே இவ்வாறு தெரிவித்தார். யாழ்.மாவட்ட அரச உத்தி யோகத்தர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கான மொழி உரிமை தொடர்பான செயலமர்வு யாழ். மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆரம்ப உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
அரச கரும மொழிகளாக தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் பிரகடனப்படுத்தப்பட்ட போதும், அரசு அதனை நடைமுறை படுத் தாமல் தன்னிச்சையான செயற்பாடு களையே மேற்கொண்டு வருகின்றது.
 
அதற்கான தீர்வைப் பெறுவ தற்கு மாற்றுக் கொள்கைக்கான நிலையம் பல்வேறு அழுத்தங்களை அரசுக்குக் கொடுத்த வண்ணம் உள்ளது. அரச அலுவலர்களுக்கு மொழிப் பயன்பாடு தொடர்பாக எழுத்து மூலமும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு மட்டங்களில் பெறப் பட்ட முறைப்பாடுகளுக்கு அமை வாக மொழி உரிமை மீறப்பட்ட 150 பிரச்சினைகள் இனம் காணப்பட்டு அவற்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச அலுவலர்க ளுக்கு அனுப்பப்படும்  சுற்ற றிக்கை தனிச் சிங்கள மொழியில் அனுப்பப்படுவதால் அரச உத்தி யோகத்தர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
 
2007 ஆம் ஆண்டு முதல் அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
எனவே தமிழ் மொழியில் சுற்று நிருபத்தை வெளியிடுவது தொடர் பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு பாதிக்கப் படும் உத்தியோகத்தர்களில் தங்கியுள்ளது.
 
இந்த நிகழ்வில் அரச உத்தி யோகத்தர்கள், மொழிச்சங்க உறுப் பினர்கள், சிவில் சமூக அமைப் புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
03 டிசெம்பர் 2012, திங்கள் 10:05 மு.ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.