Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

புதுப்பேட்டை


Recommended Posts

பதியப்பட்டது

சென்னை எழும்பூரில் இருக்கும் புதுப்பேட்டைக்கும் செல்வராகவனின் புதுப்பேட்டைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நிழல் உலகத்தை தவுசண்ட் வாட்ஸ் லைட் போட்டு வெளிச்சப்படுத்தி காட்ட நினைத்திருக்கிறார் இயக்குநர்... இந்த அளவுக்கா நிழல் உலகம் சென்னையில் இருக்கிறது என்ற அதிர்ச்சி.... இருந்தாலும் இயக்குநர் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டி இருப்பார்... இவ்வளவு மோசமாக இருக்காது என்றும் நினைக்கத் தோன்றுகிறது... மும்பை வேண்டுமானால் இதுபோல இருக்கலாம்... சென்னை அப்படி அல்ல என்று ஒவ்வொரு சென்னைவாசியும் உறுதியிட்டு சொல்லலாம்....

பொதுவாக சென்னையில் தாதாக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது... தாதாக்களின் காட்பாதர்கள் இங்கே சேடுகள் தான்.... அரசியல்வாதிகள் அல்ல.... ஓரிரு தாதாக்கள் மட்டுமே அரசியல் சார்பு நிலை எடுத்திருப்பதை பழைய தாதாக்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்....

உயிர் காக்க போராடும்போது ஒருவனின் வலிமை பன்மடங்காகிறது என்பது படம் சொல்லும் பாடம்.... கார்ப்பரேஷன் பள்ளி மாணவன் ஒருவன் எப்படி நிதி அமைச்சர் (?) ரேஞ்சில் உயருகிறான்... அதற்காக அவன் என்னவெல்லாம் தரங்கெட்ட வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது என்று காட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர்....

கதாநாயகன் நல்லவன் அல்ல.... கதாநாயகி ஒழுக்கமானவள் அல்ல.... படத்தில் எந்த கதாபாத்திரத்துக்கும் நல்ல குணமே கிடையாது... எல்லோருமே அயோக்கியர்கள், எல்லோருமே சுயநலவாதிகள்... இப்படியாக தமிழ் சினிமாவின் பல இலக்கணங்களை உடைத்திருக்கும் இயக்குநரின் தைரியத்துக்கு சபாஷ் போடலாம்....

எங்க ஏரியா உள்ளே வராதே என்ற பாடலுடன் அறிமுகமாகும் தனுஷ் (அந்தப் பாடலில் சிம்புவை ஏகத்துக்கும் போட்டுத் தாளிக்கிறார்) படத்துக்காக மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்.... இடைவேளை வரை அவரது பாத்திரத்துக்கு ப்ளஸ் பாயிண்டாக இருக்கும் அவரது உடலே இடைவேளைக்குப் பிறகு மைனஸ் பாயிண்டாக அமைகிறது....

பெற்ற அப்பாவையே நயவஞ்சகாக போட்டுத் தள்ளுவது... தன்னை உருவாக்கிய தலையின் தலையையே எடுத்து விடுவது... திருமணமாகப் போகும் நண்பணின் தங்கைக்கு விடாப்பிடியாக தாலி கட்டி அவள் வாழ்க்கையை நாசமாக்குவது இதெல்லாம் செய்பவர் தான் புதுப்பேட்டை ஹீரோ....

கதையை மையமாகக் கொள்ளாமல் களத்தை மையப்படுத்தி வெகுவேகமாக காட்சிகளை நகர்த்தி இருப்பதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.... இந்த அளவுக்கு வேகமான, சுவாரஸ்யமான காட்சிகளோடு ஒரு படம் தமிழில் வந்திருக்கிறதா என்பதே சந்தேகம் தான்... இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்ற சகல துறைகளும் கச்சிதமாக இயக்குநருக்கு கை கொடுத்திருக்கிறது... குறிப்பாக பாலகுமாரனின் வசனம்....

ஹீரோவை எதிர்கோஷ்டி போட்டுத் தள்ள தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது... அந்தச் சூழ்நிலையில் வரும் பாடல் (கமல் பாடியது) மிக மிகப் பொருத்தமாக சொருகப் பட்டிருக்கிறது... கமலின் ஹைபிட்ச் வாய்ஸ் ஹீரோவுக்கு மட்டுமல்ல நமக்கும் கிலி கொடுக்கிறது....

அதைப் போலவே பாடலே இல்லாமல் வெறும் இசையை மட்டுமே வைத்து ஹீரோ கேங்கில் சேர்ந்து வளரும் காட்சிகளை காட்டி இருப்பது அட்டகாசம்... பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கும் யுவன் ஏனோ பாடல்களில் கோட்டை விட்டு விட்டார்... மிக இனிமையான பாடல் ஆடியோ சிடியில் இடம் பெற்றிருந்தது... அது படத்தில் மிஸ்ஸிங்....

க்ளைமேக்ஸில் தன் குழந்தையைக் காப்பாற்ற தனுஷ் ஊரை விட்டே போக முடிவு செய்கிறார்.... வழக்கமான தமிழ் சினிமா க்ளைமேக்ஸை இயக்குநர் தேர்ந்தெடுத்து விட்டாரே என்று நினைக்கும்போதே... அடுத்த காட்சியில் தன் மகனை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு எதிரியைத் தாக்க புறப்படுகிறார் தனுஷ்.... வில்லன் வலியில்லாமல் சாக நினைத்து தன்னைத் தானே போட்டுக் கொள்வது கொடூரம்....

க்ளைமேக்ஸ் முடிந்தவுடன் வரும் Follow-up காட்சிகள் நகைச்சுவையாக இருக்கிறது... தவிர்த்திருக்கலாம்...

புதுப்பேட்டை.... இரத்தக் கோட்டை!!!

(நன்றி : www.madippakkam.blogspot.com)

Posted

ஒரு ரவுடியின் கதை...

  • 2 weeks later...
Posted
:lol::)இதுவும் ஒரு படம் எண்டு லூசுப்பசங்க எடுத்து விட்டுள்ளானுக நுள்ளான் தனுச வைச்சு.................

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
    • இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
    • அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.  
    • ரணிலுக்கு சுமன்… அனுரவுக்கு சாத்ஸ் என்பது தெரிந்த விடயம்தானே. புஞ்சி அம்மே நவே, தங் புஞ்சி அங்கிள்🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.