Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புராதன இலங்கை சரித்திரம் ( இறுதிப்பாகம் )

Featured Replies

வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !!

 

இத்துடன் இந்த தொடரை நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . உங்கள் ஆதரவிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

 

நேசமுடன் கோமகன்

 

**************************************************************************

 

இராவணனும் இராமாயணமும்

 

இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. வெறும் இலக்கிய இரசனையோடு இலக்கியத்தைப் படிப்பவர்களுக்கு இந்த கபடங்கள் புலப்படுவதில்லை.

 

அவ் இலக்கியத்தில் வருகின்ற அணிகள், நயங்கள், கற்பனைகள் இவைகளே புலப்படுகின்றன. இவ்வாறு இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இலக்கிய ஆசிரியர் ஒரு பாத்திரத்தை எவ்வாறு சிருட்டிக்கிறாரோ, அவ்வாறே அதனை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அத்தகைய நிலமைதான் எமது இராவணனுக்கும் ஏற்பட்டுள்ளது. இராமாணத்தை நன்கு சுவைத்த ஒருவரிடம் போய் இராவணன் நல்லவன் காமுகன் அல்லன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். உண்மை இதுதான். வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும், தெற்வே வாழ்ந்த திராவிடற்கும் இருந்த இயல்பான பகையுணர்வே இராமாயணமாகும். இராமாயண காலத்தில் எல்லா வகையிலும் திரவிடராகிய தமிழர் மேம்பட்டு விளங்கினர்.

எனவே அவர்களை அழிக்க அல்லது அடக்க நடந்த போரே இராம இராவண யுத்தமாகும். தமிழகத்தில் இயல்பாக இருந்த குறைபாடாய் பதவி ஆசை, காட்டிக்கொடுத்தல் ஆகிய குணங்களால் இவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம் பயணடைந்த கதையே இராமாயணம். எனவே தமிழராகிய நாம் இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. படிக்கவும் கூடாது. இராவணேஸ்வரன் என்று போற்றப்படுகின்ற சிறந்த சிவபக்தனான இராவணனை தூஷிப்பது சிவ தூஷனையாகும். இத்தகைய இராமாயணத்தை சைவக் கோவில்களிலோ, தமிழ் மக்கள் மத்தியிலோ பிரசங்கிக்க கூடாது. தமிழர் பாடநூலில் இராமாயணம் இடம்பெறலாகாது.

இராவணன் ஆட்சி :

 

கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.

 

அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.

 

இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள். இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.

யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.

இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீஷணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்;டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.
இதன் மூலம் தமிழரின் வரலாற்றில் மாபெருங் களங்கத்தை ஏற்படுத்தினான். இவன் இராமனது அருவருடியாகி, அடிமைச் சின்னமான ஆழ்வார் பெயருடன் விபீ~ண ஆழ்வாராகவே இருந்து இறந்தான். இராவணனின் வீழ்ச்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டி, ஈழம் ஆகிய திராவிட நாடுகள் ஆரியரின் ஆதிக்கத்திற்குப் உற்பட்டன. எனவே இந்த இராவணன் வரலாறு ஈழத்தமிழர்களாகிய எமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும். எமது மக்கள் விபீஷணனைப் போன்று கோடாரி காம்புகளாக மாறக்கூடாது. எல்லாத்தமிழர்களுமே இராவணனைப் போன்று தேச பக்தி உடையவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும், வீர சுதந்திரம் வேண்டி நிற்பவர்களாகவும் மாற வேண்டும்.

எப்பொழுது இந்நிலை எம்மிடம் உருவாகின்றதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தை அமைத்து சுதந்திர புருடர்களாக வாழ்வோம். வீபீஷணனின் ஆட்சியுடன் இலங்கையின் பூர்வீக வரலாறும் முடிகிறது எனலாம். சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் இலங்கை வரலாறும் விஜயனின் விஜயத்துடன் ஆரம்பிக்கின்றது.

 

முற்றும்

 

பேராசிரியர் ப. கணபதிப்பிள்ளை

http://tamilnation.co/heritage/kanapathipillai.htm#இராவணனும்_இராமாணமும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கோமகன் அண்ணா ஒரு வரலாற்றுப்பகிர்வுக்கு,

சமூகக்கல்வியும் வரலாறும் என்ற பாடத்திட்டத்தில் சில இருந்தாலும் மறைக்கப்பட்ட தமிழர்வரலாற்றையும், மேலதிகத் தகவல்களையும் கொண்ட  பேராசிரியர் ப. கணபதிப்பிள்ளை அவர்களின் எழுத்துக்கள் மேலதிக தகவல்களை உய்த்தறிய வைத்தது. நன்றி அண்ணா பகிர்வுக்கு. :)

  • தொடங்கியவர்
நன்றி கோமகன் அண்ணா ஒரு வரலாற்றுப்பகிர்வுக்கு,

சமூகக்கல்வியும் வரலாறும் என்ற பாடத்திட்டத்தில் சில இருந்தாலும் மறைக்கப்பட்ட தமிழர்வரலாற்றையும், மேலதிகத் தகவல்களையும் கொண்ட  பேராசிரியர் ப. கணபதிப்பிள்ளை அவர்களின் எழுத்துக்கள் மேலதிக தகவல்களை உய்த்தறிய வைத்தது. நன்றி அண்ணா பகிர்வுக்கு. :)

 

 

இதில் ஒரு சில பகுதிகள் எமது சமூகக்கல்வி பாடவிதானத்தில் இருந்தவைதான் . ஆனால் கணபதிப்பிள்ளை இதில் பலவிடையங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறார் . முக்கியமாக இராவணன் சம்பந்தமான பார்வை பல படிமானங்களைச் சொல்கின்றது . வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஜீவா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.